எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 19 அக்டோபர், 2024

‘ஐ.நா.வின் அதிர்ச்சிப் புள்ளிவிவரம்’... அறிவாரா நம் உ.சு. வாலிபர் மோடி?!

வேண்டுகோள்: 

கீழ்வருவது ஐ.நா. வெளியிட்ட, வறுமை தொடர்பான புள்ளிவிவரப் பட்டியல். உலகம் சுற்றும் வாலிபரான மோடி[வாயால் வடை சுடும் கில்லாடி]யை நீங்கள் இந்தியாவில் பார்க்க நேர்ந்தால், அன்புகொண்டு இப்பட்டியலை அவரிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம். நன்றி.

 பாகிஸ்தானை விட இந்தியாவில் வறுமை அதிகம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!![பாகிஸ்தானைவிட இந்தியாவில் வறுமை அதிகம். -வெளியான அதிர்ச்சித் தகவல்!!]

உலகில் மொத்தம் 110 கோடிப் பேர் கொடிய வறுமையில் வாழ்ந்துவருவதாக ஐக்கிய நாடுகள் அவை(UNO) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பாதிப்பேர்(48.1%) இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ(DRC) ஆகிய 5 நாடுகளில் உள்ளனர்.

பாகிஸ்தானை(9.3 கோடி)விட இந்தியாவில்(23.4 கோடி) தீவிர வறுமையில் வாடுவோர் அதிகம்.

மனிதவளக் குறியீட்டில் பின்தங்கிய நாடுகளிலும், தீவிரவாதம் – போர் அதிகமுள்ள இடங்களிலும் வறுமை அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 40 கோடி மக்களும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 கோடி மக்களும் வறுமையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

https://tamil.examsdaily.in/poverty-is-more-in-india-than-pakistan-info/  -October 18, 2024


இந்தியா இனி ஆரியர் நாடு!?!?!

இந்தியாவை ‘இந்தி’யா ஆக்க முயற்சிக்கிறது ஒரு மொழிவெறிக் கும்பல். இன்னொரு மதவெறி பிடித்த குறுமதியாளர் கூட்டம் இந்து ராஜ்ஜியமாகவோ ராமராஜ்ஜியம் ஆகவோ ஆக்குவதற்குத் துடியாய்த் துடிக்கிறது. பிறிதொரு இனவெறிக் கும்பல் இதை ஆரியர் நாடாக்க அயராது பாடுபடுகிறது.

இவர்கள் அனைவரின் ‘உள்நோக்கம்’ திராவிடர்[குறிப்பாகத் தமிழர்] இன உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்து அடியோடு அழித்து ஒழிப்பதுதான்.

’இந்தி’யா ஆக்குவதற்கும் ‘இந்து ராஜ்ஜியம்’ ஆக்குவதற்குமான நடவடிக்கைகள் அவர்களால் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ‘ஆரியர் நாடு’ ஆக்குவதற்கான நடவடிக்கை ‘ரவி’ என்னும் நபரைத் தமிழ்நாட்டின் ஆளுநராக அனுப்பித் தொடங்கப்பட்டது.

அவர் தனக்கென ஒதுக்கப்பட்ட ‘திராவிட[தமிழ்] இன ஒழிப்பு’ப் பணிகளை, தமிழ்நாட்டைத் ‘தமிழகம்’  ஆக்கியதில் தொடங்கி நேற்றுவரை பல ‘ஒழிப்பு’ப் பணிகளை[பட்டியலிட்டால் அது நீளும்]ச் சிறப்பாகச் செய்துமுடித்துள்ளார்.

அவரின் அண்மைக்காலப் பணி.....

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்னும் சொல்லை நீக்கியது[கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் ‘DD தமிழ்’ மன்னிப்புக் கேட்டது. யாரும் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அழிப்பு வேலை தொடர்வது உறுதி].

ஆக,

வடக்கன்கள் அயராமல் அடாத செயல்களைச் செய்வது,  தமிழின[திராவிடம்] உணர்வை முற்றிலுமாய் அழித்தொழித்து ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலைநாட்டுவதுதான்.

திராவிட இனத்தவரான தமிழர்கள் ஆரியர் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார்கள். சகோதரர்களான தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் இணைந்து செயல்படுவார்களா, அவர்களின் அடிபணிந்து அடிமைகளா வாழ்வார்களா?!

காலம் பதில் சொல்லும்!