ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தீபாராதனை காட்டும் தீட்ஷிதன்கள் தில்லை நடராசனின் செல்லப்பிள்ளைகளா?!?!

கோயிலில், புரியாத மந்திரம் சொல்லி வயிறு வளர்க்கும் ஒரு கும்பல்[தீட்ஷிதன்கள்] கோயிலையே சொந்தமாக்கிகொண்டது உலக அதிசயங்களில் ஒன்று.

சிதம்பரம் நடராசன் கோயிலைக் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள். அவ்வப்போது அதைப் புதுப்பித்துப் புது மெருகூட்டியவர்களும் அவர்களே. பொருளோடு கடும் உடலுழைப்பும் தந்து அவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தமிழர்கள்; தீட்ஷிதன்கள் அல்ல.

எங்கிருந்தோ வந்து, மந்திரம் தந்திரம் எல்லாம் செய்து மன்னர்களின் ஆதரவுடன் மணியடிக்கும் உரிமை பெற்ற இந்த வந்தேறிகள்[சிறு கூட்டம்], தமிழை அவமதித்தும் சமஸ்கிருதத்தைக் கோயில் மொழி ஆக்கியும் அடிக்கும் கொட்டமும் செய்யும் அட்டூழியங்களும் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற வழக்கொன்றில், செல்வி செயலலிதா அம்மையார், நல்ல வக்கீல் வைத்து வழக்கு நடத்தாததால், கோயில் தொடர்பாகத் தங்களுக்கான, வேண்டத்தகாத சில உரிமைகளை[‘நிரந்தரப் பூசாரிகள்’ முதலியன] தக்கவைத்தது இந்த மிகச் சிறுபான்மைக் கூட்டம்.

அப்போதைய நடுவணரசு எதையும் கண்டுகொள்ளாத நிலையில், வட மாநிலத்தவர் ஆதரவில் நடுவண் ஆட்சியைக் கைப்பற்றிய ‘பாஜக’ இவர்களுக்கு முழு ஆதரவளித்தது; அளிக்கிறது; கனகசபை ஏறி வழிபடும் உரிமை பக்தர்களுக்கு உண்டு என்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அலட்சியப்படுத்தி அதைப் பூட்டி வைக்கும் தைரியத்தைத் தீட்ஷிதன்கள் பெற்றிட[https://www.dinamani.com/tamilnadu/2023/dec/31/minister-sekar-babu-on-chidambaram-temple-issue-4131444.html]க் காரணம் இந்தப் பாஜக&சங்கிகளின் தூண்டுதல்தான்.

இந்நிலையில்.....

‘தமிழில்தான் வழிபாடு நடத்துதல் வேண்டும். மணியடித்துத் தீபாராதனை காட்டுவதைத் தவிர இந்தத் தீட்ஷிதன்களுக்கு வேறு எந்தவொரு உரிமையும் அளிக்கப்படுதல் கூடாது’ என்பதை நடைமுறைப்படுத்துவதென்பது, தமிழ் நாடு அரசு எத்தனை முயன்றாலும் இப்போதைக்குச் சாத்தியம் ஆகாது; ஆகவே ஆகாது.

அது சாத்தியம் ஆக வேண்டுமானால், கடவுளை வணங்குவதைத் தவிர, கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளிலிருந்து[ஆருத்ரா தரிசனம், அர்த்தராத்திரித் தரிசனம் முதலாயின] தமிழர்கள் விடுபடுதல் மிக அவசியம்.

விடுபட்டு, புத்தறிவு பெற்றுப் பெரும் போராட்டங்கள் நடத்தினால் மட்டுமே சிதம்பரம் தீட்சிதன்களின் பிடியிலிருந்து தில்லை நடராசன் கோயிலை மீட்பது சாத்தியமாகும்.

தமிழர்கள் விழிப்புணர்ச்சி பெறாதவரை சிதம்பரம் தீட்ஷிதன்களின் காட்டில் அடைமழை விடாது பெய்துகொண்டிருக்கும்!

சனி, 30 டிசம்பர், 2023

பிற மதங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த ராமர் கதை போதுமா?!?!

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி[2024] 22ஆம் தேதி நடைபெற உள்ளது’ என்பது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அண்மைச் செய்தி.

ஆக, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கான ‘அயோத்தி கோயில்’ஐக் கட்டிமுடிக்கும் பணி ஏறத்தாழ நிறைவேறியுள்ளது என்றே சொல்லலாம். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராமபிரானின் பக்தர்கள், பித்தர்கள் ஆகியோரின் சிந்தனைக்கு, ‘ராமபிரான்’ தொடர்பான சில கருத்தாக்கங்களை முன்வைக்கிறோம்.

எவரொருவரும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளை உள்வாங்கிச் சிந்திப்பார்கள் என்பது நம் நம்பிக்கை.

இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்; அயோத்தியின் ‘இச்வாகு குல’ அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். இவர்[இராமர்] 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்[கவனத்தில் கொள்க]. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றிப் பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள். இது குறித்துக் கருத்து வேறுபாடுகள் உண்டு. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

ராமர் பிறந்தது 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மீண்டும் நினைவுகூர்க.

மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதர்கள் ஒருங்கிணைந்து குழுக்களாக வாழத் தொடங்கினார்கள். மொழியை உருவாக்கி எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதும் அப்போதுதான்; இணைந்து வேட்டையாடுவது, அதற்கான கருவிகளை உருவாக்குவது, குடிசைகளை[வாழ்விடங்கள்] அமைப்பது, இறந்தவரைக் குழி தோண்டிப் புதைப்பது போன்ற அறிவு சார்ந்த செயல்களில் ஈடுபட்டதும் அக்காலத்தில்தான் என்பனவற்றை ஆராய்ச்சியாளர்கள் உரிய ஆதாரங்களுடன் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

இவை நிகழ்ந்தது 3,00,000[மூன்று லட்சம்] ஆண்டுகளுக்கு முன்புதான் என்னும் நிலையில், 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித சமுதாயத்தவரால் பெரியதொரு நாடு[அயோத்தி] உருவாக்கப்பட்டு, அதை ஒருவர்[ராமர்] ஆண்டார் என்பது ஏற்கக்கூடியதா?

‘50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது. திடீரென ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை ஆய்வர்கள் கண்டுபிடிக்க முயன்றும் முழுமையாக வெற்றி கிட்டவில்லை’ என்று ‘மானுட இனத் தோற்றமும் வளர்ச்சியும்’ குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள்.

மனித நாகரிகத்தின் மறுமலர்ச்சிக் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள்தான் என்னும்போது, 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பே, அத்தகையதொரு மறுமலர்ச்சி அயோத்தி மக்களுக்கும் மன்னர்களுக்கும்[ராமர் உட்பட] வாய்த்திருந்தது என்பது 100% இட்டுக்கட்டிய கதையாகும்.

பூமியில் மனித இனம் தோன்றிச் சில லட்சம் ஆண்டுகளே ஆன நிலையில், [https://www.hindutamil.in/news/opinion/columns/222552-.html] ராமர் என்றொருவர் அயோத்தியை அறநெறி தவறாமல் ஆண்டார்[12.00.000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு] என்பதாக வால்மீகி புனைந்துரைத்த[100% கற்பனை] கதையை நம்புவதும், அதைப் பரப்புரை செய்து செய்து செய்து மக்களை நம்ப வைப்பதும் மனசாட்சி உள்ளோர் செய்யும் செயலல்ல என்பது நம் எண்ணம்.

முனைப்புடன் ராமரின் புகழ் பரப்பும் பெரியோர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி:

“இஸ்லாம் வளர்கிறது; கிறிஸ்தவம் வளர்கிறது. அவை இங்கே ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின்றன என்றால், அவற்றைத் தடுப்பதற்கு, ஒரு கற்பனைக் காவியக் கதைக் மாந்தனைத் தூக்கிச் சுமப்பதுதான் வழியா? வேறு சிறந்த நல்ல வழிகளே இல்லையா?”

வெள்ளி, 29 டிசம்பர், 2023

‘அது’ விசயத்தில் ஓர் அயல்நாட்டுப் பெண்ணின் அசுர சாதனை!!!

ரு குமரிப் பெண் 100 வாலிபர்களுடன் உ.உறவு[ஹி... ஹி... ஹி!!!] கொண்டாள் என்றாலே ஆண் வர்க்கம் வாய் பிளக்கும்; பெண்ணினம் முகம் சுழிக்கும். 

அதுவே 500 என்றால் திறந்த வாய் மூடாது.

ஆயிரத்தைக் கடந்தால்.....

செய்தி சொன்னவனை, “சக்தி[பெண் தெய்வம்] வடிவமான பெண்ணினத்தையே இழிவுபடுத்துகிறான் இவன்” என்று உதைக்க வருவார்கள் நம்மவர்கள்.

நம்மவர்களில், அயல்நட்டுப் பெண்ணொருத்தி 1400 ஆண்களுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டாள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? 

'The Times of India' என்னும் முன்னணிச் செய்தியிதழ் வாசிப்பவர்களுக்கு இது விசயம் நிச்சயம் தெரிந்திருக்கும்.

கீழ்வருவது அதில் வெளியான ஒரு செய்தி.

ராமண்டா பிஜ்ன்கா’ என்பது அவள் பெயர்; போஸ்னாயா-ஹெர்ஸகோவினா-ஹெர்ஸகோவினாவில் உள்ள ‘பன்ஜா லூகா’ என்னும் ஊரில் வசிப்பவள்[Ramanda Bjnca of Banja Luka in Bosnaia-Herzegovina-Herzegovina>மொழியாக்கம் சரியா?!].

தான் 1400 ஆண்களுடன்[இவளை அனுபவிக்க வருபவன், முன்னதாக இவளுடன் உறவு கொள்ளாதவனாக இருக்க வேண்டுமாம். அதற்கான உறுதி மொழியில் கையெழுத்திடவும் வேண்டுமாம்] அந்தரங்க உறவில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்கிறாள் இவள்; ‘இது, உலகில் இதுவரை எந்தவொரு பெண்ணும் நிகழ்த்தியிராத சாதனை என்றும் பெருமை பீற்றிக்கொள்ளும் இவள், இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்[http://timesofindia.indiatimes.com/articleshow/144666.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst].

ஆனால் அந்தோ, இவளின் கோரிக்கை கின்னஸ் பொறுப்பாளர்களால் ‘இது ஏற்கத்தக்கதல்ல’ என்று நிராகரிக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.

என்னதான், பிரபல நாளிதழில் இச்செய்தி வெளியானது என்றாலும், இந்தச் சரச சல்லாபக்காரியின் சாதனை உண்மையானதுதானா என்ற சந்தேகம் நம் உள்மனதில் எழாமலில்லை.

இது மிகைப்படுத்தப்பட்ட, அல்லது பொய்யான செய்தியாக இருப்பின், ஆடவர் உலகம் ஆறுதலடையும்; பெண்ணுலகம் நிம்மதிப் பெருமூச்செறியும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஆனால், இது எப்போதும் சாத்தியமில்லை என்கிறது கீழ்வரும் இதைப் போன்றதொரு செய்தி.

//12 மணி நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் லிசா ஸ்பார்க்ஸ் என்ற பெண்!!!//[உலக அளவில் இன்னும் எத்தனை எத்தனை ராமண்டா பிஜ்ன்கா’க்களும் ‘லிசா ஸ்பார்க்ஸ்’களும் இருக்கிறார்களோ என்று நினைத்தால் அடிவயிறு கலங்குகிறது!]

‘லிசா ஸ்பார்க்ஸ்’இன் சாதனையை முழுமையாக அறியாவிட்டால் மண்டை வெடித்துவிடுமோ என்று அஞ்சுகிறவர்கள் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லலாம்.

https://tamil.asianetnews.com/world/the-woman-who-holds-the-world-record-for-sleeping-with-919-men-in-12-hours-r2cg4z].

***மேலும் ஓர் அசகாய அந்தரங்க உறவுக்காரியின்யின் சாதனை கீழே:

வியாழன், 28 டிசம்பர், 2023

கதை கதையாய்ச் சொல்லிக் கல்லா கட்டும் திருப்பதி தேவஸ்தானம்!!!

கதை 1:

விஷ்ணு பகவான் செல்வத்தின் கடவுளான குபேரனிடம் பெரும் கடன் வாங்கினார்[அதற்கும் ஒரு கதை உண்டு. அத்தனை சுவாரசியமானது அல்ல]. அந்தக் கடனை அவர் இந்த வினாடிவரை அடைத்து முடிக்கவில்லையாம். கடனை அடைக்கத்தான் அவருடைய பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடைகளை வழங்குகிறார்களாம்.

கதை 2:

அபிஷேகத்திற்கு முன்பாக நகைகளைக் கழற்றும்போது பெருமாள் அணிந்த ஆபரணங்கள் அனைத்தும் சூடாகக் கொதிக்கும். விஷ்ணுவின் உடம்பும் கொதிக்கும். அந்தச் சூட்டைத் தணிக்கத்தான் ஏழுமலையானுக்கு அபிஷேகம்(சந்தனம் முதலியன) செய்யப்படுகிறது. அப்போது அவர் தன்னுடைய 3ஆவது கண்களை(?)த் திறக்கிறார்[வியாழக் கிழமைகளில் மட்டும்] என்பது ஐதீகம். இந்தப் புனித நிகழ்வைக் கண்டால் கோடி கோடியாய்ப் புண்ணியம் சேருமாம்.

கதை[முடி தானம்>மொட்டைபோடுதல்] 3:

புராணக்கதைகளின் படி, விஷ்ணு லட்சுமி தேவியைப் பின்தொடர்ந்து பூமிக்கு வந்து எறும்பு மலையில்(???) குடியேறினார். அங்கு ஒரு பசு அவருக்குப் பால் கொடுக்கச் சென்றது. இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த உரிமையாளர் கோடாரியால் பசுவின் தலையை வெட்ட முயன்றார். கோடாரி விஷ்ணுவைத் தாக்கியது(ஐயோ பாவம் விஷ்ணு!); அவரது முடிகளில் சிலவற்றை வெட்டியது. தேவி நீலா தேவி உடனடியாகத் தனது தலைமுடியை வெட்டி விஷ்ணுவின் காயத்தின் மீது வைத்து, அதைக் குணப்படுத்தினாள்[காயத்திற்கு மயிரும் மருந்தாகிறது!]. அவளுடைய சைகையால் தூண்டப்பட்ட விஷ்ணு, யாரெல்லாம் தலைமுடியைத் தானம் செய்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்று கூறினார். மேலும் திருப்பதியில் முடி தானம் செய்வது பக்தர்களுக்குச் செழிப்பும் செல்வமும் தரும் என்று நம்பப்படுகிறது(விஷ்ணு சொல்லவில்லையா?!).


கதை 4:

உலக நன்மைக்காக, யோக நிலையில்[ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குதல்] இருக்கும்போது கண்கள் மூடியிருக்கும். திருப்பதிக் கடவுள் சிலையின் கண்கள் மூடிய நிலையில் வடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்.

வெங்கடேஸ்வரரின் கண்களில் பிரபஞ்சச் சக்தி வெளியாகிக்கொண்டே இருக்கும். எனவே, அவரின் கண்களைப் பக்தர்கள் பார்க்கக்கூடாது[கண்கள் குருடாகுமோ?]. அவருடைய கண்கள் எப்போதும் வெள்ளை முகமூடியால் மூடப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

நம் வருத்தம்:

பெருமாளின் உடம்புச் சூட்டைத் தணிக்கச் சந்தன அபிஷேகம், குளு குளு தயிர் அபிஷேகம் எல்லாம் செய்வது போல், விஷ்ணுவின் கண்களில் வெளிப்படும் பிரபஞ்சச் சக்தியை மட்டுப்படுத்தப் பக்கவிளைவு இல்லாத நாட்டு மருந்து எதுவும் கிடைக்கவில்லையா கோயில் பட்டர்களுக்கு[அர்ச்சகர்கள்]?

ஏற்கனவே, லட்சம் லட்சமாய்த் திருப்பதியில் குவிகிறார்கள் பக்தர்கள். கோடி கோடியாப் பணம் குவிகிறது. அப்புறம் எதற்கு இப்படியான ஆறறிவை முடமாக்கும் கதைகள்?

கேள்வி கேட்பது நாம். இந்தச் சாமானியனின் கேள்வி தேவஸ்தானிகளின் மண்டையில் உறைக்குமா என்ன?!

* * * * *
***மேற்கண்ட கதைகள், திருப்பதி ஏழுமலையான் குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான சிறப்புச் செய்தியிலிருந்து பெற்றவை.

புதன், 27 டிசம்பர், 2023

அதென்ன ‘பிரபஞ்ச அறிவுத் தொகுப்பு’?!?!

விஞ்ஞானிகளின் அறிவியல் ‘கண்டுபிடிப்புகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிரச்  சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த அறிவியல் சாராம்சங்களைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்று எவரேனும் சொன்னால் நம்பமாட்டீர்கள்.

“நம்புங்கள். இப்படிச் சொல்பவர்ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி” என்கிறார் மறைந்த வாழ்வியல் அறிஞர் எம்.எஸ்.உதய மூர்த்தி.

நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வை முன்வைத்து, இது உண்மை என நிறுவவும் முயல்கிறார்.

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த... மருத்துவர் அறிந்திராத சிகிச்சை முறையையும் எடுத்துரைத்தாராம்.

அதற்கப்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “பிரபஞ்ச வெளியில் தேங்கிக்கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து” என்றாராம்!

‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’ என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

ஓப்பன்ஹீமா சொல்வதும், அதன் மீது விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஆதாரபூர்வமாக மெய்ப்பிக்கப்படுமேயானால், ஒட்டுமொத்தப்  பிரபஞ்ச அறிவுத் தொகுப்பையும் கைப்பற்றுவதற்கு உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவும்; போராட்டங்கள் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போராட்டங்கள் தொடருமேயானால், பெரும் போர்கள் மூண்டு மனித இனம் பூண்டோடு அழிந்துவிடவும் வாய்ப்புள்ளது.

ஆதலினால் உலகோர்க்கு நாம் வழங்கும் அறிவுரை:

“இருக்கிற கொஞ்சம் அறிவை வைத்தே நீங்கள் அடிக்கும் கொட்டமும் போடும் ஆட்டமும் கொஞ்சநஞ்சமல்ல. பேராசை வேண்டாம்; பேரிழப்பும் வேண்டாம். ‘இது போதும்’ என்று மனநிறைவுடன் வாழப் பழகுங்கள்.”

ஹி...ஹி...ஹி!!!

                               *   *  *   *   *

உதவி: டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்னும் நூல்.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

அதிகரிக்கும் ‘இந்தி வெறி’[+சமஸ்கிருதம்] அழிவுக்கான அறிகுறி!!!

ந்தவொரு இனத்தவருக்கும் ‘மொழிப் பற்று’ அவசியமே.

பிற இனத்தாரால் அவர்களின் மொழிக்குப் பங்கம் விளையுமேயானால், ‘பற்று’ வெறியாக மாறுவதும் ஏற்கத்தக்கதே.


இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ‘இந்தி’யும் ஒன்று[இதற்குப் பிற மொழியாளரால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].


இந்திய அரசு, இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் புறக்கணித்து, இந்தியை மட்டும் வளர்ப்பதற்கும், அதை உலகெங்கும் பரப்புவதற்கும் அதிக அளவில் பணத்தையும்[இந்தி தவிர பிற மொழி பேசும் மாநிலத்தவர்களும் செலுத்தும் வரியில்], தனக்குள்ள மிகையான அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. இதற்குக் காரணம் இந்தி மொழிக்காரர்களின் மொழிப் பற்று ‘வெறி’யாக மாறியிருப்பதுதான்.


அதிகாரப் பலம் இல்லாததால், இவர்களின் வெறிச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளன தமிழ்நாடும் பிற தெற்கு மாநிலங்களும்.


இந்தி வெறி இடையறாது வளர்க்கப்பட்டதன் விளைவுதான், நடுவணரசு நிர்வகிக்கும், வங்கிகள், அஞ்சலகங்கள், ரயில் நிலைய அலுவலகங்கள் போன்றவற்றில் தொடரும் இந்தித் திணிப்பு[‘இந்தி’யர் திணிப்பும்தான்] நடவடிக்கை.


வரன்முறைக்கு உட்படாத அதிகாரம் தமக்கு இருப்பதால், ஒன்றிய அரசினரின் ‘இந்தி வெறி’ இப்போது உச்சநிலையைத் தொட்டிருக்கிறது.


அதற்கான அடையாளங்களில் ஒன்று.....


இந்திய தண்டனைச் சட்டம்[1860], குற்றவியல் நடைமுறைச் சட்டம்(1898),[1973] மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்[1872] பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என்று பெயர் மாற்றப்பட்டு[வாயில் நுழையாத, புரியவே புரியாத மொழியில்> சமஸ்கிருதம்&இந்தி?] அவற்றிற்கான சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருப்பது.


[இந்த 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12ஆம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று[26.12.2023] ஒப்புதல் அளித்துள்ளார்].


இந்நிலையில் ஒருமித்த இந்தியாவின் நலம் நாடும் நல்லோர்கள் செய்யும் ஓர் எச்சரிக்கை:


“பற்று தேவைதான். அப்பற்று வெறியாகி உச்சத்தைத் தொட்டால் அழிவு நிச்சயம்”


* * * * *

https://www.hindutamil.in/news/india/1174016-new-indian-penal-code-has-become-more-draconian-says-இந்திய தண்டனைச் சட்டம் (IPC)p-chidambaram.html

100 முன்னணி இணையதளங்கள்[‘கடவுளின் கடவுள்’... 9/100]!!!

 


Tamil Blogs

1056 blogs found.

1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100

1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100

https://www.indiblogger.in/languagesearch.php?lang=tamil

***Blog என்பது தொடர்ச்சியாகவோ, சீரான இடைவெளியிலோ படைப்புகளை[கட்டுரைகளும் பிறவும்] வெளியிடும் தளம்[இணையதளம் > இணையத்தில் இடம்பெறும் தளம். வேற்றுமைத் தொகை என்பதால் ‘த்’[இணையத்தளம்] இடம்பெறாது] ஆகும்.  Blog இல் தனிப்பட்ட தகவல்கள்(Personal Blog), கதைகள்(Story Blog), சுய முன்னேற்றம்(Self Development Blog), தொழில்நுட்பம்(Technology), தினசரி செய்திகள்(Daily News), பயண அனுபவங்கள்(Travel Experience)  என்றிவை போன்றவை இடம்பெறலாம். கட்டுரைகளை வலைப்பதிவுகள்(Blog Post) என்று அழைக்கலாம்.