செவ்வாய், 13 மே, 2025

பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறானா நம் எதிரி பாகிஸ்தானி?!

பாகிஸ்தானின் முதுகெலும்பை முறித்துவிட்டதாக நம் பெருமதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள், நேற்று இரவு[08.00 மணி] நம் நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பெருமிதப்பட்டார்.

பஞ்சாபிலுள்ள ஆதாம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்று வீரர்களிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்; "இனி ஒரு முறை பாகிஸ்தான் வாலாட்டினால் அதை ஒட்ட நறுக்குவேன்” என்பது போல் எச்சரித்தார்.

பதற்றத்திலிருந்த நம் மக்களும் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்கள்.

‘யூடியூப்’ தளத்தில் உலா வந்தபோது கீழ்க்காணும் காணொலி கண்ணில் பட்டு அடியேனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 


***செய்தி[பாகிஸ்தானின் அத்துமீறல்] பொய்யானதாக இருந்தால் நல்லது என்பது நம் உள்மன ஆசை.

'இரண்டு மூளைகள்'..... கொடுத்துவைத்த கரப்பான் பூச்சிகள்!![பகிர்வு]

கரப்பான் பூச்சிகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன.

ஒன்று தலையிலும் மற்றொன்று வயிற்றுக்கு அருகிலும் உள்ளன[one inside their skulls, and a second, more primitive brain that is back near their abdomen].

இந்த உள்ளமைவு, அவை தலையை இழந்தாலும்கூட, தொடர்ந்து நகர உதவுகிறது.

கரப்பான் பூச்சிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேகமாக நகர்கின்றன; பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றை நினைவில் கொள்கின்றன.

அவற்றின் மூளை மனிதர்களின் மூளையை விட மிக மிக மிகச் சிறியது. ஆனால், அவற்றில் இரண்டு மடங்கு ‘சினாப்ஸ்கள்’ [நரம்பணுக்களின்(neurons) இடையே தகவல்களைக் கடத்துபவை] உள்ளன. இதனால் அவை தகவல்களைச் சிறப்பாகச் சேமித்துச் செயல்படுகின்றன.

2 மூளை உள்ள 10 உயிரினங்கள்: