எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 7 ஜூலை, 2025

‘அதில்’ இருவருக்கும் சமப் பங்கு! அவன் மட்டும் குற்றவாளி ஆனது எப்படி?!

//இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டுத் திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது// என்பது ஊடகச் செய்தி.*

பரபரப்பை மட்டுமல்ல, எதிர்பாராத அதிர்ச்சியையும் இது உண்டுபண்ணியுள்ளது என்று சொல்லலாம்.

அவன் மட்டுமல்ல, அவளும்தான் அந்தரங்கச் சுகத்தை  அனுபவித்திருக்கிறாள். அந்தச் சுகானுபவ ஆசையால்தான்[மணம் புரிவதாக அவன் அளித்த வாக்குறுதியை நம்பும் அளவுக்கு இந்தக் காலத்துப் பெண்கள் ஏமாளிகள் அல்ல> விதிவிலக்குகள் உள்ளன] அவனிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறாள் அவள்.

சுகம் அனுபவித்துவிட்டு அவளைத் திருமணம் செய்ய மறுத்த அவன் குற்றவாளி என்றால், ஆசை[ஆண் மீதான ஆசை] காரணமாக, அவனுடன் பழகிக் கவர்ந்து, தன் மீது அவனை ஆசைப்பட வைத்த அவளும் குற்றவாளிதான்.

இம்மாதிரி நிகழ்வுகளில் ஆண்மகனை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பெண்ணை அனுதாபத்திற்குரியவளாக ஆக்குகிறது இந்தச் சமுதாயம் என்றால், அதற்கு ஆண்களே உடந்தையாக இருப்பது விசித்திரம்!

“ஐயோ பாவம் ஆண்கள்” என்று சொல்லத் தோன்றுகிறது!

*https://seidhialasal.in/2025/07/06/enjoying-pleasure-and-then-refusing-marriage-protection-for-the-police-officer/