//கூத்தாடி விஜய் திருவாரூருக்கு வந்தாராம். இந்தக் கோடிகளில் புரளும் குபேரனை வரவேற்கும் விதமாகக் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்தார்களாம் ‘தவெக’ நிர்வாகிகள். தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி விஜய் இதைப் பெற்றுக்கொண்டாராம்//[பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத ஊடகக்காரன்கள் வெளியிட்ட செய்திகளில் இதுவும் ஒன்று].
விசிலடிச்சான் குஞ்சுகள் எழுப்பும் ஆரவாரங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே, அந்தரத்தில் போடப்பட்ட அதி பிரமாண்ட மேடையில், தடியன்களின் பாதுகாப்புடன் ஆனந்தத்தில் துள்ளி நடைபயிலும் நடிகனுக்கு இது தெரியும்தானே?
பார்வையாளருக்குக் குனிந்து குனிந்து கும்பிடு போட்டுக் கையசைக்கும் இந்த அதிரடி அரசியல்வாதிக்கு, தெருவோரங்களில் கையேந்திக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண்ணில் பட்டதே இல்லையா?
வெற்று ஆடம்பரத்துக்காக வீணடித்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை[மொத்தச் செலவையும் கணக்கிட்டால் அது கோடியைத் தாண்டக்கூடும்]ஊரூராய்ச் சென்று, பட்டினியில் வாடும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்திருந்தால், அவை அவர்களின் ஒரு நாள் பசி தணியப் பயன்பட்டிருக்கும்.
இது ஏன் இந்தப் புதுரகப் புரட்சித் தலைவனின் புத்தியில் உறைக்கவில்லை?
மக்களை ஏமாற்றிக் கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கென்றே இங்கு எவனெவனோ அரசியலுக்கு வருகிறான். அவன்களின் நடிப்பில் புத்தியையும் தன்மானத்தையும் இழப்பதே காட்டுமிராண்டித் தமிழனுக்கு வழக்கமாகிப்போனது!
* * * * *


