எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 11 மார்ச், 2025

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை! ஆதாரங்களை அடுக்கிய அறிவுஜீவித் தமிழன் சு. வெங்கடேசன்!!

அந்த ‘மூன்று நாட்கள்’... அம்மனும் விதிவிலக்கல்ல!!!

கேரள மாநிலம் ‘செங்கனூரில் பகவதி’ என்று ஒர் அம்மன் கோயில் உள்ளது.

உள்ளே இருப்பது கற்சிலைதான். அதற்குப் புடவை கட்டி, நகைகள் பூட்டி, அலங்காரம் பண்ணி, அபிசேகம், ஆராதனை எல்லாம் செய்வது ஒரு நம்பூதிரிப் பிராமணன்.

ஒரு நாள் அந்த ஆள் ஓர் அதிசயத்தைக் கண்டாராம். அது.....

அம்மன் கட்டியிருந்த வெள்ளைச் சேலையில் 'அந்த' இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கறை படிந்திருந்தது. அது எதனால் என்று பல மேதைகள் ஆய்வு செய்ததில், அம்மன் 'தூரம்'[மாத விலக்கு] ஆகியிருந்தது தெரிந்ததாம்.

அம்மனைக் கோயிலுக்கு வெளியே தங்க வைத்து, மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் குளிப்பாட்டிய பின்னர், ஐயன் சிவபெருமான் வரவேற்க, கோயிலுக்குள் குடியமர்த்தினார்கள். அப்புறம் ஆண்டாண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக்கப்பட்டது இது. இதற்கு 'ஆறாட்டு' என்று பெயர்.

'அந்த' மூன்று நாட்களும் கோயிலில் கன்னியர்கள் காவல் காக்கிறார்கள்.

அம்மனின் கற்சிலை வீட்டுக்குத் 'தூரம்' ஆகிறதாம். மூன்று நாள் காவலாம். அப்புறம், ஆறாட்டாம்[இம்மாதிரி மூடநம்பிக்கைக் கதைகள் நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன]. அடச் சே.....

அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகிறது என்று சொல்லப்படும் இது போன்ற கதைகளுக்கும், ஐயப்பன் என்றொரு சாமி பிரமச்சாரியாக[ஏன்? 'பொண்ணு’ கிடைக்கவில்லையா?!] இருக்கிறார் என்று சொல்லப்படும் கதைகளுக்கும் இந்த நாட்டில் பஞ்சமே இல்லை.

இம்மாதிரிக் கதைகளைக் கட்டுகிற அயோக்கியர்களும் சரி, நம்புகிற முழு மூடர்களும் சரி இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை.

உலகம் அழியும் அழியும் என்கிறார்கள். சீக்கிரம் அழிந்து தொலைத்தால் நல்லது!

'இந்தி’யன் எதிர்ப்புப் போராட்டம் எப்போது தொடங்கும்?

//தமிழக எம்.பி-க்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்று சசி தரூர் கூறினார். உங்கள் கருத்து என்ன?//

மேற்கண்ட 'Quora'இன் கேள்விக்கான என் பதில்:

'பசி'பரமசிவம் · 

பின்தொடர்

3 வருடம்

இது, இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் அடாவடித்தனமும்கூட.

தொடர்புக்கு ஆங்கிலம் மட்டுமே போதும். இதனாலெல்லாம் இனியொரு முறை நாம் ஆங்கிலேயனுக்கு அடிமை ஆகிவிட மாட்டோம்.

வங்கிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் என்று எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் இந்தியைத் திணித்துவிட்டார்கள்.

இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக்கி ஏனைய மொழிகளை அழிக்கும் வேலையை வெறித்தனமாகச் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் போலப் பிற மாநிலங்களும் இந்தியை மிகக் கடுமையாக எதிர்க்காவிட்டால், இந்த வெறியர்களின் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.

இந்தி பேசாத மாநிலத்தவரின் ஒருங்கிணைந்த போராட்டம் உடனடித் தேவை.

அதன் முதல் கட்டமாக, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து இந்தியை அறவே நீக்க வேண்டும்[அவர்கள் மாநிலத்தில் அது கோலோச்சுவதைத் தடுப்பாரில்லை].

இம்மாதிரியான கருத்துகள் மிக விரைவாகப் பரப்பப்பட்டு, அதை இந்தி பேசாத மாநில மக்களும் அரசியல் தலைவர்களும் உணர்வது மிக மிக மிக முக்கியம்.

சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயனுக்கு அடிமைகளாக இருந்த நாம் இனி காலமெல்லாம் இந்திக்காரனுக்கு அடிமைகளாக வாழப்போகிறோமா?


                                                 *   *   *   *   *

https://ta.quora.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[இவன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது இப்படியெல்லாம் ஆசை காட்டித்தான்!]