வியாழன், 30 நவம்பர், 2023

‘இன்பத் தமிழ்’ஐத் ‘துன்பத் தமிழ்’ ஆக்கிய காஞ்சி மகான்!!!

 

‘காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டவரால் சொல்லப்பட்ட இந்துமதம் பற்றிய கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’[5000 பக்கங்கள்] என்னும் தலைப்பில் வெளியிட்டது வானதி பதிப்பகம். 

அதன் சாரத்தை, 256 பக்கங்களாகச் சுருக்கினார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான, மறைந்த ‘சோ’ இராமசாமி. ‘இந்து தர்மம்’ என்னும் தலைப்பில் அது நூலாக வெளியானது. 

‘இந்து தர்மம்’ நூலிலிருந்து.....

#குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்ட ஆச்சார்யாள் வடக்காக வெகுதூரம் போய் நர்மதைக் கரையை அடைந்தார். அங்கே கோவிந்த பகவத் பாதர் நிஷ்டையில் இருந்தார். 

சாஸ்த்ர ப்ரகாரம் ஆசார்யாளுக்கு அவர் சந்நியாஸ ஆசரமம் கொடுத்து உபதேசம் பண்ணினார். கோவிந்த பகவத்பாதான் ஆசார்யாளிடம் வ்யாஸா ஆஜ்ஞைப் படியே தாம் வந்து உபதேசம் பண்ணியதாகச் சொன்னார். 

வ்யாஸருடைய ப்ரஹ்மஸூத்ரத்தின் ஸரியான தாத்பர்யத்தை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் பண்ணி சுத்த வைதிகத்தையும் கத்தாத்வைதத்தையும் ப்ரகாசப்படுத்த  வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் தெரிவித்தார். 

ஆசார்யாள் வ்யாஸருடைய சூத்திரத்தின் தாத்பர்யமெல்லாம் ப்ரகாசிக்கும்படியாக பாஷ்யம் பண்ணி குருவின் சரணத்தில் வைத்து அவருக்கு நிரம்பக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு சில காலம் கூட இருந்தார். எந்நாளும் ஸனாதன தர்மத்தில் நிற்பதற்கான பாஷ்யங்களை.....

ஆசார்யாள்....தாமே ஸொந்தமாக எழுதிய ஞான நூல்களான ‘ப்ரகர்ண’ங்களில் ஸித்தாந்த வாதமாக .....

ஆசார்யாள் வாஸம் செய்துகொண்டு இருந்தபோதே.... அவருக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம். லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ணவேண்டும் என்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார்.....#

‘இந்து தர்மம்’ விற்பனையில் சாதனை நிகழ்த்தியது[2010ஆம் ஆண்டில் பதினான்காம் பதிப்பு வெளியானது] என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து தர்மத்தைக் கட்டிக் காப்பதற்காகவும், அதைத் தமிழரிடையே பரப்புவதற்காகவும் தமிழைப் பயன்படுத்திய ‘மஹா பெரியவா’, ஓரளவுக்கேனும் புரியும் வகையில் அதைக் கையாள முயற்சி செய்யாதது ஏன் என்பது புரியாத புதிர்!

புதன், 29 நவம்பர், 2023

கிளுகிளு கவிதை வடிவில் கிறங்கடிக்கும் தமிழ் உரைநடை!!!

கவிதை, மனதில் கிளர்ச்சியூட்டும் சுவையான ஓர் இலக்கிய வகை. ‘புனைகதை’யிலும் வாசகரை ஈர்க்கும் அம்சங்கள் பல உள்ளன. ‘உரைநடை, நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதற்கும், கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்குமான ஒரு கருவி மட்டுமே. இதில் கலையம்சம் மிக மிகக் குறைவு’ என்பது இலக்கியவாதிகளின் ஒருமித்த கருத்து எனலாம்.

இதற்கு விதிவிலக்காக, திரு.வி.கல்யாணசுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள்,  சுவையான தமிழில் நிறைவாக எழுதினார்கள் என்பதும் அறியத்தக்கது.

அதென்ன சுவையான நடை?

‘மேகலா `97 ஆகஸ்ட்’ மாத இதழின் ‘கேள்வி-பதில்’ பகுதியில்  இடம்பெற்ற ஒரு கேள்விக்கு, விக்கிரமாதித்தன்[இதழ் ஆசிரியர்] தந்த பதில் ‘சுவையான நடை’க்கு மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதை, அந்தப் பகுதியை வாசிக்க நேர்ந்தபோது அறிந்தேன்.

அதை நீங்களும் வாசித்து இன்புறலாம்.

                                        *   *   *   *   *
சி.பி.கே.[திருச்சூர்] சாமியின் கேள்வி:

சின்னக் குழந்தையை முதுகில் உப்பு மூட்டை தூக்குவதில் ‘கிக்’ அதிகமா, இளம் மனைவியை உப்பு மூட்டை தூக்குவதில் அதிகமா?

விக்கிரமாதித்தன் பதில்:

குழந்தையைத் தூக்குகிறபோது ‘கிக்’எங்கிருந்து வரும்?

அது ஒரு சுகமான சுமை. அது முதுகில் சவாரி செய்யும் முயல் குட்டி. ஒரு கூடைப் பூவைச் சுமந்து செல்லும் சுகம். குழந்தையின் தளிர்க்கரம் நம் கழுத்தைச் சுற்றியுள்ள மயிலிறகு. அதைச் சுமக்கும் போது நம் மனம் ஆனந்தத்தில் துள்ளும். ‘கிக்’ இங்கே மிஸ்ஸிங்.

இரண்டாவதோ.....

சற்றே கனமான சுமை[மனைவியின் ஆரோக்கியத்தைப் பொருத்து அது கூடவும் செய்யும்!].

சுமப்பது சற்றுச் சிரமம் என்றாலும் வலியே தெரியாது.

மனைவியின் இதயம் நம் முதுகின் மீது, ‘படக்...படக்...’ என்று துடிப்பதை நாம் துல்லியமாய் உணர்வோம். அது பேசும் மொழி நமக்குப் பேரின்பத்தை வாரி வழங்கும்.

நம் காதோரம், “போதும் விடுங்க... பிளீஸ்” என்று கெஞ்சுவது போல் கொஞ்சுவாளே, அது ஓர் இன்னிசையாய் நம் நெஞ்சில் தேன் பாய்ச்சும்.

அவளின் தளிர்க் கரங்களில் பூசிய மஞ்சள் வாசனை நம் தலைக்குள் புகுந்து ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ அடிக்கும்.

அவளின் நீண்ட வெள்ளரிப் பிஞ்சு விரல்கள் நம் கழுத்தில் மாலையாய்ப் பின்ன, அந்தப் பிஞ்சுகளைச் செல்லமாய்க் கடிக்கத் தோன்றும். நம் ஒட்டு மொத்த மேனியும் சிலிர்க்கும்.

அகத்துறை இலக்கியத்தில்.....

தலைவி, தலைவனின் முதுகில் இப்படிச் சவாரி செய்யும்போது, தலைவன் சொன்னானாம்.....

“நங்கையே, இன்று வரையில் என் முதுகில் காயம் பட்டதாய்ச் சரித்திரம் இல்லை. இன்றுதான் உன்னால் என் முதுகில் இரு வேல் பாய்ந்து என் நெஞ்சுவரை தாக்கியதால் காதல் போரில் நான் புறமுதுகு காட்டியவன் ஆனேன்” என்று.

போதுமா நண்பரே?

                                        *   *   *   *   *
***இது, புது மெருகு ஊட்டப்பட்ட மிகப் பழைய பதிவு!

செவ்வாய், 28 நவம்பர், 2023

சிறுமியரை வன்புணர்தலும் தடுப்பதற்கான மிகக் கடும் தண்டனையும்!!![0% பொழுதுபோக்கு]

வடக்குக் கொலம்பியாவில், பள்ளிக்குச் சென்ற எம்பெரா பழங்குடியினத்தை சேர்ந்த 13 வயதுச் சிறுமி வீடு திரும்பவில்லை. 

அந்தக் குழந்தையை அவளின் பெற்றோரும், ஊர் மக்களும் தேடினார்கள். அவள் பள்ளியிலிருந்து வெளியேறவில்லை என்பதை அறிந்து அங்கே சென்றார்கள்.


அவளின் அந்தரங்க உறுப்பிலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்க, அவளிருந்த கோலம் அவர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.


அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். மருத்துவச் சோதனையில் அவள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.


விசாரணையில், கொரோனா தடுப்புப் பணிக்காக அங்கு அனுபப்பட்ட  7 ராணுவ வீரர்கள் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  


அந்த நாட்டு[கொலம்பியா] வழக்கப்படி குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனை 30 ஆண்டுச் சிறைவாசம். 7 பேருக்குமே அந்தத் தண்டனை வழங்கப்படலாம் என்பது செய்தி. https://tamil.oneindia.com/news/international/13-year-old-girl-colombia-army-soldiers-gang-rape-public-protest-390006.html?story=2

* * * * *


டலும் மனமும் மிகப் பலவீனமான நிலையிலிருக்கும் இம்மாதிரிச் சிறுமிகளை மனசாட்சியே இல்லாமல் வன்புணர்வு செய்து சிதைப்பதைப் போன்ற கொடூரம்[உலக அளவில் இது தொடர் நிகழ்வாக உள்ளது] வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.


இதைச் செய்யும் கயவர்களைச் சிறையில் அடைப்பதெல்லாம் செய்த குற்றத்துக்கு ஏற்றத் தண்டனையே அல்ல.


இவர்களைப் பொதுமக்கள் மத்தியில் முழு நிர்வாணமாக நிறுத்தி, மில்லிமீட்டர் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் ஆணுறுப்பை வெட்டி அகற்ற வேண்டும். இந்தச் சித்ரவதையை, ஆரஅமற, இடைவெளி கொடுத்து, நீண்ட நேரம் செய்த பிறகு இவர்களை வெட்டவெளியில் தூக்கில் தொங்கவிடுவதே ஏற்புடையத் தண்டனை ஆகும்.


இந்த நிகழ்வைக் காணொலியாக்கி, உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் உலகோர் காணும்படியாக முன்னறிவிவிப்புச் செய்து ஒளிபரப்புதல் மிக அவசியம்.


இதை வழக்கப்படுத்தினால் மட்டுமே கள்ளங்கபடமற்ற அப்பாவிச் சிறுமிகள் வன்புணர்வு செய்யப்படுவதைத் தடுத்திட இயலும்.


ஆனால், குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தண்டனை பல நாடுகளில் வழக்கத்தில் இல்லை. கொடியக் குற்றச் செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்காத அந்த நாடுகள், சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றங்களுக்கு மட்டுமாவது அதை வழக்கப்படுத்துதல் வேண்டும்.


இந்தத் தூக்குத் தண்டனை நாம் மேலே குறிப்பிட்ட வகையில் அமைதல் வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.


திங்கள், 27 நவம்பர், 2023

கண்ணில் புற்றுநோயா? கண்கலங்க வேண்டாம்!!!

னித உடலில் புற்றுநோய் தாக்காத உறுப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூளை, கண்கள், மூக்கு, பல் எயிறு, கழுத்து, நுரையீரல், இதயம், இரைப்பை, குடல், சிறுநீரகம், பிராஸ்டேட் சுரப்பி, பிறப்புறுப்பு, மலக்குடல் முதலானவற்றை அது பாதிக்கிறது என்பதை நாம் அறிவோம். https://kadavulinkadavul.blogspot.com/2022/11/blog-post_52.html

இது நம் கண்களையும் விட்டுவைப்பதில்லை என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி.

ஆனாலும்,

இது மிகவும் அரிதானதுதான். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 850 கண் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. பெரும்பாலும் வயதானவர்களையே இது தாக்குகிறது.

இங்கிலாந்தில், கண் புற்றுநோயாளிகளில் 25% பேர் 75 வயதைக் கடந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நோய்க்கு மரபு காரணமா என்பது அறியப்படவில்லை.

பெரும்பாலும், கண் பரிசோதனை மூலமாகவே இது கண்டறியப்படுகிறது.

இதற்கான அறிகுறிகள்:

*ஒரு கண் வீக்கம்

*முழுமையாக அல்லது பகுதியளவுப் பார்வை இழப்பு. 

*கருமையான இணைப்பு[கரும்புள்ளி?] பெரிதாகி வருவது போல் தோன்றும்[a dark patch in the eye that appears to be getting bigger].

*கண்ணில் அல்லது அதைச் சுற்றிலும் வலி.

*கண்ணின் மேற்பரப்பில் வெளிறிய உயர்ந்த கட்டி.

*மங்கலான பார்வை.

*கண்ணின் மாறுபட்ட தோற்றம்.

*கண் இமை அல்லது கண்ணைச் சுற்றிலும் கட்டிகள்

*கண்களுக்கு எதிரே விசித்திரமான விக்லி கோடுகள் தெரிவது[Seeing spots, irregular flashes of light, or strange wiggly lines in front of your eyes often known as "floaters"].

*பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் - நேராக முன்னால் இருப்பதைப் பார்க்க முடியும்; ஆனால் பக்கங்களில் இருப்பதைப் பார்க்க முடியாது

*கண் எரிச்சல், "சிவப்புக் கண்"{or chronic conjunctivitis(also known as pink-eye)}

மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் வேறு காரணங்களாலும் உண்டாகலாம். எனவே, பீதியடையத் தேவையில்லை.

எனினும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைச் சந்தித்துக் கண்களைப் பரிசோதிப்பது மிகவும் அவசியம். 

கண் புற்றுநோயின் பாதிப்பு உடன் கண்டறியப்பட்டால், சிகிச்சை அளிப்பது எளிதாக அமையும்[.....and the sooner eye cancer is noticed, the easier it is to treat].

கண் புற்றுநோய் தாக்காமலிருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

*சன்கிளாஸ்களை அணியலாம். கடும் வெய்யில்[+புற ஊதாக் கதிர்களின் தாக்கம்] என்றில்லாமல், மற்ற நேரங்களிலும் அணியலாம்.

*மூன்று அங்குல விளிம்பு கொண்ட தொப்பியை அணிவதும் பாதுகாப்பானதே.

***மூலக் கட்டுரையில் இடம்பெற்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்திடக் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.

Eleven warning signs of cancer you can see in your eyes - from dark spots to pale lumps (msn.com)

ஞாயிறு, 26 நவம்பர், 2023

'இந்தி’யன் அல்லாத அரசியல்வாதிகளுக்கு அழைப்பு... “வாங்க, ஆணி புடுங்கலாம்”!

இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் இந்தியும் ஒன்று.

35% சதவீத மக்களால்[வரிவடிவம் பெறாத மொழிகள் பேசுவோரையும் சேர்த்து 45% என்று கணக்குக் காட்டுகிறார்கள்] பேசப்படுவதால், இது பெரும்பான்மை இந்தியர்களால் பேசப்படும் மொழி என்றுரைப்பது ஏற்கத்தக்கதல்ல[இது பெரும்பான்மையோர் பேசும் சிறுபான்மை மொழி என்பதே சரி].

நாட்டை ஆளும் அதிகாரம் அவர்கள் வசம் இருப்பதால், ஆங்கில மொழியோடு இந்தியை இந்த நாட்டை ஆளும் மொழியாக அவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

இதன் விளைவு.....

பல்வேறு துறைகளிலும் ‘இந்தி’யரின் ஆதிக்கம் நாளும் அதிகரிக்கிறது.

இந்நிலை நீடித்தால், இந்தியா, இந்து சாம்ராஜ்ஜியம் ஆகிறதோ இல்லையோ[இது இந்து வெறியர்களின் கனவு] குறுகியக் கால அவகாசத்திலேயே ‘இந்தி நாடு’ ஆகும் என்பது உறுதி.

இது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைத்து மாநிலத்தவருக்கும் தெரியும்.

தெரிந்தும், பிற மொழிகளுக்கும் இந்திக்கு இணையான வாய்ப்பை வழங்கும்படி ‘இந்தி’யர் அல்லாதார் வெகுண்டெழுந்து போராடாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை.

பத்தோடு பதினொன்றாகத் தமிழ்நாட்டவரும் இந்த அநியாயத்தை வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது[வெறுமனே அறிக்கை விடுவதெல்லாம் நம்மை நாமே முட்டாள்கள் ஆக்கும் செயல்].

இந்தப் பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது அடுத்து இடம்பெற்றுள்ள நாளிதழ்ச் செய்தி[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது].

‘இந்தி’யர்கள் இந்தியாவின் அரசு சார்ந்த அத்தனைத் துறை அதிகாரங்களையும் பெருமளவில் கைப்பற்றுவதற்கு, இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வுகளை[சிவில் சர்வீசஸ்] ஆங்கிலத்தோடு[ஆங்கிலம் நம் தாய்மொழி அல்ல] இந்தியிலும் நடத்துவது வாய்ப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லை.

இதை[இந்தி அல்லாத மொழிகளைப் புறக்கணிப்பது] எதிர்த்துத்தான் தனியொரு நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றத் தீர்ப்பு நமக்குச் சாதகமாக அமைவதோ[அமைந்தாலும் நடுவணரசு அதை மதித்து அமல்படுத்துவது சந்தேகமே], பாதகமாக அமைவதோ ஒரு புறம் இருக்க, நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம்[ஆளும் ‘திமுக’ உட்பட] நாம் கேட்க விரும்புவது.....

“மிகப் பல ஆண்டுகளாக இந்த அநீதியை[இந்திக்கு முக்கியத்துவம்] நடுவணரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல. 

அறிந்திருந்தும், வெறுமனே மேடை ஏறி கூச்சல் போடுவதைத் தவிரக் களத்தில் இறங்கி நீங்கள் தீவிரமாகப் போராடாதது ஏன்?

தனியொரு மனிதருக்கு உள்ள அக்கறை பெரும் பெரும் குழுவாக இயங்கும் உங்களுக்கு இல்லாமல்போனது ஏன்? மொழியுணர்வும் இனவுணர்வும் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்வது மக்களை மயக்கித் தேர்தல்களில் வாக்குகளை அள்ளுவதற்கு மட்டும்தானா?”

“ஆம்” என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்து[உங்களின் உள்மனதின் கருத்தும் இதுதான்] என்பதால், உங்கள் அனைவருக்கும் நாம் விடுக்கும் அழைப்பு.....

“வாங்க... வாங்க, நாம் எல்லோரும் இணைந்தே ஆணி புடுங்குவோம்!”

சனி, 25 நவம்பர், 2023

‘இந்து இளைஞன்-இஸ்லாம் பெண் திருமணம்’... இஸ்லாமியரின் எதிர்வினை?!

மேற்கண்டது போன்ற கேள்வி[இடுகைத் தலைப்பு] 'கோரா’[ta.quora.com]வில் இடம்பெற்ற ஒன்று. பதில்கள் பின்வருமாறு:

 Trigger Girl இன் தற்குறிப்பு போட்டோ

Trigger Girl -நவ. 6

பெரும்பாலான இந்து - இஸ்லாமியக் காதல் திருமணங்களில் பாதுகாப்புக் கொடுக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் வருவதில்லை.

என் உறவு வட்டத்திலேயே இந்து-இஸ்லாமியத் திருமணம் 5 ஜோடிகளுக்கு நடந்துள்ளது.

அதில், ஒரு தூரத்துச் சொந்தமான ஒரு பெண்ணின் திருமணம் சென்ற மாதத்தில் நடந்தது.

இதுவரை அந்த 5 ஜோடிகளில் யாருக்கும் யாராலும் ஆபத்து வரவில்லை.

இந்து மதத்தில் அதிகம் காணப்படும் ஆணவக் கொலைகள் இஸ்லாமியர்களிடம் காண்பது மிக அரிது[‘அறவே இல்லை’ என்பது இல்லை].

4 நாட்களுக்கு முன்பு, ஒரே மதத்தில் ஒரே ஜாதியில் திருமணம் செய்த ஜோடிகளை, திருமணம் முடிந்து மூன்றே நாளில் கொலை செய்த சம்பவம் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ஒரே மதமாக இருந்தால் ஜாதியைப் பார்த்து‌க் கொலை செய்வதும், ஒரே ஜாதியாக இருந்தால் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொலை செய்வதும் அவ்வப்போதைய நிகழ்வுகளாக உள்ளன.

இதுல காமெடி என்னன்னா சங்கிகள், முஸ்லிம் கிறிஸ்த்தவர்களை மதவெறியர்கள்னு சொல்றதுதான்!😂

பதில் 2:

Aravind Sammy இன் தற்குறிப்பு போட்டோ

Aravind Sammy · 

நான் பணி புரியும் வங்கிக் கிளையில் அமீதாபேகம் ரமேஷின் மனைவியாகப் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டு வருகிறார்.

ஷகீரா, வெங்கடேஷின் மனைவியாக அதே போல் வருகிறார்.

யாரும் எதிர்த்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை.

https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

பகுத்தறிவைச் சிதைக்கும் திராவிடக் கட்சிகளும் புத்தி பேதலித்த சித்தராமையாவும்!!!

ட்டுமானப் பணிகளின்போது, பூமியைப் பெண் தெய்வமாக்கிப் பூஜை செய்தார்கள் நம் முன்னோர்கள். சிந்திக்கும் அறிவு போதிய வளர்ச்சி பெற்றிடாத காலம் அது. நெருப்புக் குழம்பும், நீரோட்டமும், பிறவும் உள்ளடங்கிய மண்ணாலான பெரியதொரு உருண்டை இது என்று மெய்ப்பிக்கப்பட்ட இந்த நூற்றாண்டில் இதற்குப் பூஜை செய்து பணியைத் தொடங்குவது முட்டாள்தனம்.

நம்மில் முட்டாள்களே பெரும்பலோர் என்பதால், மிகப் பெரும்பாலான கட்டுமானப் பணிகளைப் பூமி பூஜையுடன்தான் தொடங்குகிறார்கள்.

பகுத்தறிவாளர்களின் வழி வந்தவர்களாகக் கருதப்படும் திராவிடக் கட்சியினரும்[அதிமுக & திமுக] இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, அண்மை நிகழ்வொன்று[சாலைப் பணிக்குப் பூமி பூஜை] உறுதிப்படுத்துகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே திட்டப்பணிக்கு இருதரப்பாரும் பூமி பூஜை செய்திருக்கிறார்கள் என்பது.

தங்களுக்குள் ‘நம்பர் 1’ முட்டாள் யார் என்பதை அறியச் செய்வதற்கான  போட்டியோ இது?!

இம்மாதிரியான, பகுத்தறிவை முடக்கும் ஒரு நிகழ்வு நம் அண்டை மாநிலமான ‘கர்னாடகா’விலும் நிகழ்ந்துள்ளது.

சாமிகளுக்குக் காணிக்கை செலுத்துவது வழக்கமான ஒன்றுதான். கர்னாடகா அரசு, காணிக்கை செலுத்தியதோடு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதாந்தர ஊக்கத்தொகை ரூ2000//[கடந்த தேர்தலில் காங்கிரசை வெற்றிபெறச் செய்ததற்கு] அளிப்பதற்கும் ஆணை பிறப்பித்துள்ளது என்பதே அது.

சாமுண்டி சாமி, மனிதர்களின் போலியான பக்தி, செய்யும் படுமூடத்தனமான சடங்குகள் போன்றவற்றால் சோர்வுக்கு உள்ளாகி, பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுகிறாரோ? அம்மனை உற்சாகப்படுத்த இந்த ஊக்கத்தொகையோ?!

மற்றச் சாமிகளெல்லாம் கோபித்துக்கொள்ளுமே! அவைகளுக்கும் ஊக்கத் தொகை அளிக்குமா கர்னாடக அரசு?

உலகெங்கிலும் நடந்திராத அதிசய நிகழ்வு இது.

நிகழ்த்தியவர்[அமைச்சர் சிவக்குமாரின் தூண்டுதல்?] 100% தூய பகுத்தறிவாளர் என்று நம்பப்பட்ட கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.



வியாழன், 23 நவம்பர், 2023

‘தி.மு.க.’ ஏன் தோற்கவேண்டும்?[பகிர்வு]

 “தி.மு.க ஏன் தோற்க வேண்டும்?” என்பது ‘கோரா’[Quora]வில் கேட்கப்பட்ட கேள்வி[ta.quora.com]

புதன், 22 நவம்பர், 2023

“மதம் பரப்புவது அப்புறம்! ஏழை இஸ்லாமியரின் உயிர் காப்பது இப்போது அவசரம்!!

‘ஏமன் நாட்டில், அறக்கட்டளை ஒன்று நடத்திய நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் -இது செய்தி. 

அரேபியத் தீபகற்பத்தில் ஏழை நாடாக இருப்பது ஏமன். இது ஒரு முஸ்லிம் நாடு.

ஒரு சாதாரண நிதியுதவி வழங்கும் விழாவில், இத்தனை உயிரிழப்பும்[85], படுகாயமடைதலும் நிகழ்ந்துள்ளது என்றால், இந்த நாட்டில் எந்த அளவுக்கு ஏழ்மை கோரத் தாண்டவம் ஆடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


மேலும், ஹவுதிக் கிளர்ச்சிக் கும்பல்[மதம் பரப்பும் வெறியர் கூட்டம்] இங்கே திருவிளையாடல் நிகழ்த்துகிறது. இந்தக் கும்பல் வானை நோக்கி துப்பாக்கியால் சுடவே, அஞ்சிய பொதுமக்கள் சிதறி ஓடினர்.


ஏமன் ஏழ்மை மிகுந்த முஸ்லிம் நாடுகளில் ஒன்று[’5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுரக் கிலோ மீட்டரில் 109 நபர்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்’ -https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

ஹவுதிக் கிளர்ச்சியாளருக்கும், காசாவில் 1200[1500?] இஸ்ரேலியரைக் கொன்று, இஸ்லாமியர்-இஸ்ரேலியர் போருக்கு வித்திட்ட[இஸ்ரேலியருக்கு இணையான ஆயுத பலம் இல்லாத நிலையில், பிரச்சினைகள் இருந்தால் அவற்றிற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது புத்திசாலித்தனம்] ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும், இன்ன பிற தீவிரவாதக் குழுவினருக்கும்[சிறு பட்டியல் கீழே] ஏமனில் இத்தனைக் கொடூரமான வறுமையால் மக்கள் வாடி வதைபடுவது தெரியாதா?

தெரியும்தான்.

தெரிந்தே தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு உதவ மறந்து, தங்களின் முழு பலத்தையும் உலகெங்கும் இஸ்லாம் மதம் பரப்புவதற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் அவர்கள்[இசுலாமியத் தீவிரவாதம்(Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகின்றன. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகளையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீபப் காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும், பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது, அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர்.[1][2] இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன.[3][4]

இத்தீவிரவாதம் இந்தியாபாக்கித்தான்ஆப்கானித்தான்நைஜீரியாசோமாலியாசூடான்ஆஸ்திரேலியாமத்தியக் கிழக்கு ஐரோப்பாதென்கிழக்கு ஆசியாதெற்கு ஆசியாசீனாகாக்கேசியாவட அமெரிக்காமியான்மர்பிலிப்பீன்சு, பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இடம்பெற்றுள்ளது.

இவர்களும் இவர்களைப் போன்ற தீவிரவாத இயக்கத்தினரும் நம் அனுதாபத்திற்கு உரியவர்கள்!

இஸ்லாமியர் சிந்தனைக்கு:

ஐஎஸ்ஐ, ஹமாஸ், ஹிஸ்புல்லா, தாலிபான், லஸ்கர் இ தொய்பா, அல் காயிதா, அல் சபாப், அல் உம்மா, அல்-ஜிகாத், ஜெய்ஸ்-இ-முகமது, சிமி முதலியன போல, பிற மதங்களில் தீவிரவாதக் குழுக்கள் உள்ளனவா? 

                                     *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/international/yemen-85-killed-322-injured-in-stampede-during-charity-event-508041.html?story=2