ஞாயிறு, 31 மார்ச், 2024

சும்மா கட்டிப்பிடிக்க மட்டும் ‘அவளுக்கு’ ரூ7500[ஒரு மணி நேரத்துக்கு]

வள் பெயர் ‘அனிகோ ரோஸ்’; இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிப்பவள்.

இவள், மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வைத்தியம் பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாள் என்பது ‘மாலைமலர்’ச் செய்தி.

இவள் செய்வது ‘கட்டிப்பிடி’ வைத்தியமாம்!

இப்படியொரு புதுமையானதும் சர்ச்சைக்குரியதுமான வைத்திய முறை இங்கிலாந்தில் இருப்பது உண்மைதானா என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.

உண்மையே என்றாலும், கட்டிப்பிடிக்கப்படும் ஆண் அடுத்த கட்ட நகர்வுக்கு[உடலுறவு]த் தூண்டப்பட்டு அதற்கு அவள் அனுமதி மறுப்பாளாயின், அவனின் மன அழுத்தம் பல மடங்கு அதிகம் ஆகும்.

பலரைக் கட்டிப்பிடித்துச் சிகிச்சையளிக்கிறவளும் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு, ஒரு கட்டத்தில் அவளே மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகும்.

கட்டுப்படுத்த இயலவில்லை எனின், அவள் முழுநேர விலைமகள் ஆவாள். அல்லது முழுப் பைத்தியமாக ஆகக்கூடும்.

எது எப்படியோ,

மேற்கண்ட 42 வயதுக்காரியின் மீது இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக அறியப்படவில்லை.

நடவடிக்கை ஏதும் இராது எனின், இவளைப் போன்ற ‘சல்லாபத் தொழில்’காரிகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளவயசுக்காரிகள் பலரும் இத்தொழில் இறங்குவார்கள்; கோடிகளில் புரளுவார்கள்.

மற்ற நாடுகளில் எப்படியோ, இந்தப் புண்ணியப் பூமியில்[இந்தியா] இந்தக் ‘கட்டிப்பிடித் தொழில்’ எப்போது தொடங்கப்படும்?!?!

                                                      *   *   *   *   *


சனி, 30 மார்ச், 2024

கண் கலங்கும் மோடி! கண்ணீர் சிந்தும் தமிழன்னையும் தமிழ் மக்களும்!!

டந்த பல மாதங்களாகவே, தமிழின் பெருமையை உலகறியச் செய்வதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் நம் பிரதமர் மோடி அவர்கள்.

முன்னதாக, இந்த நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்களில் எவரும் தமிழை ஒரு பொருட்டாக மதித்ததில்லை; உலகறியச் செய்வதில் இவரளவுக்கு முனைப்புக் காட்டியதும் இல்லை.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம்,  “வனக்கம்[வணக்கம்] சொல்லித் தம் பேச்சைத் தொடங்குவதோடு, “தமிழில் பேசவே ஆசை. அது நிறைவேறாததை நினைத்து மிகவும் வருந்துகிறேன்” என்று சொல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்.

நேற்று, சென்னையில் ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களுடன் உரையாடுகையில், “தமிழ் என் தாய்மொழியாக இல்லையே” என்று மனம் வெதும்பியிருக்கிறார்.

இவரின் இந்தத் தன்னலம் கருதாத பற்றினை நினைத்துத் தமிழ்த் தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.

என்னதான் பழம் பெருமை பெற்றதென்றாலும், ஒரு மாநில மொழிக்காக இவர் தம்மை வருத்திக்கொள்வதில் இவரின் உடல்நிலை பாதிக்கப்படுமேயானால்.....

இந்தியாவில் தலைவிரித்தாடும் வறுமையை ஒழிக்கவும், இந்த நாட்டை உலகின் வளர்ந்த நாடுகளில் நம்பர் 1 ஆக்கவும், ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கட்சி ஆட்சி’ என்னும் லட்சியத்தை நிறைவேற்றவும் இனியொரு தலைவர் பிறக்கப்போவதில்லை என்பதை நினைத்து இந்த நாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள்; கண்ணீர் சிந்துகிறார்கள்.

நாளெல்லாம் தமிழே நினைவாக வாழும் தலைவர் மோடி அவர்கள் அடுத்த பிறவியில் தமிழராகப் பிறந்து ஒரு தமிழனாக இந்த இந்திய நாட்டை ஆள்வார் என்னும் நம்பிக்கையுடன், “தமிழர்களின் வாக்கு ‘பாஜக’ வேட்பாளர்களுக்கே என்று உறுதி சொல்லி, தமிழில் பேச இயலாததை நினைந்து வருந்த வேண்டாம் என்று மிக்கப் பணிவுடன் உலகெங்கும் வாழும் தமிழர் சார்பாக இவரை வேண்டுகிறோம்.

வாழ்க மோடி! வெல்க ‘பாஜக’!!

                               

வெள்ளி, 29 மார்ச், 2024

ஈஷா யோகா மையத்தில் ‘ஈசன்’ ஜக்கியின் தரிசனம் எப்போது?!

‘ஜகத்துக்கு[உலகம்] மட்டுமல்லாமல், ‘சத்’[கடவுள்]துக்கும் குருவான ஜக்கியார் மூளை அறுவைக்குப் பின்னர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்’ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20240328-148758].

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தையே தியானம் கற்பிக்கும் இடமாகவும், வாழிடமாகவும் கொண்ட பரமாத்மா ஜக்கி ‘வீடு திரும்பினார்’ என்னும் செய்தி நம்மைப் பெரு மகிழ்ச்சியில் மட்டுமல்லாமல், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கென்று தனியே வீடு இல்லாத நிலையில்[வீடு எங்கே உள்ளது என்பதை எந்தவொரு ஊடகமும் வெளியிடவில்லை!] வெளியான இந்தப் பொய்ச் செய்தி, தீராத பெரும் துயருக்கு நம்மை ஆளாக்கியுள்ளது.

மேலும்.....

சிவராத்திரிக் கும்மாளத்தின்போது, தன் காலில் விழுந்த கவர்ச்சிக் கன்னி காஜல் அகர்வாலின் கன்னம் தொட்டு அவரைப் புளகாங்கிதம் அடையச் செய்தாரல்லவா[சமந்தாவைக் கிள்ளியதும் நினைவுகூரத்தக்கது], அந்தக் காஜலா, ரசிகர்களின் கனவுக் கன்னி தமன்னாவா அடுத்த ஈஷா மையத் தலைவர்[தலைவி] யார் என்று கேள்வி எழுப்பி வலையுலக அன்பர்களும் சில ஊடகக் குசும்பர்களும் அலப்பறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் அறியத்தக்கது.

இது வாசுதேவனாரின் கௌரவத்திற்கும், புகழுக்கும்[‘பிறவி ஞானி’ என்று போற்றப்படுதல்] இழுக்குச் சேர்ப்பதாக உள்ளது.

இம்மாதிரி வதந்திகள் இனியும் உலா வருவதைத் தடுத்திட மகான் ஜக்கி அவர்கள் உடனடியாக இஷா மையத்திற்கு வருகைபுரிந்து, அவரின் பக்தர்களுக்கு இலவசத் தரிசனம் தந்து, கடல் அளவிலான அவர்களின் கவலையைப் போக்கியருளுதல் வேண்டும் என்பது நம்மைப் போன்றோர் கோரிக்கை.

வாழ்க ஜகதீஸ் வாசுதேவன்! தொடர்க அவரின் ஆன்மிகத் தொண்டு!! வளர்க அவரின் இறைச் சக்தி!!!

                                  *   *   *   *   *

https://tamil.filmibeat.com/news/cheyyaru-balu-has-answered-that-the-next-sadguru

-is-tamannaah-and-not-kajal-agarwal-130209.html

வியாழன், 28 மார்ச், 2024

“இந்தியா குடியரசல்ல, பணக்காரர்களின் அரசு”... நிர்மலா சீத்தாராமன் வாக்குமூலம்!!!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ‘டைம்ஸ் நவ்’ செய்திச் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில், "தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு இவர், “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் இருந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்று கட்சியின் தலைவர் என்னிடம் கேட்டார். இதைப் பற்றி யோசிக்கப் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லாததால் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்[இதைச் சொல்லப் பத்து நாட்கள் தேவையா?]” என்றார் நிர்மலா சீதாராமன்.


தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள்தான்[குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையோ சாராதவர் தான் என்கிறார். சாதியில் சிறுபான்மையினராக இவர் இருக்கலாம். பெரும்பான்மை இந்துமதம் சார்ந்தவர்தானே?] போட்டியிட்டு வெற்றி பெறமுடியும் என்பதையும் இவர் காரணமாகக் கூறியுள்ளார்.


மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் முக்கியப் ‘பாஜக’ தலைவர்களிடம் நிர்மலா சீத்தாராமனும் ஒருவர்.


தனியார் நிறுவனங்களிடம் கோடி கோடி கோடியாய் நன்கொடை[லஞ்சம்] வாங்கிக் குவித்து வைத்திருக்கும் கட்சி தங்களுடையது என்பதோ, வாக்காளர்களுக்கு லஞ்சம்[+மற்றச் செலவுகள்] கொடுத்து வாக்குகளைப் பெற ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாஜக’ தலைமை பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பதோ அம்மையாருக்குத் தெரியாதா?


அப்புறம் ஏன் “பணம் இல்லை. போட்டியிடவில்லை” என்கிறார்?


வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற விரும்பாத உத்தமக் குணத்தவராகவும் இவர் இருக்கக்கூடும்.


இந்தப் பதிவின் நோக்கம் நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை ஆராய்வதற்கல்ல.


நம் நாட்டுக் குடியரசு ஆட்சியின் அவல நிலையை இவர் அம்பலப்படுத்தியதற்கு நன்றி சொல்வதற்குத்தான்.


இந்தியா குடிமக்களுக்கான அரசு[குடியரசு] என்கிறார்கள்.


குடிமக்கள் என்னும் சொல், இங்குள்ள ஏழைகள், பணக்காரர்கள் ஆகிய இரு சாராரையும் உள்ளடக்கியது.


இவர்களில் எவரொருவரும் தேர்தல்களில் போட்டியிட்டு நாட்டை ஆளும் ஆட்சிக் குழுவில் இடம்பெறலாம்.


ஆனால், பண வசதி இல்லாத ஏழைகளுக்கு இது எட்டாக் கனி என்பதைத்தான், “பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை” என்ற அம்மையாரின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.


நிதியமைச்சர் அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் இந்த உண்மையைப் போட்டுடைத்ததற்காக மனம் நிறைந்த நன்றியை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.


மேலும்.....


இந்தியா சாதி மத பேதமற்ற[குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ சார்ந்தவர் அல்ல தாம் என்பதால் போட்டியிடவில்லை என்று அம்மையார் குறிப்பிட்டுள்ளார்], உலகின் மிகச் சிறந்த குடியரசு நாடு என்று வாய் கிழியப் பேசுவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

* * * * *

https://www.bbc.com/tamil/articles/ckk7pypnrx2o

புதன், 27 மார்ச், 2024

“நீ சக்தியின் சொரூபம்”... பட்டினியில் பரிதவிக்கும் பெண் வேட்பாளருக்கு மோடி புகழாரம்!!!

நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர்; பல கோடிக்கு அதிபதியோ அல்லவோ, பல கோடீஸ்வரர்கள் அவருக்கு நாளும் பணி செய்யக் காத்திருக்கிறார்கள்.

மேலும், ஈடு இணையற்ற பக்திமான் என்பதால் கடவுளுக்கு நிகரான கருணையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது நம் நம்பிக்கை.

இது தேர்தல் நேரம். தன் கட்சியை[பாஜக]ச் சார்ந்த ஒரு பெண் வேட்பாளருடன் உரையாட நினைத்துத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறார்[மேற்கண்ட படம்] மோடி.

பெண்களின் துயரங்களை அவரிடம் விவரித்த அந்தப் பெண்[பாஜக வேட்பாளர்] சொல்கிறார்.....

“என்னுடையது ஏழ்மையான குடும்பம். என் கணவர் தமிழ்நாட்டில் வேலை[கூலி வேலை] பார்க்கிறார்” என்று தன் குடும்ப நிலையை விவரித்திருக்கிறார்.

“கவலைப்படாதே பெண்ணே. தேர்தல் வேலையைக் கவனி. மிக விரைவில், தமிழ்நாட்டிலிருக்கும் உன் கணவருக்கு இங்கேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று மோடி சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா?

ஊஹூம்.

அந்தப் பெண்ணிடம், “நீங்கள் சக்தியின் சொரூபம்” என்கிறார். அந்தச் சக்தி திரிணமுல் காங்கிரஸின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டுமாம்.

வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் கணவனை அயல் மாநிலத்திற்குக் கூலிக்காரனாக அனுப்பிய ஓர் ஏழைப் பெண்ணைச் ‘சக்தியின் சொரூபம்’ என்கிற இவரை எவ்வகையில் விமர்சிப்பது?

ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதற்கான தெம்பு இல்லாததால்.....

“தேர்தலில் பெரும்பான்மை பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பில்லியனோ பில்லியன் ரூபாய் செலவில் ‘சக்தி’க்கு[சிவபெருமானின் மனைவி] ஒரு கோயில் கட்டுவார்” என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

செவ்வாய், 26 மார்ச், 2024

வேட்பாளர்களா, வாக்காளர்களா, கடவுள்களா இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் யார்?!

ருவன் தன்னைப் ‘பரம யோக்கியன்’ என்று பிறரை நம்ப வைப்பதற்குக் கையாளும் உத்திகளில் ஒன்று கடவுள் பக்தனாக முன்னிலைப்படுத்துவது.

இந்த உத்தியைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் வெகு சிறப்பாகக் கையாள்கிறார்கள்.

எடப்பாடியார், ‘பாஜக’ எல்.முருகன் போன்றோர் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்னால், கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்கள் என்பது ஊடகச் செய்தி.

பாஜக அண்ணாமலை, கோவை மாவட்டப் பேரூரிலுள்ள மடத் தலைவரை வணங்கி ஆசி பெற்றிருக்கிறார்.

2024 தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்களில் மிகப் பெரும்பாலோர் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட பிறகே[காணொலியாக்கி ஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள்] தேர்தல் பணிகளைத் தொடங்குவார்கள்/தொடங்கியிருப்பார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இவர்களின் இச்செயல் முழுக்க முழுக்க, மக்களை மூடர்களாக்கி ஓட்டுப் பெறுவதற்கான ‘ஓரங்க நாடகம்’ என்பது நம் குற்றச்சாட்டு.

“இல்லை இல்லை. வெற்றிக்கு எங்களின் தெய்வங்கள் உதவும் என்ற மனப்பூர்வமான நம்பிக்கையில்தான் வழிபடுகிறோம்” என்று கூறுவார்களேயானால்.....

இவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினால், “நாங்கள் நம்பிய கடவுள்கள் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்வார்களா?

அல்லது,

“நாங்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாகவும், யோக்கியர்களாகவும் இருந்திருந்தால் அவர் எங்களைக் கைவிட்டிருக்கமாட்டார்” என்று மனம் திறந்து சொல்வார்களா?

அல்லது, 

“நாங்கள் அயோக்கியர்கள் என்றாலும், மன்னித்து எங்களுக்கு அவர் அருள்பாலித்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் அவர் கருணையுள்ளவர் அல்ல; வழிபடத் தக்கவரும் அல்ல” என்று துணிந்து சொல்வார்களா?

இந்தவொரு துணிச்சல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேவை என்பது நம் எண்ணம். இதன் மூலம், ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்னும் மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் விடுபடுவது உறுதி.

முக்கியக் குறிப்பு:

நம்மைப் போன்ற அறிவுஜீவி[ஹி... ஹி... ஹி!!!]களிடமிருந்து இவ்வாறான மண்டை காய வைக்கும் கேள்விகளை வேட்பாளர்கள் தவிர்க்க விரும்பினால்.....

கோயில்களுக்குச் சென்று சாமி சிலைகளுக்கு முன்னால் நீட்டிப் படுத்துக் கும்பிட்டு வேண்டுதல் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, வாக்காளர்களையே கடவுள்களாக மதித்து, அவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்குச் சேகரிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்!

‘தினமணி’யில் வெளியானதொரு கருத்துப் படமும்[கீழ்க்காண்பது] இதைத்தான் சொல்கிறது.

திங்கள், 25 மார்ச், 2024

“ஆன்மிகமும் அரசியலும் பிரிக்கக் கூடாதவை”... அறிஞர் அண்ணாமலை!!!

//எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்தச் சமயங்களில் அவர்கள், ஆதீனங்களையும் குருமார்களையும் சந்தித்து அறிவுரைகளைப் பெற்று, அதைத் திருத்திக்கொள்ள வேண்டும்//

மேற்கண்ட தத்துவ முத்தை உதிர்த்திருப்பவர் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்கள்.

“அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும்” என்கிறார் இவர்.

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

அரசியல்வாதிகள் அறநெறி பிறழாமல் செயல்படுவது அவர்களுக்கான மிக முக்கியத் தகுதிகளில் ஒன்று.

அந்நெறி பிறழ்பவன் சுயநலவாதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அவனால் மக்களுக்கு நன்மைகள் விளைவதில்லை.

எனவே, “அரசியல் என்பது அறம் சார்ந்திருத்தல் வேண்டும்” என்று அண்ணாமலை கூறியது வரவேற்கத்தக்கது.

“அரசியலையும் ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்த்தல் கூடாது” என்று அவர் கூறியிருப்பதுதான் நகைப்பூட்டுகிறது.

ஆறறிவைப் பெற்ற மனிதர்கள் எப்போது ஒன்றுபட்டு ஒரு குழுவாக இணைந்து, ஒரு தலைவனையோ, தலைவர்களையோ தங்களை ஆளுபவர்களாக ஏற்றுக்கொண்டார்களோ அப்போதே அரசியல் அமைப்பும் உருவாகிவிட்டது.

ஆக, அரசியல் என்பது மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.

ஆன்மிகம் என்பது இதனின் வேறுபட்டது. தமக்கும் மேம்பட்ட சக்தியைக் கடவுள் என்று சொல்லி, அவரை வழிபட்டால் நன்மைகள் உண்டு என்னும் நம்பிக்கை சிலரால் திணிக்கப்பட்டு, மக்களும் அதை நம்பத்தொடங்கியபோது உருவானது ஆன்மிகம்.

அது இயற்கையானது அல்ல; ‘இடைச் செருகல்’ என்று சொல்லலாம்.

அது முழுக்க முழுக்க நம்பிக்கையின் பாற்பட்டது. ஆன்மிகத்தை ஏற்காத அரசியல்வாதிகள் அன்று இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்.

எனவே, அரசியல்வாதி ஆன்மிகராகவும் இருத்தல் அவசியமில்லை.

ஆன்மிகத்தைப் புறக்கணித்து, மக்கள் பணிக்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

இதைச் சொல்வதற்கோ, புரிந்துகொள்வதற்கோ அறிஞராக இருத்தல் அவசியமில்லை; வெகு சாமானிய மக்களுக்கே இது சாத்தியம்தான்.

ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று சொன்ன அண்ணாமலை ஒரு சாமானியராகக்கூட இல்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.

தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி!

* * * * *

https://www.maalaimalar.com/news/state/tamil-news-annamalai-says-spirituality-and-politics-should-not-be-separated-709743?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw1tr-Ag&utm_content=rundown

ஞாயிறு, 24 மார்ச், 2024

கவிதையில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை!!!

கீழே உள்ளது, சிறிது நேரம் மட்டுமே பார்த்துப் பின்னர் கேட்டு மகிழ்தற்குரிய காணொலி.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ‘மூடத் திருமணம்’ என்னும் கதைக் கவிதை இங்கு காணொலி வடிவில். மாணவப் பருவத்திலேயே வாசித்து மகிழ்ந்தது; மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது.


                                                 *   *   *   *   *

சனி, 23 மார்ச், 2024

சாகும்போதும் ‘சத்குரு’தானா?!?!

நோயாளி எப்படி மருத்துவரிடம் பொய் பேசக்கூடாதோ, அதே போல நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவரும் பொய் சொல்லுதல் கூடாது. 

உண்மையும் நேர்மையும் அவர்களின் இரு கண்கள்.

அதிகார வர்க்கத்தின் தூண்டுதலாலோ அதீத பக்தி காரணமாகவோ டெல்லி அப்பல்லோ மருத்துவர்[ஜக்கி வாசுதேவனுக்கு மூளை அறுவை செய்தவர்]“சத்குரு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறார்” என்று பேசி இந்திய மருத்துவர்கள் மீது மக்கள்[உலக அளவில்] கொண்டுள்ள நன்மதிப்பைச் சிதைத்திருக்கிறார்.

“எங்கள் கடமையை நாங்கள் செய்தோம், ஜக்கி என்னும் நோயாளி படிப்படியாக, நாங்கள் எதிர்பார்த்ததையும்விட[உண்மை நிலவரப்படி] வேகமாகக் குணமடைந்துவருகிறார்” என்று அறிக்கை விடவேண்டிய இவர் மேற்கண்டவாறு சொல்லித் தன் தரத்தைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.

நம் மக்களில் சிந்திக்கத் தெரிந்த பலரும் கேட்ட கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாக இங்கே பதிவு செய்கிறோம்.

தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் இந்த நபருக்கு இவர்கள்[மருத்துவர் குழு] ஏன் அவசர அறுவைச் சிகிச்சை செய்தார்கள்? எதற்காக நோயாளியைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்? 

இந்த ஆள் சாகும்போதும்[நூறு நூறு ஆண்டுகள் வாழ நம் வாழ்த்துகள்] மனிதனாக அல்லாமல் கடவுளின் குருவாக[சத்குரு]ப் பார்க்கப்பட வேண்டும் என்று நினக்கிறார்களா?

இவரின்[டாக்டர்]  நடவடிக்கையால், ஒட்டுமொத்த உலகமும் இவரையும், இவ்வாறு அறிக்கைவிடத் தூண்டியவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது!

 [According to Dr. Suri, "Sadhguru has shown steady progress, and his brain, body, and vital parameters have improved to normal levels. His recovery has been much better than expected."

Dr. Suri mentioned that Sadhguru is healing himself, in addition to the medical measures instituted by the Indraprastha Apollo Hospitals.

https://www.freepressjournal.in/india/sadhguru-health-updates-sadhguru-is-healing-himself-says-doctor-after-surgery

வெள்ளி, 22 மார்ச், 2024

‘A' அழகிகள்... ஆஹா! ‘B' & 'C'... ஐயோ பாவம்!

‘நீல’ப் பட நடிகைகளை A, B, C என வகைப்படுத்துகிறார்கள் அத்துறை ஆய்வு வல்லுநர்கள்.

'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! அவர்களுக்கு மேற்சொன்ன கவுரவங்கள்... ஊஹூம்.[Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].

“நீலப் படங்களில் நடிப்பதென்பது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்” என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஓர் ஆபாசப் பட நடிகர்[male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005] 

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் குறிப்பாக B&C பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

***செய்திகளுக்கான ஆதாரத் தள முகவரி கைவசம் இல்லை என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

வியாழன், 21 மார்ச், 2024

மூளையில் கட்டியாம்... கடவுளின் குருவுக்கு[சத்குரு ஜக்கி]! அடடா... கடவுளே!!

 ஈஷா ஜக்கி வாசுதேவ்

மிக முக்கியக் குறிப்பு: ‘இந்த ஜக்கி வாசுதேவன் பொய்யன்ர், ஆன்மிக வேடதாரி, புரியாத வகையில் தத்துவம் பேசிப் பேசி, உலக அளவில் பிரபலமாகி, சிந்திக்கும் அறிவைச் சிதைக்கும் மக்கள் நல விரோதி என்பதை வலியுறுத்தும் வகையில் பல பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.


‘சத்குரு’ என்னும் சொல்லுக்கான பொருள்[பரம்பொருளின் குரு] தெரிந்திருந்தும், தனக்குத்தானே அதைத் தன் பெயரின் அடைமொழி ஆக்கி, எவர் ஒருவரின் விமர்சனத்திற்கும் அஞ்சாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்த நபரின் மூளையில் கட்டி உருவாகி, மருத்துவர்கள்[மனிதர்கள்] அதற்கான சிகிச்சையைச் செய்துள்ளார்கள் என்பது இன்றையச் செய்தி.


***இந்தப் பதிவின் நோக்கம், இந்த நபரால் ஏமாற்றப்பட்ட எண்ணற்ற மக்களிடம் விழிப்புணர்வு[இந்த ஆள் மகானுமல்ல, கடவுளின் அவதாரமும் அல்ல என்பதை உணரவைத்தல்] உண்டுபண்ணுவதே தவிர, துன்பத்திற்குள்ளான இந்த வாசுதேவனின் பரிதாப நிலையைக் காட்சிப்படுத்தி மகிழும் அற்ப ஆசை நமக்கு இல்லை என்பது அறியத்தக்கது. இந்தச் சாமானியன் விரைவில் குணமடைதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.***


இணைய உலக வாசகர்களின் கருத்துரைகள்[நாம் சொல்லத் தயங்குபவை] பதிவின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

                                            *   *   *   *   *

#கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவ் அதை நிர்வகித்து வருகிறார்.  

இந்நிலையில் சமீப காலமாகவே அவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி அவருக்குக் கடுமையான தலைவலி, வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில்,

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, ‘சிடி ஸ்கேன்’ எடுத்துப் பார்த்துள்ளனர்.


அதில், ஜக்கி வாசுதேவின் மூளையின் ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து ரத்தக்கசிவைச் சரி செய்தனர். செயற்கைச் சுவாசச் சிகிச்சையில் இருந்த ஜக்கி வாசுதேவ், தற்போது அது அகற்றப்பட்டுக் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள்[ஆதரவாளர்கள்&தீவிரப் பக்தர்கள்] அவர் விரைந்து குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.


இது குறித்து ஜக்கி வாசுதேவ் தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். இங்குள்ள மருத்துவர்கள். என் தலையில் உள்ள பிரச்னையைக் கண்டறிய அறுவைச் சிகிச்சை செய்தனர். ஆனால் எதுவும் இல்லை. மூளைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை[?!?!?!]. நான் நலமுடன் உள்ளேன்” என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவை உணர்வுடன் கூறியது[இது மகான்களுக்கே சாத்தியம் என்று மக்கள் நம்ப வேண்டுமாம்!] வைரலாகி வருகிறது.


கருத்துரைகள்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]:

Sort by Latest 

XBXR55m

மூளை இருந்தால்தானே பாதிப்பு??!

இது எப்படி??

Swaminathan K2h

Seitha pavam theeruthada sivaguru natha, uyir siraiyai vittu oduthada sivagurunatha. Pavi ennai marubadiyum pirakka vaikkathe, seitha pavamellam theerum varai irakka vaikkathe. Nooru vagai noi kodaiyya, sagum varai azhavidaiyya. Uchi marakilaiyl ninru uyir verai aruthavan nan.

Satheesh2h

Still he is not accepting his illness, it will affect his business...

Devi2h

பண்ணிய பாவம் எல்லாம் சும்மா விடுமா என்ன, இங்க இருக்க கமெண்ட்ஸ்க்கு எல்லாம் பொத்துனாப்புல டிஸ்லைக் போடுற சங்கி மு ண்டங்களே இதே நிலைமைதான் உங்களை மாதிரி ஆளுங்களுக்கும் நீங்க விழுந்து விழுந்து முட்டு கொடுக்குற ஆளுங்களுக்கும்..

SenthilDevi2h திராவிட சங்கி முண்டக்கல்லுக்கு சொல்லு, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது , நாட்டின் கனிமவள்ளங்களை திருடுவது , மக்கள் சொத்துக்களை திருடுவது , மக்களின் வயிற்றில் ஆட்டிப்பது எல்லாம் பெரிய பாவங்கள் என்று

Siddiq Abu2h

அப்படியே டெல்லிலே உட்கார்ந்து இரு தமிழ்நாட்டுக்கு வந்திராத...

Krishnan3h

ஒண்ணுமில்ல , கொஞ்சம் சிவராத்திரி அன்னிக்கு ....

Tamilan kunar3h

தெய்வம்... நின்று...நிதானமாக கொல்லும்.

நலன்3h

சிவனிடம் பேசினேன் பார்வதியிடம் பேசினேன்னு என்று உருட்டுகிறார்கள்,
உடம்பு சரியில்லை என்றால் நேராக ஆஸ்பத்திரி போய் படுத்து விடுகிறார்கள்

KANDASAMY, TIRUPUR3h

ஓவரா குதிச்சு ஆடினா உடம்புக்கு ஆகாது ஜக்கி !!!

Gnani4h

ராத்திரி... சிவராத்திரி... யம்மம்மா...சிவராத்திரி...
கொஞ்ச நஞ்ச டான்ஸ் ஆடுன ....

ஓடு காளி...ஒரே அலப்பறை.
நீ கட்டுன சிவன் சிலைக்கு முன்பு படுக்காம... அப்பல்லோவில் பரிதாபமா படுத்திருக்க...

யானைய கொன்ன பாவம் சும்மா விடுமா... கடவுள்...இல்லடா குமாரு ......
உன் ஆணவம் கன்மம் மாயை...
உன் ம லம் அப்பல்லோவில் ...
மிஸ்டுகால் ... நாங்க கொடுக்கிறோம்...
போய் வர... .என் மண் உன் யாத்திரை ... மண்ணா போவ...

Suri

அடுத்து ஈஷா யோகத்துல இந்த ராதே தான் புது சாமியாரா ஆவாங்களா??அடுத்த மஹாசிவராத்திரி கும்மாளத்துக்கு மிலிந்த் சோமன் , ஜாக்கி ஷராஃப் ..அஜய் தேவ்கன்...சாய்ப் அலி கான் எல்லோரும் இவங்கங்கூட டான்ஸ் ஆடுவாங்களா??

தனக்கு தானே சரிபடுத்திக்கொண்டிருக்கிறாராம்!!!!![”நாங்கள் தரும் சிகிச்சையைவிட அவர் தன்னைத்தானே குணப்படுத்துகிறார்” என்று மருத்துவர் சொன்னதாக ஒரு ஊடகச் செய்தி] அதை டில்லி அப்பொலோ போவாம செய்து இருக்கலாமே?? எப்படி எல்லாம் கம்பிக்கட்டும் கதை சொல்றனுங்க பாருங்க மக்களே!!!!

என்னாது!!!!! மூளை சரியாயிடிச்சா?? அப்போ இது வரை அந்த மூளை சரியில்லாம தான் இவ்ளோ கப்ஸா அடித்துக்கொண்டிருந்தாரா?? அப்போ இனி கப்ஸா அடிக்காம ஒழுங்கா இருந்துப்பாரா??

சத்குரு மிகவிரைவில் நலமுடன் வர ஈசனை வேண்டுகிறேன்...

ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.....

அதிகப்படியான தியானம், பேச்சு, ஜாக்கி தெரிய ஆடிய ஜக்கி என்று ஓவர் ஆட்டம் போட்டதால் ரத்தம் வெளியேறி விட்டது.


ta.oneindia.com இல் வெளியான கருத்துரைகள்:

கொஞ்சம் கஞ்சா வாசனை காமிங்க..துள்ளி குதிச்சு ஆடுவார்..!

சொத்து எப்போது அரசாங்கத்தின் கையில் வரும் என்று சொல்கிறீர்கள்
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்படிதான் முடிவு ஏற்ப்பட்டதாக வரலாறு சொல்கெறது
சேலம் M கல்யாணசுந்தரம் முதல் ஜக்கி வரை

தேர்தல் நேரத்தில் பீசப்பியின் கருப்பு பண சலவை இயந்திரம் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பல பல கேள்விகளை......சந்தேகங்களை ஏற்படுத்துதா இல்லையா மக்களே???

நடிகைகளை கூப்பிட்டு குத்தாட்டம் போட்டு எத்தனை ஆண்களின் பாவத்தை வாங்கியிருப்பார்...ஆண் பாவமும் விடாது...ஆணை (யானை) பாவமும் விடாது..!

அது என்னங்கடா ஈஸாவுக்கும் பதஞ்சலிக்கும் சளி பிடித்தலும் மருத்துவரை தேடி ஓடுறாங்க ஆனா சாதாரண மக்கள் கேன்சர் வியாதி வந்தாலும் இவங்கலை நோக்கி ஓடுறாங்க என்ன தான் நடக்கிறது இந்திய ஒன்றியத்தில்

அதுவும் ஆங்கில மருத்துவரை தேடி ஜக்கி சென்றிருக்கிறார்!!!

போதை தலைக்கேறி போச்சு என்று சொல்வது இதுதான் போல பாண்டில் பண்டிலா கஞ்சா அடிப்பவனை சாமியார் ஆதி யோகி என்று சொல்றாங்க ஆனா அவனுக்கு கஞ்சா சப்பளை செய்தவனை போதை பொருள் கடத்துதல் காரன் என்று சொல்லி கைது செய்றாங்க என்னடா உங்க நியாயம்..... சரி பிஜேபி உடைய ஒரு பினாமி விக்கட் விழப்போகுது வெடி வைத்துக் கொண்டாடுங்க

சிவராத்திரிக்கு குத்தாட்ட கலாச்சாரத்தை உருவாக்கி..சைவத்தை கடைச்சரக்காக்கி சிவனுக்கே பில் போட்டவன்...

சத்குரு மிகவிரைவில் நலமுடன் வர ஈசனை வேண்டுகிறேன்...

ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.....

சீக்கிரம் நல்ல செய்தி வரும்படி செய்ய ஈசனை மனதார வேண்டுகிறேன்!!!! ஓம் நமசிவாய ... ஓம் நமசிவாய...பூமி பாரம் குறையும்....

நாசமா போச்சு போ போதை குறு நலம் பெற வேண்டும் பேதை ஆத்மா போல

ஓவரா கஞ்சா அடிச்சுட்டான் போல...

தமன்னாவை முன்னாடி நிறுத்துனா கசிவு நின்னுடும்..!

தலையில் ஆப்பரேஷன் என்றால் முகத்தில் இருக்கும் முடியை எல்லாம் சவரம் செய்யமாட்டார்களா?? இதுல எதாவது நாடகம் நடக்குதா?? இல்லை எல்லாம் எதாவது சேட்டையா ???

ஈஷா யோகா மூலம் அந்த ரத்த கசிவை அடைந்திருக்க முடியாதா?? சும்மா சந்தேகம் கேட்கிறேன்!!!! ஊருக்கு மட்டும் தான் உபதேசமா??

பதஞ்சலிக்கும் மருத்துவமனியில் சிகிச்சை

பசு சாணத்தையும் பசு கோமியத்தையும் நன்றாக குழைத்து தலையில் கசிவு இருக்கும் இடத்தில் பத்து போட்டு கட்டிவைத்து காயவைத்திருந்தால் சரியாகி இருக்காது??

மஹாசிவராத்திரி அன்று ஓவர் டோஸ் ஆகிவிட்டதா?? OD கேஸ் எதுவும் பதியப்பட்டதா?? அதுக்கு தான் டெல்லிக்கு ஓடிட்டாரா?? இங்கு என்றால் எல்லா உண்மையும் வெளியே வந்திடும் என்று டில்லிக்கு ஓடி மருத்துவம் பார்த்துக்கொள்கிறாரா??

இவனெல்லாம் பூமிக்கு பாரம்... மாமா வேலை செய்யும் ஒரு பவர் ப்ரோக்கர்......வாங்கும் சொத்துக்களை எல்ல்லாம் யார் பெயரில் எழுதி வாங்குகிறார்?? எதற்கு சாமியார் என்று சொல்லிக்கொள்கிறார்?? வெளிநாட்டு மோட்டார் சைக்கிளை மருத்துவமனை கட்டிலுக்கு பக்கத்தில நிறுத்தி வெச்சிருக்கிறாரா??

சேர்த்த பாவம் விட்டுடுமா என்ன?? கர்மா ஒரு பூமராங்!!! கோமியம் குடித்தால் ரத்தக்கசிவு எல்லாம் தானாகவே சரியாகிடும் என்று சொன்னார்களே?? கோமிய வைத்தியம் முயற்சிக்கவில்லையா??

சிவராத்திரி போதை, ஆட்டம் அதிகமாக போய்விட்டதோ?

raak

படைத்த இறைவனை மட்டும் வணங்குவதை விட்டு எப்போ மக்கள், இறைவன் படைப்புகளை மற்றும் சகா மனிதர்களை கடவுள், சாமி, ஆண்டவா, என்று வணங்குவதை விடுகிறார்களோ அப்பொழுது தான் இவனை போன்ற கார்பொரேட் சாமியார்கள் ஒழிவார்கள்.

இறைவன் இது போன்ற எத்தனை உதாரணைகளை காண்பித்தாலும், மக்கள் விழுப்புணர்வு பெறுவதில்லை. எல்லா சாமியார்களும் இறைவன் படைப்பு, அவர்களும் நம்மை போல் தான் பசித்த நேரம் சாப்பிடுவான், தூங்குவான், மலம் கழிப்பான், நோய் வந்தால் மருத்துவமனைக்கு போவான், மற்றும் கடைசியில் நம்மைப்போல் இறந்து போவான்.

சூப்பர்

Raj

ஓய்வின்மை, மனஅழுத்தம் மற்றும் முதுமையால் இது போன்ற உபாதைகள் ஏற்படுவது இயற்கை!!! முதுமையில் பணம் , அதிகாரம் போன்ற உலக பிரகாரமான ஆசைகளை துறந்து, இயற்கையோடு ஓன்றி, இறைவனடி பணிந்து எழுமையாக நன்கு ஓய்வெடுத்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை மரணம் ஏற்படும்!!! இயற்கைக்கு மாறான நவீன வாழ்வில் அதற்கு சாத்தியமே இல்லை!!! இறைவா, இயற்கையை காத்து, இயற்கையொடு ஒன்றி உம்மடி பணிந்து வாழும் அருளை மனிதர்களுக்கு கொடும்!!!

பாவம் எத்தனை மிருகங்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டது இந்த மாமனிதனால்?!!

இந்த இடத்துல மாமனிதன் பட்டம் எல்லாம் தேவையில்லாதது ...

Anbu

மூளையில் ஏன் இரத்தகசிவு ? இவரை நோக்கி ஆரோக்கியத்தை வேண்டி நோயாளிகள் படையெடுக்க இவர் அப்போல்லோ மருத்துவமனைக்கு படையெடுத்தால் எப்படி? இதை தானடா! முன்பு வரை மத்துவமனைக்கு போய் வந்தார்கள்! யோகா நா கா என்று மக்களை ஏமாற்றி வனத்தை அழித்து . பல இந்துக்களை கொன்று - அப்பாவி இந்து பெண்களின் கற்பை சூறையாடி கொஞ்ச நஞ்சமாடா நீ செய்தது? ஆன்மீகத்தின் போர்வையில் அயோக்கியர்களின் கூடாரம் ...

Anbu

எவண்டா அவன் முட்டாள் சங்கிங்களா? அப்பல்லோவில் சேர்த்தது? ஏதாவது ஆசிரமத்தில் சேர்க்காம ... யாகம் பூஜை செய்தால் உயிர் பிழைக்க 100% வாய்ப்புண்டு!

ஜக்கி இட்டிலி சாப்பிட்டார்..

ஹா ஹா ஹா... அடுத்த அம்மா?!! உப்புமா இல்லையா?!!

ஆண்டவா நல்ல செய்தி வரணும்

அனைத்துக்கும் ஆசைப்படு!!!
அம்பானிக்கு அடுத்த இந்தியக் கோடீஸ்வரன்!

                                     *   *   *   *   *

https://www.vikatan.com/health/isha-founder-jaggi-vasudev-admitted-in-apollo-hospital [விகடன், Published:Today at 9 AM].