இது பழங்கஞ்சி! ‘புதுசு புதுசா’ தேடுபவர்களுக்கு[கதைகளைச் சொன்னேன்]ப் பிடிக்குமா? ஒரே ஒரு முறை ருசித்துப் பார்க்கலாம்!
“உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”
“உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”
-கம்பெனி வேலையாக இரண்டு நாள் வெளியூர்ப் பயணம் போய்விட்டுத் திரும்பிய கணேசனிடம் அவன் மனைவி சவீதா சொன்னாள்.
“என்ன விஷயம்னு கேட்டியா?”
“கேட்கல.” -சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் புகுந்தாள் சவீதா.
‘எதற்கு வந்தான் சேது? டியூட்டி நேரத்திலும் போதையில் மிதப்பவன். டிஸ்மிஸ் செய்வதாகப் பல தடவை மேனேஜர் எச்சரித்திருந்தார். செய்துவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்டான் கணேசன். தான் மேலாளருக்கு நெருக்கமானவன் என்பதால் சிபாரிசுக்காக வந்திருப்பான் என்றும் நினைத்தான்.
வாழ வேண்டிய வயதில் குடித்துக் கெட்டவன் சேது. குறையக் குறையக் குடித்துவிட்டு நடைபாதையில் விழுந்து கிடப்பான். நான்கைந்து தடவை ஆட்டோ பிடித்து அவனை வீடு சேர்த்திருக்கிறான் கணேசன்.
சேது மீண்டும் வந்தான். நடையில் தள்ளாட்டம்.
“வாப்பா சேது. ஏற்கனவே வந்துட்டுப் போனியாமே. என்ன விஷயம்?” என்றான் கணேசன்.
“ஒரு முக்கியமான விஷயம்.....”
“சொல்லுப்பா.”
“குடிச்சிட்டுத் தெருவில் கிடக்கிற என்னை அடிக்கடி நீதான் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்குறே. ......” -நா குழற, தெளிவற்ற வார்த்தைகளை உதிர்த்தான் சேது.
தொடர்ந்தான்: “இதோ பாரு சார், நான் குடிச்சிட்டு நடைபாதையில் கிடப்பேன்; நடுத் தெருவிலும் கிடப்பேன். உனக்கு எதுக்கு இந்த வேலை?”
சேதுவின் கேள்வி, கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”ஒரு உதவிதானேப்பா” என்றான்.
“எனக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு இனியும் என் வீடு தேடி வர்ற வேலையை உட்டுடு. ஆளு அம்சமா இருக்கே. கையில் தாராளமா காசு புரளுது. வெகு சுளுவா நீ என் பெண்டாட்டியைக் கணக்குப் பண்ணிடுவே. என்ன...சொன்னது புரிஞ்சுதா?” என்றான் சேது.
சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே புறப்பட்டுப் போனான்.
புன்னகை படர்ந்த முகத்துடன் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.
“அவன் உங்களை அவமானப் படுத்திட்டுப் போறான். கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கீங்களே?” -சவீதா கேட்டாள்.
“சிரிக்காம என்ன செய்யுறது? அவன் பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போயி ஆறு மாசம் போல ஆகுது. அதை மறந்துட்டு, போதையில் இப்படி உளறிட்டுப் போறான்” என்றான் கணேசன்.
=====================================================================
முன்னொரு காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ன்னு ஒரு வார இதழ் வந்திட்டிருந்துதே நினைவிருக்குங்களா? அதுல[23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது இந்தக் கதை. கதாசிரியர்?
முன்னொரு காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ன்னு ஒரு வார இதழ் வந்திட்டிருந்துதே நினைவிருக்குங்களா? அதுல[23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது இந்தக் கதை. கதாசிரியர்?
வேறு யார்? உங்கள் ‘பசி’பரமசிவம்தான்!
ஆறு மாசத்துக்கு முன்னாலயே மனைவி ஓடிப்போயி்ட்டது தெரி(ளி)யாம உளருது குடிகார மட்டை... ம்ம்ம்... என்னத்தை சொல்ல தமிழ் நாட்டின் சாபக்கேடு,
பதிலளிநீக்குஇப்படியான மட்டைகள் நிறையவே இருக்குதானே?!
நீக்குநன்றி நண்பரே.
சரக்கு இப்படித்தான் வேலை செய்யும்...
பதிலளிநீக்குஇன்னும் எப்படியெல்லாமோ செய்யும்!
நீக்குநன்றி தனபாலன்.
ஓடிப் போனது சரிதான் :)
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதும் ரொம்பச் சரியே.
நீக்குநன்றி பகவான்ஜி.
//Bagawanjee KAJun 24, 2017, 7:22:00 PM
நீக்குஓடிப் போனது சரிதான் :)//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).
ஆகா, சரக்கு இப்படியும் வேலை செய்யுமா
பதிலளிநீக்குஅரசாங்கச் சரக்கல்லவோ!
நீக்குநன்றி ஜெயக்குமார்.
தமிழ்நாட்டோட தலைவிதி
பதிலளிநீக்குவிதி விளையாடுகிறதோ!
நீக்குநன்றி ராஜி.
இப்படியே குடிச்சிட்டு நடுரோட்டில கிடந்தா ஓடிப்போகாம என்ன பண்ணுவாங்க..? ’இதயம் பேசுகிறது’ இதழில் வந்ததா? அடடே..!!
பதிலளிநீக்கு23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது.
நீக்குநன்றி றஜீவன்.
ippadi innaattil ethanaiyo? yaaraivaar?
நீக்குஅத்தனையும் அழிந்தொழிவது எப்போது?!
நீக்குநன்றி நண்பர் சுவாமி.
ஹா ஹா ஹா அருமையான கதை.. படிச்சதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. உண்மையில் குடிகாரர்களிடம்தான் அதிக நகைச்சுவை இருக்கிறது..
பதிலளிநீக்குகுடி போதையிலும் மனைவியை யாரும் கடத்திடக்குடாது எனும் தெளிவோடயே இருக்கிறார் பாருங்கோ ஹா ஹா ஹா:).
மனைவி 6 மாதம் முன் போய் விட்டாலும், அவர் மனதில் இன்னமும் வீட்டில்தான் இருக்கிறா:)
நீக்குஇவர் மனைவி மீது கொண்டிருந்த பாசத்தை அவர் புரிந்துகொள்ளவில்லையோ!!
நீக்குஒரு குடிகாரர், தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து, திறப்பை போட்டு திறக்க, நீண்ட நேரம் ட்ரை பண்றார் முடியல்ல...
பதிலளிநீக்குபக்கத்து வீட்டுக்காரர் வந்து கேட்கிறார்.. நீங்க கொஞ்சம் குழம்பிப்போய் இருக்கிறீங்க, வேணுமெண்டால் நான் திறந்து விடட்டா?
அதுக்கு குடித்தவர் சொல்றார்ர்.. நான் ஸ்ரெடியாத்தன் இருக்கிறேன், ஆனா இந்த வீடுதான் ஆடுது, கொஞ்சம் வீட்டைப் பிடிச்சுக்கொள்ளுங்கோ.. நான் திறந்திடுவேன்:)
ஹா...ஹா...ஹா!
நீக்குரசித்தேன்...ரசித்தேன். மறக்கவே முடியாத நகைச்சுவை!
நன்றி அதிரா.