எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

வாசிப்பில் சாதனை நிகழ்த்திய என் புதிய நூல்['கிண்டெல்' வெளியீடு]!

அமேசான் கிண்டெலில் வெளியாகியுள்ள கீழ்க்காணும் என் நூலில்[38ஆவது], கடந்த இரண்டு நாட்களில் கிண்டெல் வாசகர்களால் 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன[இது வாசிக்கப்பட்ட பக்கங்களின் கூட்டுத்தொகை. விற்பனை மட்டுமல்லாமல் வாசிக்கப்படும் பக்கங்களையும் கணக்கிட்டுப் பணம் கொடுக்கிறது அமேசான் நிறுவனம்].

என்னுடைய வேறு எந்த நூலும்['காமம் பொல்லாதது' உட்பட] இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.

மேற்கண்ட வாசிப்புக் கணக்கைச் சற்று முன்னர்தான் பார்க்க நேரிட்டது. உடனடியாக உங்களுடன் பகிர்கிறேன்[நாளை காலையில் பகிரலாம் என்றால் 'ஆசை மனம்' அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது!].

இதெல்லாம் ஒரு சாதனையா என்று கிண்டல் செய்திட வேண்டாம். மிக எளிய எழுத்தாளனான எனக்கு இதெல்லாம்தான் சாதனை.

கிண்டெல் சந்தாதாரராக நீங்கள் இருந்தால் இதை வாசிப்பீர்கள என்பது என் நம்பிக்கை.

நன்றி.

கடவுள் கண்ட கனவு!: கட்டுரைகள்&கதைகள் (Tamil Edition) Kindle Edition



அழகும் ரசனையும் 'அது'க்கான நேர அதிகரிப்பும்!!!

மனிதன் விலங்காக இருந்தவரை இயற்கை அழகைக் கண்டு களிக்கும் ரசனையைப் பெற்றிருக்கவில்லை.

ஆண், தன் வேட்கையைத் தணித்திடப் பெண்ணுடன் புணர்ந்து இன்புற்ற போதுகூட, பெண்ணின் அழகை ரசிக்கும் வழக்கமெல்லாம் இல்லை(இயல்பாய் அமைந்த தூண்டுதல் உடலுறவுக்கான காரணமாக இருந்தது). அவள் குனிந்த கோலத்திலிருக்க, பின்புறத்திலிருந்தே அந்தச் செயலை இவன் செய்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

முற்றிலும் மிருகமாக இருந்த இவன், சற்றே பரிணாம வளர்ச்சி எய்தியபோது, தன்னைச் சூழ்ந்திருந்த நெடிதுயர்ந்த மரங்கள் முதலான தாவரங்கள், பிரமாண்ட மலைகள், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆறுகள், பிற உயிரினங்களின் உருவ அமைப்பு போன்றவற்றை வியந்து நோக்கினான். அதன் மூலம் தன் மனதில் மகிழ்ச்சி பெருகுவதையும் அறிந்துகொண்டான். 

இயற்கை அழகை ரசிக்கத் தொடங்கிய அதே காலக்கட்டத்தில், தன் இணையுடன் புணர்ச்சி செய்யும்போது, மிகு கவர்ச்சியும் மென்மையும் மிருதுத்தன்மையும் கொண்ட அவளின் மேனி அழகால், குறிப்பாக முன்னழகால் ஈர்க்கப்பட்டான். அதன் விளைவு.....

பெண்ணின் முன்பக்க அழகை ரசித்துக்கொண்டே புணர்ச்சி செய்யும் முறை ஆரம்பமாயிற்று.

இது கதையல்ல; பரிணாம வளர்ச்சியால் மனித மனத்தில் உண்டான மாற்றங்களின் வரலாறு.

காலப்போக்கில், சிந்திக்கும் அறிவு வளரத் தொடங்கிய நிலையில்.....

இயற்கை அழகை ரசிக்கும் இயல்பு இவனுக்குள் இரண்டறக் கலந்தது.

உடலுறவுக்கான நேரத்தை மட்டுமல்ல, இயற்கை அழகைப் பல கோணங்களில் ரசிப்பதற்கான நேரத்தையும் அதிகரித்தான் இவன். அதே வேளையில், பெண்ணின் அழகிலும் அங்க வாவண்யங்களிலும் திளைத்து, காம உணர்வைப் பெருகச் செய்வதற்கான வழிகளைத் தேடுவதிலும் அதிக நாட்டம் கொண்டான். 

பெண்ணை அரைகுறை ஆடையில் உலாவச் செய்வது; அங்கங்களை அசைத்து ஆட[நாட்டியம்] வைப்பது; இவன்  அவளுடன் நிர்வாணமாய் நீரில் நீந்தியும், தாவிப் பிடித்தும், தழுவியும் விளையாடுவது[ஜலக்கிரீடை] போன்றவை அவ்வழிகளில் குறிப்பிடத்தக்கவை.

இவற்றின் நீட்சிதான், இடை ஆட்டல் நடனம்[Belly Dance], டிஸ்கோ[Disco] நடனம், காப்ரே[Khafre] நடனம், ரிக்கார்டு டான்ஸ் போன்றவை. 

இவை அனைத்திற்கும் மேலாக, தன் இனத்தைச் சேர்ந்த ஆணையும் பெண்ணையும் 'கலவி' செய்ய வைத்துப் படம்பிடித்துக் கண்டு களிக்கும் குரூரமான ஆசைக்கும் இவனை அடிமையாக்கியிருக்கிறது 'அழகு ரசனை'யுடன் இரண்டறக் கலந்த உடலுறவு இச்சை.

"இவை போதாது; இன்னும் வேணும், இன்னும் வேணும்" என்று விதம் விதமான அம்மண ஆட்டங்களைக் காணும் வேட்கையுடன் இவனை வெறிகொண்டு அலையவும் தூண்டியிருக்கிறது இந்த ஆபாச அழகுணர்ச்சி.

ஆக.....

எந்தவொரு உயிருக்கும் இல்லாத, ஆபாச அழகை ஆராதிக்கும் புத்தியை[கடவுளுக்கும் உண்டோ?! ஹி... ஹி... ஹி!!!] மனிதனுக்கு மட்டுமே கொடுத்து 'வெறியாட்டம்' போடவைத்து வெகு சிறப்பாகவே விளையாடியிருக்கிறார்[திருவிளையாடல்] கடவுள்!

கடவுள் வாழ்க... வாழ்கவே!

==========================================================================