மோடி: “அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....”
நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.
மோடி: “அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.”
நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.
மோடி: “வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......”
நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.
மோடி: “கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.”
நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***
மோடி: “நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.”
நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].
***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:
பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.
மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.
உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.
மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.
https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india

