எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 12 மே, 2015

உயிர்கள் உறங்கலாம். நீதி உறங்கலாமா?

‘என் மீதான வழக்கில் சதியும் விதியும் சதிராடியதால் இடையில் நீதி உறங்கிவிட்டது’ - அம்மா.

உண்மை...உண்மை...உண்மை. 

நீதி உறங்கியதால், நடக்கக்கூடாத எதுவெல்லாமோ நடந்துவிட்டது. 

மற்ற உயிர்களைப் போலவே மனிதனும் உறங்குகிறான்; மனித வடிவில் வாழும் நீதியரசர்களும் உறங்குகிறார்கள்; கடவுளின் ஓர் அம்சமான நீதியும் உறங்கியிருக்கிறது. 

உறங்கிய நீதி இப்போது விழித்தெழுந்துவிட்டது. இருப்பினும், விழித்துவிட்ட அது,  மறுபடியும் உறங்கிவிடக்கூடும் அல்லவா?

கூடாது. இனி ஒருமுறை நீதி உறங்கிவிடக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்துவது கடவுளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று. அது கடவுளின் கடமையும்கூட.

“கடவுளே, இனி ஒரு முறை நீதியை உறங்கவிட்டு வேடிக்கை பார்க்காதே. எங்கள் இதயம் உடைந்து சிதறிவிடும்!”


=============================================================================================