நடிகர் ஜோசப் வழிபடும் சாமி[கடவுள்]ஆனார்; ஆக்கியவர்கள் கோவைக் குமரிகள்[+ஓரிரு குமரன்கள்]; மாதர்குல மாணிக்கங்கள்.
‘ஜோசப் சாமி வந்துபோனதும் கோவையில் மழை கொட்டோகொட்டுன்னு கொட்டிச்சாம்’[இதற்கு முன்பு கனமழையே பெய்ததில்லையா?] -சொல்கிறவர்கள் பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் கோவை மாநகரப் புனிதையர்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் முதல் தடவை பார்த்தது போலவே, அத்தனை ஆணழகனாக நெஞ்சைக் கொள்ளைகொள்கிறாராம் ஜோசப் சாமி.
இந்தக் கொஞ்சும் குமரிகள் எங்கெல்லாம் இந்தக் கட்டழகனாம் கடவுளைப் பார்த்தார்கள்? எத்தனை முறை பார்த்தார்கள்? நேரிலா திரைப்படங்களிலா?
கனவில் மட்டுமா பகல் கனவுகளிலுமா?
இன்னும் எத்தனை முறை பார்த்துப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதப்படுவார்கள்?
அனைத்திற்கும் பட்டியல் போட்டு விளக்கவுரையும் தந்தால், வருங்காலக் குமரிகளும்[இப்போது குழந்தைகளாக இருப்பவர்கள்] ஜோசப் சாமியைத் தேடிச்சென்று கண்ணாரக் கண்டு கண்டு கண்டு களிப்பெய்துவார்கள்.
ஜோசப் பகவானைப் பகல் இரவு பாராமல் நினைத்து நினைத்து நினைத்து, நெஞ்சு சிலிர்க்கும் பொம்மணாட்டிகள் உள்ளவரை, இவரிடம் பெறும் கூலிக்கு வஞ்சனையில்லாமல் சேவை செய்யும் ஊடகன்கள் இருக்கும்வரை இந்தச் சாமி[ஜோசப்]தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்[கற்பாறைகளில் எழுதிவைக்கலாம்].
ஸ்டாலின், எடப்பாடி, தினகரன், சீமான் என்று எத்தனைப் பெரிய அரசியல் ஜாம்பவான்கள் இணைந்து செயல்பட்டாலும், ஜோசப்பின் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது!
சாமி சரணம்! ஜோசப் சாமியே சரணம்!!