இதயத்தின் இரண்டு கீழ் அறைகளுக்கு இடையிலான சுவர் ‘செப்டம்’ என்று அழைக்கப்படுகிறது[அறைகள் வென்ட்ரிக்கிள்கள் என்று அழைக்கப்படுகின்றன]. இந்தச் சுவர்[செப்டம்] சில நேரங்களில் தடிமனாகிவிடுவதுண்டு. இதனால், இதயத்தின் இரத்த ஓட்டம் தடைபடும். இது ‘ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி’[Hypertrophic Cardiomyopathy] என்று அழைக்கப்படும் ஒரு வகை இதய நோய் ஆகும்.
இதன் அறிகுறிகள்:
உடற்பயிற்சியின்போதும், சில நேரங்களில் கடினமான உடல் இயக்கத்தின்போதும் மயக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும்.
ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி காரணமாக, இதயத்தின் முக்கிய பம்பிங் அறையான இடது வென்ட்ரிக்கிள் விறைத்து இதயம் ஓய்வெடுப்பதைக் கடினமாக்குகிறது; சீரான ரத்த ஓட்டம் பாதிக்கிறது.
இது 50% மரபும் காரணமாக இருக்கலாம். திடீர் மரணம் ஏற்படவும் இந்நோய் காரணமாக அமையலாம்.
ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதியை(HCM)த் தடுப்பதற்குச் சிகிச்சை ஏதும் இல்லை[இப்போதைக்கு] என்பது அறியத்தக்கதொரு சோகச் செய்தி.
* * * * *
***இப்பதிவுக்கு ஆதாரமாக அமைந்த கட்டுரை[ஆங்கிலம்], வடிவமைப்பு, கூறியது கூறல், தெளிவற்ற நடை போன்ற குறைகளை உள்ளடக்கியது. தமிழாக்கம் செய்து நம் மொழி மரபுக்கேற்பச் சீர் செய்து வெளியிடப்பட்டுள்ளது இது என்பதைக் கவனத்தில் கொள்க.

