வியாழன், 2 ஜூலை, 2026

‘அதிமுக’ துரோகிகளும் அசிங்கப்படுத்திய தரணி புகழ் ‘தவெக’ தலைவர் ஜோசப்பும்!

சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்(தவெக) இணைந்துள்ளனர்[விழாவில் விஜய் பங்கேற்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிகழ்வில் ‘தவெக’ பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்[செய்தி].

அதிமுக ஆட்சியில் கோடி கோடியாய்க் கொள்ளையடித்த கேடிகளை, ‘தவெக’வில் இணைக்கும் விழாவில் தன்னிகரில்லாத் தலைவரும் த.நா.முதல்வருமான ஜோசப் கலந்துகொள்ளாதது நமக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

அறுதிப் பெரும்பான்மை இல்லாததால்தான்[107 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்] உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளைத் ‘தவெக’வில் இணைத்துக்கொள்கிறோம். ஆனாலும், என் தலைமையில் அது நிகழக்கூடாது என்பதால்தான் அதில் நான் கலந்துகொள்ளவில்லை” என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் ஜோசப்புக்கு நம் பாராட்டுகள்!
***காணொலி[அறப்போர் இயக்கம்]: