//‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்’ என்பவன் த.நா. முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்[அரசியல் பிரிவு> அதிகாரங்கள் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்]// என்பது சற்று முன்னரான செய்தி[சன் தொ.க. >நண்பகல் 01.45].
தனக்குப் பெருமளவில் வாக்களித்ததிலிருந்தே பெரும்பான்மைத் தமிழர்கள் படு படு படு முட்டாள்கள் என்பதை, இந்தப் புது முதல்வர் அத்துபடியாய்ப் புரிந்துகொண்டிருப்பதன் விளைவுதான்[பெரியார் இவரின் வழிகாட்டிகளில் ஒருவராம்!] ஒரு ஜோதிடனுக்கு உயர் அரசுப் பதவி அளிக்கப்பட்டிருப்பது.
இவரின் ஆட்சி நீடித்தால், தமிழ்நாடு மூடத்தனங்களின் விளைநிலம் ஆகும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.
இத்தகையதொரு பேரவலம் நிகழ்ந்துள்ள நிலையில்.....
‘தவெக’ சட்டமன்ற உறுப்பினர்களில் கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக அக்கட்சியிலிருந்து விலகுவார்கள்.
சட்டமன்றத்திலுள்ள மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள்[பெரும்பாலோர்] நாளை[13.05.2026] நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தவெக’ ஆட்சிக்கு எதிராக வாக்களித்து அந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்(ஆளுநர் ஆட்சியில் ஜோதிட அடிமையின் ஆட்சியைவிடவும் கெடுதிகள் குறைவாகவே இருக்கும்).
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறறிவாளர்கள் அதிகமா, அடிமுட்டாள்களா?
அறிந்துகொள்ள நாளைவரை காத்திருப்போம்.
* * * * *
//சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்//[https://tamil.oneindia.com/news/chennai/ricky-rathan-pandit-vetrivel-appointed-special-officer-in-cm-s-political-wing-798903.html].
