எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஏனுங்க, இந்த மனித மரங்களை நட்டவர் யாருங்க? எங்கே போய்த்தொலைந்தார்?!

‘மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் படைத்தவன் கடவுள். அவனைத் தொழுதால் துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழலாம். தொழுகிறோமோ அல்லவோ, அவன் நம்மைப் பாதுகாத்து வாழ வைப்பான்’ என்னும் பொருள்பட, “மரம் நட்டவன் நீர் பாய்ச்சுவான்" என்று அவதாரங்களும் ஞானிகளும் சொன்னதாகச் சொல்லித் திரியும் பக்திமான்களே, கீழ்க்காணும் செய்தியை[நகல் பதிவு] வாசியுங்கள்.
மரம் நட்டவன் இந்த மானுட மரங்களுக்கான வித்துகளின் தரத்தைச் சோதிக்கவில்லை; சோதித்து அவற்றை மேம்படுத்தியிருத்தல் வேண்டும். அதையும் செய்யவில்லை; அவற்றைக் கன்றுகளாக்கிப் பூமியில் நட்ட பிறகும் சரியாகப் பராமரிக்கவில்லை; வளரும்போதும் எரு சேர்த்து முறையாக நீர் பாய்ச்சவில்லை.

தனக்குரிய கடமைகளை ‘அவன்’ சரியாகச் செய்திருந்தால், தாய் மரம் குறையுள்ள பிள்ளைகளைப் பிரசவித்திருக்காது.

ஏதோ தவறு நேர்ந்து தொலைத்தது என்றால்.....

இவை உயிர் பிழைத்திருக்கும்வரையில் போதுமான நீர் பாய்ச்சுவது தவிர்க்கவே கூடாதது. இது நட்டவனின் கடமையும்கூட. அவன் அதைச் செய்யவில்லை.

மூன்றும்[தாயும் சேய்களும்] ஒருசேரக் கருகிவிட்டன.

இவ்வாறாக, படைக்கப்பட்டுப் போதிய பராமரிப்பில்லாமல் பட்டுப்போகும் மரங்களின், அதாவது மனிதர்களை உள்ளடக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

கடவுளாம் கடவுள்.

அவர் எதற்கு? “எல்லாமே இயற்கை நிகழ்வுகள்; அவை நீண்ட நெடுங்கால ஆய்வுக்குரியவை” என்னும் படைப்பு குறித்தக் கருத்தாக்கத்தை ஏற்றால், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைத் திணிப்பது நிகழவே நிகழாது.