எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 15 அக்டோபர், 2025

‘மாற்றம் ஒன்றே மாறாதது’... மாற்றமே இல்லாத கருத்தாக்கமா இது?!

பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே[பொருள்கள் & உயிர்கள் & அறியப்படாத பிற] மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்னும் வாசகத்தின் உள்ளர்த்தம் ஆகும்.

‘எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன’ என்றதன் மூலம் மாறாதது எதுவும் இல்லை’ என்பது உணர்த்தப்படுகிறது.

‘மாறுவது’ என்பது ஒரு நிகழ்வு.

நிகழ்வுகளுக்குப் பொருள்கள் தேவை. அதாவது, பொருள்கள்[+பிற] இல்லாமல் நிகழ்வுகள் இல்லை.

நிகழ்வுகளுக்குத் தேவையான பொருள்கள் தாமாகத் தோன்றியவையா, தோற்றுவிக்கப்பட்டவையா என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது[விடையறிவது எளிதல்ல].

தாமாகத் தோன்றினவோ தோற்றுவிக்கப்பட்டனவோ, தோற்றத்தின்போதே அவை மாற்றங்களுக்கு உள்ளாகாமல், நிலையானவையாக[உருமாறாமல்] இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, எப்பொருளும் எக்காலத்தும் மாற்றமே இல்லாமல், நிலையானதாக இருந்திட இயலாது என்பதை மனித அறிவால் அறுதியிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை.

சாத்தியம் இல்லை என்பதால், “மாற்றம் ஒன்றே மாறாதது” என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

எது எப்படியோ, குறிப்பிட்ட ஓர் எல்லைக்கு மேல் சிந்திக்கும் அறிவு மனிதர்களுக்கு இல்லை என்பது உணர்ந்து அறியத்தக்கதாகும்.

                                                *   *   *   *   *

முக்கியக் குறிப்பு:

“மாற்றம் ஒன்றே மாறாதது”... சொன்னவர் யார் என்னும் கேள்விக்கான  இணையத் தேடலில், Heraclitus, karl marx ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றன. இருவரில் ‘முன்னவர்’ யார் என்று தேடியதில் கிடைத்த பதில்: Karl Marx was born on May 5, 1818, and Heraclitus's birth date is approximately the 6th century BCE. While Marx's birth date is well-documented, Heraclitus's birth year is an estimate, often given as c. 540 BCE.