வியாழன், 29 ஜனவரி, 2026

“முருகன்[கடவுள்] எங்கிருந்தாலும் வரவும்”


முருகா, 
உலகெங்கும் உள்ள துயருற்றவர்களின் துன்பம் களைவதையே தினசரிக் கடமையாகக் கொண்டிருப்பவன் நீ.

கோரிக்கை வைக்கிறார்களோ அல்லவோ, தீராத துன்பங்களின் தாக்குதலுக்கு உள்ளானோரின் வலி போக்க எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டிருப்பவன் நீ.

நிராதரவானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தவறாத உனக்கு ஓய்வு என்பதே இல்லை. 

ஓய்வின்றி உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் உன்னுடைய பரிவான பார்வைக்காகத்தான் மேற்கண்ட நகல் படத்தைப் பதிவு செய்திருக்கிறோம்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின்[சினிமாவில் கேப்டனாக நடித்து, தமிழ்நாட்டுக் கூமுட்டைகளால் ராணுவக் கேப்டனாகவே மதித்துப் போற்றப்பட்டவர்] இல்வாழ்க்கைத் துணைவியான பிரேமலதா[‘தேமுதிக’வின் தலைவி] உன்னுடைய தீவிரப் பக்தை என்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள்.

நீயும் அறிந்திருப்பாய்.

2026இல் இடம்பெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ள நிலையில், அம்மையார் உன்னிடம் ஒரு வேண்டுகோளை[படத்தில் கண்டவாறு] முன்வைத்திருக்கிறார். அது.....

“முருகன் அருளால் மகத்தான கூட்டணி['தேமுதிக’வுக்கு] அமையும்” என்பதே அது.

அம்மையார்[கூட்டணி] தேர்தலில் மகத்தான வெற்றி கண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது தமிழர்களுக்கு ஏராள நன்மை பயக்கும் என்பதால்.....

“முருகா, நீ உலகின் எங்கோ ஒரு பகுதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாலும், புறப்பட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்து, ‘தேமுதிக’வின் தலைவி பிரேமலதா அம்மையாருக்கு ஏற்றதொரு கூட்டணி அமைத்துத் தருமாறு உன் திருவடி தொழுது வேண்டுகிறோம்.

வளர்க தேமுதிக! வெல்க தலைவி பிரேமலதா!!