வியாழன், 9 ஏப்ரல், 2026

சாமிநாதனால்[முருகன்] கைவிடப்பட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!!!

விதம் விதமாகக் கடவுள்களைப் படைத்தும், கண்ட கண்ட இடங்களிலெல்லாம்[திருப்பரங்குன்றம் உட்பட] கோயில்கள் கட்டிப் பிரச்சினைகளை உருவாக்கி, கலவரங்களைத் தூண்டி உயிர்களைப் பலி கொடுப்பதும், நேரத்தை வீணடிப்பதும் காலங்காலமாய் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு ஆகும்.

நீதிபதிகளும் மனிதர்களே.

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டும் தீவிரம் அது தொடர்பான வழக்குக்கென்றே தன்னை அர்ப்பணித்துள்ளாரோ என்று சந்தேகப்படத் தூண்டுகிறது.

இதைப் பலரறிய ஒருவர் சொன்னால், நீதிபதியாகிய தன்னை அவமதித்ததாக வழக்குப் பதிந்து, சொல்பவரை அலைக்கழிப்பார் நீதிபதி சாமிநாதன்.

முருகன்[இருந்தால்] அருளாலோ என்னவோ எவரோ சொல்ல நினைத்ததை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், "நீதிபதிகளுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்டுக் கண்டித்து அவர்கள் வழங்கியதொரு தீர்ப்பு எதிரொலித்திருக்கிறது.

மக்கள் சார்பாக அவர்களைப் பாராட்டுகிறோம்; அவர்களின் நடுநிலை உணர்வைப் போற்றுகிறோம்.

                                  *   *   *   *   *

***//திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி, கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் லாபம் அடைய இதையே வேலையாக வைத்துள்ளீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு வேறு இல்லையா என்றும் காட்டமாகக் கேள்விகள் எழுப்பியதோடு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்// -https://www.dailythanthi.com/news/tamilnadu/are-there-no-other-issues-besides-thiruparankundram-judges-express-displeasure-with-petitione