அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சார், உங்களுக்குப் `பட்டாபி’யைத் தெரியுமா?

``யார் அந்தப் பட்டாபி?” என்கிறீர்களா? என்ன சார் நீங்க, `சகல வசதிகளும்’ கொண்ட `விடுதி’களிலும், ‘சதை வணிக’ மையங்களிலும் எத்தனை பட்டாபிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்! அவர்களில் ஒருத்தன்தாங்க இந்தப் பட்டாபி!!

கதைத் தலைப்பு:                      வயசுப் பையன்
                                                                      ‘பசி’

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. தேனீர்க்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், இவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“மினிமம் ஐநூறு. ஒரு ராத்திரிக்கு ஒரு லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. வி.ஐ.பி.க்கள் வந்து போற இடம் சார் அது.”

“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா. ஐநூறுக்குள்ள கிடைக்குமா சொல்லு.”

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான் பட்டாபி.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நாந்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க அடுத்த நாளே ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்க மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. எரிச்சலுடன் சொன்னான்: “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட. போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் வீட்டுக்கு அவரை அழைத்துப் போனான்.

பலான தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று, வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் சேர்த்துவிட்டான்.

முதலில், முறுக்கு, சோடா விற்றான் பட்டாபி. வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான். பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான் பட்டாபி.

``பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.

“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்கு பயங்கரப் ‘பசி’.

இரவு நேர சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்; சட்டைப் பையைத் துழாவினான். ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. அது, பழக்கப்பட்ட கடை என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனையறியாமல் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடை பயின்றன.

பட்டாபிக்கு இப்போது வயது, பதினாறு முடிந்து பதினேழு தொடக்கம்!

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

                                              ‘ராணி’ இதழுக்கு நன்றி.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

திங்கள், 29 ஏப்ரல், 2013

இது, சுடுகாட்டில் சுட்ட கதை!!! பயப்படாமல் படியுங்கள்.

இறந்துபோன என் நண்பர், முந்தாநாள் எரிக்கப்பட்டார். இன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! 

“இது ‘காதல் யுகம்’. இதுவும் நடக்கும்...இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்” என்று பேசிக்கொண்டு போனார்கள் ஈமச்சடங்கில் கலந்துகொண்டவர்கள்!

கதை:                               காதல் யுகம்

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு  சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

து நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

இன்று ’காரியம்’.

”மொட்டை போடணும் , வா கீர்த்தி.” காரியம் செய்பவர் கீர்த்தியை ஒரு மர நிழலுக்கு அழைத்துச் சென்றார்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ’மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சடங்கில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். வீடு திரும்பிக் குளித்து முடித்தவுடன், நேற்று [ஞாயிறு] எழுதிய கதை இது.]

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



சனி, 27 ஏப்ரல், 2013

ஒரு ‘கிளுகிளுகிளு’.......... `குமுதம்’ கதை!!!

குமுதத்திற்கு அனுப்ப வேண்டிய இந்தக் ‘கிளுகிளுகிளு’ கதையை, ‘ஜாதவ்’ [கதாசிரியர்] என்பவர் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டார்! நானும் பெருந்தன்மையுடன், என் வலைப்பக்கத்தில் வெளியிடுகிறேன்!

படித்து ரசித்திடுக!! என்னைப் பொறுத்திடுக!!!

கதைத் தலைப்பு;             அட.....ச்சீய்!

ன் கணவர் ஆபீஸிலிருந்து வரும்போதே அலுத்துக் களைத்துப் போய் வருகிறார்.....எதைக் கண்டாலும் எரிச்சல் கொள்கிறார்.....இதற்கு என்ன செய்யலாம் என்று தயவு செய்து வழி சொல்லுங்க” என்று மனோதத்துவ நிபுணரிடம் கேட்டாள் அந்த இளம் பெண்.

நிபுணர் சிரித்தார்.

“நிறையப் பேர் செய்யுற தப்பை நீங்களும் செய்யுறீங்கன்னு நினைக்கிறேன். புருஷனுக்கு நாள் பூரா ஆபீஸில் டென்ஷனா இருக்கும். அதைக் குறைத்து அவரைக் குஷிப்படுத்த வேண்டும். அது மனைவியின் கடமை” என்று கூறி, சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அனுப்பினார்.

மறு நாளே அதைக் கடைபிடிக்க முடிவு செய்தாள் அந்தப் பெண்.

றுநாள் மாலை.

கணவன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் அந்தப் பெண்.

அவன் நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் எழுந்து சென்று கதவைத் தாளிட்டுவிட்டு வந்தாள்.

கணவனின் ஷூவைக் கழட்டினாள்; டையைத் தளர்த்தினாள். அவன் மடியில் ‘மெத்’தென்று உட்கார்ந்தாள்; ஆசையுடன் அவன் கன்னங்களை வருடினாள்.

இதழோடு இதழ் பதித்தாள்.

இன்னும் ஏதேதோ செய்து, ’கடுகடு’ என்றிருந்த அவன் முகத்தில் கலகலப்பை வரவழைக்க முயன்றாள்.

தோல்வியே மிஞ்சியது.

“ஏன் இப்படி இருக்கீங்க? என் கொஞ்சல் குலாவலெல்லாம் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கலையா?” என்று அழாக்குறையாகக் கேட்டாள் அவள்.

“நாசமாப் போச்சு. ஆபீஸில்தான் அந்த ஸ்டெனோ பாடாய்ப்  படுத்தறான்னா வீட்டுக்கு வந்தா  நீயும்...” என்று அலுத்துக்கொண்டான் கணவன்.

“ஐயோ...” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தாள் அந்த அப்பாவிப் பெண்!

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000













வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காணாமல் போன புதுப் பெண்டாட்டி! [ஒரு பக்கக் குடும்பக் கதை]

கனமான ‘கதைக்கரு’! ‘super fast' நடை!! இது............... பத்தாயிரத்தில் ஒரு படைப்பு!!! படியுங்கள் தவறாமல்.

கதை:                                                காணாமல் போனவள்

படைத்தவர்:                                  கிருஷ்ணகாந்த்

இதழ்:                                                 குங்குமம்

வெளீயான தேதி:                        செல்லரித்துவிட்டது!




ராஜி.....என் பிரிய ராஜி.....!

ராஜிக்கண்ணு.....!

என் ராஜுக்குட்டீ.....!

எங்கே போய்விட்டாய் நீ?

திருமணமான ஆரேழு வருஷத்தில் எங்கே காணாமல் போனாய்?

உன்னைப் பெண் பார்த்த அனுபவத்தை மறக்க முடியுமா?

முதன் முதலில் என்னை ஏறிட்ட உன் விழிகளில் எத்தனை குளிர்ச்சி!

நீண்ட கூந்தல்; மெல்லிய தேகம்; தெத்துப்பல்; அதில் உனக்கு ஒரு காம்ப்ளெக்ஸ்; ஆனால், அதை எனக்குப் பிடிக்கும்.

தெத்துப்பல் தெரிய நீ சிரிப்பதே என்னை மயக்கும்!

உன் காதோரப் பூனை முடி; கழுத்தோர செம்பட்டை கேசம்; அப்பாவித்தனமான முகம்!

புதிய வீட்டில், எல்லோரையும் பார்த்து மிரண்ட உன் விழிகள்!

ஆஹா...நீ மிரள்வது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இருட்டில்...தனியறையில்...நீ மிரண்டு புரள்கையில்.....

உன் இடுப்பும், சரேலென்று வழியும் கூந்தலும், முதுகின் செழுமையும்.....அடடா!

பணிவோடும் அன்போடும் நீ எனக்குச் செய்த பணிவிடைகளை மறக்க முடியுமா?

என் ஒரு அதட்டலில் அடங்கிவிடும் உன் பயந்த சுபாவம்!

எழுந்தவுடன் என் கால் தொட்டுக் கும்பிடும் உன் பதிபக்தி!

படித்திருந்தும் ”எனக்கென்னங்க தெரியும்/?” என்று அடக்கத்தோடு பேசும் உன் அருங்குணம்!

கொடுத்து வைத்தவன் நான் என்று மனசுக்குள் பூரித்த என் தலை மேல் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே!

அந்த ராஜியை இனி பார்க்கவே முடியாதா?

ஏக்கத்துடன், கையிலிருந்த ’கல்யாண ஆல்பத்தை’ மெதுவாக மூடிவிட்டு நான் நிமிர்ந்த போது.....

எதிரே என் மனைவி!! என் ராஜி!!!

“காலையில கல்யாண ஆல்பத்தோட உட்கார்ந்தாச்சா? அதொண்ணுதான் குறைச்சல்.....க்கும்..... காஸ் தீர்ந்து போச்சு. மண்ணெண்ணை வாங்கிட்டு வரணும். கிரைண்டர் வாங்கிக் குடுங்கோ குடுங்கோன்னு கரடியாக் கத்தறேன். வாங்கித் தரல. உங்க வீட்ல இட்லிக்கு மாவு அரைச்சு அரைச்சே சாகப் போறேன்.....போறேன்.....போய்த் தொலையறேன்!.....அப்புறமாவது எல்லாரும் நிம்மதியா இருங்க..........”

வார்த்தைகளைக் கோபம் என்னும் எண்ணையில் பொரித்துச் சுடச்சுட வீசினாள் ராஜி!

உப்பிய அவளின் உடம்பு அருவருக்கும் வகையில் எசகுபிசகாய் ஆடியது; கோபித்துக் கோபித்தே கோணிய வாய் துடித்தது. சினத்தால் சிறுத்த கண்களில் ஒருவித உக்கிரம். நெறித்து நெறித்தே நிரந்தரமான வளைவில் நின்றுவிட்ட புருவ முடிச்சுகள்.

தெத்துப்பல் , பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

இருட்டில் துழாவுகிற மாதிரி, அவள் முகத்தில், உடம்பில், கண்களில்...இன்னும் எங்கெல்லாமோ தேடினேன்.....

ஊஹூம்.....

ஆரேழு  வருடங்களுக்கு முன்னர் என்னை மணந்த ராஜி முழுசாகக் காணாமல் போயிருந்தாள்!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





வியாழன், 25 ஏப்ரல், 2013

ஒரு நாத்திகரின் ஆத்திக வேடம்!

மூட நம்பிக்கை கூடாதுதான். ஆனாலும் அது, சில நேரங்களில் சிலருக்கு நன்மை பயப்பதும் உண்டு!

கதை:                                    கடவுள் துணை

”டாக்டர் கூப்பிடுறாருங்க.” செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன்.

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் எழிலரசு.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி, அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுளை வேண்டிக்கோங்க. அவர் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் எழிலரசு.

வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“ஏம்ப்பா, நீதான் நாத்திகனாச்சே. அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னே?” டாக்டரைப் பார்க்க வந்திருந்த அவரின் நண்பர் கேட்டார்.

“அதுவா.....?” சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் டாக்டர் எழிலரசு:

“சில நேரங்களில் டாக்டர் கணிப்பையும் மீறி, நோயாளிகள் பிழைச்சுடறது உண்டு. அந்த மாதிரி நேரங்களில், 'இவரெல்லாம் ஒரு டாக்டரா?'ன்னு சம்பந்தப்பட்ட டாக்டரைப் பழிப்பாங்க. கடவுளைக் கைகாட்டி விட்டுட்டா, 'கடவுள் கருணை காட்டினா உண்டுன்னுதான் டாக்டரும் சொன்னாரு. கடவுளும் கண் திறந்துட்டார்'னு சொல்லுவாங்களே தவிர டாக்டரைக் குறை சொல்ல மாட்டாங்க.”

“மக்கள் மனசை நல்லாவே படிச்சி வெச்சிருக்கே. புத்திசாலியப்பா நீ? என்று பாராட்டினார் நண்பர்.

#########################################################################################################

பல நேரங்களில் பல ஆண்கள்! [இது ஆண்களுக்கான ஒ.ப.கதை]

தோழர்களே, இந்தக் கதையைப் படியுங்கள். புரிந்தால்...நீங்கள் மகா புத்திசாலி! புரியாவிட்டால்...சாரி, உங்கள் 'IQ' வை மேம்படுத்த முயலுங்கள்!!

கதைத் தலைப்பு:                ஆண் புத்தி

க்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டு தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான்.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசாணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“”நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி என் வீட்டுக் வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு



புதன், 24 ஏப்ரல், 2013

சில நேரங்களில் [மிகச்]சில பெண்கள்! [24.04.2013இல் வெளியான கதையின் நகல்]

வாசகியர் கவனத்திற்கு: கண்களால் கண்ட காட்சியைக் கதையாக்கியிருக்கிறேன். வாசிக்கும் சகோதரிகள் என்னைச் சபிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நன்றி!

நிறைமாதக் கர்ப்பிணியாய் ஊர்ந்துகொண்டிருந்த ஒரு நகரப் பேருந்தில், நான்  நின்றவாறு பயணித்துக்கொண்டிருந்தேன்.

அந்த அழகிய இளம் பெண்ணின் முதுகுப் பக்கம் அவன் பல்லி போல ஒட்டிக்கொண்டிருந்தான். அருவருக்கத்தக்க சேட்டைகள் வேறு.

ஓரிரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். கொஞ்சமாய் முகம் சுழித்ததோடு சரி. அவளுக்குப் ’பயந்த சுபாவமோ?’ என்று நினைத்தேன்.

’இருவரும் காதலர்களாகக்கூட இருக்கலாம்’ என்றது என் உள் மனசு.

“டிக்கெட்...டிக்கெட்...” நடத்துனர்.

இருவரும், தனித்தனியே சில்லரை நீட்டினார்கள்.

என் சந்தேகம் அகன்றது. அவள் நிச்சயம் பயந்த சுபாவம் கொண்டவள்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

“ஏம்ப்பா, கொஞ்சம் தள்ளி நில்லேன். பொண்ணு நிற்கிறது தெரியல?” என்றேன், சற்றே உரத்த குரலில்.

அவன் என்னை முறைத்தான். “தெரியுது. நான் ஒன்னும் தப்பா நடந்துக்கல. உன் வேலையைப் பாரு” என்று சிடுசிடுத்துவிட்டு, நல்ல பிள்ளையாய் ஓரடி பின்வாங்கி நின்றான்.

பத்துப் பதினைந்து நிமிடம்போல, பயணம் தொடர்ந்தது.

எனக்குரிய நிறுத்தம் வந்ததும் நான் இறங்கினேன். அந்தப் பெண்ணும் இறங்கினாள்.

நன்றி சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன், நடையின் வேகத்தை மட்டுப்படுத்தி, என் பின்னால் வந்துகொண்டிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

அவள் முகம் ‘கடுகடு’ என்றிருந்தது. நன்றி சொல்வதற்குப் பதிலாக, உதட்டளவில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு என்னை முறைத்துப் பார்த்தாள்; வேகமாக என்னைக் கடந்து போனாள்.

நனைத்த பழைய செருப்பால், என் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி யாரோ அடிப்பது போலிருந்தது!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++











செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கீழ்வரும் கேள்விகள் என் மீது கோபப்படத் தூண்டும்! திட்டி ஓய்ந்த பிறகு, மீண்டும் தவறாமல் படியுங்கள்!!

அவதாரங்கள்!!! அவர்களின் சிறுநீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் கமகமக்குமா? அவர்கள் செத்தால், சடலம் புழுத்து நாறிப் புழுக்கள் நெளிவதற்குப் பதிலாகப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்புமா?

                                               கேள்விகள் பத்து

ஒன்று; 

கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், அவர் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது? என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றதுண்டா?

இரண்டு:

நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில் உயிர்களுக்கு விளையும் நன்மைகள் அதிகமா, தீமைகளா என்று ஆராய்ந்து பட்டியலிட்டதுண்டா?

மூன்று:

‘நாம் பாவம் செய்தோம்; தண்டிக்கப்படுகிறோம்’ என்று உணர்கிற அறிவு வாய்த்த பிறகு ஒரு மனிதர் தண்டிக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. மழலைகளையும் மழலை மனம் கொண்டவர்களையும் கடவுள் தண்டிக்கிறார் என்றால், அவரை எப்படி உங்களால் போற்றி வணங்க முடிகிறது?

நான்கு:

மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின் சிறுநீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் கமகமக்குமா? அவர்கள் செத்தால், சடலம் புழுத்து நாறிப் புழுக்கள் நெளியாமல், மலர்கள் மலர்ந்து மணம் பரப்புமா?

எரித்தால் சாம்பல் ஆகாமல், பூத உடலோடு மாயமாய் மறைந்து ‘சொர்க்கம்’ சேர்வார்களா?

ஐந்து:

கடவுள், தான் விரும்பிய மனித உருவிலோ, பிற உயிர்களின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, “நான்தான் கடவுள்” என்றால் நம்புவீர்களா?

நம்பாத உங்களை நம்ப வைக்கக் கடவுள் கையாளும் உத்தி என்னவாக இருக்கும்?

ஆறு:

கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய் வழிபடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போலப் புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று நீங்கள் நம்புவது சரியா?

‘அவரைப் புகழ்வது, எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிப்பீர்கள். நாம் கேட்கிறோம். புகழ்வதால் மனம் தூய்மை பெறுமா?  அவரைப் புகழ்ந்து, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?

ஏழு:

உங்கள் வேண்டுதல் கடவுளைச் சென்று சேர்கிறது  என்பதை எப்படி நம்புகிறீர்கள்? அதற்கு முன்னுதாரணம் ஏதும் உண்டா?

எட்டு:

கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் சில மனிதர்கள் வசம் சேர்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?

ஒன்பது;

கடவுள், இந்த மண்ணுலகில் உங்களைப் பிறக்கச் செய்ததற்காக நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான், உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது. இதை அறியாதவரா நீங்கள்? அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லித் துதி பாடுகிறீர்களே, இது அறிவுடைமை ஆகுமா?

பத்து:

நீங்கள் என்னை மனம் போனபடி திட்டினாலும், திரும்பத் திரும்ப மேற்கண்ட கேள்விகளைப் படித்தீர்கள். இது உண்மை. உண்மையைச் சொல்லுங்கள்.....

கடவுளின் ‘இருப்பு’ பற்றித் தீவிரமாய்ச் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள்தானே?

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


திங்கள், 22 ஏப்ரல், 2013

இந்தக் கதையை வெளியிட எந்தப் ’பிரபல வார இதழுக்கும்’ தைரியமில்லை!!! படியுங்கள்.

’ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!

கதை:                           அவளோடு மட்டும்.....  

வாக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க சார்” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.

“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; வழக்கமான உடற்பயிற்சி. உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார். ஆசையோட என்னைத் தேடி வந்த உங்களைத் திருப்பி அனுப்புறேன். சாரி சார்” ரொம்பவே வருத்தப்பட்டாள் மாலா.

“ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” நகர முற்பட்டான் மணிமொழியன்.

“சார் இருங்க. என் ஃபிரண்டு சாலினியை வரச்சொல்லி ஃபோன் பண்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா.” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோட மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க. ....”

“அடடா... அப்புறம்.....?”

“எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். ஆனா, என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, யாருமே எனக்குப் பெண் தர முன் வரல. பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது சாத்தியமில்லேன்னு புரிஞ்ச போது, ஒரு புரோக்கர் மூலமா விலைமகளான உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளராகவும் ஆனேன். .....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன்; “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் கலங்க அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. 

”நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருப்பேன்” என்றாள் திடமான குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நன்றி” என்றான் மணிமொழியன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாருங்கள்! ‘பதிவுத் திருடர்’களைக் கண்டுபிடிக்கலாம்!!

 மூளையைக் கசக்கிப் பிழிந்து, அரும்பாடுபட்டு எழுதிய உங்கள் பதிவு, ‘copy-paste' செய்யப்பட்டதா?  ”இன்னும் இப்படி எத்தனை பதிவுகள் திருடப்பட்டதோ?” என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுக்காகவே இந்தக் ‘குட்டி’ப் பதிவு!

copyscape என்பது ஒரு தேடு பொறி.

பதிவுத் திருடர்களைக் கண்டுபிடிக்க இதைப் பயன்படுத்தலாம். இலவசமாகத்தான்!

கட்டணம் செலுத்தி, premium , copysentry ஆகியவற்றின் மூலம் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

Warning  Banner ம் இலவசம்தான்!

வலைப்பக்கத்தில் இணைத்துத் திருடர்களை மிரட்டலாம்!!

இப்போதே copyscape க்குள் நுழைந்து பார்க்கலாமே!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

வழக்கமான வேண்டுகோள்:

இது குறித்துத் தொழில் நுட்பப் பதிவர்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்தால், 
உங்கள் நேரத்தை வீணடித்தமைக்குப் பொறுத்தருள்க.

வருகைக்கு நெஞ்சு நெகிழ்ந்த நன்றி.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சனி, 20 ஏப்ரல், 2013

ஒரு பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ள மிக ’எளிய’ வழி!!!

``பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ளப் பற்களையும் நகங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது, தவறாமல் கைவசம் ஒரு கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார் மகாத்மா காந்தி. 

``ஆயுதங்கள் எதற்கு? கொஞ்சம் நிதானமும் மன உறுதியும் இருந்தாலே போதுமானது”- இது நான்.

கதை:                            சாகசம்

ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; விவசாயக் குடும்பம்.

கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது.

அவள் கணவன், சந்தை சந்தைக்கு, கால்நடைகளை வாங்கி விற்கும் ’தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி, எருமை[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்கு சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள்.

முதன் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

” எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ள வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழிவிடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  ”உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம்.

அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு சுழலவில்லை.

அவளிடமிருந்து அவற்றை விடுவிக்க நினைத்தான். உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

 அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்

அப்புறமும் அந்நிலையே நீடித்தது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இதுவும் நடந்த கதைதான்! நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிர்வாண ஓவியக் கண்காட்சி! [இது, ஓர் ‘உளவியல்’ கதை!!]

``உங்கள் நண்பரின் வீடு. அவர், அவசர வேலையாய் வெளியே போகிறார். ஒரு பெண் நிர்வாணமாக உங்கள் எதிரில் வருகிறாள். என்ன செய்வீர்கள்?”- இப்படியொரு கேள்வி, பல்லாண்டுகளுக்கு முன்பு, ‘I.A.S' வாய்மொழித் தேர்வில் கேட்கப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தக் கேள்விக்கும் இந்தக் கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு!

கதையின் தலைப்பு:               பதிவின் தலைப்பே கதையின் தலைப்பு!

மாலினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது.

காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாய் இருந்தும் எண்ணிப் பத்துபேர் மட்டுமே வந்தார்கள்.

“சே...ரசனை கெட்ட ஜென்மங்கள்...உணர்ச்சியில்லாத பிண்டங்கள்...” ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் திட்டிக்கொண்டிருந்தாள்.

“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.

“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.

“அடியே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்படிச் செய்துடாதே” என்று பதறினாள் சிநேகா..

“ரொம்பத் தேங்ஸ்டி” என்று மட்டும் சொன்னாள் மாலினி.

ன்று, நிர்வாண ஓவியக் கண்காட்சியின் தொடக்க நாள்.

பத்து மணிக்குக் கண்காட்சி தொடக்கம். எட்டு மணியிலிருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

’இது, நிர்வாண ஓவியக் கண்காட்சி. ஓவியங்களுக்கு அருகிலேயே மாடல்களும் நிற்பார்கள்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தாள் மாலினி.

அலை மோதிய ஜனத்திரளைப் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தி, கியூவில் நிற்க வைத்தது.

தோள்களில் கேமராக்களுடன் ஏகப்பட்ட பத்திரிகை நிருபர்கள்.

மணி பத்தாயிற்று.

ஓவியக்கூடம் திறக்கப்பட்டது.

’நான் முந்தி, நீ முந்தி’ என்று காத்திருந்தவர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.

அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள். அவர்களின் முகங்களில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடின.

காரணம்..........

நிர்வாண ஓவியங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தவர்கள்...........

சுமதி, பத்மா, மது ஆகியோர். எல்லோருமே மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்! மில்க் சாக்லேட் சுவைத்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள்!

அன்று, தான் அடைந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை, இன்று, அந்த ரசிகர்கள் முகத்தில் கண்டு ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள் மாலினி.

***********************************************************************************************************************************

'I.A.S' கேள்விக்கான விடைகளில் ஒன்று.....

“நிர்வாணமாக வரும் பெண்ணைக் கட்டியணைத்து முத்தமிடுவேன்”

“இது உங்கள் நண்பருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?”- கேள்வி.

“ஆகாது. நிர்வாணமாக வருபவள் சிறுமியாகத்தான் இருக்க முடியும். இங்கே ‘பெண்’ [female]என்பது பெண் இனத்தைக் குறிக்கும் பொதுச்சொல்.”
[சில நுணுக்கமான கேள்விகளை, ‘விகடன்’ தமிழாக்கம் செய்து வெளியிட்டிருந்தது]

**********************************************************************************************************************************

கதையின் முடிவு உங்களை ஏமாற்றிவிட்டதா?

என்னைத் திட்டாதீர்கள். இதை எழுதியவர்.....

‘ஜெயரூபன்’

கதை வெளியான தேதி:                  14.02.1985.

வெளியிட்ட வார இதழ்:                    குமுதம் [14.02.1985, பக்கம்-79.]

***********************************************************************************************************************************

வியாழன், 18 ஏப்ரல், 2013

நான், ‘பசி’பரமசிவம்! இது என் வாழ்வில் நடந்த 100% உண்மைக் கதை!!

நம் பலவீனங்களை நினைத்து வருத்தப்படுகிற நாம், அதே பலவீனங்கள் பிறரிடமும் இருப்பதை அறியும்போது ஆறுதல் அடைகிறோம். இந்த என் சுய அனுபவக் கதை உங்களுக்கு ஆறுதல் தருமா, இல்லை, என்னைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுமா? கதையைப் படியுங்கள்.

கதை:                நாய் கடித்தால்.....

“சேலம் போய் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றாள் என் மனைவி மங்கை.

“எதுவும் நடக்கல. இயல்பாதானே இருக்கேன்.” சிரித்தேன். அது அசட்டுச் சிரிப்பாக வெளிப்பட.....

“முகம், கறுத்துச் சுண்டிப் போயிருக்கு. நாலு நாளா என்கிட்ட சிரிச்சிப் பேசவே இல்ல. எதையோ தீவிரமா யோசிக்கிறீங்க. ஏதோ விபரீதம் நடந்திருக்கு. மறைக்காம சொல்லுங்க.” என் தாடையைப் பற்றி நிமிர்த்திப் பரிவுடன் முன் நெற்றி தடவினாள் மங்கை.

“சொல்றேன். சேலம் போன வேலை முடிஞ்சி, நாமக்கல் வர பஸ் ஸ்டாண்டு போயிட்டிருந்தேன். என் பின்னால பைக்கில் வந்த ஒருத்தன் என் மேல மோதிட்டான்.  கீழே விழுந்தேன். அவன் போதையில் இருந்தான். ’நான் ஓராமாத்தானே நடந்து வந்தேன். கண்ணை மூடிட்டா வண்டி ஓட்டினே?’ன்னு கேட்டேன். ’எடமா இல்ல? இன்னும் ஓரமா போக வேண்டியதுதானே’ன்னான்.”

குறுக்கிட்ட என்னவள், “அவனுக்கு ரொம்பத்தான் திமிர்...கொழுப்பு...” என்றாள் உதடு துடிக்க.

“இடிச்சதும் இல்லாம ரொம்பத் திமிர் பேசுறேன்னு சொன்னேன். ’ஆமா, திமிர்தான் பேசுறேன். என்னடா பண்ணுவே’ன்னு வண்டியை ஸ்டேண்டு போட்டுட்டு வந்தான்.......”

“ஐயோ...அப்புறம்.....”

“கூட்டம் கூடிச்சி. எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. ’என்னடா, ‘டா’ போட்டுப் பேசுறே. மரியாதையாப் பேசு’ன்னேன். ’மரியாதையாவா?’ன்னு நக்கலா கேட்டுட்டு, அசிங்கமா கொச்சை கொச்சையாத் திட்டினான். என்னால, அவனளவுக்குத் தரம் தாழ்ந்து பேச முடியல. பன்றி...நாய்...கழுதைன்னு ஏதோ உளறினேன்.........”

“என்னங்க ஆச்சு? சீக்கிரம் சொல்லி முடிங்க.”

“”வாய்ச் சண்டையோட விவகாரம் முடிஞ்சிடும்னு நம்பி அவனை விட்டு விலகி நடக்க நினைச்சேன். என்னை அவன் போக விடல. சரமாரியா என் நெஞ்சில் குத்தினான். எட்டி உதைச்சான். தரையில் மல்லாக்க விழுந்து உருண்டேன். நான் அடிக்கு அடி கொடுக்கத்தான் ஆசைப்பட்டேன். அதுக்குள்ள ஆயிரம் யோசனை. ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு, ரத்த காயம் பட்டு, போலீஸ், நீதிமன்றம்னு.....இப்படி மனசுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டான். ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் நான் கூனிக்குறுகி ஒடுங்கி நின்னேன். அப்புறம் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன்.”

“தெருவில் திரியற ஒரு சொறி நாய் நம்மைக் கடிச்சுடுது. அதை நாம திருப்பிக் கடிக்கலையேன்னு வருத்தப்படுறோமா? அது அவமானம்னு நினைக்கிறோமா? அது மாதிரிதாங்க இதுவும். ஒரு கனவா நினைச்சி மறந்துடுங்க” என்றாள் மங்கை.

“முடியலையேடா.”

கண் மூடி மவுனத்தில் ஆழ்ந்தேன்.

நாட்கள் சில கழிந்தன.

அன்றைய செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘பிரபல ரவுடி கைது’ என்று ஒரு செய்தியின் தலைப்பு கண்ணில் பட்டது. ரவுடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

‘தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கலிவரதன். காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவன், தான் களவாடிய பைக்கில் போன போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இவன் மூன்று கொலை, ஏழு கொள்ளை, பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவன். இவனால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களில், காவல்துறை ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.’

மங்கையை அழைத்து, அந்தச் செய்தியைப் படிக்கச் சொன்னேன்.

“ஐயய்யோ.....இன்ஸ்பெக்டரையே வெட்டிக் கொன்னவனா? இவனோடவா நீங்க சண்டை போட்டீங்க?”

“நல்லா ஞாபகம் இருக்கு. இவனோடதான்.”

“பதிலடி கொடுக்கலையேன்னு வருத்தப்பட்டீங்களே. உங்க கை அவன் மேல பட்டிருந்தா உங்களை வெட்டிப் போட்டிருப்பான். நம்ம குல தெய்வம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு.” மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் என்னவள்.

மனதைக் குத்திப் புண்படுத்திக் கொண்டிருந்த வருத்தமெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

====================================================================================================================





      

புதன், 17 ஏப்ரல், 2013

இது கடவுளைச் சாடும் கதையல்ல; எதார்த்த வாழ்க்கையைப் புரிய வைக்கும் படைப்பு!

தோல்விகளைச் சந்திக்கும்போதெல்லாம், கடவுளைத் துணைக்கு அழைக்கிறோம். நாம் நம்புகிற கடவுளும், தன் படைப்புத் ‘தொழிலில்’ தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்!

கதைத் தலைப்பு:                     சாமியும் கந்தசாமியும்

ந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” அம்மா கேட்டார்.

”எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னு, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”

அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியது, “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இந்தியாவில் ‘ஆபாச’ இணையதளங்கள் அதிகரிப்பு! தடை செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு!!

``சிறுவர்களைக் கொண்டும் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுகின்றன! அவர்கள் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.``-பொதுநல மனு.

“உங்கள் பதில் என்ன?” -நடுவணரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

பாச வலைத்தளங்களின் [இணையதளங்கள்] அசுர வளர்ச்சி பற்றியும், [ஓரளவு புள்ளிவிவரங்களுடன்], 14.04.2013 இல் என் கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

அதற்கு வலிமை சேர்ப்பதாக, இன்றைய தினசரிகள் [16.04.2013] சிலவற்றில் ஒரு பொதுநல வழக்கு பற்றிய செய்தி வெளியாகியுள்ளமை அறியற்பாலது.

                   ‘ஆபாச இணையதளங்கள் அதிகரிப்பு
    மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்’

இது, தினமணி நாளிதழில் [16.04.2013] வெளியாகியுள்ள செய்தியின் தலைப்பு.

இந்தியாவில் ஆபாச இணையதளங்களைத் தடை செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதை விசாரித்த தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு [bench] இப்பிரச்சினை தொடர்பாகக் கவலை தெரிவித்ததுடன், இதற்குப் பதில் அளிக்குமாறு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது இத்தினசரி.

பொதுநல மனுவில், ஆபாசத் தளங்களால் விளையும் தீமைகள் குறித்துப் பெரிதும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொசுறுச் செய்தி:  

                 'internet porn wrecking conjugal ties'

இது, THE HINDU நாளிதழில் [APRIL 16, 2013]  வெளியான செய்தியின் தலைப்பு.

pornography பார்த்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் விவாகரத்து வழக்கு பற்றிய செய்தியில் ஓரிரு இடங்களை மட்டும் கீழே தருகிறேன்:

'His is only one of many cases that the Family Court here is hearing: divorce cases set off by excessive or addictive exposure to internet pornography.'

"in more than three years as a Family Court judge, i have seen a number of cases of porn-induced sexual dysfunction in men that resulted unusual and unbearable torture, both physical and mental, to the wives" says T.C.S Raja Chockalingam, Judge of the Family Court here. 

இவற்றுடன், தரப்பட்டுள்ள பிற தகவல்களையும் நீங்கள் படித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000








எச்சரிக்கை! இது ஒரு ’மரண மொக்கை’ப் பதிவு! தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்!!

என் அண்மைப் பதிவொன்றுக்குப் பின்னூட்டம் இட்ட ஒரு 'unknown', என்னைப் பற்றி, ‘ஹிட்ஸ் வெறியன்’ என்று குறிப்பிட்டிருந்தார்! அவரைத் திருப்திபடுத்தவே இந்தப் பதிவு!!

[`0`ஹிட்ஸ் பெற்றுச் சாதனை படைக்கவிருக்கும் பதிவு இது!!!]

கதைத் தலைப்பு:                        உணர்தல்

லட்சோபலட்சம் மக்களால், ‘கடவுள் அவதாரம்’ என்று போற்றப்படும் அந்த மகான், அலங்கரிக்கப்பட்ட அரியணையில் வீற்றிருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் முரட்டு சீடர்கள்.

அருளாசி பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம் அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; யாருடைய வரவுக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த மனிதன். பலமுறை வேண்டுகோள் வைத்து, மகானைச் சந்திக்கச் சிறப்பு அனுமதி பெற்றவன் அவன்.

நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை மகானின் திருப்பாதங்களில் விழுந்து எழுந்தான்.

சொன்னான்: “தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். அந்தக் கடவுளை அற்ப ஜீவிகளான என் போன்றவர்களுக்குக் காட்ட முடியுமா?” என்றான்.

“காட்ட முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. ஆறாவது அறிவால் உணர மட்டுமே முடியும்” என்றார் மகான்.

“கடவுளின் ஒரு கூறான ஆன்மாவை...?”

“உணர மட்டுமே முடியும்.”

“கடவுளை உணரத்தான் முடியும் என்கிறீர்கள். தங்களைப் போன்ற மகான்களால்கூடவா பிறருக்கு உணர்த்த முடியாது?”

“யாரும் யாருக்கும் உணர்த்த முடியாது. அவரவர் ஊணர்வது மட்டுமே சாத்தியம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?”

“நிச்சயமாக.”

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து நம்புவது எப்படி மகானே? நம்பினால்தானே தங்களை மகான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றான் அந்த மனிதன் வெகு பவ்வியமாக.

மகானின் வதனம் சிவந்தது; உதடுகள் துடித்தன.

“நீ ஒரு குதர்க்கன்...கசடன்...நாத்திகன்...சாத்தானின் வாரிசு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, பக்த கோடிகள் அந்த மனிதனின் மீது பாய்ந்தார்கள்.

ஆக்ரோஷமாய்த் தாக்கினார்கள்; ஆடை கிழித்துத் தரையில் தள்ளிப் புரட்டியெடுத்தார்கள்; அவனின் உடம்பெங்கும் வீக்கங்கள்; ரத்தக் காயங்கள்.

“தொலையட்டும்... அவனை உயிர் பிழைத்துப் போக விடுங்கள்” என்றார் மகான்.

பிறந்த மேனியாய்த் தள்ளாடியபடியே வெளியேறினான் அந்த மனிதன்!

##############################################################################################################################

‘மரண மொக்கை’ என்பதற்கு என்னால் விளக்கம் தர இயலாது. அது unknown' க்கு மட்டுமே சாத்தியம்.

###################################################################################




ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வலை விரிக்கும் ‘ஆபாச’ வலைத் தளங்களின் [porn sites] அசுர வளர்ச்சி! மனித குலம் தப்பிப் பிழைக்குமா?!

ஒரு வினாடியில், 28258 வலைத்தளப் பயனர்கள் ’ஆபாசத் தளங்களில்’ ஐக்கியமாகிறார்கள்! 42.7% பேர் [இதெல்லாம் பழைய கணக்கு] இவற்றின் வாடிக்கையாளர்கள்!! ஆ.வ. தளங்கள் தடை செய்யப்பட்டால், இவர்களில் பாதிப்பேருக்காவது பைத்தியம் பிடிக்கும்!!



இணையத்தில் புழங்குகிற எவரும் ‘ஆபாசத் தளங்கள்’ பற்றி அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், ”ஆபாசத் தளமா? சே...” என்று நம்மில் முகம் சுழிப்பவர்கள் பலர்.

“அதிலென்ன தப்பு? அது மாதிரி தளங்களில் ஒரு ரவுண்டு வந்தா, அன்னிக்கிப் பூரா புத்துணர்ச்சியோட செயல்பட முடிகிறது” என்பாரும் உளர். யாரோ denwuld னு ஒரு வெள்ளை மனசுக்காரர் சொல்கிறார்:

By denwuld on 6/18/2010 1:32:22 AM Rating: 1
I don't think that its wrong.there are so many legal pron sites on internet.who gave that kind of services to their customer.i read some articles on internet about pornography who said that its a good option to keep our mind fresh.i don't know how it right but some time pornography is ok.
http://twitter.com/denwuld


“addiction to internet pornography is increasing at an outstanding rate" [www.familysafer.com] என்று எச்சரிக்கை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

”there are more porn sites than there are stars in the sky" என்று கிண்டலடிக்கவும் செய்கிறார்கள்.

'porn is the life blood of the internet' என்கிறார் ஓர் ஆ.வ. தள ஆய்வாளர்.

ஒட்டு மொத்த வலைத்தளங்களில், 37% பக்கங்களை, pornography எனப்படும் ஆபாசப் பதிவுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு புள்ளிவிவரம்.[dailytech.com]
                              +                                      +                                                      +


அடுத்து வரும் தகவல், நம்மை வாய் பிளக்க வைக்கிறது.



Pornography Time Statistics
Every second - $3,075.64 is being spent on pornography
Every second - 28,258 Internet users are viewing pornography
Every second - 372 Internet users are typing adult search terms into search engines
Every 39 minutes: a new pornographic video is being created in the United States [www.extrmetech.com]



Internet Pornography Statistics

Pornographic websites 4.2 million (12% of total websites)
Pornographic pages 420 million
Daily pornographic search engine requests 68 million (25% of total search engine requests)
Daily pornographic emails 2.5 billion (8% of total emails)
Internet users who view porn 42.7%
Received unwanted exposure to sexual material 34%
Average daily pornographic emails/user 4.5 per Internet user
Monthly Pornographic downloads (Peer-to-peer) 1.5 billion (35% of all downloads)    [answers. yahoo.com]

[அம்மாடியோவ்.....இதெல்லாம் நிஜமா!!!]
        
             +                                +                           +

  • கூகிளின் அரிய தொண்டு!

    now google; "google" you get 1,990,000,000.... as you can seee porn is not the number one main part of the internet, it can still be high up but rather, websites about google dominate all other factors...[answers.yahoo.com]


    ஆஹா.....இதிலும் கூகிள்தான் நம்பர்: 1 !!!

                   +                                            +                                              +

    இம்மாதிரி, ’hot...hotter...hottest’ தளங்களால் விளையும் பாதிப்புகள் என்ன? ஆங்கிலத்திலேயே படியுங்கள்.

    ’Porn can alter attitudes about sex. One study showed that when exposed to large amounts of porn, both males and females came to view things like casual or extramarital sex as more acceptable. Porn can also make people dissatisfied with their real-life sex partners' appearance and performance. Porn can create unrealistic expectations about sex. Aggressive porn, which typically shows violence against women, can make males exhibit more aggressive behavior toward women in real life. Aggressive porn that shows women giving into and even enjoying things like rape can lead to the attitude that coercion is not so offensive and that rape victims "asked for it". There are a few additional disadvantages as well. For example, browsing porn sites at work could get you into trouble.’

    ஆபாசத் தளங்களில், ’படு கவர்ச்சி’க் கன்னிகளைக் கோடிகள் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள். அயல் நாடுகளில், இதையே தொழிலாகக் கொண்ட ’விபச்சாரர்’களை உறவாடவிட்டு, நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு பிரமிக்க வைக்கிறார்கள்.

    இது, நடைமுறை சாத்தியமே இல்லாத எதிர்பார்ப்புகளையும், நிறைவேறாத ஆசைகளையும் மனதில் திணிக்கிறது; கட்டுப்படுத்தவே முடியாத காம வெறியைத் தூண்டுகிறது.

    இதனால், காம இன்பமே வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் வேரூன்றுகிறது.  அதைத் தேடி நாயாய்...பேயாய் அலைவதில், மன அமைதி நிரந்தரமாய்த் தொலைந்து போகிறது.



    கீழ்வரும் ஒரு கருத்துரையையும் படியுங்கள்.

    'I think the disadvantages of porn are the fact that you wife or gf might not be as pretty as the women in the pornography. Also your wife or gf might not have the same skills in the bedroom as the women in the porno film. Also your wife or girlfriend might not be willing to do all of the things that the women do in porno. Kinda sad because the women in the videos do it for money, but the wife / gf do it for love i mean if your wife doesn't want to do it, it makes it seem like money is more important that love. Also porno is to please the man and fulfilling fantasies, sometimes the wife just wants to get it over with or does stuff just 2 get things in return. Kinda sad, plus porno u can just turn it off when your done, a wife u can't u gotta keep the movie playing 24/7 and you have to deal with the drama afterwards which can be a good or a bad thing. I am trying 2 stay away from porno it gives me false hopes of happiness, and every time i watch it i feel guilty because i think i try 2 hold my girlfriend 2 false expectations. Especially when she makes comments like i'm not a porn star.' 


    பணத்துக்காக ஒரு ‘நீலப்பட நாயகி’ செய்வதையெல்லாம் ஒரு மனைவியால் செய்ய முடியுமா? அது முடியாத போது, கணவன் மனைவி உறவு, உடைந்த கண்ணாடியாய்ச் சிதறிப் போகும்தானே?

                                      +                                          +                                          +



    ஆக, ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் பெருகி வரும் நிலையில், இதற்கான தீர்வுதான் என்ன?

    ’ஒரு காலக்கட்டத்தில், குடும்ப உறவுகள் சிதைந்து,  பெரும்பாலான மனிதர்கள் சுயநலமிகளாய் மாறிப்போவார்கள்.. செக்ஸ் அடாவடித்தனங்களால், சச்சரவுகளும், மோதல்களும் அதிகரித்து, மிகப் பெரிய அழிவை மனித குலம் சந்திக்கும். அதன் மூலம் பாடம் கற்றுப் படிப்படியாய்த் திருந்தும்.’ என்றிப்படி அனுமானிப்பவர்கள் இருக்கிறார்கள்.

    ’இப்படியொரு அசாதாரண நிலை உருவாவதற்குள், உலக நாடுகள் விழித்துக்கொள்ளும். பெரும்பாலான் இஸ்லாமிய நாடுகளில் தடை விதித்திருப்பது போல, உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்கும் காலம் வரும். எப்போதும் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று நம்பிக்கை தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    யார் எதைச் சொன்னாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆபாசத் தளங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவே செய்கிறார்கள். 

    இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஊகம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல.

    முடிவாக, ஒரு உபாயத்தை முன் வைக்க என் மனம் விரும்புகிறது.

    அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

    தடை நீடித்தால்..........

    திருமணம் செய்வதற்கான சூழல் இல்லாதவர்களும், ஆ.வ.தளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களும் வடிகால் தேடுவார்களே, என்ன செய்வது?

    என்ன செய்வது?

    ‘சிவப்பு விளக்கு’த் தொழிலுக்கு அரசுகள் அனுமதி வழங்குவது போல, ‘சிவப்பு விளக்கு browsing centre' களுக்கு அனுமதி வழங்குவது பற்றி அரசுகள் பரிசீலனை செய்யலாம்.

    00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
















செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இது ஒரு பாலியல் ‘தொழில்காரி’யின் கதை!

தப்பு என்று தெரிந்தும் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டாள்! அது தப்பாமல் அவளுக்கொரு தண்டனையும் பெற்றுத் தந்தது!!

ரைவாசி திறந்திருந்த தட்டிக் கதவு தட்டப்பட்டது.

“வாங்க.” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அழைத்தாள் கனகா. கதவு தட்டியவர் திரும்பிப் போய்விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு.

‘சரக்கு’ ஏத்திக்கொண்டு சைக்கிள் மிதித்து, ’சரக்கு’ லாரியில் அடிபட்டுச் செத்தான்  மாணிக்கம். அவளுக்கு அவன் புருஷன்; அவளின் ‘பலான’ தொழிலுக்குப் புரோக்கரும் அவனே. அவன் பரலோகம் போனதால் தொழில் வெகுவாகப் பாதித்தது.

வீடுவீடாகப் போய்ப் பத்துப்பாத்திரம் தேய்த்தவளைப் ‘பரத்தை’ ஆக்கியதே அவன்தான். குடித்துப் பழகிய கொஞ்ச நாளில் குடிப்பதே  தொழில் என்றான பிறகு, பெண்டாட்டி சம்பாதனை குடும்பச் செலவுக்கும் ‘குடி’ச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. ‘குட்டி’ தேடும் ’குஷால்’ பேர்வழிகளை அடிக்கடி தன் குடிசைக்கு அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில், அவனைக் கண்டித்த அவள், ஒரு நாள் முழுக்க வேர்வை சிந்திச் சம்பாதிக்க முடியாததை ஒரு மணி நேரத்தில் சம்பாதித்துவிடும் கலை அது என்பது புரிந்தபோது இணங்கிப் போனாள்.

அப்புறம் அதுவே பழகிப் போனது.

நல்ல துணிமணி, மூன்று வேளையும் வயித்துக்கு உணவு  என்று வாழ்க்கை ஓடியது.

அவளுடைய போதாத காலமோ என்னவோ, மாணிக்கம் செத்துப் போனான்.

புதிய நபர்களின் வரவு  தடைபட்டது. தெருவில், பலான தொழில்காரிகளின் எண்ணிக்கை கூடியதால், வாடிக்கையாளர்களின் வருகையும் மட்டுப்பட்டது. கனகா கவலையில் மூழ்கினாள்.

சரிந்துகொண்டிருந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்துவது எப்படி என்று அடிக்கடி யோசிக்கலானாள். அப்படி ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவள் குடிசையின்  தட்டிக் கதவு தட்டப்பட்டது.

வெளியே தயங்கி நின்றவருக்கு, “உள்ளே வாங்க” என்று மீண்டும் அழைப்பு விடுத்தாள் கனகா.

அவளைத் தேடி வந்தவர் ஒரு நடுத்தர வயதுக்காரர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் போலவும் தெரிந்தார்.

சல்லடைப் பார்வையால் கனகாவின் வயதையும் உடல் வாகையும் வனப்பையும் ஆராய்ந்தார்.

முகத்தில் திருப்தி பரவி நிலை கொள்ள, அங்கிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, “வெய்யில் வறுத்தெடுக்குது. குடிக்கத் தண்ணி கொடு” என்றார்.

தடுப்புச் சுவரைக் கடந்து உள்ளே போன கனகா, ‘ஆள் புதுசு. இவரை அனுப்பிச்சது யாராயிருக்கும்?’ என்று யோசித்தாள். ’அவர் போகும்போது கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தாள்.

அவருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தாள்.

தரையில் பாய் விரித்தாள்; “என்னைப் பிடிச்சிருக்குதானே?” பவ்வியமாய்க் கேட்டாள்; முந்தானை விலக்கிக் கவர்ச்சி காட்டினாள்; ‘இனி என்னைக் கையாளலாம்’ என்பது போல மேலாடை நெகிழ்த்து, மெல்லிய புன்னகையை அவர் மீது படர விட்டாள்.

மாதக் கணக்கில் பெண் வாசனையே நுகராதவர் போல, அவளைத் தாவி அணைத்தார் அவர்; செயலில் வேகம் காட்டினார். கனகா அவருக்கு ஈடுகொடுத்தாள். தான் கற்று வைத்திருந்த சாகசங்களால் அவரைத் தன்வயம் இழக்கச் செய்தாள்.

நிமிடங்கள் கரைந்தன.

தாபம் தணிந்ததும், ‘இருந்த’ நேரத்தைக் கணக்குப் பார்க்காமல், சில நூறுகளைக் கனகாவிடம் நீட்டினார் அவர். அவளும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டாள்.

அவர் வெளியேற முனைந்த போது, கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் கனகா: “ எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சீங்க?”

”தெரு முனையில் நின்னுட்டு ’நோட்டம்’ விட்டுட்டிருந்தேன். ஒரு பொடியன், ’சார் பொம்பளை வேணுமா?’ன்னு கேட்டான்;  இந்த இடத்தையும் காட்டினான்” என்று சொன்னதோடு, சிறிது தொலைவில், ஒரு வேம்பின் நிழலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

அந்தச் சிறுவன்..........

பத்து வயதுகூட நிரம்பாத, கனகாவின் செல்வ மகன்!

அதிர்ச்சியில் கனகாவின் சப்த நாடிகளும் அடங்கின. அவள் இதயம் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய்த் துடிக்கலாயிற்று. நெஞ்சு கனத்தது; மூச்சுத் திணறியது.

”ஐயோ.....அவனா?..... என் புள்ளையா?....என் உதிரமும் சதையுமான நான் பெத்த புள்ளையா எனக்கு ஆள் பிடிச்சி அனுப்பினான்? ஈனத் தொழில் செஞ்சி, நான் சம்பாதிக்கிற பாவத்தில் இனி அவனுக்கும் பங்குண்டா?.....கடவுளே, என்னை எதுக்கய்யா ஒரு மனுஷியா பிறக்க வெச்சே?.....என்னை எதுக்.....” நாடித் துடிப்பு அடங்கும்வரை, இப்படி ஈனஸ்வரத்தில் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தாள் கனகா.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000















வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வேலைக்காரி ஜாக்கிறதை! [ஒரு பக்க ’எதிர்பாராத முடிவு’க் கதை!!]

”அவள் [வேலைக்காரி] ‘குனிந்து’ குப்பை கூட்டிக்கொண்டிருந்தாள். என் மனம் குப்பையானது!”-கவிஞர் பழனி பாரதி.

ம்சவேணி எங்கள் வீட்டு வேலைக்காரி; விதவை; அம்சமான தேகக் கட்டுக்குச் சொந்தக்காரி. அவளை அனுபவிக்கும் ஆசை எனக்கு இருந்தது.

“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே பத்தல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?’ என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மேலாடையைச் சரி செய்வதில் அவள் காட்டும் அசட்டை, என் தாபத்துக்குத் தூபம் போடுவதாக இருந்தது. தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அந்தத் தருணமும் வந்தது.

கோடை விடுமறையானதால், பிள்ளைகளுடன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டுப் போய்விட்டாள் என் மனைவி.

வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.

“அம்சா.” அழைத்தேன்.

“என்னங்கய்யா?” நெருங்கி வந்தாள்.

“பத்தாயிரம் இருக்கு. வாங்கிக்கோ” பணக்கட்டை நீட்டினேன்.

“எதுக்குங்க?”

“உன் கடனை அடைச்சுக்கோ. திருப்பித் தரவேணாம்.”  என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து அவள் இடையைத் தடவியது.

என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, ”இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, இல்லே எல்லா நாளுக்குமா?” என்று கேட்டாள்.

அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது. உன்மத்தனாய் நின்றேன்.

”உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் போதாதுன்னு சொல்றேன். புரியுதா?” நக்கலாய்ச் சிரித்தாள் அம்சவேணி.

தொடர்ந்தாள்: ”பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம,  பத்து லட்சம் தர்றேன். எனக்கு ’வைப்பாட்டியா இரு’ன்னு  சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப் பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க. அப்படித்தானே?" இப்போது வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு என்பது எனக்குப் புரிந்தது.

“அம்மா வந்ததும், ’நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. ‘எனக்கு வாய்ச்சது எத்தனை உத்தம புருஷன்’னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா,  நான் வேலைக்காரிதானே.”

கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.

*******************************************************************************************************************************************

‘நான்’ என்று தன்மையில் கதை சொல்வது, புனைகதை ‘உத்தி’களுள் ஒன்று. இந்த ‘நான்’, ‘பசி’பரமசிவமாகிய நான் அல்ல! நம்புங்கள்.

*******************************************************************************************************************************************

புதன், 3 ஏப்ரல், 2013

'இது’க்குமா கூட்டணி! இதற்காகவா ‘ஆறாவது’ அறிவு!! அடப்பாவிகளா!!!

பின்வரும், ‘இறைவியின் சீற்றம்’ என்னும் கதை, இறை நம்பிக்கையாளர்களை என் மீது சீற்றம் கொள்ளச் செய்யும்! அவர்களின் மனசாட்சியோ அதைத் தடுக்கும்!!

‘இறைவியின் சீற்றம்’,  04.07.11 இல் பதிவிடப்பட்டது. நீண்ட காலம் நெஞ்சில் ஊறிக் கிடந்த எண்ணங்களின் வெளிப்பாடு அது.  அது சம்பாதித்தது, வெறும் ’37’ பக்கப் பார்வைகள்[ஹிட்ஸ்] மட்டுமே.

என்னுடைய மற்ற சில பதிவுகளுக்கான [கவர்ச்சி மிக்க தலைப்புகளுடன்] பக்கப் பார்வைகளை’ப் பார்வையிட்டுவிட்டுக் கதையைப் படியுங்கள்.



உள்ளீடுபக்கக்காட்சிகள்
6457
5121
28 செப்., 2012, 11 கருத்துகள்
4050
19 ஜன., 2013, 15 கருத்துகள்
3637
14 பிப்., 2013, 6 கருத்துகள்
3218
24 டிச., 2012, 2 கருத்துகள்
3210
3064
2243
2070
1723


இக்கதையை, மீள்பதிவு செய்வதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்!


இதோ கதை..........

தலைப்பு:                       இறைவியின் சீற்றம்

றைவனும் இறைவியும் [அரூபமாக], வாகனப் போக்குவரத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டமிட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய தெருவில் நடந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, “அங்க பாருங்க” என்று ஒரு குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன், “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.

பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே, இவளைப் பைத்திய ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோடு நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க.”

வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, “என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப்படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்.

“இவளுக்கு அப்போ பதினாறு வயசு. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போனபோது, நான்கு காலிகள் இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க...........

.....ஐயோ.....என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சிக் கூக்குரல் எழுப்பினா இவ. காப்பாத்த யாருமே வரல........

.....கடவுளே...ஏ...ஏ...ஏ.....ஓ...ஓஒ...ஓஓ...கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே அழுது புலம்பி அபயக் குரல் எழுப்பினா.....

....துடிதுடிச்சி ஓடோடிப் போய்க் காப்பாத்தவேண்டிய நீங்களும் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க....

.....சூதுவாது அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணைச் சீரழிச்சி, சித்ரவதை பண்ணி நடுத் தெருவில் அலைய விட்டுட்டானுக.....

....தனக்குக் கடவுள் தந்த பரிசை நினைச்சி நினைச்சி, எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையுற இந்தப் பைத்தியக்காரியைப் பாருங்க. ரெண்டு கண்ணாலயும் நல்லாப் பார்த்து ரசிங்க” என்றுகுரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் பெருகி வழிந்திட வெகு சிரமப்பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி, “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன?” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்.”

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதைச் சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு நீண்ட சங்கிலித் தொடர். எப்பெப்போ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணுங்கிறது ஏற்கனவே விதிக்கப்பட்டது. நீ கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவளோட கணக்கைப் புரட்டிப் புள்ளிவிவரம் தர்றது என்னோட வேலையில்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இப்போ அனுபவிக்கிறா. அவ்வளவுதான்.”

நகர முற்பட்டார் இறைவன்.

“நில்லுங்க.”

இறைவியிடமிருந்து கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட வார்த்தை, இறைவனை மேலும் நகரவிடாமல், ஆணி அடித்தாற் போல நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்குத் தண்டனை அனுபவிக்கிறாள்...சரி. இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு அவங்க கடந்த பிறவிகளில் புண்ணியம் செஞ்சாங்களா?” அப்படி என்ன பெரிய புண்ணியம்? இதுக்காவது அவங்க கணக்கைப் புரட்டிப் பார்த்துப் பதில் சொல்வீங்களா?” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மோனத்தில் புதையுண்டார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@