எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 10 மே, 2025

போர்க்காலக் கவிதை... “பிணங்களை அகற்றுங்கள்”!

வெற்றி! வெற்றி!!

நடந்துமுடிந்த போரில் நாமே வென்றோம்.

நம்  படை வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

“வெற்றி விழா கொண்டாடுவதற்கு முன் 

ஆங்காங்கே

சிதறிக் கிடக்கும் சடலங்களைப் புதையுங்கள்.

தவறினால்

அழுகிய பிண நாற்றம் மூக்கைத் துளைக்கும்.”