அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 30 ஏப்ரல், 2016

'மூடநம்பிக்கை’.....ஓர் அசத்தல் திறனாய்வு!

மூடம் - அறியாமை.

அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும். [Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள். [Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote]

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள். 

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேடோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கம் மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை,அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன.

[belief, trust, hope என்னும் மூன்றையும், ‘நம்பிக்கை’ என்றே தமிழ் படுத்துகிறது கூகிள் மொழிபெயர்ப்பு. நாம் நம்பிக்கை என்ற ஒரு சொல்லையே ‘முன் ஒட்டு’ சேர்த்து மாறுபட்ட பொருள்களில் பயன்படுத்துகிறோம். இது பற்றிய விரிவான ஆய்வு இங்கு தேவையில்லை].

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

மூட நம்பிக்கை என்ற வார்த்தையே தவறு. சரியான நம்பிக்கைதவறான நம்பிக்கை என்றே அறிவியல் சுட்டிக் காட்டுகிறது’ என்கிறது ‘உயிரோசை’, வார இணைய இதழ்.

எந்த அறிவியல் இப்படிச் சொல்கிறது என்பது தெரியவில்லை. ‘அவநம்பிக்கை’, ‘தன்னம்பிக்கை’ ஆகியவை 
வழக்கில் இருப்பதை, உயிரோசை கருத்தில் கொள்ளவில்லை போலும்.

'நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். கவிஞரின் கருத்துப்படி, ‘வெல்வேன்’ என்று நம்பியவன் 
தோற்றுப்போனால், அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை 
ஆகிவிடாது. ‘நான் வெல்வேனா?’ என்று சொல்லியிருந்தால், அதுவும் நம்பிக்கைதான். 
‘பூனை குறுக்கே வந்ததால்...’என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு காரணத்தைச் 
சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

##பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி  14.5 பில்லியன் ஆண்டுகள் 
என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை கிறிஸ்தவ 
பைபிளின்படி, இந்தப் பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 6000 ஆண்டுகள்தான் 
என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால், அது மூடநம்பிக்கை. 

உடலுறவின் மூலம், ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் இணைந்து 
கருத்தரிக்க முடியாவிட்டாலும், செயற்கை முறையில் அதைச் சாதிக்க முடியும் 
என்ற நிலை உருவான பிறகும்   விரதமிருந்து, விக்கிரகங்களைவழிபட்டால்தான் 
குழந்தை கிடைக்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் துணைக்கோள் என்று நிறுவிய பின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களுக்குள் அடங்கும் என்று நம்பினால் அது அறியாமையால் ஏற்பட்ட மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.

இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.##

-[மதுவர்மன், ‘நம்பிக்கைகள் பற்றி ஓர் ஆய்வு’, புதன், ஆகஸ்டு 6.2008]

முத்தாய்ப்பாக, மூடநம்பிக்கையின் தோற்றம் குறித்த ஒரு வரலாற்றுக் குட்டிக்கதை..........

[மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், பகுத்தறிவுப் பிரச்சார இதழில் படித்தது. இதழின் பெயர், கட்டுரைத் தலைப்பு முதலானவை நினைவில் இல்லை]

###வேத, புராண காலங்களுக்கு முன்னரே இந்த மண்ணுலகை ஆண்ட ஒரு மன்னன் தன் மந்திரி பிரதானிகளுடன் கோயிலுக்குச் சென்றான்.

இறைவனின் சந்நிதிக்குள் நுழைய முற்பட்டபோது, வாயில்படியில் கால் இடறித் தரையில் குப்புற விழுந்தான்.

அருகிலிருப்போர் நகைப்பார்களே என்று நினைத்த அவன், தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த நிலையிலேயே இறைவனை வழிபட்டு, அசம்பாவிதம் ஏதும் நடவாததுபோல எழுந்து நின்றான்.

இந்த ரகசியத்தைப் பிறர் அறியாமலிருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் தரையில் நீட்டிப்படுத்த நிலையிலேயே வழிபட்டான். [அப்போதெல்லாம், நின்ற கோலத்தில் வணங்குவதுதான் வழக்கத்தில் இருந்ததாம்].

மன்னனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப் பயந்த ஏனையோரும், அவனைப் போலவே ஒட்டுமொத்த அங்கமும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்கள்.. இதுவே பின்னர் அஷ்டாங்க நஸ்காரம்’ எனப்பட்டது.

[‘[8 அங்கங்கள் பூமியில் பதிய செய்யும் நமஸ்காரமே அஷ்டாங்க நமஸ்காரம். இதில் நெற்றி, காதுகள், நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் பூமியில் பட, மனதை ஒருநிலையில் வைத்து, பகவத் பாதங்களை நாம் ஸ்பர்சிப்பதாக உருவகம் செய்து வணங்குவது நலம்’] 

இவ்வழிபாட்டு முறை குறித்து, ஓலைச் சுவடிகளிலும் செப்பேடுகளிலும் பின்னர் எழுதி வைத்தார்கள்.

காலப் போக்கில், மன்னர் குலத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றலானார்கள். இன்றளவும் இம்முறை தொடர்கிறது###

அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதலால் வெகுவாகத் துவண்டுபோன மனிதர்கள், இறைவனின் சந்நிதியில் விழுந்து உருண்டு புரண்டு கவிழ்ந்து படுத்து  அவனிடம் முறையிட்டுத் தம் துயர் தணித்துக்கொண்ட நிகழ்வுகளே காலப்போக்கில் அஷ்டாங்க வழிபாட்டு முறையாக மாறியது என்று சொல்வாரும் உளர்.

ஜென் கதைகளில் ஒன்றான, குரு வளர்த்த பூனை கதையும் இவ்வகையைச் சார்ந்ததுதான். பலரும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு மட்டும்.....

அது ஓர் ஆசிரமம். அதற்கு ஒரு குரு இருந்தார். சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்குக் குரு பாடம் எடுப்பது வழக்கம், 

ஒரு நாள் பாடம் எடுக்கையில் அவர் வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொந்தரவு செய்தது, குரு காரணம் ஏதும் சொல்லாமல், சீடர்களிடம் அந்தப் பூனையைப் பிடித்து தூணில் கட்டச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, 

மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அது தொந்தரவு செய்தது. பூனை தூணில் கட்டப்பட்டது. அதற்கு மறுநாள், பாடம் ஆரம்பிக்கும் முன்னரே அதைத் தூணில் கட்டினார்கள் சீடர்கள். அது தொடர்ந்தது. 

ஒரு நாள் அந்தப் பூனை செத்துப்போனது. வேறொரு பூனையைத் தேடிப் பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் சீடர்கள்!. குரு அவர்களின் செயலுக்குக் காரணம் புரியாமல் விழித்தார்.    
=============================================================================================

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

‘நாத்திகர்’களுக்கு மிகக் கடுமையானதோர் எச்சரிக்கை!

‘மதச்சார்பற்றது’ என்று  சொல்லப்படும் இந்த மண்ணில் மதவெறியர்களால் கடவுள் மறுப்பாளர்கள் பலர்   கொல்லப்பட்ட நிலையில், மதச்சார்புள்ள வங்கதேசத்தில் இவ்வாறான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை.


ங்கதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஏ.எப்.எம்.ரெசவுல் கரீம் சித்திக்கீ அவர்கள்; முற்போக்குச் சிந்தனையாளர்.
நேற்றைய தினம்[23.04.2016] காலை நேரத்தில், வழக்கம்போல வீட்டிலிருந்து பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும்போது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் இவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்[தி இந்து, ஞாயிறு, ஏப்ரல்24,2016]

இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, ‘வங்கதேசத்தில் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பியதே இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்’ என்று அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் நாத்திகக் கொள்கையுடைய அறிஞர்களும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலரும் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; மேலும் பலர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள்.

‘புண்ணிய பூமி’ எனப்படும் இந்தப் பாரததேசத்திலும் பகுத்தறிவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை; தண்டிக்கப்படவும் இல்லை.

மதச்சார்புள்ளவர்களால் ஆளப்படும் இம்மாதிரி நாடுகளில் நாத்திகர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்பதை, எஞ்சியுள்ள நாத்திகக் கொள்கையாளர்கள் உணர்தல் வேண்டும். உயிர்வாழும் ஆசை இருந்தால், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் மதங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதை நிறுத்துதல் வேண்டும். மக்கள் எக்கேடுகெட்டால் நமக்கென்ன என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

“இல்லையில்லை. உயிர் எமக்கு ஒரு பொருட்டல்ல; அடிப்படை மதவாத சக்திகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்வோம்” என்று முழக்கமிடுவார்களேயானால், அவர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது.........

“உங்களின் துணிவு பெரிதும் மெச்சத்தகுந்தது. எந்தவொரு காலக்கட்டத்திலும் உயிர்விடத் தயாராய் இருக்கும் நீங்கள் கைவசம் ஒரு துப்பாக்கி அல்லது கத்தி வைத்துக்கொள்ளுங்கள்; உங்களின் உயிரைப் பறிக்க வரும் வெறியரில் சிலரையேனும், குறைந்தபட்சம் ஒருவரையேனும் போட்டுத்தள்ளிவிட்டுச் சிறை செல்லுங்கள்; தூக்குமேடை ஏறவும் தயாராக இருங்கள். எதிரிகளின் தாக்குதல் தொடருமேயானால் உங்களின் அரிய உயிரை இழக்கவும் நேரிடும்.

இந்த உங்களின் துணிச்சலான நடவடிக்கையால், உலக அளவிலுள்ள மூடர்களின் தொகையில் சிலவோ ஒன்றோ குறையும். இதுவும் பகுத்தறிவுக் கொள்கைக்கான வெற்றிதான்.”
###################################################################################







செவ்வாய், 19 ஏப்ரல், 2016

’மாராப்பு’...இந்தக் கதை பெண்களுக்குப் பிடிக்கும்! ஆண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது!!


நான் படைத்த ஒருபக்கக் கதைகளில் மிகப் பல  வாசகரைப் பெற்ற கதை இது. நாள்தோறும். குறைந்தபட்சம்  பத்துப் பேர்களாவது வாசிக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையில் மேலும் பலர் வாசிக்கக்கூடும் என்பதால் மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

ஜோலார்ப்பேட்டை – ஈரோடு பயணியர் ரயில் வண்டி பொம்மிடி தாண்டி, தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது.

கண்களுக்கு விருந்தாகிக் கண நேரத்தில் காணாமல் போகும் மலை சார்ந்த காடுகளையும் வயல்வெளிகளையும், இருக்கையில் சாய்ந்தவாறு ‘பராக்கு’ப் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, வலது கால் பாதம் ‘நறுக்’ என்று மிதிக்கப்பட்டதால், காலைப் பின்னுக்கு இழுத்ததோடு, திடுக்கிட்டுப் பார்வையை உள்ளுக்கிழுத்தாள்.

முந்தானை சற்றே விலகியிருந்த தன் ஒரு பக்கத்து மார்பகத்தை எதிரே அமர்ந்திருந்த மாதவன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“ஏய்யா என் காலை மிதிச்சே?” என்று கேட்டாள்.

“காத்து வாங்குது. இழுத்து மூடுடி” என்றான் அவன்.

மாராப்பை இழுத்து மூடுவதற்கு மாறாக, அவன் மீது அலட்சியப் பார்வையை வீசிவிட்டு, மீண்டும் இயற்கையழகை ரசிக்கத் தொடங்கினாள் தேவகி.
‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.

வீடு போய்ச் சேர்ந்ததும், “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். டீ கொண்டா” என்று உத்தரவிட்டான்.

தேனீருடன் வந்த தேவகியின் இன்னொரு கையில் நீண்டதொரு அரிவாளும் இருந்தது.

“நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும். சேலை கட்டுற ஒரு பொம்பள எல்லா நேரமும் இழுத்து இழுத்துப் போர்த்திகிட்டு இருக்க முடியாது. கவனக்குறைவா இருக்கும்போது மாராப்பு விலகத்தான் செய்யும். கட்டுன புருஷனா இருந்தாலும் இதைக் கண்டுக்காம இருக்கணும். அப்படி இருக்க உன்னால முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன இந்த ஒரு வருசத்தில் ஒரு நூறு தடவையாவது “இழுத்து மூடு’’ன்னு சொல்லியிருப்பே. ஒன்னு செய். உன் கையால என்னோட ரெண்டு கொங்கையையும் அறுத்துப் போட்டுடு. அப்புறம் உனக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி கிடைச்சுடும்.”

தேனீர்க் குவளையை ஒரு புறம் வைத்துவிட்டு அரிவாளை மட்டும் நீட்டினாள் தேவகி.

“என்னை மன்னிச்சுடு தேவகி” என்று சொல்ல நினைத்தான் மாதவன். ஆனால், சொல்லவில்லை; ஆழ்ந்த யோசனையுடன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இந்தக் கதையில், முதல் பாதி நான்  [திருட்டுத்தனமாய்ப்] பார்த்தது! மீதி?...கற்பனை!

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

திங்கள், 18 ஏப்ரல், 2016

‘தலித்’ அல்லாதோர் சிந்தனைக்கு..........


தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 83 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லக்கண்ணு அவர்கள். இது இன்றைய நாளிதழ்ச்[தி இந்து, ஏப்ரல் 18, 2016] செய்தி.

[83 பேர்களில் தலித் இளைஞர்கள் எத்தனை பேர், ஆதிக்க சாதிப் பெண்கள் எத்தனை பேர் என்பதை அறிய இயலவில்லை. தலித் இஞைர்களே அதிகம் என்பது   என் எண்ணம். தோராயமாக 50 பேர் எனக் கொள்வோம்]. 

‘ஜாதி மாறித் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்க அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்  அவர்.
அரசு, தனிச்சட்டம் கொண்டுவந்து, ஜாதி ஆணவக் கொலைகள் முற்றிலுமாய்த் தடுத்து நிறுத்தப்படும் நிலை உருவானால்,  உயர்சாதிப் பெண்களைக் காதலித்து மணம் புரியும் தலித் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.  அதன் விளைவாக, சாதிபேதம் அற்றதொரு சமுதாய மறுமலர்ச்சிக்கான ந்த இளைஞர்களின் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இன்றைய நிலையில், கொலையுண்ட 50 இளைஞர்களின்  பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. இவர்களை மணந்த 50 தைரியசாலிப் பெண்கள் விதவைகள் ஆனார்கள். 

இங்கு நிலவும் அதீத ஜாதிவெறியர்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, இளைஞர்கள் கலப்பு மணம் புரியாமல் இருந்திருந்தால், நன்கு படித்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவைத்திருந்த இவர்களை மணக்கும் வாய்ப்பு  50 தலித் இளம் பெண்களுக்குக் கிடத்திருக்கும். அதுவும் பறிபோனது.

ஆக, இந்தப் படுகொலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மேல்சாதிப் பெண்கள் மட்டுமல்ல, தலித் இளம் பெண்களும்தான்.

பாடுங்கய்யா........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...”

பாடுங்க.....உரக்கப் பாடுங்க!
***********************************************************************************************************************






வெள்ளி, 15 ஏப்ரல், 2016

TRANSGRESSIVE எழுத்தாளரா ‘வயாகரா’ புகழ் சாருநிவேதிதா?!


குமுதம் இதழில் ‘வயாகரா’ மேட்டரை எழுதப்போகும் சாரு நிவேதிதாவை TRANSGRESSIVE எழுத்தாளர் என்கிறது குமுதம். அதற்கான விளக்கத்தைக் கீழ்க்காணுமாறு[குமுதம், 20.04.2016] தந்திருக்கிறார் வயாகரா புகழ் சாரு.

‘எதைப் பற்றிப் பேசக்கூடாது என்கிறார்களோ, எதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்கிறார்களோ அதைப் பற்றி எழுதுவதுதான் டிரான்ஸ்கிரசிவ்.’

தமிழில் ‘அத்து மீறுதல்.’

“வயாகரா என்றால் கெட்ட வார்த்தை,  அதைப் பற்றி[வயாகரா மேட்டர்] எழுதக் கூடாது என்கிறார்கள். நான் எழுதப்போகிறேன். அதனால், நான் ஒரு TRANSGRESSIVE எழுத்தாளர்” என்று சொல்கிறார் நிவேதிதா சாரு.
சாரு அவர்களே, 

வயாகரா கெட்ட வார்த்தை என்றோ, பாலுணர்வு பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தவறு என்றோ இப்போதெல்லாம் யாருமே சொல்வதில்லை[தமிழிலேயே நல்ல நூல்கள் உள்ளன. மிகப் பெரும்பாலோர்க்கு, அவற்றை வாங்கிப் படிக்கும் மனப் பக்குவமும் சூழலும் இங்கு இல்லை என்பதே உண்மை]; அப்படிச் சொல்லப்படுதாகச் சொல்கிறவர் நீர்[உடந்தை: குமுதம் ஆசிரியர் குழு] மட்டுமே.

‘ஜீரோ டிகிரி’ எழுதிப் பிரபலமான உம்மைக் குமுதம் எழுதவைப்பதே இதழின் விற்பனையைக் கூட்டத்தான். உமக்குத் தெரிந்த, தெரியாத[புருடா] கெட்டதுகளையெல்லாம் எழுதினால்தான் அது சாத்தியமாகும். 

எழுதும். எத்தனை வாரம் வேண்டுமானாலும் எழுதும். நான் ஒரு ‘டிரான்ஸ்கிரசிவ் எழுத்தாளர்’ என்ற ‘பில்டப்’ மட்டும் வேண்டாம்.

கனவு, கேப்பசினோ[cappuccino -  ஒரு வகை பானம்?] பற்றியெல்லாம் எழுதவிருக்கும் நீர், ‘கொஞ்சம் சாட்டிங்’ பற்றியும் எழுதவிருக்கிறீர். கொஞ்சமென்ன, நிறைய...நிறைய...நிறையவே எழுதும். ஆனால்.....

ஓர் அப்பாவிப் பெண்ணுடன் சாட்டிங் செய்ததால் உம்முடை மானம் மரியாதையெல்லாம் அந்தரத்தில் பறந்ததே, அதை மட்டும் மறந்துவிட வேண்டாம்.

‘நடமாடும் வயாகரா’ சாரு நிவேதிதா அவர்களே, 

எழுதும். குமுதம் “போதும்” என்று சொல்லும்வரை எழுதும். அதன் மூலமாக, உமது புகழ் உலகெங்கும் பரவவும், குமுதத்தின் விற்பனை மில்லியன் கணக்கில் உயரவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
===============================================================================


வியாழன், 14 ஏப்ரல், 2016

சாரு [சாராய]நிவேதிதாவும் குமுதம் இதழின் குறும்புத்தனமும்!


இதழின் விற்பனை சரியும்போதெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படைப்புகளை வெளியிடுவது குமுதம் வழக்கமாகக் கையாளும் ஓர் உத்திதான்.

அதை நினைவுபடுத்துகிறது அந்த இதழில்[குமுதம், 20.04.2016] எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதவிருக்கும் தொடர் பற்றிய அறிவிப்பு[‘கனவு கேப்பசினோ. கொஞ்சம் சாட்டிங்!’].
இத்தொடர் பற்றிய அறிவிப்பில், சாருவுக்கு ‘நடமாடும் வயாகரா’ என்று அடைமொழி தந்து பெருமிதப்பட்டிருக்கிறது குமுதம். அதாவது, சாருவும் வயாகராவும் ஒன்று என்கிறது!

வயாகரா என்பது, உடலுறவு சுகத்தை நீண்ட நேரம் அனுபவிக்கப் பயன்படும் மாத்திரை. அதை விழுங்கினால்  உணர்ச்சி நரம்புகளை அது எழுச்சி பெறச் செய்யும்; குறைந்த அவகாசத்தில் அவ்வெழுச்சி வீழ்ச்சி கண்டுவிடாமல் அது   கட்டுப்படுத்தும்[அதைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் உண்டாவது வேறு விசயம்].

இந்த அரிய கண்டுபிடிப்பான வயாகராவுடன் சாரு நிவேதிதாவை ஒப்பிட்டுள்ளது குமுதம்!

வயாகராவை விழுங்க முடியும். சாருவை விழுங்க முடியாதே. அப்புறம் எதற்கு இந்த ஒப்பீடு?

‘விழுங்கத் தேவையில்லை. சாருவைப் பார்த்தாலே தேகமெங்கும் ‘ஜிவ்’ என்று காமாக்கினி பரவித் தகிக்கும். அந்தத் தகிப்பு எளிதில் தணியக்கூடியதல்ல. சலிக்கும்வரை ஆணும் பெண்ணும் கூடிக் களிக்கலாம்.  வயாகரா என்ன பெரிய வயாகரா, நம்ம சாரு சூப்பர் வயாகராவாக்கும்’ என்கிறதா குமுதம்!

ஆம். ‘சாருவே வயாகரா. வயாகராவே சாரு.

நீள் சுகத்துக்கு வயாகராவை விழுங்க வேண்டாம். அதற்குப் பதிலாக, சாருவைப் பார்த்தாலே போதும். அதாவது, ஓர் ஆணும் பெண்ணும் சாருவை அவ்வப்போது பார்த்துக்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் புணர்ச்சி இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்’ என்கிறது குமுதம்.

“சாருவைக் காசுபணம் செலவழித்தேனும் வரவழைத்து அவர் முன்னிலையில் உடலுறவு கொள்வது நடைமுறை சாத்தியமற்றது; அநாகரிகமானது” என்று நாம் சொன்னால், குமுதத்தின் பதில்.....

"அவரின் புகைப்படத்தைப் பார்வைக்கு வைத்துக்கொண்டாலே போதும்” என்பதாக இருக்கக்கூடும்.

குமுதத்தில் தொடர்ந்து வெளிவரவிருக்கும் அவரின் எழுத்து, வயாகரா போல் நீண்ட நேர சுகத்துக்குப் பயன்படுவதாக இருப்பின்[?], ‘வயாகரா எழுத்தாளர்’ என்பதாக அடைமொழி வழங்கலாமே தவிர, அவரையே ‘வயாகரா’ என்று உருவகப்படுத்துவது எவ்வகையிலும் பொருத்தமானதன்று.

தன்னை ஒரு குடிகாரன் என்றும், செக்ஸியாக எழுதுவதில் கில்லாடி என்றும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் சாரு நிவேதிதா என்னும் எழுத்தாளனுக்கு, ‘நடமாடும் வயாகரா’ என்று அடைமொழி கொடுத்துக் குமுதம் அறிவிப்புச் செய்தது அநாகரிகமானது; ‘அவர், பெண்களுக்கான வயாகராவும்கூட’ என்று பொருள்  கொள்ளவும் இடமிருப்பதால் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இம்மாதிரியான தவறுகள் இனியும் குமுதத்தில் இடம்பெறாது என்று நம்புவோம்.

வாழ்க குமுதம்!

***********************************************************************************************************************













புதன், 13 ஏப்ரல், 2016

கடவுள் மட்டும் ‘அது’க்கு விதிவிலக்கானவரா?


‘பிரபஞ்ச வெளியிலுள்ள அனைத்து  உயிர்ப்பொருள்களிலும் உயிரற்றனவற்றிலும் ‘மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன’ என்கிறது அறிவியல்.

எந்தவொரு பொருளும் நாம் பார்க்கிற நொடியில் இருப்பதுபோல் இதற்கு முன்பு இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை; இருக்கவும் முடியாது. இது இயற்கையின் நியதி.

உயிர்ப்பொருள்கள் இயங்குவதற்கு இந்த மாற்றங்களே காரணமாகும்.
உயிருள்ளவற்றிற்கு மட்டுமல்ல, உயிரற்ற பாறை போன்றவற்றுக்குள்ளும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பாறையானது, நம் பார்வைக்கு, அசைவற்று அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், அதனுள் இருக்கும் துகள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இடைவெளியின்றி இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மாற்றங்கள் இருப்பதால்தான், துகள்களின் தன்மைகளை ஆராய்ந்து அது எத்தனையாண்டுப் பழைமையான பாறை என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள்[‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்னும் நூலில் அஸ்வகோஷ்].

உள்ளே மாற்றங்கள் நிகழ்வதால்தான், உயிருள்ள பொருள்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருள்களும்  இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ளவை இடம்விட்டு இடம் பெயர்ந்து இயங்குகின்றன. உயிரற்றவை, அசைவின்றி இருந்த இடத்திலேயே இயங்கிகொண்டிருக்கின்றன. 

மனிதன் இயங்குவதற்கும் சிந்திக்கும் திறனைப் பெற்றதற்கு அவனின் உடலுக்குள் நிகழும் மாற்றங்களே காரணமாம்.

ஏனைய பொருள்களைப் போலவே, மாற்றங்கள் நிகழ்வதால் இயங்குபவன் மனிதன். மாற்றங்கள் இல்லையேல், மனிதன் இல்லை; மனித மூளை இல்லை; சிந்திக்கும் திறன் இல்லை; அதன் மூலம் உருவாகும் படைப்புகளும் இல்லை

மனிதனுக்கு வாய்த்திருக்கும் படைப்பாற்றல் முழுக்க முழுக்க மாற்றங்களைச் சார்ந்ததே.

மாற்றங்கள் இல்லையென்றால், மனிதன் உட்பட அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களையும் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளும் இல்லை. கடவுளே ஆயினும் மாற்றங்கள் இல்லையேல் சிந்தித்துச் செயல்படுதல் என்பது சாத்தியமே இல்லை.

‘மாற்றங்களுக்கு உட்படாதவர் கடவுள்; அதாவது, ‘எல்லாம் கடந்தவர் அவர்’ என்று சொல்வது, ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுவதே தவிர, நிரூபிக்கப்பட்ட கருத்தன்று.

கடவுள் இருப்பது உண்மையென்றால், அவரின் இருப்பை உறுதிப்படுத்துவது எளிதல்ல; உண்மை கண்டறியும்  உயர் நோக்குடன் ஆழ்ந்து...மிக மிக ஆழ்ந்து சிந்திப்பது.....சிந்தித்துக்கொண்டே இருப்பது அறிஞர்தம் கடமை.

இந்த உண்மையை அறிந்து தெளிந்து, மக்களிடையே கடவுள் தொடர்பான அனுமானங்களையும் பொய்க் கதைகளையும் தொடர்ந்து பரப்பும் செயலை ஆன்மிகவாதிகள் நிறுத்துதல் வேண்டும்.

இது உடனடித் தேவை.
===============================================================================










வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தாடியும் காதலும்! [புதுயுகக் காதலர்களுக்கான கதை]

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”
தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“உடம்புக்கு ஒரு கேடும் இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” கோபத்தின் எல்லையைத் தீண்டியிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ‘உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, விரக்தி தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

நாட்கள் கழிந்தன. 

கீர்த்தியின் அப்பா மாரடைப்பால் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

அன்று ’காரியம்’.

“வா கீர்த்தி.” -காரியம் செய்பவர் கீர்த்தியை ஒரு மர நிழலுக்கு அழைத்துச் சென்றார்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

”கூடாதுப்பா. அது நம் பரம்பரை வழக்கம்.” -கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்தவருக்கு ’மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்துச் சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

“கலியுகம் முடிஞ்சிடிச்சி. இது காதல் யுகம்...ரொம்பப் பொல்லாதது” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன், 6 ஏப்ரல், 2016

‘தலைவெட்டி’ பாபா ராம்தேவுக்கு ஒரு தமிழனின் அறிவுசார் மடல்!

இந்தப் பதிவை எழுதியதற்காக நீர் என் தலையை வெட்ட விரும்பினால்.....

‘நள்ளிரவு பன்னிரண்டிலிருந்து காலை ஆறு மணி’வரை நான் உறங்குவது வழக்கம். வெட்டரிவாள்களுடன் உமது தொண்டர்கள் வரும் நாளை அறிவித்தால், அன்றைய தினம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து உறங்குவேன். ‘சதக்’...ஒரே வெட்டு. வலியில்லாமல் நான் செத்துப்போவேன்!

யோகா குரு அவர்களே, //‘பாரத மாதாகீ ஜே’ சொல்ல மறுக்கும் தொப்பி போட்ட லட்சக்கணக்கானவர்களை வெட்டியிருந்திருப்பேன், அரசியல் சட்டத்தை மதிப்பதால் அதைச் செய்யவில்லை// என்கிறீர்கள். தங்களின் இந்த ஆவேசப் பேச்சு நேற்றைய தமிழ் நாளிதழ்களில்[தமிழ் இந்து, 05.04.2016] வெளியானது.

தொப்பி வைக்காத,  உம்மைப் போல் அடர்ந்த கருகரு தாடி வளர்க்காத, “பாரத மாதாகி ஜே” சொல்லாத...சொல்ல விரும்பாத இந்தியக் குடிமக்கள், நீங்கள் நினைப்பது போல் லட்சக்கணக்கானவர்கள் அல்ல, கோடிக்கணக்கானவர்கள் இருக்கக்கூடும். அத்தனைபேர்களின் தலைகளையும் வெட்டித் தள்ளுவீர்களா ராம்தேவ்?
நாடு என்பது ஒரு நிலப்பகுதி. நாட்டை இழந்தால், அங்கு வாழும் மக்கள் நாடோடிகள் ஆவார்கள் என்பது உண்மை.

இதை உணர்ந்து, மிக்க நாட்டுப் பற்றுடன் மக்கள் வாழ்தல் வேண்டும் என்பதற்காகத்தான், வாழும் நாட்டைத் தாய்நாடு என்றும் தந்தை நாடு என்றும் வாழ்ந்து முடித்தவர்கள் சொல்லிப்போனார்கள்.

பாரத தேசம், ‘பாரத மாதா’[உருவகம்] என்று சொல்லப்பட்டதும் இந்த நோக்கில்தான். 

காலங்காலமாக, இப்படிச் சொல்லப்படுகிற காரணத்தினாலேயே நாம் வாழும் நாடும்  ஈன்ற தாயும் ஒன்றாகிவிடா. எனினும்.....

நாட்டை இழந்தால் அங்கு வாழும் மக்கள் அனாதைகள் ஆவார்கள் என்பதால், பிறந்த ‘மண்’ணின் மீது பற்றுக்கொள்வதும், தேவைப்பட்டால் அதைப் பாதுகாக்க அரிய உயிர்களைத் தியாகம் செய்வதும்கூட வரவேற்கத்தக்கவையே. இதன் பொருட்டு மக்களின் மனங்களை உரிய முறையில் பக்குவப்படுத்துதல் இன்றியமையாப் பணியாகும்.

இப்பணி செய்வதை விடுத்து, பிறந்த நாட்டைப் ‘புண்ணிய பூமி’ என்று புனிதப்படுத்துவதும், "பெற்ற தாயெனப் போற்றி ‘ஜே’ போடு" என்று வலியுறுத்துவதும் அச்சுறுத்துவதும் அறிவுடையார் செயல்களல்ல. எனவே.....

பாபாஜி,

இனியேனும், தொப்பி போட்டவரோ போடாதவரோ, உம்மைப் போல் தாடி வளர்த்தவரோ வளர்க்காதவரோ, “பாரத மாதாக்கி ஜே சொல்லு. சொல்லாவிட்டால் உன் தலையை வெட்டுவேன்” என்று மிரட்டுவதை நிறுத்துங்கள். தவறினால்..........

முடிவு, உங்கள் சிந்தனைக்கு!
=============================================================================================
இன்று[06.04.2016] பிற்பகல், 02.14 மணிக்குப் ‘பிழை திருத்தம்’ செய்யப்பட்டது.




  

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

தமிழ்மணத்திற்கு என் நன்றியும் விரும்பத்தகாத ஒன்பது கேள்விகளும்!

நன்றி.....2012ஆம் ஆண்டிலிருந்து வேறு வேறு தலைப்புகளிலான வலைத்தளங்களில் நான் எழுதிய 350க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தன்[தமிழ்மணம்] இடுகைப் பட்டியல்களில் இணைத்துச் சிறப்பித்தமைக்கு. 
கேள்விகள்:

ஒன்று:
பதிவை இணைத்துக்கொண்டதாக அறிவித்துவிட்டு, முகப்புப் பக்கத்தில் இடம்பெறாமல்  தடுத்து, அடுத்த பக்கத்தில் வெளிவருவதற்கு அனுமதிப்பது ஏன்? 

இரண்டு:
முகப்புப் பக்கத்தில் வெளியாக அனுமதித்துவிட்டு, ‘பார்வை’கள் அதிகம் பெறுவதன் மூலம் ‘சூடான’ இடுகைப் பட்டியலில் இடம்பிடித்து, முதல் பத்து இடுகைகளில்[முகப்புப் பக்கத்தில்] ஒன்றாக முன்னிலை பெறும் நிலையில், அதை இருட்டடிப்புச் செய்வதன் நோக்கம் என்ன?

மூன்று:
பதிவின் ‘தலைப்பு’ வாசகத்திலோ, தொடக்க வரிகளிலோ தமிழ்மணம் பட்டியலிட்டுள்ள விரும்பத்தகாத வார்த்தைகளில் ஒன்றோ பலவோ இடம்பெற்றிருப்பது மேற்குறிப்பிட்ட இருட்டடிப்பிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.  பட்டியல் என்று ஒன்று இருந்தால் அதை வெளியிட்டுப் பதிவர்களை எச்சரிக்கை செய்யலாமே! ஏன் செய்யவில்லை?

நான்கு:
என்னுடைய ஒருபதிவுக்கு, ‘எழுத்தாளர் கல்கி நாத்திகரா?’ என்று தலைப்பிட்டதற்காக, அந்தத் தலைப்பு, வெறும் புள்ளிகளால் மறைக்கப்பட்டது. அது ஏன்? தலைப்பில்லாத பதிவை எத்தனை பேர் படிப்பார்கள்? அது எப்படிச் சாத்தியமாகும்?

ஐந்து:
இறையன்பு, I.A.S. அவர்களின், குமுதத்தில் வெளியான ஒரு சிறுகதையைச் சற்றுக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். அதுவும் மேற்குறிப்பிட்டாற்போல இருட்டடிக்கப்பட்டது. ஏன் இந்தத் தற்சார்பு நடவடிக்கை?

ஆறு: 
இன்று முற்பகலில், நான் எழுதிய, ‘நடிகர்களின் ‘கட் அவுட்’களுக்கு பால் அபிஷேகம் செய்வது குற்றமா?’ என்ற பதிவும் முகப்புப் பக்கத்தில் வெளியாகவில்லை. பதிவின் தொடக்கத்தில் இடம்பெற்ற, ‘கட் அவுட்களுக்குப் பாலபிஷேகம் செய்வது குற்றம் என்றால், கடவுள்களின் [கற்]சிலைகளுக்கு அதைச் செய்வதும் குற்றமே’ என்ற வாசகம் காரணமா? பதிவுகளில், இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவதே குற்றம் என்று தமிழ்மண நிர்வாகிகள் நினைக்கிறார்களா?

ஏழு:
பொதுத் தலைப்பிட்டு, தமிழ்மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் சில, ‘நடிகர்’, ‘நடிகையர்’ என்பன போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பின், அவை திரைமணத்தில் சேர்க்கப்படுகின்றன. இது நியாயமா?

எட்டு:
காரணம் குறிப்பிடாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு பதிவரின் மனதை நோகடிக்கும் என்பதை நிர்வாகிகள் எண்ணிப்பார்த்ததே இல்லையா?

ஒன்பது:
மேற்குறிப்பிட்ட முறைகளிலெல்லாம் ஒரு பதிவரை நோகடிப்பதற்குப் பதிலாக, அவருடைய பதிவுகளையே நிராகரித்துவிடுவது உத்தமம் அல்லவா?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைக்காது என்பதை நான் அறிவேன். இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்படும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ‘ஏதோ ஒன்று’ இதை எழுதத் தூண்டியது. அது எது என்பது எனக்குப் புரியவில்லை!

ன்றி தமிழ்மணம்...மிக்க நன்றி!
=============================================================================================







நடிகர்களின் ‘கட் அவுட்’களுக்குப் பாலாபிஷேகம் செய்வது குற்றமா?

நடிகர்களின் ‘கட் அவுட்டு’களுக்குப் பாலாபிஷேகம் செய்வது குற்றம் என்றால் கடவுள்களின் [கற்]சிலைகளுக்கு அதைச் செய்வதும் குற்றம்தான்.

//நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம். ரசிகர்கள், அபிஷேகம் என்னும் பெயரில் அவருடைய ‘கட் அவுட்’களுக்கு லட்சக்கணக்கான லிட்டர்  பாலைக் கொட்டி வீணடிக்கிறார்கள். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மணிவண்ணன் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்// என்பது நேற்றைய[31.03.2015] தினசரிகளில் வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்க செய்திகளில் ஒன்று.

நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் ‘கட் அவுட்’களின் மீது கொட்டுவது குற்றம்தான் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இது குற்றம் என்றால், தினம் தினம் கோடிக்கணக்கான லிட்டர் பாலை, பக்தியின் பெயரால் கண்ட கண்ட கடவுளரின் [கற்]சிலைகளின் மீது கொட்டி வீணடிக்கிறார்களே, அது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமல்லவா? கடவுள்களைத் திருப்திபடுத்துவதாக நினைத்துக் கணக்கு வழக்கில்லாமல் அரிய மஞ்சளையும் சந்தனத்தையும் பழ வகைகளையும் பாழாக்குகிறார்களே,  இது தண்டனைக்குரிய குற்றமல்லவா?

ரசிகர்களின் செயல்பாடு  முட்டாள்தனமானது என்றால் இவர்களுடையது வடிகட்டின மூடத்தனம்.

இவர்கள் கற்சிலைகளைக் கடவுள்களென நம்புகிறார்கள். அவர்கள் கட் அவுட்களையே தத்தம் தலைவர்களெனப் போற்றி வழிபடுகிறார்கள். இவர்கள் ஒரு குட்டையில் ஊறி அழுகிய மட்டைகள்.

‘பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி வாடும் நிலையில் இம்மாதிரிப் பாலாபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மனுதாரர்.

‘கட் அவுட்’ களுக்கு மட்டுமல்ல, கடவுளர் சிலைகளுக்கும் பாலபிஷேகங்களும் இன்ன பிற அபிஷேகங்களும் செய்வது தடை செய்யப்பட வேண்டும்.

நீதி மன்றம் இதைச் செய்யுமா என்பது நமக்குத் தெரியாது; செய்ய வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான வேண்டுகோள்.
*****************************************************************************************************************************************************