பக்கங்கள்

வியாழன், 22 அக்டோபர், 2020

'கொரோனா'...ஊரடங்குத் தளர்வும் ஓடிப்போகும் காதல் ஜோடிகளும்!!!

ஊரடங்குத் தளர்வுக்குப் பின் காதல் ஜோடிகள் மீண்டும் ஜாலியாக உலா வரத் தொடங்கியுள்ளன. பூங்காக்களிலும், வணிக வளாகங்களிலும் கைகோர்த்துக் கனவு உலகில் வலம் வருகிறார்கள்.  

இதற்கிடையே, கொரோனா  ஊரடங்கின்போது திருமண ஏற்பாடுகளுக்குள்ளான இளம்பெண்கள் அடுத்தடுத்துத் தங்களது காதலர்களுடன் ஓட்டம் பிடிக்கத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, குமரி மாவட்டத்திலும் இளம்பெண்கள் மாயமாவது அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வந்த இளம்பெண்கள் என அடுத்தடுத்துப் பலர் மாயமாகி உள்ளனர். கடந்த 4 நாட்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இளம்பெண்கள் மாயமாகி வரும் நிலையில், கள்ளக்காதலிலும் பெண்கள் மாயமாகி வருகிறார்கள். 2 குழந்தைகளுடன் தாய் மாயமாதல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்தக் காதல் ஓட்டங்கள் தொடர்பாக, அந்தந்தக் காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்ததும், இளம்பெண்களின் ஓட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஊரடங்கால் அந்தக் காலக் கட்டங்களில் இளம்பெண்கள் மாயம் தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவாகாமல் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறாக அதிகளவில் இளம்பெண்கள் ஓடிப்போவது தொடர்பான வழக்குகள் பதிவாகி வருகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் பெற்றோருடன் இருந்ததால், பல இளம்பெண்கள் தங்களின் காதலர்களுடன், செல்போனில் மணிக்கணக்கில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பல வீடுகளில் இது தொடர்பாகத் தாய்க்கும், மகளுக்கும் சண்டையும் வந்தன. மணிக்கணக்கில் பேசி, பல இளம்பெண்கள் பெற்றோரிடம் சிக்கினர். தற்போது ஊரடங்குத் தளர்வால் வேலை பார்க்கும் இடங்களுக்கு இளம்பெண்கள் பறந்து விட்டனர். ஆனால் கல்வி நிறுவனங்கள் திறக்காததால்,  மாணவிகள் சிலர் எப்போது தங்களுக்குச் சுதந்திர உலா கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.

========================================================================

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=622348020-10-06@ 21:13:21