எனது படம்
சாதி, மதம், கட்சி என்று எந்தவொன்றின் சார்பும் அடியேனுக்கு இல்லை[விதிவிலக்கு: ‘மொழி & இனம்’ பற்றுகள்]. பிரபலமானவராயினும், அதிக அளவில் அவர் தவறுகள் செய்தால், அவ்வப்போது அவரைக் கண்டித்து எழுதுவது தவிர்க்க இயலாதது. இது ஒரு நடுநிலை வலைப்பதிவனின் கடமையும்கூட.

புதன், 1 ஜூலை, 2026

மதத்தை மறைத்த முதல்வரும் ‘முக்குலத்தோர் புலிப்படை’ கருணாஸ் கொந்தளிப்பும்!

மேற்கண்ட காணொலிகளில், கருணாஸ்[முக்குலத்தோர் புலிப்படை] த.நா.முதல்வரின் மதத்தைக் அடையாளப்படுத்திக் கருத்துத் தெரிவித்தது பெரும் தவறு என்பதாக, பின்னூட்டக்காரர்கள் இவரை மிகக் கடுமையாகவே கண்டித்திருக்கிறார்கள்.

நம்மில் மிகப் பெரும்பாலானவர்களும்கூட கருணாஸுக்கு எதிரான போக்குக்கொண்டவர்களாகவே இருக்கக்கூடும்.

‘விஜய்’ என்னும் பெயர் உடையவராகவே திரைப்படங்களில் நடித்துப் புகழும் பணமும் சம்பாதித்த முதல்வர் விஜய், ‘தவெக’ என்னும் கட்சியைத் தொடங்கியபோதுகூட தன் முழுப் பெயர் ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டதில்லை.

தேர்தலில் மக்களிடம் வாக்குச் சேகரித்தபோது, மறந்தும்கூட தான் ஒரு கிறிஸ்தவன் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை.

தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, மற்ற சில கட்சிகளின் ஆதரவோடு முதல்வராகப் பதவி ஏற்றபோதுதான் விஜய், ‘ஜோசப் விஜய்’ ஆகிறார்.

தான் ஒரு கிறிஸ்தவன் என்பதை அறிந்தால் மக்கள் தன்னை வெறுத்து ஒதுக்குவார்கள் என்னும் பயத்தில் இந்து, இஸ்லாம், இன்ன பிற கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு, நெற்றியில் பொட்டிட்டு, மணிக்கட்டில் மந்திரக் கயிறுகள் கட்டி, வாக்களித்த மக்களிடம் தான் மதங்கள் பலவற்றையும் நேசிப்பவன் என்பதாகக் காட்டிக்கொண்டார்[நம் திடமான நம்பிக்கை].

அதாவது ஒரு வேடதாரியாக வலம்வந்தார் ஜோசப்.

கடுமையாகக் கண்டிக்கத்தக்க மிகப் பெரிய மோசடி இது.

‘ஜோசப்’ சேர்க்காமல் ஒரு ‘விஜய்’ ஆகவே முதல்வராகியிருந்தால், இவரை ஒரு கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி எவரும் குறை சொல்லவோ குற்றம் சுமத்தவோ வாய்ப்பே இல்லை.

ஒரு கிறிஸ்தவராக தேர்தல் களத்தில் இறங்கியிருந்தால், 108 இடங்களில் வெற்றி பெற்றிருப்பாரா என்பதே மக்களில் பலரும் எழுப்பும் கேள்வியாகவும் உள்ளது.

தேர்தலுக்கு முன்பிருந்தே இவர் தன்னை ஒரு கிறிஸ்தவராக அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்று முதல்வர் ஆகியிருந்தால்,  “ஒரு கிறிஸ்தவரா தமிழ்நாட்டை ஆள்வது?” என்று கருணாஸ் கேட்டிருக்கமாட்டார்.

சுருங்கச் சொன்னால், தான் ஒரு கிறிஸ்தவன் என்பதை மூடி மறைத்து, பதவி ஏற்கும்போது, இவர் தன் பெயருடன் அதை[கிறிஸ்தவர்]இணைத்துக்கொண்டது உலகில் இதுவரை இடம்பெறாத அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.