சனி, 9 ஆகஸ்ட், 2025

இதய நோய்க்கான, தோலில் தோன்றும் ஐந்து அறிகுறிகள்.

எச்சரிக்கை!

இது விழிப்புணர்வூட்டுவதற்கான பதிவு மட்டுமே. மொழியாக்கத்தில் சில பிழைகள் நேர்ந்திருக்கவும்கூடும் என்பது அறியத்தக்கது.

*   *   *   *   *

நீர்வீக்கம்[எடிமா]இது உடலின் திசுக்களில் திரவம் உருவாவதால் ஏற்படுகிறது. பொதுவாக கால்கள் அல்லது கைகளில் உருவாகிற இது 'நீர்வீக்கம்' என்று அழைக்கப்படுகிறது. இதயம் இரத்தத்தைத் திறம்படப் ‘பம்ப்’ செய்ய இயலாமல் பலவீனமடைவதையும், சுற்றியுள்ள திசுக்களில் திரவம் கசிவதையும் குறிக்கலாம்.

*   *   *   *   *

தோலில் மஞ்சள் & ஆரஞ்சு நிறப் புடைப்புகள்:  இவை கெட்ட கொழுப்பின் அளவு(LDL) அதிகரிப்பதன் காரணமாகத் தமனிகள் குறுகிவிட்டதன் அற்குறியாகும். இதனால்  மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

                                                                         *   *   *   *   *

கை விரல்கள் & கால் விரல்களில் வலிமிகுந்த கட்டிகள்: இவை இதய வால்வுகளில் ‘பாக்டீரியா’ தொற்று ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

                                                                      *   *   *   *   *

நகங்களில் சிவப்பு அல்லது ஊதா கோடு: இதன் மூலம் இரத்த நாளங்கள் சுருங்கிப்போய் தோலுக்கான  இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

                                                                   *   *   *   *   *

தோலில் நீலம் அல்லது ஊதா நிறம்: இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையை இது காட்டுகிறது. 

                                                                     *   *   *   *   *

***தகவல்கள், ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி அசோசியேஷன்’ என்ற நம்பகமான சுகாதார வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டவை ஆகும். 

குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ சில/பலவோ உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.