தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதாகட்டும், ‘அதிமுக’ என்னும் பெரியதொரு கட்சியின் தலைவராக இன்றளவில் இருக்கும்போதாகட்டும், வாழ்நாளில் மிகப் பெரும் பகுதியை உலகம் சுற்றிக் குதூகளிப்பதில் கழிக்கிற இந்தியப் பிரதமர் மோடிக்கு, விசுவாசமுள்ள நிரந்தரக் கொத்தடிமையாகச் சேவகம் செய்யத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எடப்பாடிப் பழனிசாமி.
இது மோடிக்குத் தெரியும்; ‘அதிமுக’வின் ஆதரவு இல்லாமல் சில ஆயிரம் வாக்குகள்கூடத் தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பெற்றிட இயலாது என்பதையும் அவர் அறிவார்.
இந்நிலையில், மரியாதை நிமித்தமாகவும், மோடியிடம்[கோவை நிகழ்ச்சியில்] தனக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்வதற்காகவும் அவருடன் தனியாகப் பேசும் தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அரசியல் ஞானி மோடியோ அதற்கு இசைவு தரவில்லை என்பது ஊடகச் செய்தி.
சந்திக்க மறுத்ததன் மூலம்.....
“ஓ எடப்பாடி, அகில உலகப் பிரபலம் நான். நீ என் ஆயுட்கால அடிமை. உலகறிய, அடிமையாகிய நீயும் முதலாளியான நானும் தனிமையில் சந்தித்துப் பேசினால்[மோடி வேறு எவரையும் தனிமையில் சந்திக்காத நிலையில்], நீ எனக்குச் சமானமானவன் என்றாகிவிடும். இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூட உனக்கு இல்லை” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மோடி.
மோடி புத்திசாலி! எடப்பாடி?


