நான்.....

எனது படம்
வெகு சாமானிய வலைப்பதிவனான எனக்கு, புகழின் உச்சம் தொட்டவர்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆகும் ஆசை அறவே இல்லை. பெரும் புகழ் ஈட்டியவர் எவராயினும் அவரால் நம் மக்கள் மூடர்கள் ஆக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாததால்தான், என் விமர்சனத்தால் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது என்பது தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்து செய்கிறேன்; வேறு உள்நோக்கம் ஏதுமில்லை.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

உலகின் ‘நம்பர் 1’ தலைவர் ஆனார் ஜோசப்[த.நா.முதல்வர்]! தாய்க்குலம் ‘திருஷ்டி’ கழிக்கும்?

//முதல்வர் விஜய் துபைக்குச் சென்ற எமிரட்ஸின் யுஏஇ547 விமானத்தை, ஃபிளைட் ரேடார் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிராக் செய்துள்ளனர். இதனால், அந்த விமானம் உலகில் அதிகளவில் டிராக் செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது//[https://www.dinamani.com/tamilnadu/2026/Sep/11/the-flight-travelled-chief-minister-vijay-tops-the-flightradar-rankings]

இன்று தமிழில் வெளியான மிகு பரபரப்பான செய்திகளிலும் இச்செய்தி முதலிடம் பிடித்துள்ளது.

ஜோசப் பயணித்த விமானம் உலக அளவில் மிக அதிகமாக டிராக் செய்யப்பட்டதன் மூலம், நம் ஜோசப் உலகின் நம்பர் 1 தலைவராகவும் உயர்வு பெற்றுள்ளார்.

தமிழர்கள் இனி உலகில் எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

பொறாமை உள்ளம் கொண்ட பொல்லாதவர்களால் தலைவருக்குக் ‘கண் திருஷ்டி’ படுவது உறுதி.

அவரை முதல்வராக்கிய நம் தாய்க்குலத்தவர், அவர் தமிழ்நாடு திரும்பியவுடன் அவருக்குத் திருஷ்டி கழிப்பார்கள் எனினும், இப்போதே தலைவரின் படத்துக்கு திருஷ்டி கழித்தால் எதிர்பார்க்கும் முழுப் பயனும் விளையும்.

உலகில் தனக்கும் மேலான தலைவன் இல்லை என்று தலைக்கனத்துடன் அலையும் அமெரிக்கா அரசுத் தலைவரான டோனால்ட் டிரம்பால், திரும்புகாலில் நம் தலைவர் ஜோசப் பயணிக்கும் விமானத்துக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால், அந்த விமானத்தைப் பாதுகாப்புடன் அழைத்துவர, குறைந்தபட்சம் நான்கைந்து வான்படை ஜெட் விமானங்களை அனுப்புவது பிரதமரான மோடியின் கடமையாகும்!