எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 30 ஜூலை, 2025

‘ஐசியூ’வில் பாகிஸ்தான்... “ஆஸாத் காஷ்மீரை மீட்பதற்கான அரிய தருணம் இது மோடிஜி”...

//பாகிஸ்தான் இன்னும் ஐசியூ[ICU]வில்தான் உள்ளது என்றும் இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பதுதான் என்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர்[PM Modi Speech on Operation Sindoor] மீதான விவாதத்தின்போது கூறினார்//[செய்தி]*

‘பாகிஸ்தான் ‘ஐசியூ’வில் உள்ளது என்றால், அந்த நாட்டின் முப்படைகளும் ‘ஐசியூ’வில் உள்ளன என்று கொள்ளலாம். மோடிஜி இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தப் பாகிஸ்தானையே அழித்து மண்ணோடு மண்ணாக்கியிருக்கலாம். மிகு கருணை நெஞ்சினர் என்பதால் அவர் இதைச் செய்யவில்லை.

மோடிஜியை மனதாரப் புகழ்ந்து போற்றுவோம்.


அதே வேளையில், நாடு சுதந்திரம் பெற்ற சூட்டோடு, பாகிஸ்தானியன் நம்மிடமிருந்து கைப்பற்றிய ‘ஆசாத் காஷ்மீர்’[Azad Kashmir]ஐ தலைவர் மோடி மீட்டெடுத்திருக்கலாம்.

நம் மக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்த நம் தலைவரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இப்போதும் ‘ஐசியூ’விலேயே இருப்பதால், நம் படைகளை[சில நூறு வீரர்கள் போதும்] அனுப்பி, ‘கத்தியின்றி ரத்தமின்றி’ ஆஸாத் காஷ்மீரை மீட்டெடுப்பதோடு[தேவையெனின் நண்பர் டிரம்ப்பிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்], இந்த வரலாற்றுச் சாதனையை மோடிஜி பாரத மாதாஜிக்கு அர்ப்பணிக்கலாம்; அர்ப்பணித்திட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!

                                                          *   *   *   *   *

*https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-said-on-operation-sindoor-debate-pakistan-still-in-icu-and-india-aim-is-to-destroy-terrorists/articleshow/122977873.cms