எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 1 மார்ச், 2020

சிறுநீர் கழித்தலும் சிற்றின்பம் துய்த்தலும்!!!

கடந்த காலங்களில், ஆணாதிக்கம் காரணமாக உடலுறவு குறித்து மனம் திறந்து பேசும் வாய்ப்பு நம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஓரளவுக்குச் சமத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டில் அதற்கான துணிவைச் சிலர் பெற்றிருக்கிறார்கள்.

அவர்களிலும் மிகப் பெரும்பாலோர் தம் பெயர் சொல்ல விரும்புவதில்லை.

கீழே இடம்பெற்றிருப்பது, ‘தினமலர்’[29.02.2020] நாளிதழில், பெண்கள் குறித்த ஒரு தொடரின் இறுதிப் பத்தி.

இதில்  யாரோ ஒரு ‘சாந்தா’வின், உடலுறவு குறித்த ‘கண்ணீர்க் கதை’ சொல்லப்பட்டுள்ளது. சொன்னவர் சாந்தா அல்ல; தொடர் கட்டுரையின் ஆசிரியர் ‘ஜெ’[இவரும் புனை பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார்!] என்பவர்.


இப்படி இன்னும் எத்தனை எத்தனை சாந்தாக்களின் கதைகளை ‘ஜெ’ பட்டியலிடுவாரோ தெரியவில்லை.

எதிர்காலத்தில், ஆண்களின் பாலுணர்ச்சிப் பலவீனங்களைப் பரப்புரை செய்வதற்கென்று இன்னும் பல ‘ஜெ’க்கள் முன்வரக்கூடும்.

மனைவியுடனான உடலுறவு விசயத்தில் அலட்சியம் காட்டும் ஆண்களின் பாடு இனி திண்டாட்டம்தான்!
=======================================================================