சனி, 31 அக்டோபர், 2020

இலவசம்!...ஆடு, மாடு...பின்னே கடவுள்!!!

[மனிதகுலத்தின் முதல் தேவை மனிதாபிமானம்]

இன்று[31.10.2020] பிற்பகல் 02.15 மணிக்கு 'பாலிமர்' தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

வேறு வேறு செய்திகளுக்கிடையே, 'திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவசத் தரிசனம். அனுமதிச் சீட்டு வாங்க முண்டியடிக்கும் பக்தர்கள்' என்னும் செய்தியும் இடம்பெற்றிருந்தது. அதற்கான பின்னணி நிகழ்வும் திரையில் காட்டப்பட்டது.

கடவுள் எனப்படுபவர்தான் உயிர்களைப் படைத்தார் என்றால், அவரால் உயிர்கள் பெறும் இன்பங்களைக் காட்டிலும் பெறும் துன்பங்களின் அளவு மிக மிக மிகப் பல மடங்கு அதிகம் என்னும் பகுத்தறிவாளரின் கூற்றை நம்மவரில் பலரும் உணரும் நிலையில் இல்லை.

அவரை வழிபடுவதாலோ, நேர்ந்துகொள்வதாலோ, கோயில்களில் குடியேற்றி விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவதாலோ எந்தவொரு பயனும் இல்லை என்று நற்சிந்தனையாளர்கள் சொல்வதை இந்த மானுட ஜாதியாரில் பெரும்பாலோர் நம்பத் தயாராயில்லை.

காலங்காலமாய்ப் பல கொள்ளை நோய்களின் தாக்குதலில் கொத்துக் கொத்தாய்ப் பல லட்சம் பேர் பலியான போதெல்லாம் கடவுள்[கள்] என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கும் துணிவு எந்தவொரு பக்தனுக்கும் இல்லை.

இன்றளவில், கொரோனா கொடுந்தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் படும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தும், புற்றீசல்களாய்க் கோயில்களை நோக்கிப் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

'கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை முதலில் கோயில்களுக்கு அனுப்புவோம். கடவுள் குணப்படுத்துகிறாரா பார்ப்போம்' என்று சொல்லும் துணிவு எவருக்குமே இல்லை என்பது பரிதாபம்.

முற்றுப்பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களே இந்தக் கற்பனைக் கடவுள்கள்தான். இதை உணராதவரை இந்த மனித ஜாதி திருந்தப்போவதில்லை.

அடுத்தடுத்துப் பல கொரோனாக்கள் தாக்குதல் தொடுத்தாலும், கடவுளி[களி]ன் காலடிகளில் கிடந்து புலம்பும் அறியாமையிலிருந்து இவர்கள் விடுபடுவது இப்போதைக்கு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நோயற்றவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவலாம். வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். முடிந்தவரை பண உதவி செய்து ஆட்சியாளரையும் அறிவியல் அறிஞரையும் ஊக்குவிக்கலாம். கடவுளுக்காக நேரத்தையும் பொருளையும் வீணடிக்காமல் இவை போன்ற நல்ல செயல்களில் மனதைச் செலுத்தினால் மட்டுமே மனித ஜாதி உருப்படும் என்பது உறுதி.

ஏழுமலையான் கோயிலில் எனக்கு மிக மிக மிகப் பிடித்தது இது மட்டுமே! ஹி...ஹி...ஹி!!
=========================================================================


வெள்ளி, 30 அக்டோபர், 2020

"ஆன்மா எங்கே?"..."இதோ இங்கே!"[சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும் பதிவு]

ழக்கம்போல அன்று மாலை, திரு.வி.க.பூங்காவில் காற்று வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு நடுத்தர வயது ஆள் என்னருகே வந்து அமர்ந்தார்.

நான் பார்த்தும் பார்க்காதது போல் நோட்டமிட்டதில், அந்த ஆள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், “ஆன்மா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார்.

“எனக்கு எதுவும் தெரியாது” என்றேன் நான்.

"எதுவுமே தெரியாதா?” -மிதமிஞ்சிய வியப்புடன் கேட்டார்.

"தெரியலேன்னா என்ன நஷ்டம்?” -இது நான்.

“ஆன்மா, அழிவில்லாதது. அழிஞ்சி போற உடம்பிலிருந்து விடுதலையாகிப் புதிய புதிய பிறவிகள் எடுக்கும்; நம்ம கர்ம வினைக்கேற்ப இன்பதுன்பங்களை அனுபவிச்சிட்டே இருக்கும். இது புரிஞ்சாத்தான், நாம் ஒவ்வொரு பிறவியிலும் நல்ல காரியங்கள் செஞ்சி புண்ணியம் சேர்த்துப் பிறவிகளிலிருந்து விடுதலை பெற்று, இறைவன் திருவடியில் ஐக்கியம் ஆக முடியும்.”

“ஆன்மா’ன்னு ஒன்னு இருக்கிறதை எப்படி நம்புறது?” -கேட்டேன்.

“நான் சொல்றேன்” என்றவர், என்னுடைய கையைப் பற்றி, "இந்தக் கை யாருடையது?” என்றார்.

“என்னுடையதுதான்.”

“இந்தக் கால்?” -என் காலைத் தொட்டார்.

“இதுவும் என்னுடையதுதான்.”

“தலை உங்களுடையது. உள்ளே இருக்கிற மூளை?”

சலிப்புடன், “என்னுடையதே” என்றேன்.

எழுந்து, எனக்கு எதிரே நின்று, “இந்த உடம்பு?” என்றார்.

எரிச்சலுடன்,  "என்னுடைய உடம்புதான்” என்றேன்.

“இப்படிச் சொன்னது யாரு?”

“நான்தான்.”

“என் கை, என் கால், என் மூளை, 'என் உடம்பு’ன்னெல்லாம் நீங்க சொல்றதிலிருந்தே உங்களுடைய அங்கங்களும் ஒட்டு மொத்த உடம்பும் வேறு; நீங்க வேறுன்னு புரியுதில்லையா? சொன்னது யார்னு கேட்டப்போ, ‘என் வாய்’னு சொல்லாம, ‘நான்’னு சொன்னீங்க இல்லையா, அந்த ‘நான்’தான் ஆன்மா.”

நான் சற்றே யோசித்தேன்.

“என் கன்னத்தில் ஒரு அறை விடுங்க”என்றேன்.

அவர் குழப்பமாகப் பார்த்தார்.

“நான் சொன்னதைச் செய்யுங்க.”

அவர் நோகாமல் என் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

“என் கன்னத்தில் அறைஞ்சது யாரு?”

“நான்தான்.”

“அந்த ‘நான்’ ஆன்மாதானே?”

“ஆமா.”

“யாருடைய ஆன்மா, என்னோடதா இல்ல.....”

அவர் அவசரமாகக் குறுக்கிட்டார், “என்னோட ஆன்மா.”

"என்னோட ஆன்மான்னு 'நீங்க’ சொல்றதால நீங்க வேறு; உங்க ஆன்மா வேறுன்னு ஆகுது. அப்புறம் எப்படி நான் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்னுன்னு சொல்றீங்க?”

”என்னங்க நீங்க, ‘என் ஆன்மா’ன்னு சொல்லாம எப்படிப் புரிய வைக்கிறது?”

“அதையேதான் நானும் சொல்றேன், இந்த உடம்பு யாருதுன்னு கேட்டீங்க. என் உடம்புன்னு சொன்னேன். அப்படிச் சொன்னதால, உடம்பு வேறு நான் வேறுன்னு ஆயிடாது. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்புதான் நான். நான் உங்களோட வர்றேன்னு சொன்னா, என்னுடைய உடம்பு வருதுன்னுதான் அர்த்தமே தவிர, என் ஆன்மா வருதுன்னு அர்த்தமில்ல. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான் ‘நான்’னு சொல்றோம். உடம்பு அழிஞ்சா, 'நான்'கிற உணர்வும் அழிஞ்சி போகுது. அவ்வளவுதான். ஆன்மா அது இதுன்னு ஏன் குழப்புறீங்க?”

‘ஆன்மா இருக்குன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க; ஆன்மிகவாதிகள் சொல்லியிருக்காங்க; அவதாரங்கள் சொல்லியிருக்காங்கன்னு உங்க மாதிரி ஆட்கள் சொல்லிச் சொல்லிச் சொல்லியே மக்களை முட்டாள்கள் ஆக்கிட்டிருக்கீங்க.” -வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா. நம்ம முன்னோர்களை அவமதிச்சதா ஆகும். நிதானமா கேளு. உனக்குப் புரியும்படியா விளக்கிச் சொல்றேன்.”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஆளை விடுங்க. என் பெண்டாட்டி காணோமேன்னு பார்த்துட்டிருப்பா. எனக்கும் பசிக்குது.” -சிமெண்ட் இருக்கையிலிருந்து எழுந்தேன்.

“போகாதே, இரு. நான் சொல்றதை......” -என் கைகளை இறுகப் பற்றினார் அவர்.

“விடுங்க.” -மல்லுக் கட்டினேன்.

அவர் பிடியைத் தளர்த்தவே இல்லை.

“விடுய்யா...என்னை விடு...விடு...விடு...” -அலறினேன்.

என் அலறல் நீடித்தபோது..........

“ஏங்க, எதுவும் கனவு கண்டீங்களா?"  என்று கேட்டு, யாரோ என் தோள்களைப் பற்றி உலுக்குவதை உணர முடிந்தது.

அந்த யாரோ என் அருகில் படுத்திருந்த என் மனைவிதான்.

“கனவுதான். பூங்காவில் காத்து வாங்கிட்டிருந்தப்போ, நாலு தடியனுங்க, ‘உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேசன் செய்யப் போறோம்னு என்னைக் குண்டுக்கட்டாத் தூக்கிட்டுப் போனாங்க. என்னை விட்டுடுங்கடான்னு அலறினேன்” என்றேன், அவளையும் குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன்.

“எழுபது வயசான உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷனா?” என்று கேட்டுச் சிரித்தாள் 66 வயதான என்னவள்.

நானும் சிரித்து வைத்தேன்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிவு பழசுங்க!

வியாழன், 29 அக்டோபர், 2020

குஷ்பு, கவுதமி, காயத்திரி ரகுராம் போன்ற 'பெண்' இனத்தவருக்குச் சமர்ப்பணம்!!!

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனைச் சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்[1] இந்நூலைத் திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. 'இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை நிலைநிறுத்துவதற்கும், பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்துவதற்கும் மேட்டுக்குடியினர் கையாளும் உத்தி இது' என்று இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்மம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்று பொருளாகும். -விக்கிப்பீடியா

                            *                         *                       *                       *                      *                 

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்."

மனு 2.214: ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்."

மனு 2.215: ''தாய், மகள், சகோதரி என்று எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவையாதலால் அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14: ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்."

மனு 9.15: ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்."

மனு 9.16:  ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்." 

மனு 9.17: ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள், படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை."

மனு 9.2:  ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்; உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3:  ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5:  ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீய குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் குடும்பத்திற்குத் துயரத்தை வருவிப்பார்கள்." 

மனு 4.147: ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில்கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது."

மனு 11.45:  ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது என்பதால்தான்."

மனு 9.46:  ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149:  ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது."

மனு 8.415: ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்.....

கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.....

[பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது]."

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது." [மனு 9.18]

மனு 9.36: ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது. அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்."

மனு 4.205: ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206: ''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்."

மனு 5.151:  ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது."

மனு 5.154:  ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்."

மனு 5.150:  ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்."

மனு 5.15: ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்."

மனு 5.15: ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே."

அர்த்த சாஸ்திரம் 3,8:  ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

===============================================================

புதன், 28 அக்டோபர், 2020

'தினத்தந்தி'யின் குழப்பமான 'கொரோனா'ச் செய்தி!

 

அக்டோபர் 27, 09:07 PM

                                                                   லண்டன்

3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் செப்டம்பர் 28 வரை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஆய்வுக் காலத்தில் நேர்மறை சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 26.5 சதவீதம்  குறைந்துவிட்டது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

அதில் எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இம்பீரியல் கல்லூரியின் திட்ட இயக்குனர் பால் எலியட் கூறியதாவது:-காலப்போக்கில் ஆன்டிபாடிகளுக்குச் சாதகமாகச் சோதிக்கும் நபர்களின் விகிதத்தில் குறைவு இருப்பதாக எங்கள் ஆய்வு காட்டுகிறது. ஆன்டிபாடிகளுக்கு நேர்மறை சோதனை செய்வது[வதால்?] நீங்கள் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல. ”

எந்த அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தியை ஆன்டிபாடிகள் வழங்குகின்றன, அல்லது இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன்டிபாடிகளுக்கு யாராவது நேர்மறையானதைச் சோதித்தால், அவர்கள் சமூக விலகல் நடவடிக்கைகள்,  அறிகுறிகளைக் கொண்டிருந்தால் துணியால் பரிசோதனை செய்தல் மற்றும் தேவைப்படும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட  வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

-இது, தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் கொரோனா குறித்த அண்மை[27.10.2020]ச் செய்தியாகும்.

'உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும்' என்று 2ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்ட நிலையில், 4ஆம் பத்தியில், இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சொல்லப்பட்டிருப்பது முரண்பாடாகத் தெரிகிறது.

இம்பீரியல் கல்லூரியின் ஆய்வறிக்கையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றுள்ளதா, அல்லது, தினத்தந்தி நிருபரின் மொழியாக்கத்தில் நேர்ந்த பிழையா என்பதை, செய்தி அச்சாகும் முன்னரே கவனித்திருந்தால் பிழையைச் சரிசெய்திருக்கலாம்.

ஆங்கிலத்தில் வெளியான ஆய்வறிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்திருப்பின், இந்தச் செய்தியைத் தந்தியில் வெளியிடுவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

நன்றி: தினத்தந்தி நாளிதழ்.

===============================================================

https://www.dailythanthi.com/amp/News/World/2020/10/27210728/Covid19-antibody-response-wanes-over-time-UK-study.vpf

===============================================================

 //அக்டோபர் 27, 09:07 PM

லண்டன்

3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது என காட்டுகிறது. ஜூன் 20 முதல் செப்டம்பர் 28 வரை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஆய்வுக் காலத்தில் நேர்மறை சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 26.5 சதவீதம்  குறைந்துவிட்டது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

அதில் எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இம்பீரியல் கல்லூரியின் திட்ட இயக்குனர் பால் எலியட் கூறியதாவது:-காலப்போக்கில் ஆன்டிபாடிகளுக்கு சாதகமாக சோதிக்கும் நபர்களின் விகிதத்தில் குறைவு இருப்பதாக எங்கள் ஆய்வு காட்டுகிறது. ஆன்டிபாடிகளுக்கு நேர்மறை சோதனை செய்வது நீங்கள் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல. ”

எந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் வழங்குகின்றன, அல்லது இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன்டிபாடிகளுக்கு யாராவது நேர்மறையானதை சோதித்தால், அவர்கள் சமூக விலகல் நடவடிக்கைகள்,  அறிகுறிகளைக் கொண்டிருந்தால் துணியால் பரிசோதனை செய்தல் மற்றும் தேவைப்படும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட  வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என கூறினார்.//


செவ்வாய், 27 அக்டோபர், 2020

மகளிர் மாதவிடாயும் ஒரு 'மதகுரு'வின் உளறலும்!!!

"மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு உணவு சமைத்தால் மறுபிறவியில் அவர்கள் நாயாகவும், அந்த உணவை உண்ணும் கணவர், காளை மாடாகவும் பிறப்பார்கள்."

இந்தக் கருத்தை, குஜராத்தில், கட்ச் மாவட்டத்தில் உள்ள 'சுவாமிநாராயன்' கோயிலில் முக்கியப் பதவி வகிக்கிற 'குருஸ்னஸ்வரூப்  தாஸ்தி' என்ற மதகுரு சொல்லியுள்ளார்[https://www.hindutamil.in/news/india/540229-menstruating-women-cooking-food-for-husbands-will-be-reborn-as-dogs-says-godman.html

சமீபத்தில் கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடையைக் களைந்து மாதவிடாய்ச் சோதனை நடத்திக் கைதான கல்லூரி முதல்வரும், அலுவலர்களும் பணியாற்றிய கல்லூரியும் சுவாமி நாராயணன் கோயிலில் இயங்கி வருகிறது.

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமி நாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்தக் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய்க் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விதியைச் சில மாணவிகள் மீறியதாகக் கூறப்படுகிறது. மாணவிகள் சிலர் இந்தக் கட்டுப்பாட்டை மீறிய தகவல் விடுதிக் காப்பாளருக்குத் தெரியவந்ததை அடுத்து அவர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். விடுதிக் காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளைக் களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர்.

இந்தச் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் உருவாக்கியது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு உள்ளிட்ட நெருக்கடி காரணமாகக் கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா , கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா உள்பட 3 பேர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர்,அலுவலக உதவியாளர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்தச் சூழலில் சுவாமி குருஸ்னஸ்வரூப் தாஸ்ஜி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எப்போது பேசியது எனத் தெரியவில்லை. ஆனால், கோயிலின் யூடியூப் சேனலில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், "மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சமைக்கும் உணவை உண்ணும் கணவர் அடுத்த பிறவியில் காளை மாடாகவும், அந்த மாதவிடாய் நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் பெண் நாயாகவும் பிறப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்[கணவன் ஆண் நாயாக அல்லவா பிறக்க வேண்டும்?!].

என்னுடைய கருத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. இவை அனைத்தும் சாஸ்திரங்களில்[???] கூறப்பட்டுள்ளது. ஆதலால் கணவன்மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும். ஆதலால், ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு உதவும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                 *                                   *                               *                         *                           *

2016இல் நான்['பசி'பரமசிவம்] வெளியிட்ட ஒரு பதிவு, இந்த ஆளின் உளறலுக்குப் பதில் தரும் வகையில் அமைந்துள்ளது. வாசித்துத் தெளிவு பெறுக.

வியாழன், 28 ஜூலை, 2016

மாதவிடாய்க் குருதி தூய்மையற்றதா?

‘இப்படியொரு கேள்விக்கே இனி இடமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார் ம.சுசித்ரா, ‘எப்போது தீரும் மாதவிடாய்த் தீண்டாமை?’ என்னும் தலைப்பிலான தன் கட்டுரை[‘தி இந்து’, 24.07.2016]யில்.
வியாழன், 28 ஜூலை, 2016
மாதவிடாய்க் குருதி தூய்மையற்றதா?
‘இப்படியொரு கேள்விக்கே இனி இடமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார் ம.சுசித்ரா, ‘எப்போது தீரும் மாதவிடாய்த் தீண்டாமை?’ என்னும் தலைப்பிலான தன் கட்டுரை[‘தி இந்து’, 24.07.2016]யில்.
‘மாதவிடாய் தூய்மையானது என்று நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி ரத்தமும் எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோய் தீர்க்கும் அருமருந்துகள். அவற்றைப் போலவே மாதவிடாய் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும்[stem cell] உயிர் காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், என்ன சொன்னாலும் மாதவிடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டா வெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்திற்குள்தான் இன்னும் சிக்கிக் கிடக்கிறார்கள்' என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் கட்டுரையாளர்.
 menstrual blood is impure? என்று கூகிளில் தட்டச்சு செய்ததில் ஏராள தகவல்கள் கிடைத்தன. அவை மேற்சொல்லப்பட்ட கருத்துகளுக்கு வலிமை சேர்க்கின்றன.  அவற்றில் மிகச் சில மட்டும் கீழே.
* menstrual blood is not dirty. its just like any other blood that you can find in your body, it is just darker because unlike the blood in your veins, it does not flow as easily. menstrual blood is also darker because it contains the lining of your uterus. ----www.epigee.org › Topics › Menstruation
* Now, news that stem cells found in menstrual blood — along with cells from babies’ umbilical cords — could potentially be incorporated into treatments for stroke, Alzheimer’s disease and Lou Gehrig’s disease, or amyotrophic lateral sclerosis, kind of puts a different spin on things. (More on Time.com: Using Stem Cells to Restore Sight)--healthland.time.com/.../stem-cells-from-menstrual-blood-stran.
* Biologically menstrual fluid is a mixture of tissues and blood vessels and there is nothing impure about it, it
 does not contain a smell of its own, it gives foul smell only after it comes in contact with air outside the body.
----Menstrupedia
* Tejinder Bhatia, A Numismatist, An Artist , A Sapiosexual and Dream Chaser
1.7k View
Actually, you need to define , what do you
mean by impure blood? Because Menstruation is just
the periodic discharge of blood and mucosal tissue (the endometrium) from the uterus and vagina.
  Yea, Its full bacteria, if that's what you mean.

திங்கள், 26 அக்டோபர், 2020

அந்தரங்கம் புனிதமானது!!!...சிரிப்புக் கதை.

‘உடலுறவில் உச்சம் தொடுவது எப்படி?’ என்ற பலான புத்தகத்தைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது[அப்போ நான் புது மாப்பிள்ளை!], “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

பார்வையைச் சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை[எட்டி விழுந்து திருட்டுத்தனமாய்ப் படிக்க] என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி...பார்த்து...சார்த்து...கோர்த்து...போர்த்து... வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்...வத்தன்...கொத்தன்...வத்தல்...தொத்தல்...மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்...க ச ட த ப ற...ய ர ல வ ழ ள...ல ள ழ ...ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு பத்து... அம்பது நூறு...ஆறு...”

“ஆருடா அவன்...? நான் பேசுறதைக் கவனிக்காம ஒளிச்சி வெச்சிப் படிக்கிறியே என்ன புஸ்தகமடா அது?”.....

“கதையா, இல்ல, 'பலான' புத்தகமா?”

“மறைக்காதே. மரியாதையா என்கிட்ட குடுத்துடு. கொண்டாந்து குடுடா.”

“நீயா வர்றியா நான் வரட்டுமா?”

என் அடிமனதில்  பயம் கவ்வியது; நாடிநரம்புகளிலெல்லாம் அது ஊடுருவியது. கால்கை உதறலைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் சற்றே வயதான ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

எனக்குள் நிம்மதி பரவியது. 

‘ஐயோ பாவம். அந்த வழுக்கை பைத்தியம் போலிருக்கு.  -மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து தரையில் குதித்தேன்.

நான் குதித்த சத்தம் பைத்தியத்திற்குக் கேட்டிருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று உரத்த குரலில் விளித்தது; ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது. “வத்திப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப் பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம்[பைத்தியம்], இவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” -கோரிக்கையைப் புதுப்பித்தது பைத்தியம்.

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து,  இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். நான் பள்ளிக்கூட வாத்தியார். புதுசா பல்செட் போட்டிருக்கேன். பேசிப் பிழைக்கிறதுதானே என் தொழில். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க உட்கார்ந்திருப்பதையும் கவனிச்சேன். உங்களுக்குக் கேட்காதுன்னு நினைச்சி நான் பாட்டுக்குப் பேசிட்டுருந்தேன். உங்களுக்குக் கேட்டுடிச்சி போல. நீங்க நினைக்கிற மாதிரி நான் பைத்தியம் இல்ல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” -அசடு வழியச் சிரித்துவிட்டு, புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.

===============================================================

old is gold!

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொரோனா நீடித்தால்... பாலியல் வன்முறை பெருகும்! மேலும்...

* உலகெங்கிலும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கும் நிலையில், கருத்தடைச் சாதனங்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. லாக்டவுனால் சுகாதாரத்தைப் பேணுவதற்கான போராட்டங்களுக்கு மத்தியில் பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரச் சேவைகள் ஓரங்கட்டப்பட்டு, பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

* COVID-19 பரவல் 6 மாதங்களுக்கு மேல் நீடித்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 114 நாடுகளில் சுமார் 47 மில்லியன் பெண்கள் நவீனக் கருத்தடைகளைப் பயன்படுத்த முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது.  மேலும் 3 மாதங்களுக்கு லாக்டவுன் தொடர்ந்தால், மேலும் 2 மில்லியன் பெண்கள் நவீனக் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

6 மாதங்களுக்கு மேல் லாக்டவுன் தொடர்ந்தால் கூடுதலாக 7 மில்லியன் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான 31 மில்லியன் வழக்குகளையும் எதிர்பார்க்கலாம் என்பது மிகவும் கவலைக்குரியது.

* குடும்ப வன்முறை குறித்தப் புகார்களின் எண்ணிக்கை 2020 மார்ச் 2ஆம் தேதியில் தொடங்கிய முதல் வாரத்தில் 30 ஆக இருந்ததை விட,2020 மார்ச் 23 முதல் 2020 ஏப்ரல் 1 வரையிலான காலப்பகுதியில்,  இரு மடங்கிற்கும் மேலாக அதாவது 69 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணையம்- என்.சி.டபிள்யூ (NCW) தெரிவித்துள்ளது. பிந்தைய காலகட்டத்தில் புகார்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டதாக மகளிர் ஆணையத்  தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

* 30.8%  வன்முறைகள் வீட்டிலேயே நிகழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்வது அதிகரித்து, மன அழுத்தத்திற்கான அழைப்புகளில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

* தற்போது கோவிட்19 தொற்றுநோய்க்கு எதிராக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான குடும்ப வன்முறைகள் "நிறுத்தப்பட வேண்டும்" என்று ஐ.நா. சபையின் தலைவர் அழைப்பு விடுத்துள்ள சூழலில்,  குடும்ப வன்முறைப் புகார்கள் அதிகரிப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* வீட்டினுள் வன்முறை என்பது பாலின அடிப்படையிலான வன்முறையின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இது  குடும்பத்தினரின் அல்லது வீட்டின் உறுப்பினர்களாகவோ,  முன்னாள் அல்லது தற்போதைய காதல் அல்லது பாலியல் கூட்டாளிகளாகவோ இருக்கும் நெருங்கிய நண்பர்களால் ஏற்படக்கூடும். முந்தைய நிலைமை குடும்ப வன்முறை என்றும் பிந்தையது நெருக்கமான கூட்டாளர் வன்முறை (ஐபிவி) என்றும் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவில், இனப்பெருக்க வயதில் (15 முதல் 49 வயது வரை) ஒவ்வொரு மூன்று பெண்களில் 30% அல்லது கிட்டத்தட்ட ஒருவர் உடல் ரீதியான வீட்டு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று, தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) 2015-16 தெரிவிக்கிறது.  தங்கள் வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் திருமணமான பெண்களில், 33% பேர் தங்களது கணவரால் உடல் ரீதியாகப் பாலியல் அல்லது உணர்ச்சி ரீதியான வீட்டு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள்.

* ஆதரவைத் தேடுவது என்பது காவல் துறையில் புகாரைப் பதிவுசெய்ய நேரில் செல்வது அல்லது தொலைபேசியை அணுகுவது மற்றும் உதவிக்கு ஒரு ஹெல்ப்லைனை அழைக்கக்கூடிய தனியுரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவில் 57% பெண்கள் மொபைல் போன்களை வைத்திருக்கவில்லை என்று புள்ளி விவரம் கூறும் நிலையில், ஊரடங்கின் போது அதற்கான எந்த வாய்ப்பும் இருக்காது.

* ஊரடங்கின் போது அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது - கூகிள் போன்ற தேடுபொறிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான உதவிக்கான தேடல்கள் அதிக அளவைக் கண்டன - ஒரு சவாலாக இருக்கும் என்று ஐ.நா குறிப்பிட்டது. 

* கொரோனா வைரஸிற்கான அரசின் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் வீட்டு வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவி பெறும் வழிகள் ஆகியன இருக்க வேண்டும் என்று ஜாகோரியின் வேலங்கர் கூறினார்.

* ஊரடங்கைச் செயல்படுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்த மகளிர் அமைப்புகள், ஹெல்ப்லைன்கள் மற்றும் மருந்துகள் மற்றும் கருத்தடை மருந்துகளை உள்ளடக்கிய ‘அத்தியாவசியச் சேவைகளின்’ நோக்கத்தை அரசுகள் விரிவுபடுத்த விரும்புகின்றன.

கீழ்வரும் தளங்களுக்கு நன்றி.

https://zeenews.india.com/tamil/exclusive/world-population-day-2020-338242

https://tamil.indiaspend.com/activists-urge-roping-in-asha-workers-and-other-novel-approaches-as-domestic-violence-rises-during-lockdowns/

Lankasri Newsnews.lankasri.com › germany


சனி, 24 அக்டோபர், 2020

'குஷ்பு'வைப் போற்றுவோம்!!!

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன..... 

'தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா?' என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது மனுஷ்மிருதி. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்." 

மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்தச் சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவே முடியாது.

எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் 'மனுநூலைத் தடைசெய்!' என்ற இந்த அறப்போராட்டத்திற்குச் சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்" என்றிவ்வாறெல்லாம் திருமாவளவன் கூறியவற்றை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன[https://www.bbc.com/tamil/india-54660846].

திருமாவளவனின் இந்தக் கருத்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே, பெண்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும்; மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துக் குறித்துக் கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரைப்படக் கலைஞர் குஷ்பு வலியுறுத்தியிருக்கிறார்[ஊடகச் செய்தி].

குஷ்புவைப் பொருத்தவரை, முன்னோர்களால் பேணி வளர்க்கப்பட்ட மனுதர்மம் காக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

நம் மனம் கவர்ந்த நடிகை. அவருக்கென ஒரு கோயில் கட்டிக் குடமுழுக்கெல்லாம் நடத்தியவர்கள் நாம். 

குஷ்புவுக்கும் திருமாவளவனுக்கும் இடையேயான விவாதத்தில் குஷ்பு வெற்றி பெற வேண்டும் என்பதே நம் போன்றோர் ஆசை. 

"பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு மனுவில் ஏதிமில்லை" என்று குஷ்பு கூறியதை மனதில் கொண்டு, பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்களைத் திருமா தேடக்கூடும். அவற்றைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. குஷ்புவுடனான விவாதத்தில் திருமாவளவன் தோற்பார்.

ஆதாரம்: உங்களின் வாசிப்புக்கு மட்டும்.

//‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]

பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.

‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.

‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத..................’[இரண்டு வரிகள்]

பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.

‘................................................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்[நான்கு வரிகள்]

பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.

‘ஸ்ருணோதி நூபுராராவம்.............................................................’[நான்கு வரிகள்]

பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்[சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’,சாமி புக்ஸ், சென்னை]//

===============================================================


வெள்ளி, 23 அக்டோபர், 2020

மக்களை 'மடையர்கள்' ஆக்கும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும்!!!

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின. இதில், கொரோனா தடுப்பூசியைப் பதிவு செய்துவிட்டதாக ரஷ்யா முதல் நாடாக அறிவித்தது. 

இருப்பினும், கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் தடுப்பூசிகள் அனைத்துமே இன்னும் மருத்துவப் பரிசோதனைகளில்தான் உள்ளன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.  இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்த ‘கோவேக்சின்’ தடுப்பு  மருந்துக்கு 3 ஆம் கட்டப் பரிசோதனை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது. 

மூன்றாவது கட்டப் பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது. இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3ஆம் கட்டப் பரிசோதனையிலும் உள்ளன .

விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவேக்சின் வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது என பாரத்பயோடெக் நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்[https://www.dailythanthi.com/News/India/2020/10/23074331/Covaxin-Bharat-Biotechs-Coronavirus-Vaccine-Cleared.vpf].

இது அண்மைச் செய்தி[பதிவு: அக்டோபர் 23,  2020 07:43 AM]

இச்செய்தியில், கவனத்தில் கொள்ளத் தக்கவையாகச் சில அம்சங்க்கள் உள்ளன.

1. மூன்றாவது கட்டப் பரிசோதனை 28500 பேரிடம் நடத்தப்படவுள்ளது. 28500 என்பது ஒரு நிலை. இந்தச் சோதனை எதிர்பார்க்கிற பலனைத் தந்தால் மேலும் பல ஆயிரம் பேரிடம் இந்தப் பரிசோதனையைத் தொடர வேண்டியிருக்கலாம். 

எதிர்பார்க்கிற பலன் கிடைக்காவிட்டால், தடுப்பூசி குறித்த ஆய்வைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். அது எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.

2. இந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில் வலுவான எதிர்ப்புச் சக்தி உருவானதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குச் செலுத்தும் போதும் அதே அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாக வேண்டும். இல்லையெனில் ஆய்வு தொடரும்.

3. பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை பொய்த்துப்போகவும் வாய்ப்புள்ளது[மெய்ப்பட வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய ஆசையும்].

உண்மை நிலை இதுவாக இருக்க, பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கொரோனா தடுப்பு மருந்து வந்த பிறகு அனைவருக்குமே இலவசமாக அதைப் போடுவோம் என்று ஒரு வாக்குறுதியைக் சேர்த்துள்ளது பா.ஜ.க.கட்சி.

பாஜக இதைச் செய்த சில நிமிடங்களிலேயே நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவசமாகவே தடுப்பு மருந்தைக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளார். 

கொரோனாத் தொற்றின் அசுரத்தனமான தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் கதிகலங்கிப்போய், தீராத துயரத்தில் மூழ்கிக்கிடக்கிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டால், சாதி, மதம், இனம். மாநிலம், நாடு என்று வித்தியாசம் பாராட்டாமலும், பலனை எதிர்பாராமலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே மனித மாண்பு.

கண்டுபிடிக்கப்படுகிற எந்தவொரு தடுப்பு மருந்தும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கானது என்பதை மறந்துவிட்டு, ஓட்டுக்காக இலவசமாக அதைத் தருவோம் என்று இந்த இரு கட்சிகளும் அறிவித்திருப்பது, இந்த மாநிலங்களைச் சாராத மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலாகும்.

பீகாரில் பாஜக வெல்லாமல் போனால் தடுப்பு மருந்தே கொடுக்காமல் நடுவணரசு மக்களை அலைய விட்டுவிடுமோ என்ற அதிர்ச்சியான சந்தேகமும் எழவே செய்கிறது..

கொரோனாவுக்கு எதிரான போரில், தேர்தலில் ஜெயித்தால் இலவசம், இல்லாவிட்டால் இல்லை என்பது போல் பேசுவது தவறானது; நாட்டின் நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதும் ஆகும்!

===============================================================


வியாழன், 22 அக்டோபர், 2020

'கொரோனா'...ஊரடங்குத் தளர்வும் ஓடிப்போகும் காதல் ஜோடிகளும்!!!

ஊரடங்குத் தளர்வுக்குப் பின் காதல் ஜோடிகள் மீண்டும் ஜாலியாக உலா வரத் தொடங்கியுள்ளன. பூங்காக்களிலும், வணிக வளாகங்களிலும் கைகோர்த்துக் கனவு உலகில் வலம் வருகிறார்கள்.  

இதற்கிடையே, கொரோனா  ஊரடங்கின்போது திருமண ஏற்பாடுகளுக்குள்ளான இளம்பெண்கள் அடுத்தடுத்துத் தங்களது காதலர்களுடன் ஓட்டம் பிடிக்கத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, குமரி மாவட்டத்திலும் இளம்பெண்கள் மாயமாவது அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வந்த இளம்பெண்கள் என அடுத்தடுத்துப் பலர் மாயமாகி உள்ளனர். கடந்த 4 நாட்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இளம்பெண்கள் மாயமாகி வரும் நிலையில், கள்ளக்காதலிலும் பெண்கள் மாயமாகி வருகிறார்கள். 2 குழந்தைகளுடன் தாய் மாயமாதல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்தக் காதல் ஓட்டங்கள் தொடர்பாக, அந்தந்தக் காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்ததும், இளம்பெண்களின் ஓட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஊரடங்கால் அந்தக் காலக் கட்டங்களில் இளம்பெண்கள் மாயம் தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவாகாமல் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறாக அதிகளவில் இளம்பெண்கள் ஓடிப்போவது தொடர்பான வழக்குகள் பதிவாகி வருகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் பெற்றோருடன் இருந்ததால், பல இளம்பெண்கள் தங்களின் காதலர்களுடன், செல்போனில் மணிக்கணக்கில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பல வீடுகளில் இது தொடர்பாகத் தாய்க்கும், மகளுக்கும் சண்டையும் வந்தன. மணிக்கணக்கில் பேசி, பல இளம்பெண்கள் பெற்றோரிடம் சிக்கினர். தற்போது ஊரடங்குத் தளர்வால் வேலை பார்க்கும் இடங்களுக்கு இளம்பெண்கள் பறந்து விட்டனர். ஆனால் கல்வி நிறுவனங்கள் திறக்காததால்,  மாணவிகள் சிலர் எப்போது தங்களுக்குச் சுதந்திர உலா கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.

========================================================================

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=622348020-10-06@ 21:13:21

புதன், 21 அக்டோபர், 2020

'எதை'ச் செய்தால் இதையெல்லாம் பெறலாம்?!


நான் சேமித்து வைத்துள்ள மிகப் பழைய வார இதழ்களில்  ஒன்றைப் புரட்ட நேர்ந்தபோது, அதன் ஒரு பக்கத்தில், 'இதைச் செய்தால்.....' என்னும் தலைப்பில்  உடல்நலம் பற்றியக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. 

குறிப்புகள்:

*மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

*புற்றுநோய், காச நோய் போன்றவை நெருங்கா.

*திடீர்த் தலைவலி, உடல்வலி எல்லாம் காணாமல் போகும். 

*ஆயுட் காலம் அதிகரிக்கும்.

*நிறையவே கலோரிகள் எரிக்கப்படும்.

*உடலின் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.

*பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை குறையும்.

*ஆண்களின் பிராஸ்டேட்டில்[காமநீர்ச் சுரப்பி] வீக்கம் வராது.

*சுரப்பிகளின் செயல்பாடுகள் மேலோங்கும்.

*இதை 10 நிமிடம் செய்வது 50 மைல் ஜாக்கிங் செல்வதற்குச் சமம்.

*முதுமையிலும் இளமைத் தோற்றம் நீடிக்கும்.

'இதை'ச் செய்தால் என்று பொத்தாம் பொதுவாகத் தலைப்பு தரப்பட்டிருப்பதால், அந்த 'இது' 'எது?' என்று யோசித்ததில்.....

'மூச்சுப் பயிற்சி'[யோகா]யாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால், இதன் மூலம் இத்தனை நன்மைகளைப் பெற இயலுமா என்னும் சந்தேகமும் எழுந்தது.

உங்கள் சிந்தனையில் வேறு காரணம் எதுவும் தோன்றக்கூடும்.

சிந்தியுங்களேன்!

===============================================================


செவ்வாய், 20 அக்டோபர், 2020

'கற்பு' உருவான கதை!

இது அந்தக் காலத்துக் கதை. பொழுதுபோக்காக வாசிக்கலாம்.

திரேதாயுகத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஸ்வேதகேது என்ற முனிவர்தான், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கற்பு நெறிகளை வகுத்தவராம். அதற்கு மூலகாரணமான ஒரு நிகழ்வு கீழே.

ஸ்வேதகேதுவின் தந்தை உத்தாலகன். அவர் பலராலும் மதிக்கப்பட்டவர். மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்தவர்.

அந்தக் காலத்தில் ஒரு சம்பிரதாயம் இருந்தது. 

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்[அதிதி] வீடு தேடி வந்தால், அவரை வரவேற்று உபசரிப்பது வழக்கம்.

அவர் விரும்பும் உணவு வகைகளை உண்ணத் தருவதோடு, வீட்டு உரிமையாளரின் மனைவியுடனோ மகளுடனோ அவர் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டால், அவளை அவருக்கு விருந்தாக்க வேண்டும். பெண்களும்  சம்மதித்துவிடுவது[விருப்பம் இல்லாதபோதும்கூட] வழக்கத்தில் இருந்தது.

ஸ்வேதகேது ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் தந்தைவெளியே காத்திருக்க, அவருடைய தாயுடன் படுக்கை அறையில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் இருப்பதைப் பார்த்துச் சினம் கொண்டார்.

கட்டுக்கடங்காத சினத்துடன் தந்தையை நோக்க, "இது கலங்காலமாக இருந்துவரும் வழக்கம் மகனே" என்றார் உத்தாலகன்.

"என்ன கொடூரமான வழக்கம் இது? என் தாய் குழந்தை பெற்றால் அதற்குத் தந்தை யார் அப்பா?" என்றார் ஸ்வேதகேது.

உத்தாலகன் சிரித்தார்; சொன்னார்: "மகனே, நீகூட எனக்குப் பிறக்கவில்லை. ஒரு முன்பின் அறிமுகம் இல்லாத விருந்தாளிக்குப் பிறந்தாய். இருந்தும், ஒரு தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் நான் செய்துவருகிறேன்."

ஸ்வேதகேது முனிவர்களைக் கூட்டிவைத்து விவாதித்தார். "இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும்" என்றார்.

"சம்பிரதாயத்துக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய்" என்றார்கள் மற்ற முனிவர்கள். "பெண்கள் இதை விரும்பித்தான் செய்கிறார்கள்" என்றும் வாதிட்டார்கள்.

ஸ்வேதகேது தன் கருத்தில் பிடிவாதம் காட்டவே, ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து 'விருந்தினருக்கு[அதிதி] வீட்டுப் பெண்ணை விருந்தாக்கலாம். ஆனால், கரு உருவாகும் நாட்களில் அதைத் தவிர்த்திட வேண்டும்' என்பதே அந்த உடன்பாடு.

அதன் பிறகு, மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்பு நெறிகளைப் புகுத்தினாராம் ஸ்வேதகேது.

இன்றும்கூட சில கிராமங்களில், "விருந்தாளிக்குப் பிறந்தவளே" என்று வாய்ச்சண்டையில் திட்டுவது வழக்கத்தில் உள்ளதாம்.

===============================================================




திங்கள், 19 அக்டோபர், 2020

நிர்வாண உறக்கம்![0% ஆபாசம்]

இரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாகத் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

இது கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவதைவிட நிர்வாணமாகத் தூங்குவது (sleeping naked) ஆரோக்கியமானது என்பது உங்களுக்கு தெரியுமா?

நிர்வாணம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆபாசம்தான் என்பது நம்மில் பலரின் நினைவுக்கு வரும். இது தவறான நினைப்பு. 

எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும், வாய்ப்பு அமையும்போது நிர்வாணமாக அல்லது குறைந்த ஆடைகளுடன் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது. 

இரவில் நாம் நிம்மதியாக உறங்குவதால் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த தாம்பத்திய உறவு, காயங்களில் இருந்து விரைவான விடுதலை, தெளிவான நினைவாற்றல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்த நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டும் என்றால் நிர்வாணமாகத் தூங்குவதே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

அதற்கான அந்த 5 காரணங்கள்:

1.நிர்வாணமாகத் தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது

நிர்வாணமாகத் தூங்குவது உடலில் கார்டிசோலின் அளவைக் குறைக்கும். FYI, கார்டிசோல் என்பது மன அழுத்த ஹார்மோன் ஆகும். நன்றாகத் தூங்காமல் இருப்பது நம்மை மந்தமாகவும், வெறி கொண்டவர்களாகவும் ஆக்குகிறது. சில நேரங்களில், இது மன அழுத்தம் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கிறது. நிர்வாணமாகத் தூங்குவது இயற்கையாகவே இவற்றைச் சமாளிக்க உதவும்.

2.நிர்வாணமாகத் தூங்குவது நோய்களைத் தடுக்கிறது.

நிர்வாணமாகத் தூங்குவது உங்கள் தலையில் இருந்து கால்வரை ரத்தம் சரியாக ஓட அனுமதிக்கிறது. இரத்தம் சரியாகச் சுழலும் போது, இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, நன்றாகத் தூங்குவது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கும்.

 3.நிர்வாணமாகத் தூங்குவது உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்கும்

விஞ்ஞான ரீதியாக, நிர்வாணமாகத் தூங்குவது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது உடலின் கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான், நன்றாகத் தூங்குவது மிக மிக நல்லது எங்கிறார்கள்.

4.நிர்வாணமாகத் தூங்குவது சருமத்தில்[தோல்] பளபளப்பை உண்டுபண்ணும்.

நல்ல மற்றும் வசதியான தூக்கம், கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும்; ஆக்ஸிஜனேற்ற அளவை உறுதிப்படுத்தும்; உடலில் மெலடோனின் அளவை மேம்படுத்தும். கூடுதல் அழகை வழங்கும். மேலும், நிர்வாணமாகத் தூங்கும்போது, உங்கள் தோலுக்குள் நல்ல காற்று ஊடுருவும். இதனால், தோல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

5.நிர்வாணமாகத் தூங்கினால் யோனி[பிறப்புறுப்பு] ஆரோக்கியமாக இருக்கும்.

ஈரப்பதமான யோனி பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஈஸ்ட் போன்றவற்றுக்கு வசதியான சூழலை உருவாக்குகிறது. இது நிச்சயமாக சில மொத்த நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். ஆனால், நிர்வாணமாகத் தூங்குவது யோனி சுவாசிக்கவும் வறண்டு போகவும் அனுமதிக்கும். இந்நிலையில் நோய் தொற்றாது.

===============================================================

https://zeenews.india.com/tamil/lifestyle/you-should-start-sleeping-naked-here-are-5-super-convincing-reasons-342730

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

கொரோனா கொடுந்தொற்றும் முறையான 'மூச்சுப் பயிற்சி'யும்!

உலகில் உள்ள அனைவரும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறலாம். 

இது போன்ற நிலையில் நம்மைக் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொண்டு நோயற்ற வாழ்வு வாழ நம் சித்தர்கள் கையாண்ட ' மூச்சுப்பயிற்சி' முறையை நாமும் மேற்கொள்ளலாம். 

கோவிட்-19 (Covid-19)  என்னும் பெரும் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மிகச் சிறந்த கேடயமாக இது பயன்படும் என்பது உறுதி.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று உதவிவருகிறது. ஒரு பக்கம் மூலிகை மருத்துவம் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்க, யோகா (Yoga) கொரோனாவில் இருந்து விடுபடவும், பரவலைத் தடுக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] மட்டுமே  நுரையீரலை அடைகிறது. முறையான  பயிற்சி மேற்கொள்வதால்  நுரையீரலுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன், அதாவது பிராணவாயு  கிடைக்கும். இதனால் நுரையீரல் பலம் அடைகிறது. 

நம் நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை அது தடுத்துவிடும்.

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சுப் பயிற்சி ஆகும். யோகாவில், நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது[மூச்சை இழுத்து, சிறிது நேரம் நிறுத்து, பின்னர் வெளியிடுவது மிகுந்த பயனைத் தரும் என்பார்கள்] இடகலை என்று கூறப்படுகிறது. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.

மூச்சு பயிற்சி செய்யும் போது, வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.

இந்த மூச்சுப் பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது  மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நமது ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும். கோவிட்-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.

https://zeenews.india.com/tamil/health/breathing-exercises-tought-by-siddha-help-us-to-prevent-corona-338001

                     *                       *                    *                    *                      *

கோவிட்-19க்கு எதிராக 100% நம்பகமான சிகிச்சையும், தடுப்பு மருந்தும் இல்லாத நிலையில்,  பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். 

சோடா, உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றின் அளவைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம் எங்கின்றன  உலக சுகாதார நிறுவனமும் பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கமும். 

உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல்[சுமார் அரை மணி நேரம் போல, மிதமான வெயிலில் காயலாம்] போன்றவை பெரிதும் பயன்படும்.

முக்கியக் குறிப்பு:

மேற்கண்ட பரிந்துரைகளைப் பின்பற்றுவதால் நல்ல பலன் கிட்டும் என்று நம்பலாம். எதிர்பார்க்கும் அளவுக்குப் பலன் இல்லையெனினும், தீமை ஏதும் விளையாது என்பது 100% உறுதி.

https://yourstory.com/tamil/fight-covid-immunity-builder-vegetables-fruits-ayurveda


சனி, 17 அக்டோபர், 2020

கொரோனா சோதனையில் தவறான முடிவுகள்!!!

2020-10-14@ 15:13:24

சென்னை.

கொரோனா பரிசோதனையில் பல்வேறு தனியார் சோதனை மையங்களில் தவறான தகவல்கள் தரப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகத்தில்தான் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் அதிகப் பரிசோதனைகள் நடத்தப்படுவதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 191 உள்ளன. இவற்றில் 66 அரசு மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை மையங்களாகும். 125 தனியார் மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மையங்களில் கொரோனா பரிசோதனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் சோதனை மையங்களில் தவறான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி லேபில் நடந்த கொரோனா பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக முடிவுகள் வந்துள்ளன. இந்தப் பரிசோதனையை ஆய்வு செய்தபோது இவை தவறான முடிவுகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த லேபுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பலருக்கு இதுபோன்ற தவறான முடிவுகள் தரப்பட்டதால் அவர்கள் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு தனியார் சோதனை மையத்திற்கும் தேசியப் பரிசோதனை அங்கீகார மையம் கொரோனா பரிசோதனை நடத்த அங்கீகாரம் தந்துள்ளது. இந்த மையங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டும். அந்த மாதிரிகளை ஒரு மாதத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழிகாட்டு முறைகளைப் பெரும்பாலான தனியார் பரிசோதனை மையங்கள் கடைபிடிப்பதில்லை. மற்ற சிறிய லேப்புகளில் இருந்து வரும் மாதிரிகளை வாங்கி, சோதனை செய்து மொத்தமாக முடிவு அறிவிக்கிறார்கள். இது குறித்து வந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி ஆர்த்தி லேபில் சோதனை நடத்தியதில் அங்கு பரிசோதனை செய்யப்பட்ட 44 பேர்களுக்கு தவறாக பாசிட்டிவ் என்று முடிவு தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த லேபுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி இணைக் கமிஷனர் (சுகாதாரம்) தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிசோதனை மையங்களில் தரப்படும் முடிவுகள் ஆன்லைன் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்தப்படுவதால் நேரடியாக ஆய்வு செய்யப்படுவதில்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நேரடியாக விசாரணை நடத்துவது எல்லா நேரங்களிலும் முடியாத காரியம். ஆனால், கண்காணிக்க முடியும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 

ஆய்வில் தமிழகம் முழுவதும் தனியார் பரிசோதனை மையங்கள் எடுக்கும் சோதனையில் 4 சதவீதம் தவறான முடிவுகளாக உள்ளன. இதற்குத் தரமான பரிசோதனை நடைபெறாததும் ஒரு காரணம். மாதிரிகளை எடுக்கும்போது சுகாதாரமான முறையைப் பல பரிசோதனை மையங்கள் கடைபிடிப்பதில்லை. சில பரிசோதனை மையங்கள் தரமற்ற கொரோனா பரிசோதனைக் கிட்டுகளைப் பயன்படுத்துவதும் இந்தத் தவறான முடிவுகள் வரக் காரணமாக உள்ளன என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது போன்ற தவறான முடிவுகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

===============================================================

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624211


வெள்ளி, 16 அக்டோபர், 2020

கொரோனா 'எதிர்ப்புச் சக்தி' எவ்வளவு காலம் 'தம்' பிடிக்கும்?


பதிவு: அக்டோபர் 15,  2020 04:00 AM
வாஷிங்டன், 

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருடைய உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். அந்த எதிர்ப்புச் சக்தி இருக்கிறவரையில், மீண்டும் கொரோனா வருவது தடுக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி (ஆன்டிபாடிகள்), நோய் தொற்றுக்குப் பிறகு விரைவாகக் குறைய வாய்ப்பு உள்ளது என்று இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.

ஆனால் அப்படி அல்ல, இந்த நோய் எதிர்ப்புச்சக்தி, தொற்றுக்குப் பின்னர் பல மாதங்கள் நீடிக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா (அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர்) கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பான ஆய்வை அவர் பேராசிரியர் ஜாங்கோ நிகோலிச் ஜூகிச்சுடன் நடத்தி இதன் முடிவுகளை இம்யூனிட்டி பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆய்வில் கொரோனா பாதித்த 6 ஆயிரம் பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பற்றிப் பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா கூறியதாவது:

நாங்கள் கொரோனாவுக்கு எதிரான தரமான நோய் எதிர்ப்புச்சக்தி, கொரோனா தொற்று பாதித்த 7 மாதங்களுக்கு பிறகும்கூட உற்பத்தி செய்யப்படுவதை பார்த்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலம் நீடிக்காது என்று பலரும் கவலை தெரிவித்து இருந்தனர். ஆனால் நாங்கள் இது தொடர்பாக ஆராய்ந்தபோது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தது 5 மாதங்கள் நிலைத்து இருப்பதைக் கண்டறிந்தோம்.

வைரஸ் தொற்று எப்போது முதன்முதலாக செல்களைப் பாதிக்கிறதோ, அப்போது நோய் எதிர்ப்பு அமைப்பு வைரசை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் குறுகிய கால பிளாஸ்மா செல்களை வரிசைப்படுத்துகிறது. இவை, தொற்று பாதித்த 14 நாட்களுக்குள் ரத்தப் பரிசோதனை செய்கிறபோது காணப்படுகின்றன.

இரண்டாவது கட்ட நோய் எதிர்ப்பு மறுமொழியாக, நீண்ட கால பிளாஸ்மா செல்கள் உருவாகின்றன. அவை தரம் வாய்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. இவைதான் பல மாதங்கள் நீடிக்கின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தது 5 முதல் 7 மாதங்கள் வரை ரத்த பரிசோதனையில் சாத்தியமான அளவுகளில் இருப்பதை நாங்கள் கண்டோம். நோய் எதிர்ப்புச் சக்தி இன்னும் அதிக காலம் நீடிக்கும் என்று நம்புகிறோம்.

===============================================================
ஆதாரம்: http://ahalnews.com/?p=6920