புதன், 30 நவம்பர், 2022

நடுவணரசுக்குக் கேள்வி... “இது வெறியா, திமிரா, ஆணவமா, அகங்காரமா?!?!?"

'தள முகடு’[Blog Header]வில் இடம்பெற்றுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.

ஏதும் புரிகிறதா?

ஆங்கிலம் தெரிந்தவனுக்கும் புரியாது. தமிழ் தெரிந்தவனுக்கும் புரியாது.

இந்தி தெரிகிறவனுக்கு மட்டுமே மேற்காணும் இந்திச் சொல்லுக்குக்கான பொருள் ‘தகவல்[சேவை] மையம்’[இன்ஃபர்மேசன் சென்டர்] என்பது புரியும்.

இந்த அறிவிக்கை வைக்கப்பட்டுள்ள இடம் திருப்பூர் ரயில் நிலையம்.

திருப்பூர் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இடம்.

தமிழர்கள் பெரும்பான்மை வாழ்கிற ஓர் ஊரில் அவர்களில் பெரும்பான்மையோர்க்குப் புரிகிற வகையில் தமிழிலோ, கணிசமானவர்களுக்குப் புரிகிற வகையில் ஆங்கிலத்திலோ அறிவிப்புச் செய்யாமல், வயிற்றுப் பிழைப்புக்காக வந்துபோகிற ஒரு சிறு கூட்டத்துக்காக, இதைச் செய்கிறார்கள் என்றால், அதற்கான காரணம்.....

இந்தி வெறியேறிய அதிகாரிகளின் கைங்கரியமா, நடுவண் ஆட்சியாளர்களின் தூண்டுதலா, தமிழர்களால் தட்டிக்கேட்க முடியாது என்னும் திமிரா, அதிகாரம் தங்கள் கையில் என்பதால் உருவான ஆணவமா, பெரும்பான்மையோர் என்பதால் உண்டான அகங்காரமா?

இந்தியாவை ‘இந்தி’யா ஆக்க நினைக்கும் இவர்களுக்கு, இந்தி ஆளும் மாநிலங்களிலிருந்து ‘இந்தி’யர்கள் வயிற்றுப்பாட்டுக்காகக் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மண்ணைத் தேடி வருவது தெரியாதா? தெரியாதது போல நடிக்கிறார்களா?

அல்லது, தமிழ்நாட்டில் இந்தியைத் திணி திணி திணி என்று திணித்து வைத்தால், இங்கே அண்டிப் பிழைக்க வந்த ‘இந்தி’யர்களே பின்னொரு நாளில் இந்த மாநிலத்தை ஆளும் வாய்ப்பு வரும் என்று கனவு காணுகிறார்களா?

கனவை நனவாக்கும் முயற்சியில் இனியும் ஈடுபட வேண்டாம் என்பதே இவர்களுக்கு நாம் செய்யும் அறிவுறுத்தல்; வழங்கும் அறிவுரை.....

”உங்களைத் தமிழர்கள் நிந்திக்கும் வகையில் நடந்துகொள்வதைத் தவிர்த்து, இனியேனும் சிந்திக்கக் கற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” என்பதுதான்!

=========================================================================

செவ்வாய், 29 நவம்பர், 2022

“அதென்ன தியானம்? அதைச் செய்வது எப்படி?”... ஒரு சிறு குறு ஆய்வு!

‘தியானம் என்றால் என்ன?’ என்பதற்கு ‘வலை’யில் விளக்கம் தேடியதில்.....


‘தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக்கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்றுவித்தல், அல்லது உணர்வு நிலையைத் தூண்டுதல் மூலம் செய்யப்படும் நடைமுறையாகும்’[விக்கிப்பீடியா].

-கிடைத்த விளக்கங்களில் இதுவும் ஒன்று. இது விளக்கம் அல்ல; குழப்பம்!

‘மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும்’ -https://studybuddhism.com/ta/atippatai/enna/tiyanam-enral-enna -இது ஒரு விளக்கம்.


அதென்ன நிலைகளை மேம்படுத்துதல்? இன்னும் மேம்பட்ட, தெளிவான விளக்கம் தேவை.


‘தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுதல் ஆகும்’ -இது மற்றுமொரு விளக்கவுரை.


ஒரு பொருளின் தன்மையை அறிந்திட, ஆழ்ந்த சிந்தனை தேவை என்று சொன்னால் போதுமே.


‘தியானம்’ என்பது என்ன என்பதை அறிவது ஒருபுறம் இருக்க, ‘தியானம் செய்வது எப்படி?’ என்னும் ஒரு கேள்வியை முன்வைத்துத் தேடியதில் கிடைத்த ஒரு பதில்:


முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாகக்கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்’ -https://www.maalaimalar.com/Health/Fitness/2019/04/25110547/1238642/Meditation-doing-method.vpf


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மந்திர தந்திரங்களெல்லாம் நம்பத்தக்கவை அல்லவே. அப்புறம் எப்படி அவற்றின் பொருளுணர்ந்து பாவத்துடன் உச்சரிப்பது?


தொடர்ந்து தேடியவகையில், தியானத்திற்கான இடத் தேர்வு, அமரும் முறை[ஆசனத்தில் போர்வை கம்பளியெல்லாம் விரித்து, முதுகு வளையாமல் கண்மூடி அமர்ந்து... என்றிப்படி], தியானத்தால் பெறும் பயன்[மன அமைதி கிடைக்கும்; நினைவாற்றல் பெருகும்; நோய்கள் குணமாகும்; நல்ல தூக்கம் வரும்...] பற்றியெல்லாம் அறிய முடிகிறதே தவிர, தியானம் செய்வது எப்படி?’ என்பதற்கு மன நிறைவு தரும் வகையில் பதில் ஏதும் கிடைத்திடவில்லை[போட்டி போட்டுக்கொண்டு பலரும் குழப்புவாதால்தான், தியானிக்கும் ஆசாமிகளில் பலரும் தத்தமக்குப் பிடித்த சாமிகளின் பெயர்களை முணுமுணுக்கிறார்கள்].


இக்கேள்விக்கு மிகச் சரியானதும் தெளிவானதுமான விளக்கக் குறிப்புகள் கிடைத்திடாத நிலையில், மறைந்த ‘வேதாத்திரி மகிரிஷி’ சொல்லக் கேட்டதாக, மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ‘சூரியன்’ B.E., M.I.E அவர்கள் தம் நூலில்[டென்சன், கவலை, கோபம் போக்குவது எப்படி] பட்டியலிட்டுள்ள தியான வாசகங்கள்[தேர்வு செய்யப்பட்டவை] சற்றே மனநிறைவு தருவதாக அமைந்துள்ளன.


“நான் தன்னம்பிக்கை உள்ளவன்’

”அனைவர் மீதும் அன்பு செலுத்துவேன்”

“என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு என்றென்றும் நன்றியுடவனாக இருப்பேன்”

“உற்றார் உறவினருக்கும் நண்பர்களுக்கும் என்னாலான உதவிகள் செய்வேன்”

“எனக்குக் கெடுதி விளைவிக்கும் எதிரிகளை மனப்பூர்வமாக மன்னிப்பதை வழக்கமாக்கிக் கொள்வேன்”

“உலகெங்கிலும் உள்ள மக்களும் பிற உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ்வதை உளமார விரும்புகிறேன்”

* * * * *

சூரியன் பட்டியலிட்டுள்ள இந்த மனப் பயிற்சிகள் தனி மனிதருக்கானவையாகும். இவற்றால் அவர் மட்டுமே பயன் பெறுவார். 


‘தனி மனிதர் என்றில்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவருமே இவ்வகையான பயிற்சிகளை[தியானம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்] நாள்தோறும் மேற்கொள்வார்களேயானால் எங்கும் அமைதி நிலவும்; மக்கள் மனங்களில் மகிழ்ச்சி நிரம்பி வழியும்’ என்பது வேதாத்திரி மகிரிஷி, மனநலப் பயிற்சியாளர் சூரியன் ஆகியோரின் விருப்பம் ஆகும்.


நம் விருப்பமும் இதுவே!

===========================================================================

திங்கள், 28 நவம்பர், 2022

புற்றுநோயில் இத்தனை வகைகளா!?!?!


சாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்போது உருவாவது புற்றுநோய்.

இது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும்.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகள் இதனால் நேர்ந்துள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. 

மருந்துகளுக்குக் கட்டுப்பட்டு, மருந்தை நிறுத்தும்போது உடம்பு வலி தொடருமேயானால், அதுவும் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.

இவ்வகைப் புற்றுநோயின் வகைகள்:

1.மூளைக் கட்டிப் புற்றுநோய்:

"தொடர்ச்சியான தலைவலி, மயக்கம், சுயநினைவு இழப்பு மற்றும் உணர்திறன் அல்லது கைகள் மற்றும் கால்களில் சக்தி இழப்பு போன்றவை. 

2.தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள்:

வாயில் புண், கழுத்தில் கட்டி, குரல் கரகரப்பு, வாய் அல்லது மூக்கில் இரத்தம் வருதல் என்றிவை இதன் அற்குறிகளாகும். 

3.நுரையீரல் புற்றுநோய்: அறிகுறிகளாவன:

தொடர்ந்து இருமல், இருமலில் ரத்தம் வெளியேறுதல். மூச்சுத் திணறல், மார்பு வலி.

4.மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்:

"பெண் அல்லது ஆணின் மார்பகத்தில் ஏதேனும் கட்டி, முலைக்காம்பு வெளியேற்றம், தோல் அமைப்பில் மாற்றம், அக்குள் கட்டி ஆகியவை மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்" என்கிறார்கள் டாக்டர்கள்.

5.வயிற்றுப் புற்றுநோய்: 

விழுங்கும் போது சிரமம் அல்லது வலி, விவரிக்க முடியாத எடை இழப்பு, பலவீனம் அல்லது சோம்பல், உணவுக்குப் பிறகு உணவுக் குழாயில் விக்கம் ஆகியன இதன் அரிகுறிகள்.

6.கல்லீரல் அல்லது பித்தப்பைப் புற்றுநோய் அறிகுறிகள்:

வயிற்று வலி, பசியின்மை, அதிகரித்த அமிலத்தன்மை, அடிவயிற்றில் ஏதேனும் கட்டி, கல்லீரல் & மண்ணீரல் அளவு அதிகரிப்பது போன்றவை.

7.பெருங்குடல் புற்றுநோய்:

இதன் அறிகுறிகளாவன….. 

மலம் கழிப்பதில் சிரமம், மலத்தில் இரத்தம் வருதல் முதலானவை.

8.புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் அறிகுறிகள்:

"சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் அல்லது அடைப்பு ஏற்படுவது, வலியின்றி சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகியன.

9.ரத்தப் புற்றுநோய்:

"அதிகரிக்கும் சோர்வு, விவரிக்க முடியாத காய்ச்சல் அல்லது ஹீமோகுளோபின் இழப்பு, எடை இழப்பு, வெள்ளை அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகளின் அதிகரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

***மேற்கண்டவற்றில் எந்தவொரு அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது மிக மிக முக்கியம் ஆகும்.

"கடவுள் இல்லவே இல்லை"... அசைக்க முடியாத ஆதாரங்கள்!!!

***அணுக்கள், பொருள்கள், உயிர்கள், என்றிவை அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவையே. இது அறிவியல்.

உண்மை இதுவாக இருக்கையில், “மாறிக்கொண்டே இருக்கிற தன்மை வாய்ந்த அனைத்தையும் படைத்தவர் எப்போதும் மாறுதலுக்கு உட்படாத கடவுள்” என்றார்கள் ஆன்மிகவாதிகள்[கடவுள் நம்பிக்கையாளர்கள்].

அறிவியல் கோட்பாடுகளின்படி, ‘மாற்றங்களுக்கு இடம் தராத ஒன்று’ என்று எதுவுமே இல்லை.

உயிரினங்களில் மாற்றங்கள்[அணுக்கள் இணைதலும் பிரிதலும்] இடம்பெறுவதால்தான் ‘சிந்தித்தல்’ என்பதே சாத்தியமாகிறது.

கடவுள் மாறுதல்களுக்கு உள்ளாகாதவர் என்றால், அப்படியொருவர் இருப்பதும், தன்னிச்சையாய்ச் சிந்தித்து அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் படைத்து இயக்குவதும் சாத்தியமே இல்லை. 

***“கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர்; எதுவாகவும் இருப்பவர்” என்றார்கள்.

பாம்பு எலியை விழுங்கி உணவாக்கிக்கொள்ளும் இயற்கை நிகழ்வுகளை நாம் அறிவோம். கடவுள் எதுவாகவும் இருப்பவர் என்றால், பாம்பாக இருக்கும் அவர் எலியாகவும் இருக்கும் தன்னையே அவர் உணவாக்கிக்கொள்கிறாரா?

உயிரினங்கள் ஒன்றையொன்று தாக்கிக்கொள்வதும், உண்டு தின்று ஜீரணம் செய்வதும் பூமியெங்கும் இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

இதனால், கடவுள் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு துன்புறுத்துவதும் துன்பப்படுவதுமாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது. 

இதன் மூலம், “தானே தன்னைத் தாக்கித் துன்புறுத்திக் கொன்று உணவாக்கி உயிர்வாழும் கிறுக்குத்தனமான வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறாரா?” என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆன்மிகவாதிகளின் அனுமானங்களின்படி நீங்களும் நானும் கடவுளின் வேறு வேறு பிரதிகள்.

ஏதோ பிரச்சினை காரணமாக நாம் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். தாக்குதலின்போது நீங்களும் நானும்தானே வலி பொறுக்காமல் அலறுகிறோம். வலி தாங்குபவர் கடவுள் அல்லவே. இவரை எப்படிக் கருணை வடிவானவர் என்கிறார்கள். ஏனிந்த முரண்பாடு?

***“மேலான சக்தியே கடவுள்” என்றும் சொல்கிறார்கள்.

பொருள்களின்/உயிர்களின் தகவமைப்புக்கு ஏற்ப, அவற்றின் இயங்கு சக்தி கூடலாம்; குறையலாம். இது இயற்கை.

இதை மறந்து, கடவுளை ‘மேலான சக்தி’ என்கிறார்களே, சக்தியில் என்ன மேலானதும் கீழானதும்?

அவர் மேலான சக்தி படைத்தவர் என்றால், ‘மேலானது’ என்பதற்கான ‘அளவு என்ன?

மேலானதற்கும் மேலான சக்தி இருந்திடலாம்தானே?

“மேலானது... அதற்கும் மேலானது... மேலானதுக்கும் மேலானது...” என்றிப்படி அடுக்கிக்கொண்டே போனால், இந்தக் கேள்விக்கு விடை பெறுவது சாத்தியமா? எப்போது? எப்படி?

***“கடவுள் ஒருவரே” என்றார்கள்; என்கிறார்கள். 

அண்டவெளியில் தென்படும் பொருள்களை “ஒன்று... இரண்டு... மூன்று...” என்றெல்லாம எண்ணுகிற வேலையைச் செய்தது மனித அறிவு.

வெளி ‘வெறுமையாய்’ இருந்தபோது இந்த எண்ணிப்பார்க்கும் கணக்கெல்லாம் இல்லை. எந்தவொரு சாதனத்தைக்கொண்டும் அளந்து காண இயலாதது அது.

‘வெளி’யையே அளந்து கணக்கிடுவது சாத்தியம் இல்லை என்னும்போது, பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலகாரணம் என்று சொல்லப்படும் கடவுளை ‘ஒன்று’ என்னும் எண்ணிக்கைக்குள் எப்படி அடக்கினார்கள்?

நம்பவைத்து நம்மில் பெரும்பாலோரை முட்டாள்கள் ஆக்கினார்கள்.

எது எப்படியோ, ஆன்மிகர்களின் அனுமானங்களின்படி.....

‘அவர்’ எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகதவராம்; எங்கும் நிறைந்து எதுவாகவும் இருப்பவராம்; மிக மேலான சக்தி வடிவானவராம்; வல்லவராம்; நல்லவராம்; அனைத்தையும் படைத்துக் காக்கும் கருணைக் கடலாம். 

கடவுளைக் கற்பித்தவர்கள் எப்படியோ, அவர்கள் சொல்வதையெல்லாம் நம்புகிறவர்களை முட்டாள்கள் என்பதோடு வேறு என்னவெல்லாம் சொல்லிச் சாடலாம்?

நீங்களே முடிவெடுங்கள்!

ஹி...ஹி...ஹி!!!

===========================================================================

ஞாயிறு, 27 நவம்பர், 2022

எங்கும் பசியும் பட்டினியும்! அழிவின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தான் மீளுமா?!?!

கீழ்க்காண்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான ‘பிபிசி’[https://www.bbc.com/tamil/articles/c1verg14v5go] செய்தி.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு வெளிநாட்டு நிதியுதவி முடக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள்; கடும் பஞ்ச காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் உடல் உறுப்புகளை விற்று வறுமையைச் சமாளித்துத் தங்கள் பிள்ளைகளை உயிர் பிழைத்திருக்க வைத்திருப்பதாகக் கூறுபவர்களும் அங்கு உள்ளார்கள்.


“எங்களுக்கு உணவு இல்லை. எங்கள் குழந்தைகள் தூங்கவில்லை, அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் மருந்தகத்திற்குச் சென்று, மயக்கமாக உணர வைக்கும் மாத்திரைகளை வாங்கி எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் தூங்குகிறார்கள்” என்று மக்களில் பலரும் சொல்லும் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் வறுமைப் பேய் தலைவிரித்தாடுகிறது.

 

தொடர்ந்து நடைபெற்ற போராலும், இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சிறிய மண் வீடுகளில் வசிக்கிறார்கள்.

 

”ஓர் உள்ளூர் மருந்தகத்தில் 10 ஆப்கனிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 9.22 ரூபாய்) அல்லது ஒரு துண்டு ரொட்டியின் விலையில் ஐந்து மாத்திரைகளை வாங்க முடிகிறது” என்று மக்கள் சொல்வதிலிருந்து, பசியின் பிடியிலிருந்து  மீள வழியில்லாமல் செத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை உணர முடியும்.


ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான ரீதியிலான ஒரு “பேரழிவு” இப்போது நிகழ்வதாக ஐநா கூறியுள்ளது.

 

“ஒரு நாள் இரவு சாப்பிட்டால் அடுத்த நாள் சாப்பிட முடியாது. என் சிறுநீரகத்தை விற்ற பிறகு நான் பாதி ஆளாக உணர்கிறேன். எனக்கிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. வாழ்க்கை இப்படியே தொடர்ந்தால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது” என்கிறார் அந்நாட்டுக் குடிமகன் ஒருவர்.

 

”எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் மகள்களை அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுத் தினமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். எங்கள் நிலைமையை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் இப்படி வாழ்வதைவிட இறப்பதே மேல் எனத் தோன்றுகிறது” என்கிறார் மற்றொருவர்.


தாலிபன் அரசாங்கத்தாலும் சர்வதேச சமூகத்தாலும் தாங்கள் கைவிடப்பட்டதாகவும், தங்களின் கண்ணியமான வாழ்க்கையைப் பசி உடைத்துவிட்டதாகவும் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.


இன்னும் பல சோகச் செய்திகளின் தொகுப்பான ‘பிபிசி’ கட்டுரை கீழ்க்காணும் வகையில் முடிவடைகிறது.


‘பட்டினி ஓர் அமைதியான கொலையாளி. அதன் விளைவுகள் எப்போதும் உடனடியாகத் தெரிவதில்லை. உலகின் கவனத்திலிருந்து விலகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உண்மையான அளவு வெளிச்சத்திற்கு வராமலேகூடப் போகலாம். ஏனென்றால், யாரும் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.’

 ஆப்கானிஸ்தான்

===========================================================================

*****கட்டுரை சுருக்கப்பட்டு, ‘கருத்துத் திரிபு’ ஏற்படாத வகையில் அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணழகைப் புகழ்ந்த ‘போக’ சாமியாரும், எதிர்த்துப் போராடும் பெண்களும்!!!

‘‘பெண்கள் புடவை, சல்வார் என எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை அவர்கள் எந்த ஆடையும் அணியாமல் இருந்தாலும் அவர்கள் அழகிகள்தான்’’ என்று பாபா ராம்தேவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று முன்தினம் நடந்த இலவச யோகா நிகழ்ச்சியில் பேசினாராம்.

‘இது தொடர்பாகத் திருப்பதி கிழக்குக் காவல் நிலையத்தில் அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்றுப் புகார் அளித்திருக்கிறார்கள்; ராம்தேவ் பாபா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களை இழிவுபடுத்தி இதுபோல் பேசுவது சாமியார்களுக்கு சகஜம் ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் எதைப் பேசினாலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ -இது செய்தி[https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817672].

பெண்களைக் கொச்சைப்படுத்திய குற்றத்திற்காகப் பாபா சாமியாரைக் கைது செய்ய வேண்டும் என்று அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் போராடுகிறார்களாம்.

இந்தப் போராட்டம் தேவையற்றது.

‘போக’ சாமியார் பாபா[ராம்தேவ்] பல பெண்களை நிர்வாணமாகப் பார்த்து ரசித்திருக்கிறார். அந்த அனுபவத்தைத்தான் மக்களிடையே பகிர்ந்திருக்கிறார்.

பெண்கள், குளியலறையிலும் அந்தரங்க உறவின்போது பஞ்சணையிலும் ஆடையில்லாமல் காட்சியளிக்கிறார்கள். அதை எப்படியோ பார்த்து ரசித்திருக்கிறார் பாபா ராம்தேவ்ஜி. பார்த்ததைப் பொதுவிடத்தில் வர்ணித்திருக்கிறார்.

இதிலென்ன தவறு?

ஆடையுடனும் சரி, ஆடை இல்லாமலும் சரி எந்தவொரு நிலையிலும் பெண்கள் அழகிகள்தான். தாடிச் சாமியார் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

முன்னொரு காலத்தில், பெண்களென்ன ஆண்களும் அம்மணமாகத் திரிந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுதல் கூடாது.

மேலும், பெண்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தை, நிபந்தனை ஏதும் விதிக்காமல் உடனடியாகக் கைவிடுதல் வேண்டும்.

ஆனாலும், அவர்களின் போராட்டத்தைத்தான் எதிர்க்கிறோமே தவிர, ‘எதிர்வினை’ ஆற்றுவதை வரவேற்கவே செய்கிறோம்.

பாபா ராம்தேவ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போதெல்லாம், அவரை இவர்கள் பின்தொடரலாம்.

அவரை முன்னிலைப்படுத்தி, “ஆடை உடுத்திய நிலையில் எல்லா ஆண்களும் ஆண்மை மிக்கவர்கள்தான். ஆடை உடுத்தாத நிலையிலும் அவர்கள் ஆண்மை நிறைந்தவர்களே. அதற்குப் பாபா ராம்தேவ் அவர்களே ஒரு உதாரணம்” என்று ஓங்கிய குரலில் முழங்கி, அவர் உடுத்திருக்கும் ஆடைகளை உருவி எறிந்து அவரை முழு நிர்வாணம் ஆக்கிக் காண்போருக்குக் காட்சிப்படுத்தலாம்!

இப்படி எதிர்வினை ஆற்றினால், மேலிட ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று கொட்டமடிக்கும் போலிச் சாமியார்களின் திமிர் அடங்கும்; பெண்களைக் கண்டாலே அவர்கள் ஓடி ஒளியும் நிலை உருவாகும்!

==========================================================================

சனி, 26 நவம்பர், 2022

ஆஸ்திரேலியா கடற்கரை... ஆயிரக்கணக்கில் ‘அம்மண’ மனிதர்கள்!!!

ஸ்திரேலியாவில் உள்ளது ‘போண்டி’ கடற்கரை. இங்கு அதிகாலை 03.30 மணிக்கு 2500 பேர் அம்மணக் கோலத்தில் வந்து கூடினார்கள்.[‘டைம்ஸ் நவ்’ சில மணி நேரங்களுக்கு முன்பு]

அம்மணமாக என்றதும் அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.

ஸ்பென்சர் டூனிக்’ என்னும் புகைப்படக் கலைஞரின் கலைப்படைப்புக்குக் ’காட்சி’[போஸ்] தருவதற்குத்தான் இத்தனைப் பிறந்த மேனியர்கள் அங்கு கூடினார்களாம்.


நிர்வாண மனிதர்களை வைத்து எதற்காகக் கலைப்படைப்பை[ஓவியமா, புகைப்படமா, மனற்சிற்பமா எதுவென்பதும் தெரியவில்லை] உருவாக்குகிறார் அந்தக் கலைஞர்?


தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவாம்.


இந்த விழிப்புணர்வூட்டல் அவசியமானதுதான். மனதாரப் பாராட்டலாம்.


ஆனால், சில சந்தேகங்கள்.....


*அதென்ன கணக்கு 2500 பேர்? எண் கணிதச் சோதிடர் பரிந்துரைத்திருப்பாரோ?


*முழு நிர்வாணம் எதற்கு, சில அங்குல ஜட்டிகூட இல்லாமல்?


*ஆண்களுக்குத்தான் வெட்கம் மானம் என்று எதுவும் இல்லை. ஆஸ்திரேலியப் பெண்களுக்குமா?!


ஹி... ஹி... ஹி!!!


2,500 நிர்வாண தன்னார்வலர்கள் ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் தோல் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலைப்படைப்புகளுக்கு போஸ் கொடுத்தனர்

[ஊன்றிக் கவனித்தால், நீள்கூந்தலுடன் பெண்மணிகளும் நிற்பது தெரிகிறதா?]

======================================================================================

https://kingwoodsnews.com/australia-nude-photoshoot-for-skin-cencer/


கணவன் கொலையுண்டதைக் கொண்டாடும் 'டிக் டாக்’[Tik Tok] குத்தாட்டக்காரி!!!

க்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆகிவருகிறார்கள்[குறிப்பாகச் சில/பல பெண்கள்]. அவற்றில் தங்களின் அந்தரங்க விசயங்களைக்கூடப் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்குவதில்லை.

'Tik Tok’  பலராலும் அறியப்பட்ட ஊடகம்.

அதன் காணொலி ஒன்றில், தன் கணவர் எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதை இளம் பெண்ணொருவர் விவரிப்பதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அந்தக் கொடூர நிகழ்வைக் கண்ணீரும் கம்பலையுமாக, காண்போர் நெஞ்சம் கரைந்து உருகும் வகையில் அவர் சொல்லியிருப்பார் என்றுதானே நினைப்போம்?

அவ்வாறு நாம் நினைப்பது எத்தனை அடிமுட்டாள்தனம் என்பதை  அவரின் அந்த ‘டிக் டாக்’ காணொலி நம்மை உணர வைக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் ஜெசிகா அயர்ஸ்[Ayers].

நடனமாடிக்கொண்டே கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை விவரிக்கிறார்.

முகத்தில் வேதனை பரவ, குரல் தழுதழுக்க அவர் பேசாதது பெரிய குற்றமில்லை. புன்சிரிப்புடன், கொங்கை குலுக்கிக் குத்தாட்டம் போட்டுக்கொண்டே  நடந்த கதையைச் சொல்லுவதுதான் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது.

இந்த வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியதாம்;  கடும் கண்டனங்களுக்கும் அவர் உள்ளாகியிருக்கிறாராம்.

காணொலிக்கு அவர் தந்துள்ள தலைப்பு: 

‘பாடும் விதவை’[The Singing Widow]

காணொலிப் பெண் நம் கண்ணுக்குப் ‘பாடும் விதவை’யாகத் தெரியவில்லை. பார்வையாளரைக் கவர அவர் ஆடும் கவர்ச்சி நடனம் வேறு ‘எதையெல்லாமோ’ எதிர்பார்க்கிறாரோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது!

கலிகாலம்டா சாமி!!


***** காணொலி சரிவர இயங்காததால் பதிவு செய்யப்பட்ட அதன் முகவரி நீக்கப்பட்டது.
=========================================================================

வெள்ளி, 25 நவம்பர், 2022

'கள்ளக் காமுகி’யுடன் உடலுறவு! சுகித்திருக்கும்போதே சொர்க்கம் சேர்ந்த ‘குடுகுடு’ கிழம்!!!

வர் 67 வயது முதியவர்; தொழிலதிபரும்கூட.

இந்தக் கிழத்துக்கு இதய நோய், வலிப்பு நோய் என்று பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. இருந்தும் காம இச்சையை மட்டும் இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. 


35 வயதுப்[திருமணம் ஆனவர்] பெண்ணுடன் அவ்வப்போது கள்ள உடலுறவு கொள்வது வழக்கம்.


அந்தப் புனிதமான[சிவலிங்கத்தை நினைவுகூர்க. இறைவன்&இறைவிக்கான அந்தரங்க உறுப்புகளின் சங்கமம் அல்லவா அது!] காரியத்தில் அன்று 5 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.


வேறென்ன, புணர்ச்சி இன்பத்தில் மூழ்கிச் சுகித்துக்கிடந்த கோலத்தில் இவரின் உயிர் பிரிந்தது.


அரண்டுபோன அந்தப் பெண், நடந்ததைத் தன் கணவனிடமும்[?!?!?!], மைத்துனனிடமும் சொல்லி, அதிபரின் சடலத்தைப் பிளாஸ்டிக் பையில் சுற்றி நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வீசியது தனிக்கதை.


தொழிலதிபர் என்னுடன் உடலுறவு கொண்டிருந்தபோது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்” -இது, கைது செய்யப்பட்ட, தொழிலதிபரின் கள்ளக்காதலி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம்.

* * * * *

இதன் மூலம் மனிதராய்ப் பிறந்த அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய வாழ்வியல் நீதி.....


‘60 வயதுக்குப் பின்னர் ஆண்களுக்குப் பெண் சகவாசம் கூடாது; கூடவே கூடாது’ என்பதே.


ஹி... ஹி... ஹி!!!


Elderly dies midway during sex, lover dumps body by roadside with the help of husband, brother-in-law

முழுக் கதையும் வாசிக்க அடுத்து இடம்பெறும் முகவரியைச் சொடுக்குக.

https://www.msn.com/en-in/news/other/elderly-dies-midway-during-sex-lover-dumps-body-by-roadside-with-the-help-of-husband-brother-in-law/ar-AA14vnPv?ocid=msedgdhp&pc=U531&cvid=b7b03916786e4288b1a2317267bb0dd7


வியாழன், 24 நவம்பர், 2022

நன்மனம் கொண்ட ‘நகரத்தார்’[செட்டியார்]க்குச் சீரிய சில பரிந்துரைகள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரின்[செட்டியார்] பங்கு அதிகம். ஆசியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம்,  பிச்சாண்டவர் வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் நகைகளும் அண்ணாமலையார் கோவிலுக்குக் கொடுத்துள்ளார்கள்.


திருப்பணி செய்தல், குடமுழுக்குச் செய்தல் என்று பல நற்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.


திருவண்ணாமலை தேரடி வீதியில் 1872இல் தொடங்கிய அன்னச்சத்திரத்தை இன்றளவும் போற்றுதலுக்குரிய வகையில் வெகு சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்[உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நாட் கோட் சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுக்கோட்டைச் சத்திரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இப்படி இராமேஸ்வரம் முதல் காசிவரை பெரும்பாலான புனிதத் தலங்களில் நகரத்தார் அன்னதானம் செய்துவருகிறார்கள்].


காலங்காலமாக, மேற்கண்டவாறு தானதருமங்கள் செய்வதைப் பரம்பரைக் குணமாகக் கொண்ட இவர்களுக்கு, அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர், திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது கோயிலுக்குள் செல்ல அனுமதி அட்டை கொடுப்பதில்லையாம்.


அன்னச் சத்திரத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்ற சமயத்தில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதைச் சொல்லி அவர்கள் பெரிதும் வருத்தப்பட்டிருக்கிறார்கள்[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nattukottai-nagarathar-request-1000-permit-card-visit-annamalai-during].


இந்த நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....


நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் அவரை மனப்பூர்வமாய் வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்; நீங்கள் கோயில்களுக்கு வழங்கிய வாகனங்களையெல்லாம்[பிற கோயில்களுக்கும் வழங்கியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது] அண்ணாமலையார் போன்ற கடவுள்கள் பயன்படுத்துகிறார்களா? நகைகளை அணிந்து கழிபேருவகை பெறுகிறார்களா?


சிறப்பாகச் சிந்திக்கும் அறிவு இருப்பதால்தான் வணிகத்தில் நிறையவே சம்பாதித்தீர்கள்; சம்பாதிக்கிறீர்கள். எந்த வகையிலும் கடவுள்களுக்குப் பயன்படாத செயல்களை நீங்கள் செய்வது குறித்துச் சிந்திக்கும் வழக்கம் உங்களுக்குக் கொஞ்சமும் இல்லாமல்போனது ஏன்?


அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை, பக்தி மனமும் கொடையுள்ளமும் கொண்டவர்கள் கோயில்களுக்கு வழங்கிய ஐம்பொன் சிலைகளும், பொன் நகைகளும், பொருளும் பிறவும் திருடர்களாலும், சுயநலவாதிகளான நிர்வாகிகளாலும் கொள்ளையடிக்கப்பட்டதை நீங்கள் அறியாமல்போனது ஏன்?


இனியேனும், இம்மாதிரி ஏமாளித்தனமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.


தானதருமம் செய்வது உங்களின் குருதியில் ஊறிய குணம் என்றால், ஏழை எளியவர்களுக்கு, அன்னதானம் செய்தல், திருமணங்கள் செய்வித்தல், மருத்துவமனைகள் நடத்திப் பிறர் உடல்நலம் பேணுதல் என்று நேரடியாக அதைச் செய்யுங்கள்.


அவற்றின் பலன்களை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள்; உங்களின் கண்ணெதிரே உங்களால் பயனடைந்தவர்களின் மனம் நிறைந்த பாராட்டுதலைப் பெறுவீர்கள். கோடி கோடி கோடியாய்க் கோயிலுக்கு வாரி வழங்கினாலும் எந்தவொரு கடவுளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்த்துவது இல்லை என்பதை நம்புங்கள்.


கடவுளே அனைத்தையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். அவ்வாறாயின், நீங்கள் கோயிலுக்கு வழங்கிய பிரம்மாண்டமான வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம்,  பிச்சாண்டவர் வாகனம் போன்றவையும் அவருக்குச் சொந்தமானவைதான்.


அவருக்கு உரியவற்றைப் பக்தியின் பெயரால் அவருக்கே திருப்பித் தருவது பைத்தியகாரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?


அன்புகொண்டு இனியேனும் சிந்தித்துச் செயல்படுங்கள்.


இந்த வேண்டுகோள், நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு மட்டுமல்ல, தர்ம சிந்தனை கொண்ட ஏனையோருக்கும்தான்!

========================================================================

புதன், 23 நவம்பர், 2022

பாடாய்ப் படுத்தும் விரை நோய்கள்!

'விரை'ப்பை வலிக்கிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:

விதை முறுக்கு [Testicular Torsion]: 

விதைக்கு  இரத்தத்தைக் கொண்டுவரும் விந்தணுத் தண்டு முறுக்குக்கொள்ளுதல். இது, விதை ‘முறுக்கு நோய்’ எனப்படும்.

இதனால் ஒரு பக்க விரையில் கடுமையான திடீர்  வலி தோன்றும். விரையைப் பாதுகாப்பாகச் சுமந்துகொண்டிருக்கும் [விதைப்]பையிலும் வலி உண்டாகும்.. வயிற்றுவலி தோன்றும்.

6 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுக்காவிட்டால் விதையை இழக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


விரை அழற்சி [Epididymo-orchitis]:

ஒவ்வொரு விரைக்குப் பின்புறத்திலும் சுருளாக அமைந்த  குழாய்க்குப் பெயர் விரைச் சுருட்டுக்குழாய். விந்தணுக்களைச் சேமித்து வைப்பதும் கொண்டுசெல்வதும் இதன் வேலைகள். 

இதில் உண்டாகும் அழற்சியால் கடுமையான வலி ஏற்படும்; சிறுநீர்த் தொற்று உண்டாகலாம்; காய்ச்சல் வரக்கூடும்.


விரையில் நீர்க் கோர்வை [Hydrocele]:

விரையைச் சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரந்துகொள்வதுண்டு.

இதனால் விரை வீங்கும்; வலி தெரியும்.


விரை நாள வீக்கம்[Varicocele]:

இடது விரைப்பையில் மந்தமான வலி; பிடித்து இழுப்பது போலவும், உள்ளே புழுக்கள் நெளிவது போலவும் இருக்கும். நிற்கும்போது விரை வீக்கம் அதிகமாகும். படுத்தால் குறையும். இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்


விரைப் புற்றுநோய் [Tumour]:

விரைப்பையில் கடினமான திரண்ட கட்டிகள் தோன்றுதல். விரைகளின் வடிவம், அளவு ஆகியவற்றில் வேறுபாடுகள் தெரியும்.

இவ்வாறாக, விரிப்பை வலிப்பதற்கும், வீங்குவதற்கும் பல காரணங்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தேவைபட்டால் ultra Sound Scan செய்துபார்க்கலாம்.

===========================================================================

https://doctortamil.com

செவ்வாய், 22 நவம்பர், 2022

நடிகை ‘சன்னி லியோன்’இன் முதல் ‘முதலிரவு’!!!


இப்போதைய திரைப்பட நடிகையும் அப்போதைய ‘ஆபாச’ப் பட நடிகையுமான ‘சன்னி லியோன்’ அவர்கள் இளசுகள், கிழங்கள் என்று பலராலும் அறியப்பட்டவர்.

சற்று முன்னர்[பிற்பகல் 06.00], ஊடகம் ஒன்றுக்கு, கொஞ்ச நாள் முன்பு அவர் அளித்த பேட்டி[குமுதம் வார இதழின் ‘கேள்வி-பதில்’] ஆ. பட நடிகை என்ற வகையில் அவர் மீது நான் கொண்டிருந்த என் மதிப்பீட்டை[அபிப்ராயம்] முற்றிலுமாய் மாற்றியமைத்தது.

பேட்டியில், “சாக்லேட் எனக்கு மிகவும் பிடிக்கும். என் 14ஆவது வயதில் ஒரு நண்பனிடம் சாக்லேட் கேட்டேன். வாங்கிக் கொடுத்த அவன், கடற்கரை விடுதிக்கு[ரிசார்ட்] அழைத்துச் சென்றான்......

நான் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் என்னைச் சாப்பிட்டுவிட்டான். அது புதுவிதமான அனுபவமாக இருந்ததால் அதை நான் தடுக்கவில்லை. அதுதான் என் முதல் முதலிரவு. ஒருவேளை நான் சாக்லேட்டுக்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு வழியில் சென்றிருக்கலாம்[ஆபாசப் பட நடிகையாக ஆனதற்கான மூல காரணத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்]” என்று சொல்லியிருக்கிறார்.

‘அந்த’த் தொழிலில் ஈடுபட்ட/ஈடுபட்டிருக்கும் எந்தவொரு பெண்ணும் இவரைப் போல 100% உண்மை பேசுவாரா என்பது சந்தேகமே. மனப்பூர்வமாகப் பாராட்டப்பட வேண்டியவர் சன்னி லியோன்.

முன்பு மேற்கொண்டிருந்த ‘அந்த’ ஈனத் தொழிலிருந்து மீண்டுவந்து இப்போது ஒரு நடிகையாக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார் சன்னி லியோன் என்பது ஊடகச் செய்தி.

‘போர்னோ’ என்று குறிப்பிடப்படுகிற சாக்கடையில் ஊறித் திளைத்த இவர் அதிலிருந்து மீண்டுள்ளார் என்பது பெருவியப்பில் ஆழ்த்துகிற நிகழ்வாகும்.

இனியும் தொடர்ந்து நடிப்புத் தொழிலில் மட்டுமே ஈடுபட்டு, கவுரவத்துடனும், மன மகிழ்வுடனும் அவர் வாழ்ந்திட நம் மனப்பூர்வ வாழ்த்துகள்!

===========================================================================