சனி, 11 ஆகஸ்ட், 2018

இறந்தவர் வீட்டில் இசைத்தட்டு நடனம்!!

ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிகவும் விரும்பிப் பயன்படுத்திய பொருள்களையும் அவரோடு சேர்த்து அடக்கம் செய்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ள ஒன்று. கைத்தடி, கண்ணாடி, மதுபாட்டில், சிகரெட் பாக்கெட் என்றிப்படிப் பட்டியல் நீளும்.

இவையெல்லாம் மூடநம்பிக்கையின் பாற்பட்டவை எனினும், இவற்றால் விளையும் தீங்குகள் மிகவும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 'தைவான்' நாட்டின் கிராம மக்களிடமுள்ள சில மூடநம்பிக்கைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

வயதான ஆடவர் ஒருவர் இறந்துவிட்டால்.....

சம்பவம் நிகழ்ந்த வீட்டின் முன்னால் ஒரு வேன் நிறுத்தப்படும். அதன் மீது மேடை அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அது அலங்கரிக்கப்படும். மேடையில் அழகான இளம் பெண்கள் தோன்றி, பாட்டுப்பாடி நடனம் ஆடுவார்கள்.
நேரம் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் முழக்கம் அதிகரிக்கும். பெண்கள், இசைக்கப்படும் பாடலுக்கேற்பக் குழைந்து குலுங்கி ஆடிக்கொண்டே தாங்கள் உடுத்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி வீசுவார்கள். விடியும்வரை இந்த ஆபாசக்கூத்து தொடர்ந்து நடக்கும்.

இது நம் கிராமப்புறக் கோயில் விழாக்களில் அரங்கேறும் இசைத்தட்டு நடனம் போன்றதுதான்.

இம்மாதிரித் 'துகிலுரி' நடனங்களுக்கு தைவான் அரசு தடை விதித்திருக்கிறதாம். இருந்தும் நடைமுறையில் இவற்றைத் தடுத்து நிறுத்துவது சாத்தியப்படவில்லையாம்.

''ஆடவர்களில் பெரும்பாலோர் இம்மாதிரி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளிப்பதில் ஆர்வம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களின் ஆன்மாவை இந்நடனங்கள் திருப்திபடுத்துகின்றன'' என்பது இந்த நடன நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வோரின் வாதம் என்கிறார்கள்.

ஆன்மாவின் பெயரால் நடத்தப்படும் கூத்துகளில் இதுவும் ஒன்று. தைவான் மக்கள் நம்மைப்போலவே மகா புத்திசாலிகள்!
------------------------------------------------------------------------------------------------------------------
பழைய வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்த தகவல் இது. 


12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. துயிலைக் கெடுக்கும் நடனம் என்றும் சொல்லலாம்தானே?

      நன்றி புதுமுகன்.

      நீக்கு
  2. நண்பரே இந்தக்கூத்து நமது ஊரிலும் நடக்கிறது ஆனால் துகிலுரி மட்டும் இல்லை.

    கடந்த வருடம் ஒரு உறவினரின் மரண வீட்டுக்கு சென்றேன் கிராமம்தான் (ஊரின் பெயர் வேண்டாம் தேவகோட்டையிலிருந்து 100 கி.மீ)

    இரண்டு இளம் பெண்கள் கரகாட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர். குட்டைப்பாவாடை ரவிக்கை மட்டுமே மிகவும் ஆபாசமாக இருந்தது.
    எங்கள் சமூகத்திலேயே முதன் முறையாக காண்கிறேன்...

    இது தேவையா ? நல்லா இருக்குதா உங்களுக்கு ? என்று நான் கேட்டதற்கு...

    அவர்தான் இறந்த பிறகு கரகாட்டம் வைத்து தூக்கச் சொன்னார்.

    நான் வந்து இருப்பது 25 வருடங்களுக்குப் பிறகு...

    மாலையை போட்டு விட்டு சற்றே தூரத்தில் அமர்ந்து இருந்தேன். இதைக்கண்டு (சமூக) கோபமாகத்தான்...

    அவர்கள் நினைத்தது என்னை இவனுக்கு இன்னும் பழைய கோபமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரியான அசிங்கங்களைப் பெண்களும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்!

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
    2. //அவர்தான் இறந்த பிறகு கரகாட்டம் வைத்து தூக்கச் சொன்னார்//

      நம்பும்படியாக இல்லை.

      மீண்டும் நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. நான் விசாரித்து இதை ஏற்பாடு செய்தவனை திட்டினேன். அதற்கு அவர்தான் என்னிடம் இப்படி ஆடம்பரமாக செய்யச் சொன்னார் என்றது உண்மையே... இதற்கு இரண்டு நபர்கள் சாட்சி.

      இதை எல்லோருமே கவலையின்றி ரசித்தார்கள் என்பதும் உண்மை.

      (என்னைத் தவிர)
      (நான் கரகாட்டத்தை ரசிப்பவன் என்பது வேறு விடயம்)

      நீக்கு
    4. ஐயோ தவறாகப் புரிந்துகொண்டீர்களே. அவர் சொன்னதைத்தான் நம்பும்படியாக‌ இல்லை என்று குறிப்பிட்டேன்.

      உங்களை நான் எப்போதாவது சந்தேகப்பட்டது உண்டா?

      கூடுதல் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
    5. அவர் சொன்னது நம்பும்படியாக இல்லை என்று நான் குறிப்பிட்டிருக்கிறார் வேண்டும்.

      தவறு செய்துவிட்டேன்.

      கில்லர்ஜி மன்னிக்க வேண்டும்.

      நீக்கு
    6. கைபேசியில் எழுதினேன்.'குறிப்பிட்டிருக்க' என்பது 'குறிப்பிட்டிருக்கிறார்' என்று தவறாகப் பதிவாகிவிட்டது.

      நீக்கு
    7. மேலும் இறந்தவர் நல்ல மனிதர்தான் என்றாலும் "மொடாக்குடிகாரர்"

      நீக்கு
  3. நாடுகள் மாறினாலும் காட்சி மாறாது போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு