கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருக்கிறான்ர்[ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளர் சாய் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்].
[துணை சபாநாயகர் எம். ரவிசங்கர், இவருடைய துறையூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவர், குடிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பியதைத் தொடர்ந்து அவரைத் தாக்கியிருக்கிறார்].
இந்நிலையில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்[மாமல்லபுரம் கூட்டத்தில்] முதல்வர் ஜோசப் என்பது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி.
மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் அவரும் ஒரு பெண். ஒரு பெண் தனக்குத்தானே இது போன்ற அசிங்கச் செய்தியை இட்டுக்கட்டிப் பரப்பி, தன் பெயருக்குக் களங்கம் ஊண்டுபண்ணமாட்டார் என்பதைப் பாமரர்கள்கூட அறிவார்கள்.
மெத்தப் படித்தவரும், பிரபல நடிகரும் மாநில முதலமைச்சருமான ஜோசப் அறியமாட்டாரா?
அப்புறம் ஏன், தறுதலை எம்.எல்.ஏ.[எத்தனைப் பெண்களைச் சீரழித்தானோரோ]வைக் கைது செய்து ‘உள்ளே தள்ளுவது’ போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஒப்புக்கு எச்சரிக்கை விடுக்கிறார்?
இவன்ர் மீதும் இவனைரைப் போன்ற காலிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால், பெரும்பான்மை இழந்து தன் ஆட்சி கவிழும் என்பதைத் தெள்ளத் தெளிவாக ஜோசப் அறிந்திருக்கிறார்.
இப்படியொருவர் நமக்கு முதல்வராக வாய்த்திருப்பது நாம் பெற்ற பெரும்பேறு!
கொசுறுச் செய்தி:
//தீபாவளியை முன்னிட்டு, விஜய் ஆண் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பட்டு வேட்டிகளையும், பெண் உறுப்பினர்களுக்குப் பட்டுச் சேலைகளையும் வழங்கினார்//.
உறுப்பினர்கள் எல்லோரும் பரம ஏழைகள். பட்டு வேட்டி & பட்டுச் சேலைகளைப் பார்த்தறியாதவர்கள்!