எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 27 நவம்பர், 2022

எங்கும் பசியும் பட்டினியும்! அழிவின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தான் மீளுமா?!?!

கீழ்க்காண்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான ‘பிபிசி’[https://www.bbc.com/tamil/articles/c1verg14v5go] செய்தி.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு வெளிநாட்டு நிதியுதவி முடக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள்; கடும் பஞ்ச காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் உடல் உறுப்புகளை விற்று வறுமையைச் சமாளித்துத் தங்கள் பிள்ளைகளை உயிர் பிழைத்திருக்க வைத்திருப்பதாகக் கூறுபவர்களும் அங்கு உள்ளார்கள்.


“எங்களுக்கு உணவு இல்லை. எங்கள் குழந்தைகள் தூங்கவில்லை, அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் மருந்தகத்திற்குச் சென்று, மயக்கமாக உணர வைக்கும் மாத்திரைகளை வாங்கி எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் தூங்குகிறார்கள்” என்று மக்களில் பலரும் சொல்லும் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் வறுமைப் பேய் தலைவிரித்தாடுகிறது.

 

தொடர்ந்து நடைபெற்ற போராலும், இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சிறிய மண் வீடுகளில் வசிக்கிறார்கள்.

 

”ஓர் உள்ளூர் மருந்தகத்தில் 10 ஆப்கனிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 9.22 ரூபாய்) அல்லது ஒரு துண்டு ரொட்டியின் விலையில் ஐந்து மாத்திரைகளை வாங்க முடிகிறது” என்று மக்கள் சொல்வதிலிருந்து, பசியின் பிடியிலிருந்து  மீள வழியில்லாமல் செத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை உணர முடியும்.


ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான ரீதியிலான ஒரு “பேரழிவு” இப்போது நிகழ்வதாக ஐநா கூறியுள்ளது.

 

“ஒரு நாள் இரவு சாப்பிட்டால் அடுத்த நாள் சாப்பிட முடியாது. என் சிறுநீரகத்தை விற்ற பிறகு நான் பாதி ஆளாக உணர்கிறேன். எனக்கிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. வாழ்க்கை இப்படியே தொடர்ந்தால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது” என்கிறார் அந்நாட்டுக் குடிமகன் ஒருவர்.

 

”எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் மகள்களை அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுத் தினமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். எங்கள் நிலைமையை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் இப்படி வாழ்வதைவிட இறப்பதே மேல் எனத் தோன்றுகிறது” என்கிறார் மற்றொருவர்.


தாலிபன் அரசாங்கத்தாலும் சர்வதேச சமூகத்தாலும் தாங்கள் கைவிடப்பட்டதாகவும், தங்களின் கண்ணியமான வாழ்க்கையைப் பசி உடைத்துவிட்டதாகவும் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.


இன்னும் பல சோகச் செய்திகளின் தொகுப்பான ‘பிபிசி’ கட்டுரை கீழ்க்காணும் வகையில் முடிவடைகிறது.


‘பட்டினி ஓர் அமைதியான கொலையாளி. அதன் விளைவுகள் எப்போதும் உடனடியாகத் தெரிவதில்லை. உலகின் கவனத்திலிருந்து விலகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உண்மையான அளவு வெளிச்சத்திற்கு வராமலேகூடப் போகலாம். ஏனென்றால், யாரும் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.’

 ஆப்கானிஸ்தான்

===========================================================================

*****கட்டுரை சுருக்கப்பட்டு, ‘கருத்துத் திரிபு’ ஏற்படாத வகையில் அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணழகைப் புகழ்ந்த ‘போக’ சாமியாரும், எதிர்த்துப் போராடும் பெண்களும்!!!

‘‘பெண்கள் புடவை, சல்வார் என எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை அவர்கள் எந்த ஆடையும் அணியாமல் இருந்தாலும் அவர்கள் அழகிகள்தான்’’ என்று பாபா ராம்தேவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று முன்தினம் நடந்த இலவச யோகா நிகழ்ச்சியில் பேசினாராம்.

‘இது தொடர்பாகத் திருப்பதி கிழக்குக் காவல் நிலையத்தில் அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்றுப் புகார் அளித்திருக்கிறார்கள்; ராம்தேவ் பாபா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களை இழிவுபடுத்தி இதுபோல் பேசுவது சாமியார்களுக்கு சகஜம் ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் எதைப் பேசினாலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ -இது செய்தி[https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817672].

பெண்களைக் கொச்சைப்படுத்திய குற்றத்திற்காகப் பாபா சாமியாரைக் கைது செய்ய வேண்டும் என்று அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் போராடுகிறார்களாம்.

இந்தப் போராட்டம் தேவையற்றது.

‘போக’ சாமியார் பாபா[ராம்தேவ்] பல பெண்களை நிர்வாணமாகப் பார்த்து ரசித்திருக்கிறார். அந்த அனுபவத்தைத்தான் மக்களிடையே பகிர்ந்திருக்கிறார்.

பெண்கள், குளியலறையிலும் அந்தரங்க உறவின்போது பஞ்சணையிலும் ஆடையில்லாமல் காட்சியளிக்கிறார்கள். அதை எப்படியோ பார்த்து ரசித்திருக்கிறார் பாபா ராம்தேவ்ஜி. பார்த்ததைப் பொதுவிடத்தில் வர்ணித்திருக்கிறார்.

இதிலென்ன தவறு?

ஆடையுடனும் சரி, ஆடை இல்லாமலும் சரி எந்தவொரு நிலையிலும் பெண்கள் அழகிகள்தான். தாடிச் சாமியார் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

முன்னொரு காலத்தில், பெண்களென்ன ஆண்களும் அம்மணமாகத் திரிந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுதல் கூடாது.

மேலும், பெண்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தை, நிபந்தனை ஏதும் விதிக்காமல் உடனடியாகக் கைவிடுதல் வேண்டும்.

ஆனாலும், அவர்களின் போராட்டத்தைத்தான் எதிர்க்கிறோமே தவிர, ‘எதிர்வினை’ ஆற்றுவதை வரவேற்கவே செய்கிறோம்.

பாபா ராம்தேவ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போதெல்லாம், அவரை இவர்கள் பின்தொடரலாம்.

அவரை முன்னிலைப்படுத்தி, “ஆடை உடுத்திய நிலையில் எல்லா ஆண்களும் ஆண்மை மிக்கவர்கள்தான். ஆடை உடுத்தாத நிலையிலும் அவர்கள் ஆண்மை நிறைந்தவர்களே. அதற்குப் பாபா ராம்தேவ் அவர்களே ஒரு உதாரணம்” என்று ஓங்கிய குரலில் முழங்கி, அவர் உடுத்திருக்கும் ஆடைகளை உருவி எறிந்து அவரை முழு நிர்வாணம் ஆக்கிக் காண்போருக்குக் காட்சிப்படுத்தலாம்!

இப்படி எதிர்வினை ஆற்றினால், மேலிட ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று கொட்டமடிக்கும் போலிச் சாமியார்களின் திமிர் அடங்கும்; பெண்களைக் கண்டாலே அவர்கள் ஓடி ஒளியும் நிலை உருவாகும்!

==========================================================================