பக்கவாதம்(Stroke) என்பது மூளை & இரத்த நாளங்கள் சார்ந்த ஒரு தீவிரமான நோய்(Cerebrovascular Disease) ஆகும். இது அவசர மருத்துவச் சிகிச்சையால்(Medical Emergency) மட்டுமே முழுமையாகக் குணப்படுத்துவதற்கான நோய் ஆகும்.
மருத்துவ ரீதியாக, மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது அல்லது மூளையில் உள்ள இரத்த நாளம் வெடித்து இரத்தக்கசிவு ஏற்படும்போது இந்நோய்[பக்கவாதம்] ஏற்படுகிறது. இதனால் மூளைச் செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல், அவை சில நிமிடங்களிலேயே இறக்கத் தொடங்குகின்றன. இக்காரணத்தால்தான் அவசரக் காலச் சிகிச்சை[தாகுதலுக்கு உள்ளான சில மணி நேரங்களில் மருத்துவரை அணுகுதல் அவசியம்] தேவைப்படுகிறது.
பக்கவாதத்தில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன:
1.இஸ்கிமிக் பக்கவாதம்(Ischemic Stroke): இரத்த உறைவால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாதல்(இதுவே பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது) காரணம் ஆகும்.
2.ஹெமராஜிக் பக்கவாதம்(Hemorrhagic Stroke): மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படுவது காரணம்.
3.தற்காலிக அல்லது நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் (Transient Ischemic Attack - TIA / Mini-Stroke). இது மூளைக்கான இரத்த ஓட்டம் மிகச் சில நிமிடங்களுக்கு மட்டும் தடைப்பட்டுப் பின் சரியாகும் நிலையாகும்.
இவற்றின் முக்கிய அறிகுறிகள்:
*சிரிக்கும்போது ஒரு பக்க முகம் கோணலாக மாறுதல்.
*மேலே உயர்த்த முடியாத அளவுக்குக் கைகள் பலவீனமடைதல்.
*பேசுவதில் தடுமாற்றம் அல்லது வார்த்தைகள் தெளிவில்லாமல் இருத்தல்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக(தாமதிக்காமல்) மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை நோய்), அதிகக் கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் போன்றவை பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இதன் தாக்குதலிலிருந்து பாதுகாத்தலும் முழுமையாகக் குணமடைதலும் சாத்தியமாகும்.
பின்னெச்சரிக்கை:
