வெள்ளி, 15 மார்ச், 2013

காதலில் தோற்றவர்களுக்காக ஒரு [காமக்] கதை!

”இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெற்றவர்களை வெறுத்தாய்!? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்!?” என்று மனசாட்சி கேட்டது.

கதைத் தலைப்பு:           அதுக்கப்புறம்.....

அவனும் அவளும் உயிருக்குயிராய்க் காதலித்தார்கள்.

இருவர் வீட்டிலும் எதிர்ப்பு; கண்டிப்பு; கொலை மிரட்டல்!

"விஷம் குடித்துச் செத்துப் போகலாம்” என்றாள் அவள்.

”என்னுடைய முடிவும் அதுதான்” என்றான் அவன்.

நகரின் ஒதுக்குப் புறமான ஒரு விடுதியைத் தேடிப் போய் அறை எடுத்துத் தங்கினார்கள்.

“அடுத்த பிறவியிலாவது எங்களை இணைத்து வை ஆண்டவனே.” என்று இருவரும் கண்ணீர் விட்டுக் கடவுளை வேண்டிக்கொண்டார்கள்.

சாவதற்கு முன் அவன் அவளை ஆசை தீரப் பார்த்தான்; அவளும் பார்த்தாள்.

ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக் கொண்டே இருந்தார்கள்.

இருவர் கண்களிலும் வற்றாத அருவியாய்க் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

அவள் கண்ணீரை இவனும் இவன் கண்ணீரை அவளும் துடைத்தபோது இருவருக்குமே மேனி சிலிர்த்தது. தணியாத தாபத்துடன் இறுக அணைத்துக் கொண்டார்கள்.

வெறி கொண்டு அழுத்தமான முத்தங்களைப் பரிமாறினார்கள்.

உருண்டார்கள்; புரண்டார்கள்.

ஈருடல் ஓருடல் ஆயிற்று. திட்டமிடல் இன்றியே ’புணர்ச்சி’ இன்பம் துய்த்தார்கள்; ’எல்லாமே’ ஒரு சில நிமிடங்கள்தான். இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.

மவுனம் சுமந்தார்கள்.

”இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெத்து வளர்த்தவங்களை வெறுத்தாய்? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்?  காதல் காதல்னு நாயாய் அலைந்தாய்?” என்று அவன் மனசாட்சி கேள்விகள் கேட்டு அவனை வாட்டி வதைத்தது.

அவள் பக்கம் திரும்பி, குனிந்த தலையுடன், ”என்னை மன்னிச்சுடு” என்றான்.

“ஏன்? எதற்கு?” என்றெல்லாம் அவள் கேள்வி எழுப்பவில்லை.

அவளுக்குத் தெரிந்திருந்தது, ‘அந்தச் சில நிமிடங்கள்’ கழிந்ததும், அவன் தன் மீது கொண்டிருந்த காதல் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று.

”வா போகலாம்” என்று எழுந்து நடந்தான் அவன். அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

விடுதியை விட்டு வெளியேறியதும், இருவரும் வேறு வேறு திசையில் நடந்தார்கள்.

அவர்கள் வாங்கிவந்திருந்த விஷப்புட்டி திறக்கப்படாமலே, அவர்கள் தங்கியிருந்த அறையின் ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடந்தது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முக்கிய குறிப்பு: காதல் தெய்வீகமானது என்று நீங்கள் நம்புபவராக இருந்து, என்னைத் திட்ட நினைத்தால் கொஞ்சம் நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இது என் அன்பு வேண்டுகோள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++














11 கருத்துகள்:

  1. நன்றி தனபாலன்.

    “கதைதானா.....?” என்று கேட்கிறீர்கள்.

    இது நம் நாட்டில் அவ்வப்போது நடக்கும் கதைதான்!

    நாம் அறிந்தவை சில. அறியாதவை பல.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்
    காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  3. என் ராஜபாட்டை ராஜாவுக்கு,

    என் மனப்பூர்வ நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன் வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  5. சீனு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    தங்களின் வலைச்சரத்தில் எனக்கும் ஓர் இடம்! பெருமைப்படுகிறேன்.

    தங்கள் வருகையும் வாழ்த்தும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆண்களை பொருத்தவரை காதல் என்பது இவ்வளவுதான் (பெரும்பான்மையாக).

    பெண்களுடைய காதலை பற்றி தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. அண்ணே உண்மைய சொல்லி இருக்கீங்க இதுக்கு யாரு உங்கள திட்ட போற

    பதிலளிநீக்கு