அரசன் என்ன ஆண்டி என்ன, செத்த பிறகு புழுத்து நாறும் ஊத்தை உடம்புதான் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும்.
விரைவில் அதை எரித்துச் சாம்பலாக்குவதோ, குழி தோண்டிப் புதைப்பதோ புத்திசாலித்தனம்.
ஆனால், சடலத்திலிருந்து ஆவியோ ஆன்மாவோ வெளியேறுவதாக நம்பிச் சடங்குகள் செய்யும் வழக்கம் எல்லா மதத்தவரிடமும் உண்டு.
அவரவர் வாழ்க்கை வசதிகளுக்கேற்ப இந்த மூடப்பழக்கத்தின் எண்ணிக்கை கூடும், அல்லது குறையும்.
இங்கிலாந்து நாட்டு மன்னர் பரம்பரையினர் நோய்வாய்ப்பட்டுச் சாவைத் தழுவுவது உறுதியானால், அவர்களுக்குச் செய்யும் சடங்குகள் குறித்து அவர்களிடமே அங்கீகாரம் பெறுவது இன்றளவும் நீடிக்கும் விசித்திரமான மூடப்பழக்கம்.
//புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் 77 வயதாகும் மூன்றாம் சார்லஸ் மன்னர்[இங்கிலாந்து], தன்னுடைய இறுதிச் சடங்கிற்கான[செத்த பிறகு] திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே அங்கீகரித்துள்ளார்.
இறுதிச் சடங்குகள் சுமார் 10 அல்லது 11 நாட்கள் நீடிக்கும். குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவரது உடலைப் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரகசியமாக[?]க் கொண்டுசெல்வார்கள்[இவை குறிப்பிடத்தக்கவை. கூடுதல் சடங்குகள் குறித்து அறியக் கீழுள்ள முகவரி*க்குச் செல்க]//.
“இருக்கும்வரைதான் ஏற்றத்தாழ்வுகள்! செத்தொழிந்த பிறகு அரசனென்ன ஆண்டியென்ன?” என்று கேட்கத்தோன்றுகிறது.
* * * * *

