எனது படம்
ஆண்களோ பெண்களோ அவர்களைக் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறி பிறழாமல் வாழச் செய்வது ஓரளவுக்கே சாத்தியம். வாழ்தல் குறித்த அனுபவ அறிவும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கான தீவிர முயற்சியும், பிரச்சினை எதுவாயினும் அது குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் அதற்கான இன்றியமையாத் தேவைகள் ஆகும்.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

'ஆண் - பெண்’ சமத்துவம்... அந்த நாளும் வருமா?![+மிக முக்கியக் காணொலி> கீழே]

ரிரு நாட்களுக்கு முன்பு, உலகம் போற்றும் குரங்குக் கடவுளால்[ஆஞ்சநேயர்] பிரபலமான எங்கள் ஊரில் உள்ள, கண்ட கண்ட சுவர்களில் எல்லாம் மேற்கண்ட விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. வம்புதும்புகளில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க[ஹி... ஹி... ஹி!!!], சம்பந்தப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் சொற்றொடர்களை[+ தேவையற்ற கூடுதல் விவரங்கள்] நீக்கியுள்ளேன்.

இது ஆண்களுக்கான[+2ஆம் திருமணம்] விளம்பரம்.

கணவரை இழந்த பெண்கள் தங்களின் இரண்டாம் திருமணத்திற்காக ‘ஆண்கள் தேவை’ என்று விளம்பரம் செய்யும் நாளும் வருமா?[அந்த நாள்தானே, ஆண்களுக்கு நிகரான ‘சமத்துவத்தை’ப் பெண்கள் முழுமையாகப் பெற்றிடும் நாளாக இருக்கமுடியும்?]

வந்தால்.....

நாடெங்கும் கீழ்க்காண்பது போன்ற விளம்பரங்கள் தென்படக்கூடும்.