கேரள மாநிலம் ‘செங்கனூரில் பகவதி’ என்று ஒர் அம்மன் கோயில் உள்ளது.
உள்ளே இருப்பது கற்சிலைதான். அதற்குப் புடவை கட்டி, நகைகள் பூட்டி, அலங்காரம் பண்ணி, அபிசேகம், ஆராதனை எல்லாம் செய்வது ஒரு நம்பூதிரிப் பிராமணன்.
ஒரு நாள் அந்த ஆள் ஓர் அதிசயத்தைக் கண்டாராம். அது.....
அம்மன் கட்டியிருந்த வெள்ளைச் சேலையில் 'அந்த' இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கறை படிந்திருந்தது. அது எதனால் என்று பல மேதைகள் ஆய்வு செய்ததில், அம்மன் 'தூரம்'[மாத விலக்கு] ஆகியிருந்தது தெரிந்ததாம்.
அம்மனைக் கோயிலுக்கு வெளியே தங்க வைத்து, மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் குளிப்பாட்டிய பின்னர், ஐயன் சிவபெருமான் வரவேற்க, கோயிலுக்குள் குடியமர்த்தினார்கள். அப்புறம் ஆண்டாண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக்கப்பட்டது இது. இதற்கு 'ஆறாட்டு' என்று பெயர்.
'அந்த' மூன்று நாட்களும் கோயிலில் கன்னியர்கள் காவல் காக்கிறார்கள்.
அம்மனின் கற்சிலை வீட்டுக்குத் 'தூரம்' ஆகிறதாம். மூன்று நாள் காவலாம். அப்புறம், ஆறாட்டாம்[இம்மாதிரி மூடநம்பிக்கைக் கதைகள் நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன]. அடச் சே.....
அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகிறது என்று சொல்லப்படும் இது போன்ற கதைகளுக்கும், ஐயப்பன் என்றொரு சாமி பிரமச்சாரியாக[ஏன்? 'பொண்ணு’ கிடைக்கவில்லையா?!] இருக்கிறார் என்று சொல்லப்படும் கதைகளுக்கும் இந்த நாட்டில் பஞ்சமே இல்லை.
இம்மாதிரிக் கதைகளைக் கட்டுகிற அயோக்கியர்களும் சரி, நம்புகிற முழு மூடர்களும் சரி இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை.
உலகம் அழியும் அழியும் என்கிறார்கள். சீக்கிரம் அழிந்து தொலைத்தால் நல்லது!