எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

மனிதர்கள் நல்லவராக வாழ்தலும் வாழ முயலுதலும் கருணைக் கடவுளும்!

ருவர் நல்லவராக வாழ்வதற்கான, அல்லது வாழ முயல்வதற்கான காரணங்கள்{காரணங்களை ஆராய்வதற்கு முன், எந்த ஒருவரும் எல்லா நேரங்களிலும் ஒரே நிலைப்பாட்டில்’[நல்லவருக்கான சதவீதம் வாழும் சூழலையும் மனப்பக்குவத்தையும் பொருத்து மாறிக்கொண்டே இருக்கும்] இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்க}:

1.பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெட்டக் காரியங்களில் ஈடுபட்டால், அண்டை அயல் மனிதர்கள் மதிக்கமாட்டார்கள் என்று எல்லோருமே நினைப்பது மிக முக்கியக் காரணம்.

2.தப்புச் செய்து பிடிபட்டால் பாதிக்கப்பட்டவர்களால்  அல்லது காவல்துறையால் தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சுவதும்[பணப் பலமும் ஆள் பலமும் உடையவர்கள் விதிவிலக்கு] அவற்றில் ஒன்று.


3.மரபணுவில் ஆழமாகப் பதிந்துவிட்ட பரம்பரைத் தொற்றுநோய் இது. வழிபாட்டின் பயன் குறித்து மிக மிக  மிகப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.

4.காசு செலவில்லாமல் நாலு பேர் முன்னிலையில் தன்னை யோக்கியனாகக் காட்டிக்கொள்ளப் பயன்படுகிறது பக்தி.


5.எல்லோருமே கெட்டவர்களாக இருந்தால் எவருமே நிம்மதியாக வாழ்தல் இயலாது என்று பலர் எண்ணுவதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு உலகப்போர்கள் நடந்துமுடிந்த நிலையில், காரணங்கள் இருப்பினும் மூன்றவது போரை உலக நாடுகள் தவிர்ப்பது ஓர் உதாரணம்.


6.வயதுக்கும் சமூக அந்தஸ்துக்கும் வசதிக்கும் ஒவ்வாத செயல்களைச் செய்ய முயலும்போது மனசாட்சி உறுத்துதல்[அதை அலட்சியப்படுத்துபவர்கள் உண்டு]. பிறரால் தான் பாதிக்கப்படுதல் கூடாது என்பது போலவே, தன்னால் பிறர் பாதிக்கப்படுதல் கூடாது என்றெண்ணுவதும் ஒரு காரணம்{இந்த நல்ல மனம் வாய்ப்பது நல்ல சிந்தனைகளால்[தனக்கான கோரிக்கைகளை வைத்துக் காணிக்கைகள் செலுத்திக் கடவுளைத் துதிபாடுகிறார்களே தவிரத் தனக்கு நல்ல எண்ணங்களை அருளும்படி வேண்டுபவர்கள்[விதிவிலக்குகள் மிக அரிதானவை] எத்தனைப்பேர்?


7.சமுதாயக் கட்டுப்பாடுகளைப்[முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல] புறக்கணித்து வாழ்வதற்கான துணிவு இல்லாததும் நல்லவராக நடந்துகொள்வதற்கான குறிப்பிடத்தக்கக் காரணம் ஆகும்.


ஆக, கடவுள் நம்பிக்கைதான் மனிதர்களை நல்லவர்களாக வாழச்செய்கிறது என்பது காலங்காலமாகச் செய்யப்படும் பரப்புரையே தவிர அதில் கொஞ்சமும் உண்மை இல்லை.


சீனா, ஜப்பான், தென் கொரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளில் அதிக அளவில் நாத்திகர்கள் வாழ்கிறார்கள் என்கின்றன ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.

ஒருவரையொருவர் மதித்துப் பொதுநல உணர்வுடன் அந்நாட்டு மக்கள் நல்லவர்களாக[இயன்றவரை] வாழ்வதால்தான்[மதங்களின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதில்லை; சாகடிப்பதும் இல்லை] பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

எனவே, எவரொருவரும் விரும்பினால் கடவுளை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம்; பிறரைத் தூண்டுவதும் கட்டாயப்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.