‘இ-சேவை’ என்பது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒரு தொழில்நுட்பம்.
இது அரசியல், சாதி, மதம், இனம் போன்றவற்றுடன் சம்பந்தப்படாத ஆறறிவு சார்ந்த ஒரு சமூகப் பணி.
‘வெற்றிப் பயணம்’[பயணத்தில் என்ன வெற்றியும் தோல்வியும்? பாதுகாப்புத்தானே முக்கியம்?] என்பது போல, ‘தமிழ்நாடு இ-சேவை’யில் 'வெற்றி' சேர்த்தது சுய விளம்பர வெறியின் உச்சம்.
ஓர் அரிய செயலைச் செய்துமுடிப்பதற்கு உற்சாகம் தேவை; தன்னம்பிக்கை அவசியம்; அதிதீவிர முயற்சி மேற்கொள்ளலாம்; ஆவேசப்படுதலும் தவறில்லை. இங்கே தன் கட்சிப் பெயரில்[தவெக] உள்ள ஒரு ‘வெற்று’ வார்த்தையை 'இ-சேவை’யில் சேர்த்திருக்கிறார் ஜோசப். இது அவசியம் செய்து முடிக்க வேண்டிய அரிய செயல் அல்ல.
‘வெற்றி’ என்னும் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, ஆயுட்கால முதல்வராக ஆக ஆசைப்படுகிறார் இவர்.
அரசியலானாலும் வேறு எந்தவொரு துறையானாலும், அதில் சாதனைகள் நிகழ்த்த அறிவாற்றலும் அயராத உழைப்பும் தேவை. வெற்று வார்த்தையை நம்புவது அறிவுடைமை அல்ல. இது முதல்வர் ஜோசப்புக்கான நம் அனுதாப உரை!