பெரியாரின் இறந்த நாள் 24.12.1973. அதற்கு 4 நாட்கள் முன்பு[19.12.1973] அவரால் மேடை ஏறிப்[சென்னை தியாகராயநகர் பொதுக்கூட்டம்] பேச முடிந்தது. மரண பயம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
தியாகராயநகர் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டதா என்பதை அறிய இயலவில்லை.
தியாகராயநகர் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டதா என்பதை அறிய இயலவில்லை.
அதே ஆண்டில் 04.11.1973ஆம் நாள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில், அவரின் 95ஆவது பிறந்த நாள் விழாவில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி.....
#எனக்கு இன்று புத்திச் சுவாதீனம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். எல்லாம் மறந்துபோயிற்று. என்ன பேசவேண்டும் என்று இருந்தேனோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை. ஏனென்றால், இரண்டு நாளாய்ப் பட்டினி கிடந்தேன். நேற்றுக் காலையில்தான் ஒரு கப் கஞ்சி குடித்தேன். ராத்திரி 9 மணிக்கு ஒரு தடவை கஞ்சி.
முந்தா நாள் இரவு ஒன்றும் இல்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. இன்றைக்குக் காலையில் ஒரு இட்லி மட்டும் கொடுத்தார்கள். இன்னொரு இட்லி கொடு என்றேன். வீட்டில் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாசமாய்ப் போகட்டும்னு வந்துட்டேன்.
இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் உங்களுடன் பேசுவதற்கு உயிருடன் இருப்பேனா என்று சந்தேகமா இருக்கிறது[தகவல் உதவி: திருமழபாடி நண்பர், மறைந்த டாக்டர் அ. ஆறுமுகம் அவர்கள்]#
மரணத்தை தழுவவிருந்த அந்த இறுதி நாட்களில், மக்களுக்காகப் பேசினார் பெரியார்; அவர்களுக்காகக் கவலைப்பட்டார்.
நாம் யாருக்காகக் கவலைப்படப் போகிறோம்? நமக்காகவா, நம் உற்றார் உறவினர்களுக்காகவா, மக்களுக்காகவா?
யாருக்காக?!