கோவைக்கு வருவது ‘பெரியார் அறிவுலகம்’ கட்டடத்தைத் திறக்க என்றால், அதைத் திறந்து வைப்பது மட்டும்தான் முதல்வனின் வேலை[நலம் பயக்கும் திட்டங்கள் இருந்தால் அவற்றைச் செயல்படுத்தலாம்]. ‘ரோடு ஷோ’ என்னும் பெயரில் பாதுகாவலர்களை, ‘வேட்டை நாய்கள்’[அவர்கள் மனிதர்களா ஐந்தறிவு மிருகங்களா?]போல முன்னே ஓடவிட்டு[வாகனங்களைப் பயன்படுத்தலாம்; வேடிக்கை பார்ப்பவர்கள் ஜோசப்பை ‘அலேக்’ செய்யமாட்டார்கள்], கையசைப்பது, அரவணைப்பது போல் இரு கைகளையும் அகல விரிப்பது, முத்தம் கொடுப்பது, காதல் சின்னம் காட்டுவது எல்லாம் எதற்கு?
‘ரோடு ஷோ’ நடத்தியே ஆட்சியைக் கைப்பற்றிய ஜோசப், அவ்வப்போது கவர்ச்சி நடிகனாகப் ‘பந்தா’ காட்டாவிட்டால், கூமுட்டைக் கூட்டத்தாரின் ஆதரவை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறாரோ?