அவன் ‘அதி தீவிர’ நாத்திகன்.
நெற்றி முழுதும் திருநீறு பூசித் திரியும்
ஆடவர்களைக் கண்டால்
அவன் கண்களில் கோபக் கனல் தெறிக்கும்,
அது மூடநம்பிக்கை என்பதால்.
ஆனாலும்,
அழகான பெண்கள் அவர்களின்
நெற்றிப் பொட்டுக்குச் சற்று மேலே
சின்னஞ் சிறு கீற்றாகத் தீட்டும் திருநீறு
அவனுக்கு மிகவும் பிடிக்கும்,
அவர்களின்
அழகுக்கு அழகு சேர்க்கிறது அது என்பதால்!
*** *** ***
***எப்போதோ ஏதோவொரு பழைய வார இதழில் வாசித்த கவிதை இது. தற்செயலாய் நினைவுக்கு வந்தது. கடின முயற்சிக்குப் பின்னரும் இதை எழுதிய அந்த நாத்திக ஆசிரியன் பெயர் நினைவுக்கு வரவே இல்லை.
வயசு கூடுது. நினைவாற்றல் குறையுது! ஹி... ஹி... ஹி!!!
