பொதுக்கூட்டங்களில் பேசும்போது, "என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே..." என்று குறிப்பிட்டுத்தான் தனது உரையைத் தொடங்குவார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
மக்களை வெகுவாகக் கவர்ந்ததற்கான காரணங்களாக எம்ஜிஆரின் உடல்வாகு, அழகு முகம், படங்களில் ஒரு லட்சியவாதியாகத் தன்னை முன்னிலைப்படுத்தியது, பாடல்களிலும் உரையாடல்களிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை இடம்பெறச் செய்தது என்றிப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.
மேற்கண்டவை போல எந்தவொரு குறிப்பிடத்தக்க தகுதியையும் பெற்றிராத ‘ஜோசப்’ என்னும் பெயர் கொண்ட திரைப்பட நடிகர் 2026 தேர்தலில் 108 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று[சில சுயநலக் கட்சிகளின் ஆதரவுடன்] ஆட்சியைக் கைப்பற்றியது வியக்கத்தக்கது என்றாலும், அதற்குக் குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன.
அவற்றுள் தலையாயது, பெண்கள் அவருக்கு அளித்த ஆதரவு.
கவர்ச்சி நடிகைகளுடன் கட்டிப்புரண்டு காமக் களியாட்டம் புரிந்த, மேற்கண்ட நடிகரின் நடிப்பில் மயங்குபவர்கள் நம் பெண்கள், குறிப்பாகப் பருவக் குமரிகளில் பலர் என்பது உண்மை.
இவர்களின் ஆதரவைத் தக்கவைக்கவே, இவர்களைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும் வகையில் திட்டங்கள் தீட்டிச் செயல்படுகிறார் நடிகர்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை, பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் தன்னைத் ‘தாய்மாமன்’ என்று தன்னிச்சையாய் அறிவித்தது.
பிறக்கும் குழந்தைக்கு ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் அணிவிப்பதால்[அரசுப் பணம்] எந்தவிதப் பயனும் இல்லை[ஒதுக்கப்படுக் லட்சக்கணக்கான ரூபாயைப் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்] என்பது தெரிந்திருந்தும், தான் குழந்தைக்கு மோதிரம் அணிவித்துக் கொஞ்சும் நிகழ்வை, ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தித் தாய்க்குலத்தைத் தன்வசப்படுத்தும் தந்திரத்தைக் கையாள்கிறார் நடிகர்.
நம் மக்களில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுள் பக்தி உள்ளவர்கள். கடவுள் மறுப்பாளர்கள் வலைவீசித் தேடினால்தான் கிடைப்பார்கள்.
நம் பெண்களில் 100% பேர் பக்தைகள்தான்.
இந்தப் பக்தர்களின் நன்மதிப்பை பெறுவதற்காகவே, மதுரையில் பெருமளவிலான மக்கள் திரளும் சித்திரைத் திருவிழாக் காலத்தில், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார் நடிகர். ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர் மதச்சார்பற்றவராக இருப்பது வரவேற்கத்தக்கது. இந்துக் கோயில், தேவாலயம், மசூதி என்று பல மதக் கோயிகளுக்கும் சென்று அனைத்து மத விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொள்வது மக்களை ஏமாற்றும் வித்தை.
இந்த வித்தையை வெகு சிறப்பாகக் கற்றுக்கொண்டிருக்கும் ஜோசப் கடந்த தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றியது வியக்கத்தக்கதல்ல.
இவருடைய இந்த வித்தையை நம் மக்கள் புரிந்துகொள்ளாதிருந்தால், நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் மட்டுமல்ல, அடுத்தடுத்து நடக்கவுள்ள அத்தனைத் தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவிப்பார் ஜோசப் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை!
.jpg)
.jpg)

