செவ்வாய், 30 ஏப்ரல், 2024

விஜயகாந்துக்கு விருது! பாவம் ‘பாஜக’!!

‘விஜயகாந்திற்கு மே 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது’ -பிரேமலதா அறிவிப்பு[மாலைமலர்].

ஒரு நடிகராகவோ, கட்சித் தலைவராகவோ விருது[ஏதோ ஒரு பூஷன்] பெறும் அளவுக்கு வி.காந்த் தகுதி உள்ளவரா என்பதல்ல, அவர் உயிரோடு இல்லாத நிலையில் இதை வழங்குவது தேவையா என்பதே நம் கேள்வி.

விஜயகாந்த் என்றில்லை, வேறு எந்தவொரு பிரபலமானவராயினும் செத்தொழிந்த பிறகு(விருதுக்குத் தகுதி பெற்ற சிலரோ பலரோ உயிருடன் இருக்க) இதை வழங்குவது அர்த்தமற்ற செயல் ஆகும்.

சாதனை நிகழ்த்தியவருக்கு அவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மட்டுமே, அத்துறையில் அவர் மேலும் மேலும் சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.

ஒருவேளை.....

தேர்தலுக்கு[தமிழ்நாடு] முன்பே ‘பாஜக’ அரசு இந்த அறிவிப்பைச் செய்திருந்தால்.....

தமிழ்நாட்டில் போட்டியிட்ட ‘பாஜக’ வேட்பாளர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் வி.காந்த் ரசிகர்கள் வாக்களித்திருப்பார்கள். அதை அந்த அரசு(பாஜக) செய்யத் தவறிவிட்டது.

பாவம் பாஜக!

ஆனாலும், இந்த அறிவிப்பு, ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காணாமல் போகவிருக்கும்[அரசியலில்] ‘தேமுதிக’ தலைவி பிரேமலதா, “நான் பத்ம பூஷன் விருது பெற்ற விஜயகாந்தின் பெண்டாட்டியாக்கும்” என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் நாட்களுக்கு அந்தக் கட்சியின்[அதன் ஆயுட்காலம்வரை] தலைவியாகக் காலம் தள்ளலாம்.

எது எப்படியோ, இப்படி இறந்துபோனவர்களுக்கு விருதுகள் வழங்கி, புறக்கணிக்கப்படும் சாதனையாளர்களை மனம் புழுங்க வைக்கும் வேண்டாத வழக்கத்துக்கு நடுவணரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்?!

ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமர் ஆன பிறகா?

* * * * *

https://www.maalaimalar.com/news/state/premalatha-vijayakanth-says-padma-vibhushan-to-vijayakanth-on-may-9th-715553?infinitescroll=1

* * * * *

‘பசி’யின் குறுங்காணொலி:

https://youtube.com/shorts/qv1-rWUd-FE?si=835MJhsPl2owvJ7U


திங்கள், 29 ஏப்ரல், 2024

கூட்டுக் குடும்பங்களில் கிழடுகள்[ஆண்] படும்பாடு[நக்கல்&நகைச்சுவை]!!!

இதை என் சொந்தச் ‘சரக்கு’ என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. மனசாட்சி கடுப்படித்ததால் ‘சுட்டது’ என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்![உள்ளது உள்ளபடியே நகலெடுத்துப் பதிவு செய்திருக்கிறேன்.



*   *   *   *   *
***சொந்தச் சரக்கு[யூடியூப்’இல்]:

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

பக்திக்கு விளம்பரம் தேவையா துர்க்கா ஸ்டாலின் அவர்களே?

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் அவர்களின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் அவர்களே,

தங்களுடைய கணவர் ஸ்டாலின் அவர்கள் கடவுள் நம்பிக்கை[தி.மு.க.>‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’] உள்ளவர் என்றாலும்,  கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ட கண்ட சாமிகளைத் தேடிப்போய்க் கும்பிடும் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாதவர்.

நீங்களோ, அவருக்கு நேர்மாறாவனராக இருக்கிறீர்கள்.

நீங்கள் அவ்வப்போது பிரபலமான சாமிகளை மட்டுமல்லாமல், தங்களைக் கடவுளின் அவதாரம் என்று புளுகித் திரியும் ஆசாமிகளையும் தேடிப்போய்த் தரிசனம் செய்கிறீர்கள்[அரிதாக].

இது குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது வழக்கமாக உள்ளது.

கோயில்களுக்குச் செல்வது உங்களின் விருப்பமாக இருப்பினும், உங்களின் இந்தச் செயல்பாடு பகுத்தறிவாளரான உங்களின் கணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் சேர்ப்பதாக உள்ளது[”ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார். குடும்பத்திற்கு அல்ல. இவர் போடுவது பகுத்தறிவு வேடம்” என்று மக்களில் பலரும் பழித்துப் பேசுகிறார்கள்].

அதைத் தவிர்த்திட.....

“இனியேனும் கோயில்களுக்குச் செல்லும்போது, அதை ஊடகக்காரர்கள் புகைப்படம் இணைத்துச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதியுங்கள். உங்களின் பக்தி உங்களுக்கானதாக மட்டுமே இருக்கட்டும்; ஊர் உலகத்திற்குத் தெரிய வேண்டாம்” என்பது என் வேண்டுகோள்!

                               *   *   *   *   *

துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் குறித்த அண்மைச் செய்தி:

‘தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அவர்களுக்குக் கோவில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன’

https://www.dailythanthi.com/News/India/durga-stalin-sami-darshan-at-tirupati-ezhumalaiyan-temple-1103429

                                        
               *   *   *   *   *

சனி, 27 ஏப்ரல், 2024

‘இந்தி’த் திணிப்பிலும் சாதனை நிகழ்த்துவாரா மோடிஜி?!?!

தமிழனாகப் பிறக்கவில்லையே என்று வருந்தி வருந்தி நொந்து நூலாகிப்போன மோடி அவர்களே,

எப்படியெல்லாமோ மட்டுமல்ல, இப்படியும்[கீழ்க்காணும் படம்] தமிழன் மீது திணிக்கப்படுகிறது இந்தி என்பது நீர் அறியாத ரகசியமா என்ன?

நாளெல்லாம் ராம நாமத்தை ஜெபிப்பதையும், முஸ்லிம்களைச் சபிப்பதையுமே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மோடிஜி அவர்களே,

அதென்னய்யா ‘நிதி ஆப்கே நிகத்’[கீழே உள்ள அறிக்கை நகலை வாசிப்பீர்]?

உம்மிடம் உள்ள செயற்கை நுண்னறிவு மொழியாக்கக் கருவியால் இதைத் தமிழாக்கம் செய்ய இயலவில்லையா?

மூத்த மொழியாகிய தமிழின் பெருமையை உலகறியச் செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் உமக்கு, தமிழனுக்குப் புரியாத தலைப்பைக் கொடுத்து, விளம்பரம் செய்து நிகழ்ச்சி நடத்தப்படுவது தெரியாதா?

தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தீர்/இருக்கிறீர் என்றால், இதற்குத்தான் துரோகம் என்று பெயர்; நயவஞ்சகம்[நயமாகப் பேசிக் கெடுப்பது] என்றும் சொல்லலாம்.

ஓட்டுக் கேட்க வரும்போதெல்லாம் வாய்கிழியத் தமிழைப் புகழாமல், இப்படியான துரோகத்தை நீர் செய்திருந்தால், இது இந்தி வெறியர்கள் வழக்கமாகச் செய்யும் அடாவடித்தனம்தான் என்றெண்ணி வருத்தப்படுவதோடு நிறுத்திக்கொண்டிருப்போம்; இந்தவொரு பதிவின் மூலம் ‘துரோகி’ என்று உம்மைச் சாடுவதற்கான அவசியம் நேர்ந்திருக்காது.

மீண்டும் நீர் ஆட்சியைத் தக்க வைப்பீரா அல்லவா என்பது ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 35 நாட்கள் போல் கால அவகாசம் உள்ளது. அதுவரை இது போன்ற செயல்களின் மூலம் இந்தியைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி பேசாத அத்தனை மாநிலங்களிலும் திணி திணி என்று திணிக்கலாம்.

தேர்தல் முடிவு 100% உமக்குச் சாதகமாகவே அமையும். இந்தியாவில் பெரும்பான்மையினராக ‘இந்தி’யர்[மூடநம்பிக்கையாளரும்தான்] உள்ளவரை உம்மை எவரும் அசைக்க முடியாது. இனியும் நீரே பிரதமர். 

திணியும்! இந்தி வெறி தணியும்வரை[என்று தணியும்?] அதைத் திணியும்!! 



படம் உதவி[நன்றி]: https://thamizhanambi.blogspot.com/2024/04/blog-post.html

பதவி இழப்பதற்குள் ‘அந்த’ச் சாதனையை நிகழ்த்துவாரா மோடி?!

நம் நாட்டின் ஜனநாயகத் திருவிழா முடிவு பெறாத நிலையில்.....

தினம் தினம் ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் கணிசமானவை, தேர்தலில் வெற்றி பெற்று, மோடி அரியணையைத் தக்கவைப்பார் என்றே அறிவிக்கின்றன.

எனினும், கணிப்புகளில் பெரும்பாலானவை அவர் படுதோல்வி அடைவார் என்றும் பறைசாற்றுகின்றன.

மோடி தொடர்ந்து இந்த நாட்டின் பிரதமராக நீட்டிப்பாரோ அல்லவோ, அது பற்றிக் கிஞ்சித்தும் நமக்குக் கவலையில்லை.

நாம் வெகுவாகக் கவலைப்படுவது.....

உலகின் மிக மிக மிகப் பெரும்பாலான நாடுகளுக்கு, அரசின் சார்பாக அவர் பயணம் மேற்கொண்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் சில நாடுகளுக்கும் பயணம்[சுற்றுலா எனினும் ஏற்கத்தக்கதே] செய்து, உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்று திரும்பிய ஒரே பிரதமராக வரலாற்றுச் சாதனை நிகழ்த்துவார் என்பது நம் பெரு விருப்பமாக இருந்தது; இருக்கிறது.

அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி முடிப்பதற்குள், தேர்தல் குறுக்கிட்டுவிட்டது என்பது வருந்தத்தக்க நிகழ்வாகும்; முடிவுகள் அறிவிப்பதிலும் காலதாமதம்[ஒன்றரை மாதம். முடிவு தெரியும்வரை நாம் உயிரோடு இருப்போமா என்று நாடெங்கிலும் பல கிழடுகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாய்வுத்துறை அளித்துள்ள தகவல்] ஏற்படலாம்.

இந்நிலையிலும்.....

அந்தவொரு உலக சாதனையை மோடி நிகழ்த்திக்காட்டுதல் வேண்டும் என்பது நம் ஆசை... பேராசை.

அதற்கான வழி?

தேர்தல் முழுமையாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படுவதைக் காலவரையின்றி ஒத்திவைக்கலாம்[தேர்தல் நடத்த ஒன்றரை மாதம் எடுத்துக்கொண்டது போல. தேர்தல் ஆணையம் நினைத்தால், தோல்வி பயத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் சூழ்ச்சி, முஸ்லிம்கள் சதி என்று தள்ளிவைப்புக்கான காரணங்களையும் அடுக்கலாம்]. அந்தக் கால இடைவெளியில், குட்டிக் குட்டி நாடுகள் உட்பட மோடி செல்லாத எஞ்சியுள்ள நாடுகளுக்கும் சென்றுவரலாம்; சாதனையை முழுமை பெறச் செய்யலாம்.

மிக மிகச் சாமானியனான நமது இந்த ஆலோசனையை ஊடகங்கள் பலவும் மோடியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.

வாழ்க மோடி! நிகழ்த்துக உலக சாதனை!!

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அழகர் வர்றாரு! அர்ச்சகர் சாமி கூடவே வர்றாரு!!


ஓ, கூமுட்டைகளே.....

“வர்றாரு... வர்றாரு... அழகர் வர்றாரு” என்பது காணொலித் தலைப்பு.

கள்ளழகர் தானாக நடந்து வரல; மனுசங்க நீங்க சுமந்து வர்றீங்க.

அழகரோடு இன்னொருத்தரும் வர்றாரே, அவரையும் ஏன் சுமக்கிறீங்க மக்களே?

அவர் தரையில் நடந்துவந்து தீபாராதனை காட்டினா அழகர் அங்கீகரிக்கமாட்டாரா?

பல்லக்கில் அவரே ஏறிக்கொண்டாரா, நீங்க ஏத்திவிட்டீங்களா?

அவர் அறிவுஜீவி ஆன்மிகர்; அர்ச்சகர். நீங்க கூமுட்டைகள்; கூடை கூடையாக மூடநம்பிக்கை சுமப்பவர்கள்.

ஆகவே.....

“நானும் சாமி பரம்பரைதான். ஏத்திவிடுங்கடா”ன்னு அவர் சொல்லியிருப்பாரு. ஏத்திவிட்டுட்டீங்க.

அந்தக் கல்லுச் சாமியோடு[சிலை] இந்தக் குண்டுச் சாமியையும் சுமக்கிறீங்க.

சுமந்தாத்தான் புண்ணியம் கிடைக்கும். செத்த பிறகு சொர்க்கலோகம் போகலாம்; சுகபோகத்தில் மிதக்கலாம்.

கூமுட்டைகளா, அலுங்காம குலுங்காம குண்டுச் சாமியைச் சுமந்துட்டுப் போய் அழகர் சாமியோடு வைகையில் குளிப்பாட்டுங்கடா!
                             *   *   *   *   *
குறிப்பு:
சில நாட்களுக்கு முன்பே இப்பதிவு வெளியாகியிருத்தல் வேண்டும். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

வியாழன், 25 ஏப்ரல், 2024

நம்பிக்கைகள்... ஒரு சிறு/குறு ஆராய்ச்சி!

 மூடம் - அறியாமை.

அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும்[Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...]

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயாமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள்[Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote].

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள்[மூடநம்பிக்கைக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!].

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேரோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கமே மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை, அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன[belief, trust, hope என்னும் மூன்றுமே நம்பிக்கை என்னும் பொருள் குறித்தனவே.

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

‘அவநம்பிக்கை, அறிவுபூர்வமான நம்பிக்கை என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம்’ என்கிறார் கவியரசு கண்ணதாசன்

எந்த அடைப்படையில் இப்படிச் சொன்னார் என்பது அறியப்படவில்லை.

‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது.

‘பூனை குறுக்கே வந்ததால்...’ என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

https://kadavulinkadavul.blogspot.com/2024/04/blog-post_25.html



புதன், 24 ஏப்ரல், 2024

மோடி மக்கள் தலைவனல்ல!!

‘காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்னாடகாவில், அனுமனைப் போற்றும் பாடலைக் கேட்டதற்காக ஒரு கடைக்காரர் தாக்கப்பட்டிருக்கிறார்’ என்பதாக.....

ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பொருமியிருக்கிறார் மோடி.

நம்மைப் போன்ற சாமானியர்களாயின், மேற்கண்டவாறு பொத்தாம்பொதுவாகப் பேசுவது ஒரு பொருட்டல்ல.

மோடி இந்த நாட்டின் பிரதமர். கடைக்காரரைத் தாக்கியவர்கள் யார் என்னும் விவரம் அவருக்கு முழுமையாகக் கிடைத்திருக்கும் என்பதால், தாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினராக இருந்திருந்தாலோ, நாத்திகர்களாக இருந்திருந்தாலோ அவர்களை ஆதாரங்களுடன் அடையாளப்படுத்தியிருத்தல் அவசியம்.

அதை விடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் இது நடைபெற்றது என்று ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் மீது பழி சுமத்தியதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

மோடி சொல்வது போல், கர்னாடகக் கடைக்காரர்[அனுமன் பாடல் கேட்டவர்] மீதான தாக்குதலுக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்பது உண்மையானால்.....

இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதும் சரி, பத்தாண்டுக்காலம் இந்தியப் பிரதமராக இருந்து பதவியில் நீடிக்கும்போது சரி, குஜராத்திலும், அதை உள்ளடக்கிய இந்தியாவிலும் பல வன்புணர்வு அட்டூழியங்கள்[பிற குற்றங்களும்தான்] நிகழ்ந்திருக்கின்றன. அந்த அட்டூழியங்கள் நிகழக் காரணமாக இருந்தவர்[மிக மோசமான நிர்வாகியாக] மோடி என்று சொல்லலாமா?

ந்த நிகழ்வுக்குப் பொறுப்பு யாராகவோ இருக்கட்டும், உலகறியக் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிப் பேசும் அளவுக்கு இது முக்கியமானதா என்றால் இல்லை.

மிகக் கொஞ்சமாகச் சிந்திக்கும் அறிவுள்ளவர்கள்கூட, ஐந்தறிவு ஜீவனான குரங்கு கடவுள் ஆக்கப்பட்டதை ஏற்கமாட்டார்கள்[இந்தக் குற்றத்தைச் செய்ததற்காகவே வால்மீகி, கம்பன் ஆகிய புலவர்களின் ராமாயணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டிருத்தல் வேண்டும். பெரியாரின் முயற்சியும் தோல்வியில் முடிந்ததது].

தனிப்பட்ட முறையில், குரங்கையோ, கோட்டானையோ, பாம்பையோ, பல்லியையோ, பன்றியையோ மோடி கடவுளாக்கி வழிபடட்டும். அது அவர் விருப்பமாக இருக்கலாம்; தடுப்பாரில்லை.

தன்னைப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்ளும் மோடி, ஒரு பெரிய கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் இருந்துகொண்டு, குரங்கைக் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதும், குரங்கின் மீதான பாடலைக் கேட்டவர் தாக்கப்பட்டதாகச் சொல்லி அதை அரசியல் ஆக்குவதும் வெட்கக்கேடானது.

மனம்போன போக்கில் மதச் சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசுவதும்[குற்றம் புரிபவர்கள் முஸ்லிமாயினும் வேறு மதத்தவராயினும் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை], ராமன், அனுமன் என்று 100% கற்பனைக் காவியப் பாத்திரங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் இந்த நாட்டின் நலனுக்கு நல்லதல்ல.

ஓர் அறிவுஜீவியாக, நல்ல புதிய திட்டங்கள் தீட்டி, செயல் வடிவம் கொடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்பவனே மக்கள் தலைவன் ஆவான்.

மோடி மக்கள் தலைவனல்ல!

திங்கள், 22 ஏப்ரல், 2024

‘உளறுவாயர்’... அண்ணாமலை மட்டுமல்ல, அண்ணல் மோடியும்தான்!!!


#காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். 

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்” என்றார்#[விகடன் செய்தி].

“அவர்கள்[முஸ்லிம்கள்] இந்தச் செல்வத்தை அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள்[மக்கள்] கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குக் கொடுக்கப் போகிறீர்களா?” என்றும் பேசியிருக்கிறார் மோடி.


தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கும் பங்குண்டு என்று எவரேனும் பேசியிருக்கலாம். பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.


மோடி சொல்வது போல் அவர்கள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை


எனவே,


தோல்வி பயத்தால் மன நிலை பாதிக்கப்பட்டுத்தான் மோடிஜி இப்படிப் பேசினாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.


மன நிலை பாதிக்கப்படவில்லை என்றால்…..


நம்ம ஊர் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையைப் போல் இவரும் ஓர் உளறுவாயர்தான் என்று நம்பத் தோன்றுகிறது!


ஹி… ஹி… ஹி!!!

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modis-muslim-remark-hate-speech-sparks-criticism


இது புத்திமதியா, புத்தி உள்ளவர்கள் பின்பற்றும் வாழ்க்கை நெறியா?

ணவன் மனைவியருள் ஒருவரோ, இருவருமோ தங்களின் துணைக்குத் துரோகம் இழைத்தவராக இருக்கலாம்.

இருந்தாலும்.....

துரோகம் செய்தவர் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினாலோ, துரோகம் நிகழ்ந்ததற்கான சூழல் தவிர்க்க இயலாததாக இருந்தாலோ, இருவரும் இணை பிரியாமல் வாழ்வது சாத்தியம்தான்.


போதிய ஆதாரங்கள் இருந்தும், குற்றம் புரிந்தவர், துரோகமே செய்யவில்லை என்று சாதிக்கும்போதும், “ஆமாம், நான் துரோகிதான், உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று சவால் விடும்போதும் குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறுகிறது!

‘யூடியூப்’இல்.....

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நடிகர் ‘விஜய்’க்குக் ‘குஞ்சி’யில் காயம்!!!

//ரஷ்யாவில் நடக்கும் ‘கோட்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த நடிகர் 'விஜய்', தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காகச் சென்னை வந்து நீலாங்கரையிலுள்ள ஓட்டுச் சாவடியில் வாக்களித்தாராம்.

ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு அவர் ஆளாகிவிடாமல் காவல் துறையினர் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைத்தார்களாம்.

இருப்பினும், அவர் கையிலிருந்த காயத்தை[சின்னஞ் சிறுசு]ப் பார்த்துவிட்டு அவரின் ரசிகக் குஞ்சுகளும், தொண்டரடிப்பொடிகளும் கண்ணீர் சிந்திக் கதறி அழுதார்களாம்.

தமிழ் மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இப்படியானதொரு செய்தியை, அதி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது தினமலர்[இன்னும் பல ஊடகங்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியிருக்கலாம்]. 

தினமலரோ பிற ஊடகங்களோ வெளியிடாத ஒரு செய்தி{ரஷ்யாவிலிருந்து விஜய்யுடன் திரும்பிய ஓர் உதவி இயக்குநர்[நமக்கு மிக மிக மிக நெருங்கிய உயிர் நண்பர்] சொன்ன தகவல் இது}.....

'விஜய்'க்குக் அந்தரங்க உறுப்பான ‘குஞ்சி’யிலும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாம்.

இதை அறிந்தால், விஜய்யின் ரசிகர்களில் சிலரோ பலரோ தீக்குளித்து உயிர் துறப்பார்கள் என்பதால் ரகசியம் காத்ததாக உ.இயக்குநர் நம்மிடம் சொன்னார்.

விஜய்யின் காயங்கள் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்!

https://cinema.dinamalar.com/tamil-news/120770/cinema/Kollywood/Vijay-injured-his-hand-when-he-came-to-drive.htm

சாமிகளுக்குக் கல்யாணம்! கருமாதி?!

ர் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வாழ அனுமதி வழங்கும் ‘சடங்கு’தான் திருமணம். இதை முன்னின்று நடத்துபவர்கள் சாட்சிகளான உற்றார் உறவினர்கள்.

விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு, மனிதர்களிடையே குடும்ப வாழ்க்கை முறை உருவானதன் பின்னர் இந்தச் சடங்கு பெரியோர்களால் நடைமுறை ஆக்கப்பட்டது.

காரணத்தைத் தொல்காப்பியர் சொல்கிறார், “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்[சான்றோர்கள்] யாத்தனர் கரணம்[திருமணச் சடங்கு >தொல். பொ. 145 ]” என்று.

ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமாக வாழ்ந்த அந்தக் காலக்கட்டத்தில், அவர்களில் ஆணோ பெண்ணோ, இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமை போன்ற காரணங்களால், பொய் சொல்லுதல்[“இவளுடன்/இவனுடன் நான் இணைந்திருந்து உடலுறவு கொள்ளவில்லை என்பது போல] முதலான குற்றங்களை இழைக்கலானார்கள்.

இவ்வகைக் குற்றங்கள் அதிகரித்தபோது, இவற்றைத் தடுப்பதற்காக, சான்றோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்துத் திருமணச் சடங்குகளை உருவாக்கினார்கள் என்பது அறியத்தக்கது.

எனவே, மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்காக நடைமுறை ஆக்கப்பட்டவையே திருமணச் சடங்குகள் ஆகும்.

இந்தச் சடங்குகளால் மனித சமுதாயம் பெற்ற நன்மைகள் முன்பு எப்படியோ, இன்றளவில், சடங்குகளை அர்த்தமற்றவை ஆக்கி, குடும்ப நல்லுறவைச் சீர்குலைப்பது என்பது அவ்வப்போதைய நிகழ்வாகிவிட்டது.

சீர்குலைப்பவர்கள் கணிசமானவர்கள்தான் என்பதாலோ என்னவோ, பெரும்பான்மை மக்களுக்கு இச்சடங்கு இன்றளவும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.

ஆக, திருமணம்[கல்யாணம்] என்பது மனிதர்களுக்காக மனிதர்களால் செய்யப்படும் சடங்கு என்பது உறுதியாகிறது.

இவ்வாறானதொரு புரிதலுக்கிடையே நமக்கு எழும் பிரமாண்டமானதொரு ஐயம்[சந்தேகம்] என்னவென்றால்.....

சாமி[கள்] உண்டோ இல்லையோ, இருப்பதாகக் கொண்டாலும், 

சாமிகளில் ஆண், பெண் பாகுபாடு உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும், 

அவர்கள் தங்களுக்குள் உடலுறவு என்னும் அந்தரங்கச் சுகத்தை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மையாயினும்.....

பொய்யுரைத்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் போன்ற இழிசெயல்களை[குற்றங்களை] அவர்கள் செய்திட வாய்ப்பே இல்லாத[அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர்கள்> கடவுள்கள்< அல்லவா?] நிலையில்.....

ஆண் பெண் சாமிகளுக்குத் திருமணம் செய்தல் சடங்கு எதன்பொருட்டு?

மனிதர்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் மனிதர்கள்.

தெய்வங்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் யார்?

உருவாக்கத் தூண்டியவர்கள் யார்?

வேத விற்பன்னர் எனப்படுபவர்கள்[?].

இவ்வாறான மிக உயரிய அந்தஸ்தைத் தாங்களாகவே தங்களுக்கு வழங்கிக்கொண்டு, படிப்பறிவில்லாத மக்களை நேற்றுவரை ஏமாற்றித் தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் அவர்கள்.

படிப்பறிவில்லாததால் அன்று மக்கள் ஏமாளிகளாக இருந்தார்கள்.

இன்று கல்வியறிவு இல்லாதவர்களே இல்லை என்னும் நிலை.

இந்நிலையிலும், மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் கல்யாணம்[எத்தனை எத்தனை முறை நடத்தினார்கள்? இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு நடத்துவார்கள்? மனித இனம் உள்ளவரையா, கடவுள்கள் இருக்கும்வரையா?] செய்வதாகச் சொல்லி, தினம் தினம் கண்டதைத் தின்று மலம் கழித்து வாழும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், ‘புரோகிதர்’ என்னும் பெயரில் அன்னை மீனாட்சிக்கே தாலி கட்டுகிறார்களே.....

இந்த அயோக்கியத்தனத்தை மனித உருவில் அலையும் லட்சக்கணக்கான மூடர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்ப்பார்கள்?

                                         *   *   *   *   *

எச்சரிக்கை!

இந்து மதத்தைத் தாக்கி எழுதும் நீ, இஸ்லாம், கிறித்தவம் ஆகியவற்றைத் தாக்கி எழுதாதது ஏன் என்று சங்கிகள் கேள்வி எழுப்ப வேண்டாம்.

மூடநம்பிக்கைகளைச் சாடுவதில் எந்தவொரு மதத்திற்கும் நாம் விதிவிலக்குத் தந்ததில்லை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு இத்தளத்தில் தேடலாம்]. 

அவர்களும் நம்முடன் சண்டையிட்டதில்லை.

பெண்கள் ‘இது’ விசயத்தில் மகா மகா புத்திசாலிகள்!!![‘கோரா’ கேள்வி-பதில்]

“ஆண்கள் பெண்களை வெளிப்படையாகக் கவர முற்படுவது போல், பெண்கள் ஏன் செய்வது கிடையாது?” என்பது கேள்வி[Quora].

 வழங்கும் ‘சுவையோ சுவை’ பதில்:

உண்மையைச் சொன்னா, தன்னைச் சுத்திச் சுத்தி வந்து ஆணை அலையவிடுவது ஒரு பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும். அவன் மீது அடிக்கடிக் கடைக்கண் பார்வையை வீசிக் குழப்பிவிடுவது[”என்னைக் காதலிக்கிறாளா, இல்லையா?”], அவன் தன் பின்னால் சுத்துவதைப் பார்த்தும் பார்க்காதது போல் ரசிப்பது. அவன் தன்னைக் கடந்து போகும்போது, முகத்தில் மெல்லிய புன்னகையைப் படரவிடுவது, ஒரு கட்டத்தில், அவனைக் காணாமல் தவிப்பது, காணும்போதெல்லாம் வெட்கித் தலை குனிவது போன்ற செயல்களில் பெண் ஈடுபடுவாள். இது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவான குணம்[பலவீனம்?].

சுருங்கச் சொன்னால், பெண் எப்போதுமே தன் உள்ளத்து உணர்ச்சிகளைக் குறிப்பால் உணர்த்துவாள்; வார்த்தைகளால் அல்ல.

இது விசயத்தில் அவள் மகா புத்திசாலியும்கூட.

எப்படி?

தன் காதலை வாய் திறந்து சொல்லாமல், ‘அவன்’ வந்து சொல்லட்டும் என்று காத்திருப்பாள். 

காரணம்.....

சின்னச் சின்னச் சண்டைகள்[ஊடல்] வரும்போது, 

”நீதானே என்னைச் சுத்திச் சுத்தி வந்து, உன்னைக் காதலிக்கிறேன். நீ சம்மதிக்கலேன்னா உயிரை விட்டுடுவேன்னு சொன்னவன்” என்று கேட்டு அவன் வாயை அடைக்கலாம்.

நம் மக்கள் மத்தியில் காதல் என்பது ஒரு தவறான வார்த்தை; கவருவது அதைவிடத் தவறான வார்த்தை. ஆண்கள் இதைச் செய்தால் ரசிப்பாங்க. இதையே ஒரு பெண் செய்தால் நடத்தை கெட்டவள்னு பழி தூற்றுவாங்க. அதனால்தான், இது விசயத்தில் பெண்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்காங்க.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

அண்ணாமலை ராஜினாமாவா? ஊஹூம்... அனுமதிக்கவே கூடாது!!!


"கோவையில், பாஜக சார்பில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். -by Web Editor

அண்ணாமலை விலகினால்.....
*எதார்த்தம், நடைமுறை சாத்தியம், மக்களின் மதிப்பீடு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகத்("இஸ்ரேல்-ஈரான் போரைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும்"-அ.மலை>https://twitter.com/PTTVOnlineNews/status/1780103508185739321)தன்னைத் தலையில் சுமந்து கொண்டாட மோடிக்கு அண்ணாமலை போல் ஒரு தொண்டன் ஒருபோதும் கிடைக்கமாட்டான்.

*‘நீட்’தேர்வுத் திணிப்பை ரத்து செய்யவிடாமல் பாதுகாக்கத் தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு தியாகி[அ.மலை] இந்த இந்திய மண்ணில் இனி அவதரிக்கவே மாட்டார் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

*தமிழன், தன்மானம் என்றெல்லாம் பேசித் திரியும் குறுமதியாளனாக இல்லாமல், ‘ஒரிஜினல்’ இந்தியனாக வாழும் அண்ணாமலைக்கு நிகரான ஓர் 'இந்தி'யன் இந்தப் புண்ணியப் ‘பாரத்’இல் இனியும் பிறக்க வாய்ப்பே இல்லை.

*தனக்குத் தெரிந்தவை தெரியாதவை பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல், எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் ஏடாகூடமாக விமர்சனம் செய்யும் இவரைப் போன்ற ஒரு பெரும் ‘பிறவி மேதை’யை எங்கே தேடினாலும் கண்டறிவது சாத்தியமே இல்லை.

*“மோடி... மோடி.....” என்று உள்ளிழுக்கும் உயிர்க் காற்றும் மோடி; வெளிவிடும் அசுத்தக் காற்றும் மோடியே. மோடி இல்லாமல் நானில்லை; மண் திணிந்த ஞாலமும் இல்லை” என்று தன்னலமின்றி மோடியைப் போற்றும் உத்தமச் சீடனை அவர் இழந்துவிடக்கூடாது.

மேற்கண்ட காரணங்களால், ‘பாஜக’ சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதை நிரூபிக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம்[ஈடுபட்டால், அரசியலிலிருந்தே அ.மலை விலகுவார்] என்று மிக்கப் பணிவுடன் அனைவரின் தாள் தொழுது வேண்டுகிறோம்.

வாழ்க தமிழ்நாட்டின் நிரந்தரப் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை!

‘ராம நவமி’யில் மோடி செய்த மிக மிக மிக நல்ல காரியம்!!!

மிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தச் சிறப்பாகப் பங்காற்றியதற்காக அண்ணாமலைக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணாமலையை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்[dailythanthi.com/].

அதன் தொடக்கம் நம்மைப் பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது.

தொடக்க வரி,

"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி[ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்] திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்பதாகும்.


ராம நவமியில் எதைச் செய்யத் தொடங்கினாலும் அது காலமெல்லாம் நல்ல பயனைத் தரும் என்பது இந்த வரியின் உள்ளர்த்தம் ஆகும். அதாவது, மோடி எழுதிய இந்தக் கடிதத்திற்கு நல்ல பலன் விளையும் என்று நம்புகிறார் அவர்.


கடிதம் எழுதுவதற்குக்கூட நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்று எவரும் மோடியை எள்ளி நகையாடாதீர்.


அது அவர் சுய அனுபவங்களின் மூலம் பெற்ற நம்பிக்கையாகும்.


*கடிதம் வரைவது என்றில்லை, ராம நவமியில், நல்ல நேரம் பார்த்துக்[காலையில்] கழிவறை சென்று காலைக்கடனை நிறைவேற்றினால், நீண்ட காலமாகத் தொல்லை கொடுத்த தீராத ‘மலம் கழித்தல் பிரச்சினை’ தீரும். அப்புறம் நம் ஆயுள் உள்ளவரை மலக் கழிவை வெளியேற்றுவதில் கிஞ்சித்தும் சிரமமே இராது[ஒன்னுக்குப் போவதில் உள்ள தொந்தரவுகளும் அடங்கும்].


*நம் பகையாளியான பக்கத்து வீட்டுக்காரனை, ராம நவமியில், “நீ நாசமாப் போவே” என்று சாபம் கொடுத்தால் அது பலிக்கும்.


*குழந்தைப் பாக்கியம் இல்லாத கணவனும் மனைவியும் அந்த நாளில் உடலுறவு கொண்டால்[பகலோ இரவோ] ஆணோ பெண்ணோ விரும்பிய மகவைப் பெறலாம்.


*ராம நவமி நாளில் திருடப்போகிறவன் திருடு கொடுப்பவர்களிடம் பிடிபடவே மாட்டான்.


*ஆசைக்கு இணங்க மறுத்துப் பல நாட்களாகப் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருக்கும் குமரிப் பெண், 'ராம நவமி'யில் கண் சிமிட்டினால் போதும் ஓடோடிவந்து படுத்துவிடுவாள்.


ஆக,


ராம நவமியில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்துமே நாம் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.


வெல்க மோடி! அண்ணாமலையும் வெல்க!!