எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 13 ஜூன், 2025

‘மூடநம்பிக்கை’ ஒரு முட்டாளைக் கைவிட்டது; இன்னொரு முட்டாளின் உயிர் பறித்தது!

விஜய் ரூபானி[குஜராத்தின் முன்னாள் முதல்வர்] '1206' என்ற எண்ணைத் தன் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதினார். அவருக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்திருந்தார். 

இந்த மூடநம்பிக்கையாளன், 12.06.2025[அதிர்ஷ்ட எண்]இல் பதிவு செய்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளாக[அகமதாபாத்] மரணத்தைத் தழுவினார்[https://www.dailythanthi.com].

‘அதிர்ஷ்ட எண்’ மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த நாளில்[12.06.2025] இந்த விமானத்தில் இவர் பயணம் செய்ததும்[வேறொரு நாளில் பயணம் மேற்கொண்டிருந்திருப்பார்] உயிரிழந்ததும் நிகழ்ந்திருக்காது.

* * * * *

அர்ஜூன் பட்டோலியா(38) குஜராத்திலுள்ள அம்ரேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். கடந்த மே மாதம் 26ஆம் தேதி உயிரிழந்த தன் மனைவி ‘பாரதிபென்’னின் சாம்பலை[அஸ்தி]க் கரைப்பதற்கு இந்தியா வந்தவர், லண்டன் செல்ல, விபத்துக்குள்ளான விமானத்தில்[அகமதாபாத்] பயணித்தபோது உயிரிழந்தார்.

‘இறந்தவரின் சாம்பலைப் புனித நீரில் கரைத்தல்’ என்னும் அடிமுட்டாள்தனத்திற்கு அடிமை ஆகாமல் இருந்திருந்தால் இன்றளவும் அர்ஜுன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

[இவ்விருவர் உட்பட உலகிலுள்ள அத்தனை மூடநம்பிக்கையாளர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்].

https://www.dailythanthi.com]/news/india/plane-crash-former-chief-ministers-lucky-number-1206-tragedy-turns-into-final-travel-date-1162922.

https://www.puthiyathalaimurai.com/india/husband-dies-in-plane-crash-after-coming-to-cremate-wifes-ashes

சூரியன் ஒரு நிமிடம் அணைந்தால்[அச்சுறுத்தும் அறிவியல்]?!

சூரியன் திடீரென அதன் ஒளிர்வை[வெப்பம்] இழந்தால், பூமியில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதற்குக் கணிசமான நேரம் எடுக்கும்.

சூரியனிலிருந்து ஒளி பூமியை அடைய 8½ நிமிடங்கள் ஆகும் என்பதால், 8½ நிமிடங்கள்வரை அதன் விளைவுகள் நமக்குத் தெரியாது. அதே சமயம், நமது கிரகம் வெப்பத்தை நன்றாகத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதால் நாம் உடனடியாக உறைந்து இறந்துவிடமாட்டோம்.

முதல் ஒரு மணிநேரம்:

கணிசமான சேதம் எதுவும் இல்லை. கோளின் இருண்ட பக்கத்தில் சூரியனின் கதிர்களைப் பிரதிபலிக்கும் சந்திரனும் இருட்டாகிவிடும்.

முதல் 12 மணி நேரம்:

இந்தக் கோளில் வழக்கப்போல் உயிரினங்கள் இறந்துகொண்டிருக்கும். பெரிய அளவிலான மாற்றங்கள்[உயிரின இறப்பை] நிகழா.

முதல் வாரம்:

பெரும்பாலான சிறிய தாவரங்கள் இறந்துவிடும், முதல் வாரத்திற்குப் பிறகு பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 32 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறைவதை நாம் அறியலாம்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு:

ஒளிச்சேர்க்கை நின்றுவிடும். என்னினும், மேலும் பல பெரிய மரங்கள் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் பல தசாப்தங்களாக உயிர்வாழ்கின்றன என்பது அறியற்பாலது. சில மாதங்களுக்குள், கடலின் மேற்பரப்பு உறைந்துவிடும். ஆனால், கடல்கள் திடமாக உறைவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், சில சிறிய கடல் உயிரினங்கள் புவிவெப்பத் துவாரங்களிலிருந்து வெளிப்படும் வெப்பத்தில் உயிர்வாழக்கூடும்.

சில பத்தாண்டுகளுக்குப் பிறகு:

பெரும்பாலான மனிதர்கள் அழிவார்கள். உயிர் பிழைத்த சிலர் பூமியின் மையத்திற்கு அருகில் இடம்பெயர்ந்து, செயற்கை நகரங்களில் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி வாழ வேண்டியிருக்கும்.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு:

வெப்பநிலை -400 ‘ஃபாரன்ஹீட்’வரை குறையும். வளிமண்டலம் சரிந்து, கதிர்வீச்சு உள்ளே ஊடுருவி, பூமி வளம் குன்றி, தரிசு நிலமாக மாறும். மேலும், கடல்களுக்கு அடியில் உள்ள பாக்டீரியாக்கள் மட்டுமே வாழும் உயிரினங்களாக இருக்கும்.

இறுதியாக, பூமி இப்படித்தான் இருக்கும்.


நன்றி: அன்வேஷ் நாகா[அமெச்சூர் வானியல் பார்வையாளர் ]