இதழின் விற்பனை சரியும்போதெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படைப்புகளை வெளியிடுவது குமுதம் வழக்கமாகக் கையாளும் ஓர் உத்திதான்.
அதை நினைவுபடுத்துகிறது அந்த இதழில்[குமுதம், 20.04.2016] எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதவிருக்கும் தொடர் பற்றிய அறிவிப்பு[‘கனவு கேப்பசினோ. கொஞ்சம் சாட்டிங்!’].
இத்தொடர் பற்றிய அறிவிப்பில், சாருவுக்கு ‘நடமாடும் வயாகரா’ என்று அடைமொழி தந்து பெருமிதப்பட்டிருக்கிறது குமுதம். அதாவது, சாருவும் வயாகராவும் ஒன்று என்கிறது!

வயாகரா என்பது, உடலுறவு சுகத்தை நீண்ட நேரம் அனுபவிக்கப் பயன்படும் மாத்திரை. அதை விழுங்கினால் உணர்ச்சி நரம்புகளை அது எழுச்சி பெறச் செய்யும்; குறைந்த அவகாசத்தில் அவ்வெழுச்சி வீழ்ச்சி கண்டுவிடாமல் அது கட்டுப்படுத்தும்[அதைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் உண்டாவது வேறு விசயம்].
இந்த அரிய கண்டுபிடிப்பான வயாகராவுடன் சாரு நிவேதிதாவை ஒப்பிட்டுள்ளது குமுதம்!
வயாகராவை விழுங்க முடியும். சாருவை விழுங்க முடியாதே. அப்புறம் எதற்கு இந்த ஒப்பீடு?
‘விழுங்கத் தேவையில்லை. சாருவைப் பார்த்தாலே தேகமெங்கும் ‘ஜிவ்’ என்று காமாக்கினி பரவித் தகிக்கும். அந்தத் தகிப்பு எளிதில் தணியக்கூடியதல்ல. சலிக்கும்வரை ஆணும் பெண்ணும் கூடிக் களிக்கலாம். வயாகரா என்ன பெரிய வயாகரா, நம்ம சாரு சூப்பர் வயாகராவாக்கும்’ என்கிறதா குமுதம்!
ஆம். ‘சாருவே வயாகரா. வயாகராவே சாரு.
நீள் சுகத்துக்கு வயாகராவை விழுங்க வேண்டாம். அதற்குப் பதிலாக, சாருவைப் பார்த்தாலே போதும். அதாவது, ஓர் ஆணும் பெண்ணும் சாருவை அவ்வப்போது பார்த்துக்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் புணர்ச்சி இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்’ என்கிறது குமுதம்.
“சாருவைக் காசுபணம் செலவழித்தேனும் வரவழைத்து அவர் முன்னிலையில் உடலுறவு கொள்வது நடைமுறை சாத்தியமற்றது; அநாகரிகமானது” என்று நாம் சொன்னால், குமுதத்தின் பதில்.....
"அவரின் புகைப்படத்தைப் பார்வைக்கு வைத்துக்கொண்டாலே போதும்” என்பதாக இருக்கக்கூடும்.
குமுதத்தில் தொடர்ந்து வெளிவரவிருக்கும் அவரின் எழுத்து, வயாகரா போல் நீண்ட நேர சுகத்துக்குப் பயன்படுவதாக இருப்பின்[?], ‘வயாகரா எழுத்தாளர்’ என்பதாக அடைமொழி வழங்கலாமே தவிர, அவரையே ‘வயாகரா’ என்று உருவகப்படுத்துவது எவ்வகையிலும் பொருத்தமானதன்று.
தன்னை ஒரு குடிகாரன் என்றும், செக்ஸியாக எழுதுவதில் கில்லாடி என்றும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் சாரு நிவேதிதா என்னும் எழுத்தாளனுக்கு, ‘நடமாடும் வயாகரா’ என்று அடைமொழி கொடுத்துக் குமுதம் அறிவிப்புச் செய்தது அநாகரிகமானது; ‘அவர், பெண்களுக்கான வயாகராவும்கூட’ என்று பொருள் கொள்ளவும் இடமிருப்பதால் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இம்மாதிரியான தவறுகள் இனியும் குமுதத்தில் இடம்பெறாது என்று நம்புவோம்.
வாழ்க குமுதம்!
***********************************************************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக