‘விதி’ பற்றிய முற்றிலும் புதுமையானதொரு பார்வை. படியுங்கள். கொஞ்சமேனும் பயன் விளையலாம்.
நாம் விரும்பாதவை, அல்லது எவராலும் விரும்பத்தகாதவை நடந்தால், அவற்றிற்கு ‘விதி’யைக் காரணம் காட்டுகிறோம். தீராத நோயின் தாக்குதல்; எதிர்பாராத சாவு; காதல் தோல்வி என்றிப்படி நிறையச் சொல்லலாம்.
நாம் விரும்பாதவை, அல்லது எவராலும் விரும்பத்தகாதவை நடந்தால், அவற்றிற்கு ‘விதி’யைக் காரணம் காட்டுகிறோம். தீராத நோயின் தாக்குதல்; எதிர்பாராத சாவு; காதல் தோல்வி என்றிப்படி நிறையச் சொல்லலாம்.
நோய்நொடி அண்டாமல் முழு உடல்நலத்துடன் வாழவே நாம் விரும்புகிறோம். கொடிய நோய்கள் நம்மைத் தாக்கும்போது விதியை நொந்துகொள்கிறோம். நம்மைப் படைத்து மண்ணில் வாழப் பணித்தவர் கடவுள் எனின், நோய்களையும் படைத்து[படைப்பாளி அவர் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்க] நம் மீது தாக்குதல் தொடுப்பவர் அவரே என்பதால் நம் வாழ்வில் ‘விதி’ புகுந்தது எப்படி?
காதல், காமம், ஆசை, பாசம், நேசம், பொறாமை என்று விதம் விதமான உணர்ச்சிகளுடன் நம்மை நிலவுலகில் உலவவிட்டவரும் கடவுளே. உணர்ச்சிகளுடன் போராடுவதோடு உணர்ச்சியுள்ள மனிதர்களுடனும் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க இயலாதவை. வெற்றியைத் தழுவும்போது கடவுளைப் போற்றுவதும் தோற்கும்போது விதியைக் காரணம் காட்டுவதும் அறியாமையின் உச்சமல்லவா?
நிலநடுக்கங்களையும் சுனாமிகளையும், பஞ்சம், தீராத வறுமை போன்றவற்றையும் கோரத்தாண்டவம் ஆடவிட்டுப் பல்லாயிரக் கணக்கில் உயிர்களைச் சாகடிப்பவர் கடவுளாக இருக்கையில், கண்ணுக்குத் தெரியாத விதியைக் காரணம் ஆக்குவது விந்தையிலும் விந்தையல்லவா!?
புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்கியவர் கடவுள். இதன் விளைவு.....
வெடி விபத்து, வாகன விபத்து என்று வகை வகையான விபத்துகளில் சிக்கி, வகைதொகையின்றிச் செத்துத் தொலைக்கிறான் மனிதன். விபத்துகளுக்கு மூலகாரணமான கடவுளைப் புறந்தள்ளி, விதியே விபத்துகளுக்குக் காரணம் என்பது அறிவுடைமை அல்லவே!
“நான் மனதாலும் பிறருக்குக் கெடுதல் நினைத்ததில்லை. எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்? எல்லாம் என் தலைவிதி...விதி” என்று நாளும் புலம்புவோர் நம்மில் கணக்கிலடங்காதவர். விதியை வகுத்தவர் கடவுள்[என்று சொல்லப்படுபவர்] என்கிறார்கள். எல்லாம் கடவுளே என்னும்போது, ‘விதி’ என்ற ஒன்று எதற்கு?
“அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாயிற்றே, அவனா எனக்குத் துரோகம் செய்தான்? நம்ப முடியல. எல்லாம் விதியின் விளையாட்டு” என்று மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கலங்கும் மாந்தர் நம்மில் மிகப்பலர். கடவுளின் படைப்பில், ரொம்ப ரொம்ப நல்லவனும் இல்லை; ரொம்ப ரொம்பக் கெட்டவனும் இல்லை என்பதை மறந்துவிட்டு, இல்லாத விதியின் மீது பழி போடுவது தவறல்லவா? இவ்வாறாக.....
நல்லவை நடந்தால் கடவுளைத் துதி பாடுவதும், அல்லவை விளைந்தால் அவரை நிந்திக்க மறுத்து, சாத்தானைச் சாடுவதையும், விதியை நொந்துகொள்வதையும் வழக்கம் ஆக்கிக்கொண்டார்கள் மனிதர்கள்.
இது எத்தனை பெரிய தவறு?
இந்தத் தவற்றை இவர்கள் தெரிந்தே செய்கிறார்களா, செய்யும்படிக் கடவுள் தூண்டுகிறாரா?!
பதில் தெரிந்தவர் யார்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் பறவைப் படம் பார்த்ததும் என் ஒரு போஸ்ட் நினைவு வந்துவிட்டது... நேரம் இருப்பின் பார்த்து அழுங்கோ விதியை நினைச்சு ஹா ஹா ஹா:)..
http://gokisha.blogspot.com/2012/02/blog-post_24.html
http://gokisha.blogspot.com/2012/02/blog-post_24.html
Friday, 24 February 2012
‘அதிரா’ வின் கீழ்க்காணும் பதிவை வாசித்து நீங்களும் அழலாம்.....பாரம்மா பறவைக்கும் பாசங்கள்..இருக்கின்றது..
அதைப் பார்த்த ஆண் பறவை, ஓடிச்சென்று, உணவெடுத்து வந்து ஊட்டுகின்றது..
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது, பறந்தோடி இரைதேடி, துணைக்குக் கொடுக்கின்றது....
மீண்டும் ஓடிச்சென்று உணவெடுத்து வந்த வேளை, பெண்பறவை பிரிந்துவிட்டது... திகைத்து நிற்கிறது ஆண்பறவை..
கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....
அழுதழுது, பெண்ணைத் தட்டி எழுப்ப முயல்கின்றது....
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை.... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்ன்..
சத்தமாக அழுது கூப்பிடுகின்றது...
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((
எதுவுமே பண்ண முடியாமல் உரக்க ஓலமிடுகின்றது தனித்துவிட்ட ஆண் பறவை:(((
இறைவா... உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு... எனக்கென இருந்தது ஒரு விளக்கு... இதனுடந்தானா உன் வழக்கு:((((
பின் இணைப்பு:
Millions of people cried after seeing these photos in America, Europe, Australia , and even India . The photographer sold these pictures for a nominal fee to the most famous newspaper in France . All copies of that edition were sold out on the day these pictures were published.
இது எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு வந்திருந்தது, பார்த்ததும், மீண்டும் பார்க்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டேன்... இன்று போடலாமே, விலங்குகளின் பாசத்தை மனிதர்களும் உணர்வோமே, ஏதோ நாம் மட்டும்தான் அன்பில், பாசத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம், விலங்குகளின், பறவைகளின் பாசத்தை உணர்ந்தாலும், அதை நாம் பெரிது படுத்துவதில்லை, ஆனால் இதைப் பார்த்ததும், இதயம் கரைந்துவிடுகிறது... நீங்களும் பாருங்கோ....
காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித்துவிட்டது..., நடக்க முடியாமல், கரையை நோக்கி தவழ முயற்சிக்கிறது....
விதி செய்த சதியோ அத்தான்...
அதைப் பார்த்த ஆண் பறவை, ஓடிச்சென்று, உணவெடுத்து வந்து ஊட்டுகின்றது..
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது, பறந்தோடி இரைதேடி, துணைக்குக் கொடுக்கின்றது....
மீண்டும் ஓடிச்சென்று உணவெடுத்து வந்த வேளை, பெண்பறவை பிரிந்துவிட்டது... திகைத்து நிற்கிறது ஆண்பறவை..
கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை.... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்ன்..
சத்தமாக அழுது கூப்பிடுகின்றது...
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((
எதுவுமே பண்ண முடியாமல் உரக்க ஓலமிடுகின்றது தனித்துவிட்ட ஆண் பறவை:(((
இறைவா... உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு... எனக்கென இருந்தது ஒரு விளக்கு... இதனுடந்தானா உன் வழக்கு:((((
பின் இணைப்பு:
Millions of people cried after seeing these photos in America, Europe, Australia , and even India . The photographer sold these pictures for a nominal fee to the most famous newspaper in France . All copies of that edition were sold out on the day these pictures were published.
இறைவன் உண்டு என்போருக்கு விதியின் மீது(ம்) நம்பிக்கை விழுந்து பரமசிவனும்
பதிலளிநீக்குபார்வதியும், பரமசிவனும் யார் பெருசு என்ற ஈகோவில் சண்டை வந்து பிரிந்ததையே விதியின் அமைப்பு என்று ஜாதகம் சொன்னவர்கள் நம்மவர்கள்.
பாராட்டுவதற்கு இறைவன். பழிபோடுவதற்கு விதி!
நீக்குநன்றி நண்பரே.
//பார்வதியும், பரமசிவனும் யார் பெருசு என்ற ஈகோவில் சண்டை வந்து பிரிந்ததையே விதியின் அமைப்பு என்று ஜாதகம் சொன்னவர்கள் நம்மவர்கள்.//
நீக்குஆக, கடவுளைக் காட்டிலும் விதி பெரியது!!!
கதை சொன்னவன் மகா புத்திசாலி!!!
இக்கதையின்படி பார்த்தால் நீங்கள் சொல்வதே சரி
நீக்குகதை கேட்டு, கதை கேட்டு வளர்ந்தது நம்நாடு.
நன்றி...நன்றி.
நீக்குவிழுந்து விடுகிறது என்று படிக்கவும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகடவுளும் விதியும் ஒன்றே.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வருகை தந்து, தங்களின் அனுபவ அறிவையும் பகிர்ந்துள்ளீர்கள்.
நீக்குமிக்க நன்றிங்க.
//போராட்டத்தில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க இயலாதவை. வெற்றியைத் தழுவும்போது கடவுளைப் போற்றுவதும் தோற்கும்போது விதியைக் காரணம் காட்டுவதும்///
பதிலளிநீக்குஹா ஹா ஹா நான் விதி எனவும் நினைப்பேன்ன் ஆனா கடவுளும் நல்ல திட்டு வாங்குவார் என்னிடம்ம் அப்பப்ப:)..
அதிரா திட்டினால் அது ரசிக்கும்படியாக இருக்கும். கடவுள் கோபிக்க மாட்டார்!
நீக்குஉண்மையைத்தான் சொல்றீங்க.. உங்களுக்கு இருக்கும் கேள்விகள்தான் பெரும்பாலானவரிடமும் இருக்கிறது..
பதிலளிநீக்கு//விதியை வகுத்தவர் கடவுள்[என்று சொல்லப்படுபவர்] என்கிறார்கள். எல்லாம் கடவுளே என்னும்போது, ‘விதி’ என்ற ஒன்று எதற்கு?
///
நியாயமான கேள்வி தான், விதி என்பது கடவுளாலும் முடியாத ஒன்று என்கின்றனர் சிலர் ஹா ஹா ஹா.. அதையும் தாஆஆஆஆஆண்டியதாம்..:) ஹா ஹா ஹா கடவுளை நாம் வெறுத்திடக்கூடாது என்பதற்காகவே ..விதி என்ற ஒன்றை உருவாக்கினார்களோ என்னமோ... கண்ணதாசன் சொல்றார்..
“விதி என்பது நடக்கப்போகும் ஒன்றுக்கு கடவுள் அமைத்த வழி, நடந்து விட்ட ஒன்றுக்கு மனிதன் போட்ட முத்திரை என”..
அறிவுப்பசி வேணும் தானும் இருப்பினும் இப்படியா???? அறிவுப்பசி ஜி?:)
தான் உணர்ந்ததை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் உணர்ச்சிமிகு கவிஞன் கண்ணதாசன். அவன் படைப்புகள் மக்களைச் சென்றடைவதற்கு இது முக்கிய காரணம்.
நீக்கு//அறிவுப்பசி வேணும் தானும் இருப்பினும் இப்படியா????//
பசி கட்டுக்கடங்காமல் போனால் பேச்சில் தெளிவிருக்காது. மனதில் பட்டதையெல்லாம் உளறி வைத்திருக்கிறேன். தவறு காண்பவர்கள் பொறுத்துக்கொள்வார்கள்தானே?
மிக்க நன்றி அதிரா.
உங்கள் பறவைப் படம் பார்த்ததும் என் ஒரு போஸ்ட் நினைவு வந்துவிட்டது... நேரம் இருப்பின் பார்த்து அழுங்கோ விதியை நினைச்சு ஹா ஹா ஹா:)..
பதிலளிநீக்குhttp://gokisha.blogspot.com/2012/02/blog-post_24.html
கண்ணீர் விடவில்லை. ஆனாலும், இணைப் பறவை படும்பாடு மனதை உலுக்கிவிட்டது. மற்றவர்களும் அழட்டுமே என்று என் பதிவோடு இணைத்திருக்கிறேன்.
நீக்குநான் இணைத்துள்ள படம் கூகுளில், ‘crying bird' என்றெழுதிக் ‘கிளிக்’ செய்தபோது கிடைத்தது.
மீண்டும் நன்றி அதிரா.
ஆஆஆவ்வ் நான் இப்பக்கம் வந்து பலமுறை ரி ஃபிறெஸ் பண்ணினேன்ன்.. இது என் பக்கமா இல்லை அறிவுப்பசி ஜி பக்கமா எனும் சந்தேகத்தில்.. மிக்க நன்றி இணைச்சமைக்கு.. மிகவும் மகிழ்ச்சியாக.. சிரிச்சுக்கொண்டே போகிறேன் அழாமல்:). ஹா ஹா ஹா:).
நீக்குஉங்கள் பதிவையும் அதிராவின் பதிவையும் ரசித்தேன் :)
பதிலளிநீக்குஇப்படிப் பட்ட பைத்தியக் கார விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பவன் பெயர் இறைவனாம் :)
மிக்க நன்றி பகவான்ஜி.
நீக்குவிதி என்ற ஒன்று இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை பசி ஐயா :)
பதிலளிநீக்குதினமும் வித்தியாசமான கோணங்களில் சிந்திக்கும் உங்கள் அறிவை வியக்கிறேன்
உங்கள் புகழ்மொழி என்னை ரொம்பவே சங்கடப்படுத்துது. இருப்பினும்.....
நீக்குமிக்க நன்றி றஜீவன்.
உங்கள் தளத்துக்குப் பதிவுகளை வாசித்துக் கருத்துச் சொல்லாதது என் நெஞ்சை உறுத்திகிட்டே இருக்கு.